துறையூர், இமயம் கலை, அறிவியல் கல்லூரி:
திருச்சி மாவட்டம், துறையூர், இமயம் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் உலகத் தாய்மொழிகள் தினக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது மாணவர்களுக்கு 'இலக்கிய நூல் இயம்புக' என்ற போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இந்நிக்ழ்வில் தே.சி.க. மாநிலச் செயலாலர் ஆதலையூர் த.சூரியகுமார் கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னதாக அக்கல்லூரியின் துணைத் தலைவர் திரு. சிவகுமாருக்கு ஆலங்குடி அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் (குருஸ்தலம்) பிரசாதம் வழங்கி தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
***
நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை கலை, அறிவியல் கல்லூரி:
தேசிய சிந்தனைக் கழகமும் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை கலை, அறிவியல் கல்லூரியும் இணைந்து, இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் நடத்திய சர்வதேச தாய்மொழி தின விழா கருத்தரங்கினை, பிப். 19ஆம் தேதி, தே.சி.க. மாநிலச் செயலாளர் ஆதலையூர் த. சூரியகுமார் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
***
அரியலூர் மீனாட்சி ராமசாமி கலை, அறிவியல் கல்லூரி:
அரியலூர், உடையார்பாளையத்தை அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை, அறிவியல் கல்லூரியும், தமிழ்நாடு தேசிய சிந்தனைக் கழகமும் இணைந்து நடத்திய சர்வதேசத் தாய்மொழி தின விழா பிப்.20ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளரும், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினருமாகிய எம்.ஆர்.இரகுநாதன் தலைமை வகித்தார். இயக்குநர் இரா.இராஜமாணிக்கம், தலைமை ஆலோசகர் தங்க.பிச்சையப்பா, முதல்வர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி துணை முதல்வர் பி.சங்கீதா வரவேற்றார். நிகழ்ச்சியின் சிறப்புரையாளராக திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் புலமுதல்வர் டி.செந்தில்குமார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினருமாகிய ஆதலையூர் த.சூரியகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
ஒருவருக்குத் தாய்மொழி மட்டுமல்லாது பிறமொழி அறிவும் தேவை, மாணவர்கள் பலமொழி அறிவு உடையவர்களாகத் திகழ்ந்தால் தான் உலகளவில் பயணிக்க முடியும். அதேசமயம் நமது தாய்மொழியை காப்பது நமது கடமை என்று சூரியகுமார் குறிப்பிட்டார்.
‘தேசிய ஒருமைப்பாட்டுக்குத் துணை நிற்கும் தென் பாரத மொழிகள்’ என்ற தலைப்பில் பேராசிரியர்கள் எம்.இளையபெருமாள் (தமிழ்), டி.புவனேஸ்வரி (தெலுங்கு), ஆர். கிருஷ்ணப்பிரியா (ஹிந்தி), எம். அபுதாகீர் (உருது) ஆகியோரும், ப.பவித்ரா, மு.பகலவன் ஆகிய மாணவர்களும் உரையாற்றினார்கள்.
தேசிய சிந்தனைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் திருச்சி க.கார்த்திகேயன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை கு.வேல்முருகன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை தமிழ்த் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment