பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

20/09/2020

போய் வருகிறேன் (கவிதை)

-ஜெயபிரகாஷ் நாராயணன்


ஜெயபிரகாஷ் நாராயணன்




ஓ… இந்த வாழ்க்கை
தோல்விகளின் தொகுப்பு.

வெற்றிக்கனி என் கைக்கு நேராக ஆடியபோதும்
என் பாதையில் வராதே என்று
நானே அதைத் தட்டிவிட்டேன்.

அறியாமையா நான் செய்தது? – இல்லை
வெற்றி எது? தோல்வி எது?
என் அகராதியில் அந்த வார்த்தைகளுக்கு
அர்த்தங்களே வேறு வேறு.

நான் புரட்சியைத் தேடுகிற வேட்டைக்காரன்.
ஒரு தனிப்பாதை போட வேண்டும்.
அதைத் தனித்திசையில் போட வேண்டும்.

தியாகத்தின் பாதை உழைப்பின் பாதை
பயனுள்ள பணிகளின் பாதை.
ஒரு முழுப் புரட்சிக்கான பாதை.

என் தோல்விகளைச் சொல்லிப் பிதற்றுகிறவர்களே!
அவை எனது லட்சியத் தேடல்களாகும்.
எனது தேடல்கள் அதிகம் ஐயா!
என் லட்சியமும் வெகு தூரத்தில் இருக்கிறது.

ஓ.. எவ்வளவு தடைகள் வந்தால் என்ன?
என்னால் எங்கும் இளைப்பாற முடியாது.
எனக்கென்று ஆசைகள் எதுவுமில்லை.
எல்லாம் என் லட்சியத்திற்காக
அர்ப்பணிக்கப்பட்டுவிட்டன.

ஆகையால்
என் தோல்விகளிலும் நான் மன நிறைவடைகிறேன்.
இன்றைய இந்தப் பயனற்ற வாழ்வு
நூறு மடங்கு பயனுள்ளதாகி விடும்.

என்னைப் போலச் சிந்திக்கின்ற
என் அன்புள்ள இளைஞர்களுக்கு
எனக்கு நேர்ந்ததைப் போல
இடையூறு எதுவும் இல்லாது போனால்
கொஞ்சமாவது அவர்களுடைய வாழ்வு எளிமையானால்
என் வாழ்க்கையும் நூறு மடங்கு பயனுள்ளதாகி விடும்.



குறிப்பு:
.
சிறையில் இருந்தபோது தனது டைரியில் திரு. ஜெயபிரகாஷ் நாராயணன் எழுதிய கவிதை இது.

ஆதாரம்: தினமணிக்கதிர் – 26.10.1979





No comments:

Post a Comment