பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/11/2021

அடிமை ஆவணம்

 -வெங்கட்ராமன் ஸ்ரீநிவாசன்

 ‘குர்ஸி  நஷின்’


இங்கு மேலே உள்ள படம் ஒரு பிரிட்டிஷ் ஆட்சிக் கால சான்றிதழாகும்.

அன்றைய காலகட்டத்தில் இந்தச் சான்றிதழ் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. Kurai Nashin என்பது இதன் பெயர். ‘நாற்காலியில் அமர்பவர்’ என்று பொருள்.

குழப்பமாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.

அன்றைய அடிமை இந்தியாவில் வெள்ளைக்கார துரைமார்களை, அதிகாரிகளைச் சந்திக்கச் செல்லும் இந்தியர்கள், அவர்களைச் சந்திக்கும் வரையிலும், சந்திக்கும்போதும் நின்றுகொண்டே தான் இருக்க வேண்டும்.

நன்கு கவனிக்கவும்... எத்தனை மணி நேரம் ஆனாலும் சரி, நீங்கள் வயதானவரோ, நோயாளியோ, கர்ப்பிணியோ, நலம் தளர்ந்தவரோ என யாராக இருந்தாலும் சரி, நீங்கள் வெள்ளைக்கார துரை வரும் வரையிலும் அவனை சந்திக்கும் வரையிலும் நின்றுகொண்டு தான் இருக்க வேண்டும். அதுதான் விதி, மரபு. Norm.

யாரிடம் இந்த Kursi Nashin இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே உட்கார அனுமதிக்கப்படுவார்கள்!

இந்த கொடூரப் பழக்கத்தின் மூலம் (origin) எங்கிருந்து வந்தது தெரியுமா? வெள்ளையனுக்கு முன்பு நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட மொகலாயப் பேரரசர்கள் கையாண்ட முறை இது.

ஆனால் இங்கே செய்யப்படும் பொய்ப் பிரசாரம் என்ன? வெள்ளைக்காரன் வந்துதான் நமக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தான்; வெள்ளைக்காரன் வந்து தான் நமக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுத்தான்; வெள்ளைக்காரன் வந்து தான் நமக்கு கல்வியைக் கொடுத்தான்...

உண்மையில் மிகவும் மோசமான, சுரண்டல் குணம் படைத்த, வக்கிரமான, கேடுகெட்ட, குரூர மனம் படைத்த, கெடுமதியாளன் வெள்ளையன். கொல்கத்தாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பஞ்சத்தில் எறும்பு, ஈசல் போல செத்து மடிந்து பிணக் குவியல்களாக தெருக்களில் கிடந்தபோது, அதற்கு சற்றும் இரக்கம் காட்டாமல் அவர்கள் மீது வரி போட்டு, அவர்களுக்கு வர வேண்டிய உணவு உதவிகளை இங்கிலாந்துக்கு திருப்பிவிட்டு கொத்துக் கொத்தாக பட்டினிச் சாவு போட்டுக் கொன்றவன் வின்ஸ்டன் சர்ச்சில். ஆம், அந்த ‘மாமேதை’ வின்ஸ்டன் சர்ச்சிலே தான்.

இந்த வெள்ளைக் கொள்ளையனுக்கு ஒத்து ஊதும் anglosphere ஓநாய்க் கூட்டம் ஒன்று இங்கே எப்போதும் உண்டு. அவர்களுக்காகத் தான் இந்த ஆவணம்....


No comments:

Post a Comment