பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/12/2021

வரைபடம் சொல்லும் உண்மை

-வெங்கட்ராமன் ஸ்ரீநிவாசன்



மேலே உள்ள வரைபடம் சொல்லும் செய்திகள் முக்கியமானவை, நடந்து முடிந்த ஒரு கொடூரத்தைக் காட்டுபவை.

1820ம் ஆண்டு முதல் இப்போது வரை இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (வாங்கும் திறனின் அடிப்படையில்) இந்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.

நன்றாக மீண்டும் ஒரு முறை பாருங்கள். 1820ல் தொடங்கி 1947 வரை ஒரு வண்ணமும், நாம் சுதந்திரம் பெற்ற பிறகு வேறு வண்ணமும் இந்த வரைபடத்தில் உள்ளன.

இதில் 1950 வரை, சுமார் 130 வருடங்கள் கிட்டத்தட்ட 500 என்ற அளவிலேயே இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி தேங்கி நின்றுள்ளது! 

அப்படியென்றால் அந்த 130 வருடங்கள் இந்தியாவில் யாரும் தொழிலே நடத்தவில்லையா, வியாபாரம் செய்யவில்லையா, உற்பத்தி நடக்கவில்லையா என ஆயிரம் கேள்விகள் எழும். 

அனைத்திற்கும் ஒரே பதில் - அனைத்தும் நடந்தது, ஆனால் நடக்கவில்லை.

இந்தியாவில் பஞ்சு விளைந்தது, அது அப்படியே இங்கிலாந்திற்கு ஒட்டுமொத்தமாக கடத்தப்பட்டது. கோதுமையும் அரிசியும் இன்னபிற தானியங்களும் அப்படியே கப்பல் கப்பல்களாக இங்கிலாந்திற்கு கடத்தப்பட்டன. வைரங்களும் வைடூரியங்களும் ரத்தினங்களும் நம்மிடமிருந்து களவாடப்பட்டு இங்கிலாந்திற்கு கடத்தப்பட்டன. ஒட்டுமொத்த தேசமும் வாரி வழித்து சூறையாடப்பட்டு சுரண்டப்பட்டது. 

செயற்கையான பஞ்சங்கள் உருவாக்கப்பட்டு கோடிக்கணக்கான இந்தியர்கள் கொல்லப்பட்டனர். பாரத தேசம் பரங்கிப் பரதேசிகளால் சீரழிக்கப்பட்டது.

அனைத்தையும் இந்த ஒற்றை வரைபடம் சொல்கிறது. சுதந்திரம் அடைந்த பின்னர் நமது உள்நாட்டு மொத்த உற்பத்தியைக் கவனியுங்கள். புலிப் பாய்ச்சலைத் தாண்டிய பாய்ச்சல் நம்முடையது. 

இன்று உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு நாம், PPP அடிப்படையில். நம்மை சுரண்டித் தின்ற இங்கிலாந்து பத்தாவது இடத்தில் அல்லாடுகிறது. மலைப்பாம்பு இரையைப் பற்றியுள்ளது போல அழிவு இங்கிலாந்தை பற்றியுள்ளது. இனி இறுக்கி அழிக்கும்.

இங்கே சில அடிமை கால்நக்கிக் கும்பல்கள், “வெள்ளைக்காரன் வந்து தான் எல்லாமே கற்றுக் கொடுத்தான்” என்று பெருமை பேசுவது வழமை. இத்தகைய ஞானசூனியங்கள் தான் நாட்டுக்குக் கேடு.


No comments:

Post a Comment