பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

13/03/2020

உலக தாய்மொழி தின விழா செய்திகள் 3



கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம்:

கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் சுயநிதிப்பிரிவு கல்லூரி வளாகத்தில், தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் பிப். 18ஆம் தேதி உலக தாய்மொழி தின விழா நடைபெற்றது.

கல்லூரியின் இயக்குநர் பேராசிரியர் டி.ராஜா தலைமை வகித்தார். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஞா.ஜூலியட் மரிய ப்ளோரா வரவேற்றார். கல்லூரி மாணவிகள் 8 பேர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது,  பிரெஞ்ச், ஹிந்தி ஆகிய மொழிகளில் தாய்மொழியின் சிறப்புக் குறித்துப் பேசினர்.

இந்நிகழ்வில் தேசி.க. மாநில பொதுச்செயலாளர் கவிஞர் குழலேந்தி, கோவை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கவி.பூவரசன்  (படம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்த் துறை உதவி பேராசிரியர் சு.ஆஷா நன்றி கூறினார்.


***


பெ.நா.பாளையம்- தமிழ்நாடு புதிய வெளிச்சம்:

தேசிய சிந்தனைக் கழகமும், தமிழ்நாடு புதிய வெளிச்சமும் இணைந்து நடத்திய உலக தாய்மொழி தின விழா, பிப். 21ஆம் தேதி கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை, மக்கள் நலக் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.பழனிசாமி தலைமை வகித்தார். நாட்டுப் பற்றாளன் மாத இதழின் தலைமை நிருபர் கே.எஸ்.முருகராஜ் முன்னிலை வகித்தார். தேசிய சிந்தனைக் கழகத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவி.பூவரசன் வரவேற்றார்.

சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கி.தங்கவேல், தேசிக. கோவை மாவட்டத் தலைவர் என்.ராஜேந்திரன் (படத்தில் வலமிருந்து இரண்டாவது)  ஆகியோர் சிறப்புரையாறினர்.  ‘தேசிய ஒருமைப்பாட்டுக்கு துணை நிற்கும் தென்பாரத மொழிகள்’ என்ற தலைப்பில், மாணவிகள் தாரணி (தமிழ்), ஆர்.ராதா ஸ்ரீதேவி (தெலுங்கு), நிவேதிதா (மலையாளம்), பார்கவி (கன்னடம்), செகனாஸ் அப்ரின் (ஹிந்தி) ஆகியோர் உரையாற்றினர்.

விழாவை, நாட்டு பற்றாளன் உதவி அசிரியர் ம.மகேஷ்குமார், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு  நல மைய ஆலோசகர் து.சிவமுருகன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தமிழ்நாடு புதிய வெளிச்சம் அமைப்பின் உறுப்பினர்  பெ.வாசுகி நன்றி கூறினார்.



No comments:

Post a Comment