25/01/2020

விவேகானந்தம்: நூல் அறிமுகம்

-ம.கொ.சி.இராஜேந்திரன்


விவேகானந்தம்

(சுவாமி விவேகானந்தரின் பன்முக ஆளுமையை விளக்கும் படைப்புகள்)



அன்புடையீர்,

வணக்கம்!

“சுவாமி விவேகானந்தரின் எல்லா நூல்களையும் நான் முழுவதும் படித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு, எனக்கு என் தாய்நாட்டின் மீதிருந்த பக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று’’ என்று சொல்வார் மகாத்மா காந்தி.

“ஆன்மிகத் துறையின் உச்சியை அடைந்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் தனது வாழ்நாட்களை இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் அர்ப்பணித்தார். அவர் இப்போது உயிருடன் இருந்தால், நான் எப்போதும் அவர் காலடியில் அமர்ந்திருக்கவே விரும்புவேன். உண்மையில் இன்றைய இந்தியா அவரால் உருவாக்கப்பட்டதாகும்’’ என்பார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
உண்மையில் இன்றைய இந்தியாவின் உருவாக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளுக்கு பேரிடம் உண்டு. எனவேதான் அவரது 150வது பிறந்த தின ஆண்டு 2012-13 இல் நாடுமுழுவதும் மிகுந்த உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அச்சமயத்தில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடையே பரப்புவதற்காக தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் ‘விவேகானந்தம்150டாட்காம்’ என்ற இணையதளம் துவக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது.

அந்த இணையதளத்தில் தினந்தோறும் சமூகத்தின் பல்வேறு தரப்பில் உள்ள பெரியோர்கள், ஆளுமைகள், சான்றோர்களின் கட்டுரைகள், கவிதைகள் வெளியாகி வந்தன. அவ்வாறு வெளியானவை சுமார் 700 படைப்புகள். அந்த ஓராண்டில் மட்டும் சுமார் 60 லட்சம் தனிப்பட்ட பார்வையாளர்கள் அந்த இணையதளத்தைப் பயன்படுத்தினர்.

சுவாமிஜியின் 150வது ஜெயந்தி கொண்டாட்டங்கள் முடிவடைந்த பிறகு, அந்த இணையதளத்தில் இடம்பெற்ற படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 190 கட்டுரைகள், கவிதைகளைத் தொகுத்து நூல் வடிவமாக்கும் முயற்சி நடைபெற்றது. அது தற்போது முழுமை அடைந்து 1208 பக்கங்கள் கொண்ட 3 தொகுப்புகளாக வெளியாகி உள்ளது.

பதிப்பகத் துறையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அல்லயன்ஸ் நிறுவனம் இந்தத் தொகுப்பை ‘விவேகானந்தம்’ என்ற பெயரில் பதிப்பித்துள்ளது. இதன் ஒட்டுமொத்த விலை: ரூ. 1155/-. இந்த நூலை அறிமுக சலுகை விலையில் விற்பனை செய்ய அல்லயன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்நூலில் அடங்கியுள்ள சில படைப்புகள்:  

1. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால், ஆசார்ய வினோபா பாவே, மகரிஷி அரவிந்தர், ‘விடுதலைவீரர் வ.வே.சு.ஐயர், அன்னிபெசன்ட் அம்மையார், திரு.வி.க., ரவீந்திரநாத் தாகூர், பேராசிரியர் மாக்ஸ்முல்லர், பிரெஞ்சு அறிஞர் ரொமெய்ன் ரோலண்ட், ஏ.எல்.பாஷம் உள்ளிட்டோர் சுவாமி விவேகானந்தர் குறித்து கூறியுள்ள கருதுகளின் தொகுப்பு.

2. மகாகவி பாரதி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி, ப,ஜீவானந்தம், குருஜி கோல்வல்கர், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சான்றோர் பெருமக்களின் கட்டுரைகள்.

3. சுவாமி சிவானந்தர், சுவாமி சித்பவானந்தர், சுவாமி கௌதமானந்தர், சுவாமி சுவாமி கமலாத்மானந்தர், அபிராமானந்தர், சுவாமி விமூர்த்தானந்தர், சுவாமி அபவர்கானந்தர், குன்றக்குடி அடிகளார், மாதா அமிர்தானந்தமயி தேவி, சுவாமி ஓங்காரானந்தர், சுவாமி சைதன்யானந்தர், மௌலானா வஹிதூதீன் கான் உள்ளிட்ட துறவியர் பெருமக்களின் அருள்மழை பொழியும் வழங்கும் கட்டுரைகள்.

4. அவினாசிலிங்கம் செட்டியார், பி.பரமேஸ்வரன், லா.சு.ரங்கராஜன், கி.சூரியநாராயண ராவ், எஸ்.குருமூர்த்தி, ராம.கோபாலன், டாக்டர் ஏ.பிஜே.அப்துல் கலாம், கோபாலகிருஷ்ண காந்தி, பேராசிரியர் சி.ஐ.ஐசக், ஆர்.பி.வி.எஸ்.மணியன், பேராசிரியர் இரா.வன்னியராஜன் ஆகியோரின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்.

5. பிரணாப் முகர்ஜி, லால் கிருஷ்ண அத்வானி, நரேந்திர மோடி, மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, ஜி,கே.வாசன், ஆர்.நல்லக்கண்ணு, வி.எஸ்.அச்சுதானந்தன், தமிழருவி மணியன், ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களின் கட்டுரைகள்.

6. சாண்டில்யன், இரா.கணபதி, தென்கச்சி கோ.சுவாமிநாதன், பெ.சு,மணி, பிரேமா நந்தகுமார், ஜெயமோகன், இந்திரா பார்த்தசாரதி, தஞ்சை வெ.கோபாலன், அரவிந்தன் நீலகண்டன், காம்கேர் புவனேஸ்வரி, மரபின்மைந்தன் முத்தையா, ஜடாயு, ம.வெங்கடேசன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் கட்டுரைகள்.

7. பேராசிரியர்கள் தெ,ஞானசுந்தரம், சோ.சத்தியசீலன், அறிவொளி, ப.கனகசபாபதி, வ.வே.சு., இரா.இளங்கோ, இரா.மோகன். இரா.ஸ்ரீநிவாசன், வெ.இன்சுவை, ஆதலையூர் சூரியகுமார் உள்ளிட்ட கல்வியார்களின் படைப்புகள்.

8. மாலன், கே.வைத்தியநாதன், பத்மன், டி.ஐ.அரவிந்தன், சுப்பு, ப.திருமாவேலன், ஜி.மீனாட்சி, எல்.முருகராஜ் உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் கட்டுரைகள்.

9. நீதியரசர் வெ.ராம.சுப்பிரமணியன், ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ், மயில்சாமி அண்ணாதுரை, நல்லி குப்புசாமி செட்டியார், பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், வெ.இறையன்பு ஐஏஎஸ், என்.கோபால்சாமி, நடிகர் விவேக், சுகி.சிவம், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பிரபலங்களின் புகழ்மாலைகள்.

10. சுவாமி விபுலானந்தர், நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், கவிஞர் பெ.சிதம்பரநாதன், சௌந்தரா கைலாசம் உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகள்.

சுவாமி விவேகானந்தரின் பன்முக ஆளுமையை விளக்குவதாக, சமுதாயத்தின் பன்முக ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள், கவிதைகள், புகழ்மாலைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த நூல் ஒவ்வொரு கல்வி நிலையத்திலும், நூலகத்திலும் இருக்க வேண்டியதாகும். நம் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய அரிய கருத்துக் களஞ்சியம் இந்த நூல் ஆகும்.

இந்த நூலை தங்கள் கல்வி நிலையம் சார்பாக வாங்கிப் பயன்பெறுமாறு தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

என, 
தங்கள் அன்புள்ள, 
ம.கொ.சி.இராஜேந்திரன்.
(மாநில அமைப்புச் செயலாளர், 
தேசிய சிந்தனைக் கழகம், 
தமிழ்நாடு) 


புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய 
அலைபேசி எண்: 90031 40968



நூல் குறித்த விவரங்கள்:.
விவேகானந்தம்  
மூன்று தொகுதிகள்:
முதல் தொகுதி- 440 பக்கங்கள்- ரூ. 420.00
இரண்டாம் தொகுதி- 392 பக்கங்கள்- ரூ. 375.00
மூன்றாம் தொகுதி- 376 பக்கங்கள் - ரூ. 360.00 
மொத்தம்- 1,208 பக்கங்கள் -ரூ. 1,155.00


கிடைக்கும் இடம்:
ஜெனரல் பப்ளிஷர்ஸ் 
(அல்லயன்ஸ் பதிப்பகத்தின் ஓர் அங்கம்),
244/64, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர்,
சென்னை- 600 004

No comments:

Post a Comment