-நிகழ்வுகள்-
தருமை ஆதீனக் கல்லூரியில்
தேசிய இளைஞர் தின விழா
|
‘நரேந்திரன் முதல் விவேகானந்தர் வரை’ என்ற நூல் வெளியீடு. |
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கல்வி நிறுவனங்களும் தேசிய சிந்தனைக்
கழகமும் இணைந்து நடத்திய தேசிய இளைஞர் தின விழா, தருமபுரம் ஆதீனம் கலைக்
கல்லூரியில் ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்றது.
விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்
ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் எம்.ஆர்.ரகுநாதன், அரியலூர் மீனாட்சி ராமசாமி
கலைக் கல்லூரியின் முதல்வர் சேகர், தருமபுரம் ஆதீனம் கல்வி நிறுவனங்களின்
செயலாளர் செல்வநாயகம்,தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஆதவன்
தருமு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில்
திருமதி ரேணுகா சூரியகுமார் எழுதிய ‘நரேந்திரன் முதல் விவேகானந்தர் வரை’ என்ற
நூல் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் திருக்கைலாய பரம்பரை தருமை
ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு
விருந்தினர்களுக்கு ஆசீர்வாதமும் பிரசாதமும் வழங்கினார்.
|
தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி பரமாச்சாரிய சுவாமிகள் தே.சி.க. மாநிலச் செயலாளர் ஆதவன் தருமுவுக்கு ஆசி வழங்குகிறார். |
***
கோவை கொங்குநாடு கல்லூரியில்
தேசிய இளைஞர் தின விழா
|
விழாவில் பேசுகிறார் கல்லூரி மாணவி. |
கோவை, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியும் தேசிய சிந்தனைக் கழகமும் இணைந்து நடத்திய தேசிய இளைஞர் தின விழா கல்லூரியின் சகோதரி நிவேதிதை அரங்கில் ஜனவரி 13ஆம் தேதி காலை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் செயலர் முனைவர் சி.ஏ.வாசுகி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.இலட்சுமணசாமி வரவேற்றார். கல்லூரி மாணவர்கள் இருவர் சுவாமி விவேகானந்தர் குறித்து அற்புதமாக உரையாற்றினர்.
தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குழலேந்தி, கோவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவி பூவரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் விவேகானந்தா வாசகர் வட்ட நிர்வாகி பேராசிரியை மோகனப்பிரியா உள்ளிட்டோர் செய்திருந்தனர். பேராசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
|
கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின்
விவேகானந்தா வாசகர் வட்ட நிர்வாகிகளுடன் தே.சி.க. நிர்வாகிகள். |