பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

15/02/2020

மாசி 2020 மின்னிதழ்



  உள்ளடக்கம்


1. அமுதமொழி- 2
-ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

2. தமிழ் நீடு வாழ்க!
-கவியோகி சுத்தானந்தபாரதி

-Dr. R.Ilango

-மகாகவி பாரதி

-எஸ்.ஆர்.செந்தில்குமார்

-ஆசிரியர் குழு

-அ.போ.இருங்கோவேள்

அமுத மொழி- 2



நம்பிக்கை


இராமபிரான், இலங்கைக்குப் போய்ச் சேருவதற்கு 
அணை (பாலம்) கட்ட வேண்டி இருந்தது. 
ஆனால் அவனுடைய பரமபக்தனான ஹனுமான், 
ராமபிரானிடத்தில் வைத்திருந்த திட பக்தியால், 
சமுத்திரத்தை ஒரே தாண்டாய்த் தாண்டிவிட்டான். 
இங்கு எஜமானனைவிட, சேவகனே அதிகம் சாதித்தான். 
காரணம்- நம்பிக்கை!

-ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

தமிழ் நீடு வாழ்க!

-கவியோகி சுத்தானந்த பாரதி



காதொளிரும் குண்டலமும் 
    கைக்கு வளையாபதியும் கருணைமார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் 
    மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிரும் திருவடியும்
    பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய்
    திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழி!


காண்க:  ஆன்மிகம் வளர்த்த கவி யோகி

14/02/2020

மாசித் திங்கள் - ஆன்றோரும் சான்றோரும்




மாசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

தீண்டாமைக்கு எதிரான முதன்மைப் போராளி

-எம்.கல்பனா


மதுரை அ.வைத்தியநாத ஐயர்

(1890 மே16 - 1955 பிப். 23) 



தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோருக்காக பாடுபட்டவர்களுள் முதன்மையானவர் மதுரை வைத்தியநாத ஐயர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஹரிஜன மக்கள் வழிபடுவதற்காக அவர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டம், சரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டதாகும்.

Love Teaching…Remove ‘Catch 22 Situation' in the present academic scenario…

-Dr.R.Ilango 



“Wow…”

This is the feeling I get when I unroll the scroll of my memory which lays before my mind the experience of 35 years of teaching to the first-generation college goers hailing from rural areas. But then…the responsibility becomes more serious when you deal with the innocent rustic students who deem the teacher as the ‘Zamindar’ of the class room, all the time sitting before you with mouth and ears wide open yearning to devour anything worthwhile delivered to them. Hence,any sensible and committed teacher would then realize the enormity of the seriousness to do something meaty to these innocent students.

Is teaching confined to mere curriculum? No…it should break the barriers of curricular jurisdiction which is bookish and sometimes rubbish if it does not teach the strategy of solving the problems of day today life.  “Life is a tale told by an idiot full of sound and fury signifying nothing”- this is the definition of life in a lighter vein according to Shakespeare. But Swami Vivekananda takes us to a higher plane by defining life as,  “The unfoldment and development of a being under circumstances tending to press it down.” Life’s problems weigh a man down and he has to make Herculean efforts to free him from its cruel clutches. The succour comes from the teacher who instils self-confidence in him. Him I call the best teacher who rescues the hapless individual from the struggles of practical life and makes him attain fulfilment and sublimity. Of course the task is tough. But an ideal teacher can…

சத்ரபதி சிவாஜியின் வீர முழக்கம்

-மகாகவி பாரதி



ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!

அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள்
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!
கால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர்.
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்

செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்!
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!
மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு!

தமிழைக் காத்த தாத்தா

-எஸ்.ஆர்.செந்தில்குமார்

உ.வே.சாமிநாதய்யர்


''இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்த வண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது''
- இது மகாத்மா காந்தி உதிர்த்த பாராட்டு முத்து.

யாருக்கு இந்தப் பாராட்டு?

உ.வே.சாமிநாதய்யருக்கு!

1937ல் மகாத்மா காந்தி தலைமையில் சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த உ.வே.சா. அவர்களின் அழகிய உரையைக் கேட்ட பின் காந்தி வெளிப்படுத்திய ஆசை வார்த்தை இது. இந்த மாநாட்டின் போதுதான் அனைவராலும் ‘தமிழ்த் தாத்தா’ என்று உ.வே.சா. அழைக்கப்பட்டார்.

உ.வே.சா. கருத்துச் செறிவோடு நகைச்சுவை இழையோடப் பேச வல்லவர் என அவருடைய மாணவர்களான கி.வா. ஜகந்நாதனும் தண்டபாணி தேசிகரும் உ.வே.சா.வின் பேரரான க.சுப்பிரமணியனும் கூறியுள்ளனர். உ.வே.சா. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவு ‘சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது, அவரது உரைநடையின் உச்சத்திற்கு உதாரணம்.

யார் இந்த உ.வே.சா?

உலக தாய்மொழி நாள் விழா அழைப்பிதழ்கள்

-ஆசிரியர் குழு


தேசிய சிந்தனைக் கழகத்தால் உலக தாய்மொழி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் விழாக்களில் 4 நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள் இங்கே....


காஞ்சுபுரம் சங்கரா கலை, அறிவியல் கல்லூரி அழைப்பிதழ்

கிழவி சொன்ன கடைசி வரி

-அ.போ.இருங்கோவேள்


வெகு முமுரமான பூந்தமல்லி ஆவடி சாலை...

கண்ணாடி கிளாஸில் இருந்த சர்க்கரை இல்லாத கசப்பு காஃபியை உறிஞ்சியபடி ஓடும் வாகனங்களை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்த அவனிடம் வந்தாள் அந்தக் கிழவி.

"கண்ணு.. இன்னிக்கு பத்து பேக்கெட்டு தான் வாங்கியாந்தேன். ஒன்னே, ஒன்னு தான் மீந்து இருக்கு. நீ வாங்கிக்க ராஜா."

வயசு எழுபதுக்குக் குறையாது. வெள்ளெருக்குத் தலை. வெளுத்துப் போன வெள்ளைப் புடவை. இன்ன நிறமென இனம் காணமுடியாத வண்ணத்தில் தோளில் தையல் விட்டுப் போன ரவிக்கை. கருத்த, காய்ப்புக் காய்த்த கையில் சாயம் போன சரவணா ஸ்டோர்ஸ் பிளாஸ்டிக் பை.

யுவ காண்டீபம் - வெளியீட்டு விழாக்கள்

-ஆசிரியர் குழு

கோவை, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசுதின விழாவில், முன்னாள் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் அ.பாரி ஐபிஎஸ் ‘யுவகாண்டீபம்’ மின்னிதழைத் துவக்கிவைத்தார்


தேசிய சிந்தனைக் கழகத்தின் மாதாந்திர மின்னிதழான 'யுவகாண்டீபம்' குடியரசு நாளில் (ஜனவரி 26, 2020) துவங்கியது. இதன் துவக்க விழாக்கள் ஜனவரி 26 அன்று மூன்று இடங்களில் நடைபெற்றன.

குடியுரிமை திருத்தச் சட்டம்: அவசியம்! அவசியம்! அவசியம்!

-முத்துவிஜயன்

குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019 தொடர்பான முறையான விவாதங்கள் ஒருபுறமும், தவறான பிரசாரம் மறுபுறமும் தற்போது தேசம் முழுவதும் நிகழ்ந்து வருகின்றன. அகதிகளுக்கு வழங்கப்படும் விசேஷ குடியுரிமைக்கும், இந்த நாட்டில் வாழும் குடிமக்களின் இயல்பான குடியுரிமைக்கும் வேறுபாடு தெரியாத சிலர் நாட்டில் பொய்ப் பிரசாரம் மூலமாக அமைதியைக் கெடுத்து வருகிறார்கள். 

சில சுயநல அரசியல்வாதிகளோ, இந்தச் சட்டம் தொடர்பான முழு விவரங்களையும் அறிந்திருந்தபோதும், தவறான விளக்கம் அளித்து, இஸ்லாமிய மக்களைத் தூண்டிவிட்டுஅவர்களை வன்முறைப் பாதைக்கு மடைமாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக சில மாநிலங்களில் வன்முறையால் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்கு வங்கி அரசியலில் நாட்டமுள்ள சில அரசியல் கட்சிகள், நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தத் துடிப்பது தெரிகிறது. அவர்களுக்கு பொட்டில் அடித்தது போல விளக்கம் அளித்தாக வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துவது நமது கடமை.

Parameswaran ji — Saint in White Robes

-S.Gurumurthy

Padmavibhushan P. Parameswaran

(1927 – 9 February 2020)
Parameswaran ji, as he was known to his countless admirers, is no more. P Parameswaran, who became the pracharak of RSS when he was 23 and ceaselessly worked for 70 years more till he breathed his last, had only one mission in life that was nation and one deity that was Bharatmata. Though an organisation man, his acute intellectual urge drove him to found the Bharatiya Vichara Kendram in Thiruvananthapuram decades ago, through which he expounded the other, uncelebrated spiritual mind of Kerala. 

For a quarter-century until his demise, he headed and spread the work of Vivekananda Kendra, Kanyakumari, which is doing a yeoman’s service to the distanced and disadvantaged people of Arunachal Pradesh, Mizoram, Assam, Manipur, Meghalaya and Andaman Islands. Undeterred by the stately power of contextual Kerala intellectualism, he remained a centennial seer who looked beyond his life and times as he spoke and wrote for decades with dignity and respect towards those who disagreed with him, even derided him.

MULTI-DIMENSIONAL PERSONALITY

He was a multidimensional personality. A prodigious reader, he must have read thousands of titles in his mother tongue and English. A prolific writer, he has written over 20 books, in Malayalam and English. As a journalist, he ceaselessly wrote for decades, particularly columns in Yuva Bharati, a journal of Vivekananda Kendra which he edited. He was an elegant orator in both English and Malayalam and he spoke not to win the approval of his audience but to impart what he thought they should know.
He was an extraordinary, original thinker. He was wrongly regarded as a ‘right-wing’ thinker based on the popular division in the Indian discourse which draws its norms and labels from Western dictionary. What needs to be recalled when Parameswaran is not around is not his personal details, but the social thinking he expounded in the most difficult times in Kerala.

உலகமயச் சூழலில் விவேகானந்தரின் தேவை

-பி.பரமேஸ்வரன்




அடிமை
த் தளையிலிருந்து விடுபட்டு அறுபது ஆண்டுகள் கடந்தும், அரசியல் தடுமாற்றம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமுதாயக் கொந்தளிப்பு, மற்றும் கொள்கைக் குழப்பம் போன்ற பல இக்கட்டுகளில் இந்திய நாடு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மக்கட்தொகை அதிகமுள்ள ஜனநாயக நாடு என்று நம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாலும், நமது குடியரசு உண்மையில் ஆரவாரம் மிகுந்த முடியரசு போலவே இயங்கிக் கொண்டிருக்கிறது.

பலரும் பொறாமைப்படும் அளவிற்கு நாம் பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிவிட்டதாக புள்ளிவிவரங்களை அடுக்குகிறோம். ஆனால் உண்மை நிலவரப்படி பொருள் உள்ளோருக்கும், இல்லாருக்கும் இடையே முன்னிருந்த இடைவெளி மேலும் விரிவாகி இருப்பது தான் நமது சாதனை. தேசியப் பார்வை என்பதே மிகவும் நீர்த்துப் போகின்ற அளவிற்கு நமது சமுதாயத்தில் சாதி, மற்றும் சமூகக் குழுக்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.

சிறப்புக் கல்வியும், பயிற்சியும் அளிப்பதற்காக அமைக்கப்பட்ட பல கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து நமது பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அறிவுத் திறன் கொண்டோரை உலகிலேயே அதிகமான அளவிற்கு உருவாக்கி அளித்தாலும், அவ்வாறு பயின்றவர்கள் நமது தேசம், கலாசாரம், மற்றும் உலகில் நமது நாட்டின் பங்களிப்பு பற்றிய பெருமிதமும், அவற்றின் தாக்கங்களும் குறித்து சரிவரப் புரிந்து கொள்ளாமலும், எதை எப்போது எப்படிச் செய் யவேண்டும் என்று தெரிந்துகொள்வதற்கு வேண்டிய சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் இருக்கிறார்கள்.

இலக்கணத் தமிழ் சமைத்தவர்கள்

-சேக்கிழான்

அகத்தியர்

ஒரு மொழியின் கட்டுக்கோப்புக்கும், நெடிய வரலாற்றுக்கும் சான்றாக விளங்குவது அதன் இலக்கணமே. மொழியில் தோன்றும் இலக்கியங்களில் இருந்து சாறாக எடுத்துப் பிழியப்பட்ட மொழியின் கட்டமைப்பே இலக்கணம் என்கிறது நன்னூல். அந்த வகையில் உலகின் மூத்த மொழியான தமிழின் இலக்கண வரலாறும் மிகத் தொன்மையுடைத்ததாகவே இருக்கிறது.

இன்று நமக்குக் கிடைக்கும் மூத்த தமிழ் இலக்கியங்களின் வயது சுமார் 2,500 ஆண்டுகள். அது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலமாகும். 3000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன் வரையிலான காலகட்டமே சங்க காலம் என்று வரையறுக்கப்படுகிறது. இதன் காலத்தை இன்னும் முந்தைய காலமாகக் கொள்வாரும் உளர்.

எப்படி வேண்டுமானாலும் மொழியைப் பயன்படுத்த நமக்கு அனுமதி கிடையாது. அதற்கென ஒரு ராஜபாட்டையை நமது முன்னோர் அமைத்துச் சென்றிருக்கிறார்கள். அதில்தான் நாம் நடைபயில வேண்டும். அவையே இலக்கண நூல்கள். நமக்குக் கிடைத்துள்ள மிகத் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். ஆனால், அதற்கு முன்னரே பேரகத்தியம் என்ற இலக்கண நூல் தமிழ்கூறு நல்லுலகில் சிறந்து விளங்கி இருக்கிறது. அதன் காலம் பொ.யு.மு. 500 காலகட்டமாக இருக்கலாம் என்று வரையறுக்கப்படுகிறது.