16/11/2021

கார்த்திகை - 2021 மின்னிதழ்


உள்ளடக்கம்

1. அமுதமொழி- 24
-டாக்டர் அம்பேத்கர்

2. ம​லையில மகுடம் வச்சு கடலில பாதம் வச்சு... (கவிதை)
-ஒரு தேசபக்தர்

-ஆசிரியர் குழு

-பாலகுமாரன்

-திருமங்கை ஆழ்வார்

-பத்மன்

-திருநின்றவூர் இரவிக்குமார்

-ஜடாயு

-அரவிந்தன் நீலகண்டன்

-கோதை ஜோதிலட்சுமி

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

-வெங்கட்ராமன் ஸ்ரீநிவாசன்

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

-பி.ஆர்.மகாதேவன், வி.வி.பாலா

-திருநின்றவூர் இரவிக்குமார்

-உலகநாதர்

-ஆசிரியர் குழு

-மகரிஷி அரவிந்தர்

-முத்துவிஜயன்

-நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

-திருநின்றவூர் இரவிக்குமார்

-பேரா.பூ.தர்மலிங்கம்

23. Golden Quotes of Aurabindo
-Maharishi Aurobindo

24. ஹிந்து என்ற சொல்: தேவையற்ற விவாதம்
-தில்லை கார்த்திகேயசிவம்

-வி.சண்முகநாதன்

***

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பிதழ்:

26. நா, வாயால் தேசியம் வளர்த்த பாரதியும், நாவாயால் தேசம் காத்த வ.உ.சி.யும்
-கே.அண்ணாமலை ஐபிஎஸ்
-தஞ்சை வெ.கோபாலன்

-தஞ்சை வெ.கோபாலன்

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

- C.Subramania Bharati

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

-மகாகவி பாரதி

50. The Railways in India
- C.Subramania Bharati

அமுதமொழி- 24

 


தாய்மொழியில் குறைந்தது ஆரம்பக் கல்வி கூட பெற முடியாத குழந்தைகளின் கல்வி மதிப்பற்றது, பொருளற்றது.
-டாக்டர்  அம்பேத்கர்

ம​லையில மகுடம் வச்சு கடலில பாதம் வச்சு... (கவிதை)

-ஒரு தேசபக்தர்
  

(பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டு சிறப்புப் பதிவு)

மலையில மகுடம் வச்சு, கடலில பாதம் வச்சு, 
மாகாளி உருவில் நின்றாய் எங்கள் ஆத்தா!  காளியாத்தா! 
மாகாளி உருவில் நின்றாய் எங்கள் ஆத்தா!  உன்னை நான் 
பாரதத்தாய் என்றழைப்பேன் எங்கள் ஆத்தா!

(ம​லையில மகுடம் வச்சு)

கார்த்திகைத் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

  -ஆசிரியர் குழு

ராஜாஜி


கார்த்திகை மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ பிலவ வருடம், கார்த்திகைத் திங்கள் (17.11.2021 - 15.12.2021)

திருவண்ணாமலை வந்த காசி மகான்

-பாலகுமாரன்

யோகி ராம்சுரத்குமார்
(தோற்றம்: 1918  டிச. 1 - சமாதி: 2001 பிப். 20)


திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி, ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத் குன்வர். அவருடைய உள்ளொளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத் குன்வர் திருவண்ணாமலையில் ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று மாறினார்.

தங்க நாணயமயமான சிரிப்பு.. தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். புரிந்து கொண்டு சில நண்பர்கள் அவரை தினசரி தரிசித்தார்கள். ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் திருவண்ணாமலை வலம் வரும்போது அவரை யதேச்சையாகச் சந்தித்து அந்தக் கண்களுடைய தீட்சண்யத்தைக் கண்டு வியந்து, அவர் கால் பற்றி அவரைப் பின்தொடர்ந்தார்கள். கடவுளைப் பற்றி விவாதித்தார்கள். வாழ்க்கையைப் பற்றி யோசித்தார்கள். மேலைநாட்டினர் அதிகம் வந்ததால் அவரைப் பற்றிய விவரங்கள் உள்ளூரில் தெரிய வந்தன.

சிறிய திருமடல் (கவிதை)

-திருமங்கை ஆழ்வார்


அறிமுகம்:

மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல், ‘சிறிய திருமடல்’. இதனை இயற்றியவர் திருமங்கையாழ்வார்

இது நாராயணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. மடல் இலக்கியவகையின் முன்னோடி நூல்களில் ஒன்றாகக் காணப்படும் இந்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் (பாசுரம்: 2673 - 2712) பகுதியாகும். 

பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல்.

தலைவன்  ‘நாராயண’னின் பெயருக்கு ஏற்ப நூலின் ஒவ்வொரு அடியிலும் எதுகை (வரியின் முதல் சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றுவது) அமைந்துள்ளது.

***

காரார்வரை
கொங்கை கண்ணர் கடலுடுக்கை
சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று 1

பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி நிலமண்கையென்னும் — இப் 2

பாரூர் சொலப்பட்ட மூன்னன்றெ — அம்மூன்றும்
ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று 3

ஆராரிவற்றினிடையதனை எய்துவார்
சீரார் இருகலயும் எய்துவர் — சிக்கெனமது 4

ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்
ஒராமையன்றெ? உலகதார் சொல்லும்சொல் 5

கொன்றைவேந்தன் - விளக்கவுரை (பகுதி - 4)

-பத்மன்



காண்க:

பகுதி-1
பகுதி-2
பகுதி-3 

***

கொன்றைவேந்தன் - 71

மாரி அல்லது காரியம் இல்லை

விளக்கம்:

மழைநீர் இல்லாமல் போனால் எந்தச் செயலும் நடைபெறாது என்கிறார் ஔவையார்.

மாரி என்பதற்கு மழை, நீர், துர்க்கை, பூராட நட்சத்திரம் எனப் பல பொருள் உண்டு. மிகுதியான பயன்பாட்டில் உள்ள பொருள் மழையும் அதன்மூலம் கிடைக்கும் நீரும். காரியம் என்பதற்கு செயல், செய்கை எனப் பொருள்.

வானில் இருந்து பொழியும் மழையும், அதனால் அமையும் நீர்வளமும் இல்லாவிட்டால் உழவு முதற்கொண்டு எல்லாச் செயல்களும் சீர்குலைந்து, எதுவுமே இல்லாமல் போய்விடும் என்கிறார்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

-என்று கூறியுள்ளார் திருவள்ளுவர் (திருக்குறள்- 18). வானத்தில் இருந்து பெய்கின்ற மழைநீர் வறண்டு போனால் வானோர் எனப்படும் தெய்வங்களுக்கே சிறப்பான பூசைகளும் நடைபெறாது என்கிறார் வள்ளுவர். வானம் கைவிட்டால் வானோர் வழிபாட்டையும் மனிதர் கைவிடுவர் எனில் வேறு எந்தச் செயல்கள்தான் நடைபெறும்?

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு

-என்று மற்றொரு குறளில் (திருக்குறள்- 20) எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர்.

நீரில்லாமல் போனால் இந்த உலகம் நில்லாமல் போகும் என்பதைப் போல வானம் பொய்த்துவிட்டால் மானுட ஒழுக்கமும் தவறிப் போகும் என்று எச்சரிக்கிறார்.

நீர்நிலைகளான நதிக்கரைகளில்தான் நாகரிகம் வளர்ந்தது. அத்தகைய நீர் இல்லாமல் போனால் அநாகரிகம் தலைதூக்குவதோடு பண்பாடும், பாடுபடும் உழைப்பும்கூட பறிபோகும். குடிப்பதற்கும்கூட தண்ணீர் இல்லையேல் அந்த இடத்தில் என்ன செயல்தான் நடந்தேற முடியும்?

அதனால்தான் ‘மாரி அல்லது காரியம் இல்லை’ என்றுரைத்துள்ளார் ஔவையார்.

(பின்குறிப்பு: மாரி என்றால் சாவு என்றும் காரியம் என்றால் இறுதிக்கடன் என்றும் வேறு பொருள் உண்டு. இதனால் சாவு இல்லையேல் இறுதிக்கடன் இல்லை என்றுதான் ஔவையார் கூறியிருக்கிறார் என வருங்காலத்தில் யாரும் வாதிட வேண்டாம்.)

***

குறி சாரும் வரை...

-திருநின்றவூர் இரவிக்குமார்
 
சர்தார் உதம் சிங்
(பிறப்பு: 1899 டிச.  26 - பலிதானம்: 1940 ஜூலை 31)


நம் உண்மையான ஒற்றுமையானது நாட்டுக்கு தன்னை அர்ப்பணம் செய்து கொள்ளும் ஒற்றுமையில் தான் உள்ளது

- மகரிஷி அரவிந்தர்

அவரை பிரிட்டிஷ் அரசு தூக்கிலிட்ட போது,  “நான் சாவதற்கு அஞ்சவில்லை. மாறாக பெருமைப்படுகிறேன். என்னுடைய இடத்திற்கு ஆயிரக்கணக்கில் என் நாட்டவர் வருவார்கள். நாற்றம் பிடித்த நாய்களான உங்களை அடித்து விரட்டி, தேசத்தை விடுதலை பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்று சொன்னார். 

தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்ட பின்பு அதற்குள் தலையை நுழைத்தார்.

அவர் - உதாம் சிங், ஷேர் சிங், உதி சிங், உதான் சிங், பாவா, உத்தம் சிங், உ சி சித்து, மோகன் சிங், உ சி ஆசாத், பிராங்க் பிரேசில், சிங் ஆஸாத், முகம்மது சிங் ஆசாத் - என்று தன் வாழ்நாளில் பல பெயர்களில் அறியப்பட்ட சர்தார் உதம் சிங். 

‘உதம்’ என்றால் பஞ்சாபி மொழியில் எழுச்சி, கிளர்ச்சி, எரிமலை வெடிப்பு என்று பொருள்.

மன்யு சூக்தம் (தமிழாக்கம்)

-ஜடாயு


கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

கோபத்தின் தேவதையாக  ‘மன்யு’வை வேதம் கூறுகிறது. 

‘ருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்’ (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. 

மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury), உணர்ச்சிகரம் (passion), பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும்.

மன்யுவே உனக்கு நமஸ்காரம்!

தமிழும் சனாதனமும்

-அரவிந்தன் நீலகண்டன்


கருப்பனும் வெள்ளையனும்

 “அவன் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறான் தெரியுமா?”

 “யார் அவன்?”

 “அந்த மலைநாட்டுக்காரன்...”

 “எந்த மலை?”

 “எந்த மலையா? மலை முழுக்க காடுகளால் பச்சைப் பசேலென இருக்குமே அந்த மலை. பச்சை மால் என கிருஷ்ணன் போல மலையும் அதில் ஓடும் வெள்ளருவி அவன் அண்ணன் பலராமன் போலவும் இருக்குமே, அந்த மலை. அம்மலைத் தலைமகன் உன்னைத் தேடி தேடி வருகிறான். உன் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று உருகுகிறான். அவன் நல்லவன். உறுதியானவன். நீயோவென்றால் அவனைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாய். நான் சொல்வதையாவது நம்பு. என்னை உன் தோழியாக ஏற்றுக் கொண்டாயென்றால் என் வார்த்தைகளில் நம்பிக்கை வேண்டும்...”

-இப்படிப் போகிறது ஓர் உரையாடல், தோழிக்கும் தலைவிக்கும். நற்றிணைப் பாடல்; கபிலரின் பாடல். துறை: தலைவிக்கு தோழி குறை நயப்பக் கூறியது.

எதிர்ப்புகளை உரமாக்கிக் கொள்ளும் சனாதனம்!

-கோதை ஜோதிலட்சுமி


ஹிந்து மதம் என்ற பெயர் சமீபத்திய ஒன்றுதான் என்றாலும், பாரத சமூகத்தைப் பொறுத்தவரை நாம் மதம் என்ற குறுகிய எல்லையை வரையறுத்துக் கொள்வதில்லை. நாம் மதம் அற்றவர்கள். மதம் என்பதற்கான கோட்பாடுகள், விதிமுறைகள் நமக்குக் கற்றுக் கொடுக்கப்படவில்லை. மாறாக, தனிமனித அறம் போதிக்கப்பட்டிருக்கிறது.

வாழ்வியலுக்கான அறம் அல்லது தர்மம் என்பதையே நாம் தொன்று தொட்டு பழகி வந்திருக்கிறோம். இந்த தர்மமும் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. எந்தக் கோட்பாட்டையும் விதிகளையும் பின்பற்ற எவ்வித நிர்பந்தமும் யாருக்கும் இல்லை.

ஒவ்வொரு தனி மனிதருக்கும் அவரவர் விருப்பம், சுதந்திரம் இருக்கிறது. இதனால் இந்த தர்மத்தின் எல்லைகள் விரிவாகி அண்டம் முழுமையையும் மனித சமூகத்தின் அனைத்து உயிர்களையும் தனக்குள் அரவணைத்துக் கொள்வதற்கான வெளியைப் பெற்றிருக்கிறது. தனிமனித உணர்வுகளை, நியாயங்களை மதித்து நடத்தல், தனிமனித ஒழுக்கம் இந்த தர்மத்தின் தனிசிறப்பு.

கைக்கிளை (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்



***

உன்மேல் பாய்ச்சும்
என் மின்சாரப் பார்வையை
அணில் போல ஏன் அடிக்கடி
அறுத்து விடுகிறாய்?

காதலை வளமையாக்க
ஐந்து நபர் ஆலோசனைக் குழுவை
நீயேன் அமைக்கக் கூடாது?
உன் விருப்பமெனில் சொல்...
ஒன்றியமென்று என் பெயரை
மாற்றிக் கொள்கிறேனே...

அடிமை ஆவணம்

 -வெங்கட்ராமன் ஸ்ரீநிவாசன்

 ‘குர்ஸி  நஷின்’


இங்கு மேலே உள்ள படம் ஒரு பிரிட்டிஷ் ஆட்சிக் கால சான்றிதழாகும்.

அன்றைய காலகட்டத்தில் இந்தச் சான்றிதழ் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. Kurai Nashin என்பது இதன் பெயர். ‘நாற்காலியில் அமர்பவர்’ என்று பொருள்.

குழப்பமாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.

அன்றைய அடிமை இந்தியாவில் வெள்ளைக்கார துரைமார்களை, அதிகாரிகளைச் சந்திக்கச் செல்லும் இந்தியர்கள், அவர்களைச் சந்திக்கும் வரையிலும், சந்திக்கும்போதும் நின்றுகொண்டே தான் இருக்க வேண்டும்.

நன்கு கவனிக்கவும்... எத்தனை மணி நேரம் ஆனாலும் சரி, நீங்கள் வயதானவரோ, நோயாளியோ, கர்ப்பிணியோ, நலம் தளர்ந்தவரோ என யாராக இருந்தாலும் சரி, நீங்கள் வெள்ளைக்கார துரை வரும் வரையிலும் அவனை சந்திக்கும் வரையிலும் நின்றுகொண்டு தான் இருக்க வேண்டும். அதுதான் விதி, மரபு. Norm.

யாரிடம் இந்த Kursi Nashin இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே உட்கார அனுமதிக்கப்படுவார்கள்!

ஜேம்ஸ் ஆலன் - சரித்திரச் சுருக்கம்

-வ.உ.சிதம்பரம் பிள்ளை


தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களுள் தலையாயவரான வ.உ.சிதம்பரம் பிள்ளை, கவிஞர், எழுத்தாளர், உரையாசிரியர், சுய முன்னேறப் பயிற்சியாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல முகங்களைக் கொண்டவர் என்பது பலரும் அறியாதது.

மொழிபெயர்ப்புக் கலையில் அவர் அக்காலத்திலேயே சிறந்து விளங்கியுள்ளார். சுய முன்னேற்றம் தொடர்பான 4 ஆங்கில நூல்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். அவையனைத்தும்  ‘ஜேம்ஸ் ஆலன்’ என்பவரால் எழுதப்பட்டவை. இவை அனைத்துமே அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நூல்களாகும்.

மொழிபெயர்ப்புப் பணி அவ்வளவு எளிதானதல்ல. எளிதாகப் புரிந்து கொள்வதற்காக, சில வார்த்தைகளைச் சேர்த்தும் சில வார்த்தைகளைத் தவிர்த்தும் மொழிபெயர்த்துள்ளதாக வ.உ.சி.யே முன்னுரையில் கூறுகிறார்.
வ.உ.சி.யின் மொழிபெயர்ப்பு நிறைவானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் அவரது திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. கீழ்க்கண்ட 4ந்நூல்கள் அவர் மொழிபெயர்த்தவை

நாம் என்ன செய்யப் போகிறோம்?

-பி.ஆர்.மகாதேவன்

இருளர் சமுதாய மக்கள்

அறிமுகம்

கடந்த தீபாவளியை ஒட்டி, ஓடிடி தளத்தில் வெளியான, நடிகர் சூர்யாவின் தயாரிப்பான ‘ஜெய் பீம்’ திரைப்படம், தமிழகத்தில் பரவலான வரவேற்பையும் கடும் விமர்சனங்களையும் ஒருசேரச் சந்தித்திருக்கிறது.

இருளர் ஜாதியை சேர்ந்த ஒரு இளைஞர் காவல்துறையினரால் வழக்கு விசாரணையில் கொல்லப்பட்டதையும், அதைக் கேள்வி கேட்டு நியாயம் கிடைக்கச் செய்த வழக்குரைஞரையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில், தேவையின்றி, ஹிந்தி மொழி மீதான வெறுப்பு, பாமக மற்றும் வன்னியர் ஜாதி மீதான வெறுப்பு, ஹிந்து சமய நம்பிக்கைகள் அவமதிப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன; இடதுசாரிகள் மட்டுமே அடித்தள மக்களின் பாதுகாவலன் என்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 

உண்மையில் இவை இல்லாமல், உண்மைக்கதையை மட்டும் படமாக எடுத்திருந்தாலே, அனைவராலும் பாராட்டப்படும், குறையில்லாத திரைப்படமாக ‘ஜெய் பீம்’ விளங்கியிருக்கும். ஆனால், அண்மைக்காலமாக, நடிகர் சூர்யாவின் போக்கு தேசநலனுக்கு எதிரானதாக இருந்து வருவது கவலை அளிக்கிறது. 

இந்நிலையில், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை முன்வைத்து, அது மறைமுகமாகப் பேசும் அரசியலையும், அதன் பின்புலத்தில் ஒளிந்திருக்கும் மதமாற்றக் கும்பல்களையும் ஆராய்கிறார்கள், எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமூக சேவகர் திரு. வி.வி.பாலா ஆகியோர். சுய ஆய்வுக்கு வித்திடும், அவர்களது முகநூல் பக்க கட்டுரைகள் இவை...

-ஆசிரியர் குழு
***
பொய்களின் முதுகில் ஏறி, போலிகள் வலம்!

நம் சமூகம் அதிக அக்கறை கொடுத்துக் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் பற்றி ‘ஜெய்பீம்’ திரைப்படம் பேசியிருக்கிறது. ஆனால், அவற்றின் உண்மைக் காரணங்களை அது துளியும் கணக்கில் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், சம்பந்தமே இல்லாமல், மொழி, ஜாதி, மத வன்மத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது. எனவே பேசா விஷயத்தைப் பேசிவிட்ட ஒரே காரணத்துக்காக அந்தத் திரைப்படக் குழுவை எந்தவகையிலும் பாராட்டவே முடியாது.

போலீஸ் அராஜகம் என்பது இவர்களுக்கு மட்டுமே நடக்கும் கொடுமை இல்லை. எனவே அதுபற்றி இந்தப் படம் சார்ந்து பேச எதுவும் இல்லை. யாராக இருந்தாலும் அடிக்கக் கூடாது; சிறையில் அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமரா முழு நேரமும் பொருத்தப்பட்டிருக்கவேண்டும்; முதல் தகவல் அறிக்கை பதிவானால் எப்படியாவது தீர்வு கண்டுபிடிக்கப்பட்டாக வேண்டும் என்ற விதிமுறையை மாற்ற வேண்டும்- என சில பொதுவான வழிகளைச் சொல்லலாம். காவல் துறை (குறிப்பாக உயர் அதிகாரிகள்) எம்.எல்.ஏ., எம்.பி., கவுன்சிலர் என அரசியல் பிரமுகர்களிடமிருந்து கணிசமான தொகையைச் சேகரித்து திருட்டுப் பொருட்களுக்கு ஈடுகட்டச் சொல்லலாம்.

ஆனால், நரிக்குறவர், இருளர், குரும்பர் போன்ற மலைவாசி, வனவாசி சமூகங்களின் உண்மைப் பிரச்னை என்பது மிகவும் பெரியது.

இந்தியாவில் டிராகனின் காலடித் தடங்கள்

-திருநின்றவூர் இரவிக்குமார்



சீனா ஏராளமான பணத்தை இந்திய திரை உலகு, பல்கலைக்கழகங்கள், சமூக நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள், சமூக ஊடகங்கள், தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் அள்ளி வீசுகிறது. அதன்மூலம் இந்திய தேசப் பாதுகாப்புக்கும் ஜனநாயகத்திற்கும் ஏற்பட்டு வருகின்ற ஆபத்துக்கள் ஏராளம். 

இதனை ‘லா அண்ட் சொசைட்டி அலையன்ஸ்’ (Law and Society Alliance) என்ற அமைப்பு ஆய்வு செய்து 76 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை 2021 செப். 3-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. 

அதில், இந்தியாவில் சீனாவின் தாக்கம் எவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் உள்ளது என்பதும் சீனாவின் உள் நோக்கம் என்ன என்பதும் தெளிவாகிறது. அது பற்றிய சில விவரங்கள்...

உலகநீதி (கவிதை)

 -உலகநாதர்

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
      ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
      வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
      போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
      மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!      

#1

தமிழகத்தின் தார்மீகக் குரல்

-ஆசிரியர் குழு

சோ ராமசாமி
(1934 அக். 5 - 2016 டிச. 7)

(ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி)

    வழக்கறிஞர், நாடகக் கலைஞர், நாடக எழுத்தாளர், இயக்குநர், நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், இதழாசிரியர் எனப் பல முகங்களைக் கொண்டவர் திரு. சோ.ராமசாமி. அவர் 1970-இல் துவங்கி நடத்திய, இன்றும் வெளிவரும் ‘துக்ளக்’ வார இதழ் அரசியல் விழிப்புணர்வு மேம்பட உதவும் இதழ் மட்டுமல்ல, அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் குரலாகவும் ஒலித்தது; ஒலிக்கிறது.

1934 அக். 5-இல் பிறந்த சோ, 2016 டிச. 7-இல் மறைந்தார். அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நட்புறவு கொண்டிருந்தபோதும், தனக்கு சரியானது என்று தோன்றும் கருத்தை வெளிப்படுத்தவோ, தவறு செய்யும் அரசியல்வாதிகளைக் கண்டிக்கவோ அவர் தயங்கியதில்லை.

அவரது அரசியல் விமர்சனங்களில் நையாண்டியும் நாகரிகமும் மிளிர்ந்தன. தமிழகத்தின் அரசியல் மனசாட்சியாக அவர் விளங்கினார். அரசியலின் பல துருவங்களையும் ஒருங்கிணைக்கும் மேடையாக அவர் திகழ்ந்தார்.

அரவிந்த அமுதம்

-மகரிஷி அரவிந்தர்


(அரவிந்தம் -150)


சாத்வீகப் போராட்டமே நமக்கான ஆயுதம்!

இன்று இந்தியாவில் நிலவுகின்ற சூழ்நிலையில் சாத்வீகப் போராட்டமே நமக்கு மிகவும் இயல்பான, பொருத்தமான ஆயுதமாகும்.

குறிப்பாக அந்நிய ஆட்சியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு தாமாகவே அதனுடன் ஒத்துழைக்க முன்வருவதையே முக்கியமாக நம்பி இருக்கின்ற நாடுகளுக்கு சாத்வீகப் போராட்ட முறை பொருத்தமானதாகும். சாத்வீகப் போராட்டத்தில் முதல் தத்துவம், பிரிட்டிஷ் வாணிபம் நமது நாட்டைச் சுரண்டுவதற்கும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் நாட்டை ஆள்வதற்கும் ஒத்துழைக்க மறுத்து அந்நிய நிர்வாகத்தை நடத்த முடியாமல் செய்வதாகும். ஒரே வார்த்தையில் அதற்குப் பெயர் பகிஷ்காரம்.

நமது சுதந்திரத்தை அடைவதற்கு மிக சக்தி வாய்ந்த முறை பலாத்காரம் அன்று என்பதை நாம் உணர்ந்துள்ளோம். ஆகவே நம்மால் முடிந்த மட்டும் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை மறுப்போம். அவ்வாறு நாம் நம்மை ஒத்துழையாமைக்கு - அரசாங்கத்திற்கு வரி கொடுக்க மறுப்பதும் இதில் அடங்கும் – ஆயத்தம் செய்வோம்.

ஆத்திரமூட்டும்படியாக அரசாங்கம் நடந்துகொள்ளும்போதும் பலாத்காரத்தில் இறங்காமல், நாமாக அரசாங்கத்திற்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டு வரி கொடுப்பதையும் நிறுத்திவிட்டால் மனிதத்தன்மையற்ற இந்த ஆட்சி முடிந்து போவது திண்ணம் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

-‘வந்தேமாதரம்’ பத்திரிகையில் 
1907 ஏப்ரல் 9 முதல் 23 வரை எழுதிய கட்டுரைகளில் இருந்து…

(தொ.ஆ.குறிப்பு: மகாத்மா காந்தி 1920-21இல் இதே விஷயத்தை முதல்முறையாகப் பேசினார்.)

***

தீண்டாமையை எரிக்கக் கிளர்ந்த சுடர்

-முத்துவிஜயன்

மகாத்மா ஜோதிராவ் புலே
(பிறப்பு: 1827 ஏப். 11 -  மறைவு: 1890 நவ. 28)


மராட்டியத்தில் பிறந்த மகாத்மா ஜோதிப கோவிந்தராவ் புலே (1827 ஏப். 11), பாரதத்தின் சமூக சீர்திருத்த சிற்பிகளில் முதன்மையானவர். இவர் மிகச் சிறந்த அறிஞர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தப் போராளி, கல்வியாளர், தத்துவவாதி என்று பல முகங்களை உடையவர். இவரும் இவரது மனைவி சாவித்திரி புலேவும் இணைந்து பாரதப் பெண்களின் கல்வி உயர பாடுபட்டனர்.

கல்வித்துறை மட்டுமல்லாது, விவசாயம், மகளிர் மேம்பாடு, வருணமுறைக்கு எதிரான போராட்டம், விதவையர் மறுமணம் ஆகிய துறைகளிலும் அரிய முத்திரை பதித்தவர் ஜோதிராவ் புலே.

மகாராஷ்ட்ராவில் உள்ள சதாராவில், 'மாலி' என்ற பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்த புலே, 9 வயத்தில் தனது தந்தை கோவிந்தராவை இழந்தார். அண்டைவீட்டினரான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களால் அவரது அறிவுத்திறன் உணரப்பட்டது. அவர்களது உதவியுடன், உள்ளூர் ஸ்காட்டிஷ் பள்ளியில் படித்த புலே, அப்போதிருந்த ஜாதி ஏற்றத் தாழ்வுகளால் மனம் நொந்தார். தனது நண்பரின் இல்லத் திருமணத்தில் ஜாதி காரணமாக அவமதிக்கப்பட்ட நிகழ்வே (1848), புலேவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கடவுளை அறிந்தவர் (கவிதை)

-நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை




பல்லவி


அவரே கடவுளை அறிந்தவராவர்
அனைவரும் மதித்திடத் தகுந்தவராவர்

(அவரே)

அநுபல்லவி


துன்பப் படுவோர் துயரம் சகியோர்
    துடிதுடித் தோடி துணைசெயப் புகுவார்
இன்பம் தனக்கென எதையும் வேண்டார்
    யாவரும் சுகப்பட சேவைகள் பூண்டார்

(அவரே)

அரவிந்தர் கிறிஸ்தவரான கதை

 - திருநின்றவூர் இரவிக்குமார்

(அரவிந்தம்-150)

அரவிந்த மகரிஷியின் தந்தை கிருஷ்ண தன கோஷ்  ஒரு மருத்துவர். அவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே ராஜ் நாராயண போஸ் என்பவரின் மகளான ஸ்வர்ணலதாவை திருமணம் செய்து கொண்டார். ராஜ் நாராயணன் பிரம்ம சமாஜத்தின் தலைவர்களில் ஒருவர்; மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் இந்தியப் பண்பாட்டின் சங்கமமாக இருந்தவர். மக்கள் அவரை ரிஷி ராஜ் நாராயணன் என்றே அழைத்தனர்.

கிருஷ்ண தன கோஷின் திருமணம் பிரம்ம சமாஜ முறையில் நடந்தது. இந்த முறையில் திருமணம் செய்வது என்பது அப்போது (இப்போதும்) வழக்கத்தில் இருந்த முறையிலிருந்து மாறுபட்டது. ஹோமம் வளர்ப்பது, அதை வலம் வருவது போன்ற சடங்குகள் கிடையாது. பிரம்ம சமாஜத்தின் தலைவர் ஒருவர் (ஆச்சார்யா என்று அவர் அழைக்கப்படுவார் ) மணமக்களின் வலது கரங்களை இணைத்து மல்லிகை மலர்ச் சரத்தால் கட்டிவிடுவார் . மணமக்களின்  அருகில் இருபுறமும் அவர்களின் பெற்றோர் இருப்பார்கள். மலர்ச்சரத்தால் இணைத்த பிறகு மணமக்கள் பெரியோர்களை விழுந்து வணங்குவார்கள். பிறகு அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை நடைபெறும். திருமணம் (அரசு ஆவணங்களில்) பதிவு செய்யப்படும். மங்கல நாண் அணிவிப்பது நடக்கும். மொத்தச் சடங்கும் இவ்வளவுதான்.

பிரம்ம சமாஜம் 1828 ஆகஸ்ட் 20-ஆம் தேதி துவங்கப்பட்டது. ஹிந்து சமயத்தையும் ஹிந்து சமுக பழக்கவழக்கங்களையும் சீர்திருத்தம் செய்ய ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு வேதத்தை ஏற்கவில்லை; இறைவனின் அவதாரங்களை ( அவதாரக் கொள்கை ) ஏற்கவில்லை; உருவ வழிபாட்டையும் பல கடவுள் கொள்கையையும் ஏற்கவில்லை. இந்து சமூகக் கட்டமைப்பான ஜாதி அமைப்பை அது ஏற்கவில்லை. வினைக் கொள்கை ( கர்மா ),  மறுபிறப்பு கொள்கைகளை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் சமாஜத்தின் உறுப்பினர்களின் விருப்பம் என்று சொல்லியது.

பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள் - 6

-பேரா. பூ.தர்மலிங்கம்



இன்றைய காலகட்டத்தில் நாம் நம்மைச் சுற்றிக் காண்கின்ற தர்மத்தின் சிதைவுகள் பெரும்பாலும் மேலைநாட்டுக் கல்வியின் விளைவாகும்.  ‘மதம்’ என்ற ஆங்கிலச் சொல் தர்மத்தின் பரிசுத்தமான அர்த்தத்தை சிதைப்பதில் முக்கியப் பங்களித்துள்ளது. 

பிரிட்டிஷார்கள் இந்தியாவிற்கு வந்தபோது தான், இந்த ‘தர்மம்’ என்ற வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டார்கள். தர்மம் என்பதற்கு ஒரு சமமான, விரிவான அர்த்தம் அவர்களிடம் இல்லை. எனவே அவர்கள் அதை ‘மதம்’என மொழிபெயர்த்தனர். இத்தகைய மொழிபெயர்ப்பு இந்தியச் சொற்களின் அர்த்தத்தைச் சிதைத்து விட்டது. 

தர்மம் என்பது, பல்வேறு மதங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த சொல். இந்த பாரதத்தில் ஒவ்வொரு மதமும் ஒரு வழிபாட்டு முறையையும் பல அமைப்பு முறைகளையும் கொண்டிருக்கின்றன. ஆனால், இவ்வாறு பல அமைப்பு முறைகளும் மதப்பிரிவுகளும் இருப்பினும், தர்மம் ஒன்றேயாகும். தர்மம் என்பது இவ்வாறான வழிபாட்டு முறைகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் நன்மை தரக்கூடிய மற்றும் அருளுகின்ற வழியைத் திறக்க வல்லது.

***

Golden Quotes of Aurabindo

-Maharishi Aurobindo


(அரவிந்தம்-150)

Under the stress of alien impacts she (India - Hindu) has largely lost hold not of the structure of that dharma, but of its living reality. For the religion of India is nothing if it is not lived.

It has to be applied not only to life, but to the whole of life; its spirit has to enter into and mould our society, our politics, our literature, our science, our individual character, affections and aspiration.
***

ஹிந்து என்ற சொல்: தேவையற்ற விவாதம்

-தில்லை கார்த்திகேயசிவம்

    
ஹிந்து என்ற சொல்லுக்கான பழமையான ஆதாரங்கள்

    
    அண்மைக்காலமாக, தமிழகத்தில் (திமுக ஆட்சிக்கு வந்த பிறகு) ஹிந்து சமயம் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வகையிலான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்றான மறைமுகத் தாக்குதல், ஹிந்து சமுதாயத்தில் உள்ள ஒரு சிலரைக் கொண்டு, சைவ- வைணவ பேதம், சைவ- சித்தாந்த சைவ பேதம், தமிழ்- சம்ஸ்கிருத பேதம் ஆகியவை தூண்டிவிடப்படுவதாகும். 

    அந்த வகையில், ஹிந்து என்பது ஒரு மதமல்ல என்றும், அந்தச் சொல்லே அயலார் நமக்கு அளித்த வார்த்தை என்றும் ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் பின்புலத்தில் உள்ள நாசகாரச் சதியை உணர்ந்து எச்சரிக்கிறார், இறை வழிபாட்டில் அனுபவம் மிக்க திரு. தில்லை கார்த்திகேய சிவம். அவரது முகநூல் பதிவுகளில்  இருந்து...

-ஆசிரியர் குழு
***

வடபுலத்தில் ஒரு புறநானூற்றுப் பேரரசி

-வி.சண்முகநாதன்

ஜான்சி ராணி லட்சுமிபாய்
(பிறப்பு: 1828  
நவ.19 –  பலிதானம்: 1858 ஜூன் 18

    தமிழகத்தில் ராணி வேலு நாச்சியார் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடியவர். அவர் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். அவரைப்போலவே வீரம் செறிந்த பெண் ஒருவர் நமது நாட்டின் வடதிசையில் தோன்றினாள். அந்த வீரம் செறிந்த பெண், நமது புறநானூற்றுப் புலவர் காவற்பெண்டு பாடியதைப்போலவே காணப்பட்டார்.

சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுளனோ? என வினவுதி, என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ! போர்க்களத் தானே!

(புறம் – 86)

(பொருள்: என் வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிக்கொண்டு நின்று “உன் மகன் எங்கு இருக்கிறான்?” என வினவுகிறாய். அவன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. புலி வெளியேறியுள்ள கல்குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு இதுவே. அவன் போர்க்களத்தில்தான் இருப்பான். அங்கே சென்று அவனைக் காண்பாயாக!)

நா, வாயால் தேசியம் வளர்த்த பாரதியும், நாவாயால் தேசம் காத்த வ.உ.சி.யும்

-கே.அண்ணாமலை ஐபிஎஸ்


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 42)



நம் இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கு மிகவும் தீவிரமாக பங்களித்த அரும்பெரும் தேசியவாதிகளை உருவாக்கிய வரலாறு தமிழகத்திற்கு உண்டு. அவர்களில் பலர் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் ஆணிவேரை அசைத்துப் போராடுவதில் முன்னணியில் இருந்தனர். ஆனால், அழையா விருந்தினராக வந்து ஆட்சியைப் பிடித்த ஆங்கிலேயரின் அநாகரிக வலிமையை, நியாயங்கள் அற்ற நடைமுறையை எதிர்த்து நிராயுதபாணியாகப் போராடினர்.

எண்ணிப் பார்த்தால், ஏறக்குறைய அனைவருமே வளமான தங்கள் தொழிலையும், வசதி வாய்ப்புகளையும் தாய் நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்தனர். ஆங்கிலேயரின் அடக்குமுறையை தாங்கள் சேமித்த நிதியாலும் செயல் திறன் மிக்க மதியாலும் திறமையாக எதிர்கொண்டனர். ஆனால், காலப்போக்கிலே தங்கள் வாழ்வையே நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதைக் கொடுத்தனர் நாட்டிற்காக... அதுவும் மகிழ்ச்சியுடன்! அவர்கள் தங்கள் தாய் மொழியின் மீதும், நம் நாட்டின் மீதும் தணியாத பெருமை கொண்டிருந்தனர்.

சுதந்திர இந்தியாவை வடிவமைக்கும் சூட்சமத்தையும், அதற்கான மனவுறுதியையும் இறையருளால் அவர்கள் பெற்றிருந்ததால் அந்தக் கடினமான காலங்களை அவர்களால் கடக்க முடிந்தது.  அந்தப் போராட்டத்தில் சொல்லொணாத் துயரங்களை ஏராளமானோர் அனுபவித்த போதும், ஒரு சிலர் மட்டுமே உயர்வாகக் கொண்டாடப்பட்டனர் என்பதைப் புரிந்துகொள்ள வரலாற்றை நாம் வரி பிறழாது படிக்க வேண்டும்.