13/03/2020

பங்குனி 2020 மின்னிதழ்


உள்ளடக்கம்:


1.  அமுதமொழி - 3
-நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

2. விவேகானந்த பஞ்சகம்
-சுவாமி விபுலானந்தர்

3. பங்குனித் திங்கள் - ஆன்றோரும் சான்றோரும்
-ஆசிரியர் குழு

-ஆதலையூர் த.சூரியகுமார்

5. உ.வே.சா.வின் குருநாதர்
-திருநின்றவூர் இரவிக்குமார்

6. நிகண்டு, அகராதி அளித்த பெருமக்கள்
-ஆசிரியர் குழு

-ஆசிரியர் குழு

-ஆசிரியர் குழு

-ஆசிரியர் குழு

11. TRIBUTE TO SWAMI VIVEKANANDA

-Netaji Subhas Chandra Bose

12. மண்ணுக்கேற்ற பொதுவுடைமைவாதி
-முத்துவிஜயன்அமுதமொழி - 3உரிமைக்குரல்

சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை; எடுக்கப்படுகிறது.
நீங்கள் உங்களின் குருதியை கொடுங்கள்; நான் உங்களுக்கு விடுதலை கொடுக்கிறேன். கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!


-நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

விவேகானந்த பஞ்சகம்

-சுவாமி விபுலானந்தர்


வாழியநின் றிருநாமம்! வாழியவிந் நாடு
வையகமே சிறந்ததென வானகத்தோர் வழுத்த
ஆழியிறை யுலகிருந்தோ அரனுலக மிருந்தோ
அருமுனிவ ருலகிருந்தோ அவனிமிசை யடைந்தாய்?
அடைந்ததுவும் அருட்டிறத்தின் சிறப்பையுரைப் பதற்கோ?
ஆண்மையிது வெனக்காட்டிக் கீழ்மையகற் றுதற்கோ?

பங்குனித் திங்கள் - ஆன்றோரும் சான்றோரும்பங்குனி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.


போட்டித் தேர்வுகளின் பொய்முகங்கள்

- ஆதலையூர் த. சூரியகுமார்டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் மிகவும் வருத்தம் அளிக்கின்றன. தேர்வுகள் மிக நேர்மையாக நடப்பதாக எண்ணிக் கொண்டு ஆங்காங்கே இளைஞர்கள் மிகத் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். அவர்களை ஏமாற்றுவதாக இந்த முறைகேடுகள் விளங்குகின்றன.

மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சிப் பூங்கா போன்ற இடங்களில் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் படிப்பதை நீங்கள் பார்க்க முடியும். சிலர் குடும்பத்தோடு வந்து உட்கார்ந்து படிப்பதையும் பார்க்க முடியும். இளம் கணவன் மனைவியர் கூட தங்களது குழந்தையையும் அழைத்துக்கொண்டு வந்து பூங்காவில் உட்கார்ந்து படிக்கிறார்கள். கணவனும் மனைவியும் தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொள்கிறார்கள்.  மதுரையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல இடங்களில் நீங்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்க முடியும்.

தேர்வறைக்கு மனைவியை அனுப்பிவிட்டு தேர்வு மையத்திற்கு வெளியே இருக்கும் வேப்பமரத்தில் தூளி கட்டி தன் குழந்தைக்குத் தாலாட்டு பாடுகிற கணவன்மார்களை நீங்கள் கண்டதுண்டா?

உ.வே.சா.வின் குருநாதர்

-திருநின்றவூர் இரவிக்குமார்


திரிசிரபுரம் மகா வித்வான்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)


ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம். ஒரு தமிழ் நூல் தொடர்பானது. அதை எழுதியவரும் அவரது நண்பர்களும் சென்னையில் மின்சார ரயிலில் பயணித்து கூவம் ஆற்றில் (சாக்கடையில்) அந்த நூலை வீசி, நூல் வெளியீட்டு விழாவை நடத்தினார்கள். 

இதற்கு மாறாக, ஒருவரது நூலின் வெளியீட்டு விழாவிற்கு அதை பல்லக்கில் வைத்து மக்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்று அரங்கேற்றிய நிகழ்வைச் சொன்னால் இன்று யாராவது நம்புவார்களா? ஆனால் அது இதே தமிழகத்தில் நடந்தது. ஒரு முறை அல்ல, பல முறை. அப்படி தமிழக மக்களால் உயர்வாகப் போற்றிக் கொண்டாடப்பட்டவர் மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

நிகண்டு, அகராதி அளித்த பெருமக்கள்


-சேக்கிழான்

சேந்தன் திவாகரம்


தமிழின் மொழி வளர்ச்சியில் இன்றியமையாத இடம் பிடித்தவை, நிகண்டுகள். சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையே நிகண்டுகள் ஆகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை இவையே. இந் நூல்கள் முற்காலத்தில் ‘உரிச்சொற்பனுவல்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டன

இக்காலத்தில் சொற்களின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துகிறோம். இவை சொல்லிலுள்ள முதலெழுத்து நெடுங்கணக்கு வரிசையைப் பின்பற்றி, வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. தற்கால அகராதிகளுக்கு முன்னரே, சுமார் 700ஆண்டுகளுக்கு முன்னரே உருவானவை நிகண்டுகள்.

உலக தாய்மொழி தின விழா செய்திகள் 4


துறையூர், இமயம் கலை, அறிவியல் கல்லூரி:

திருச்சி மாவட்டம், துறையூர், இமயம் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் உலகத் தாய்மொழிகள் தினக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது மாணவர்களுக்கு 'இலக்கிய நூல் இயம்புக' என்ற போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இந்நிக்ழ்வில் தே.சி.க. மாநிலச் செயலாலர் ஆதலையூர் த.சூரியகுமார் கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னதாக அக்கல்லூரியின் துணைத் தலைவர் திரு. சிவகுமாருக்கு ஆலங்குடி அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் (குருஸ்தலம்) பிரசாதம் வழங்கி தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

உலக தாய்மொழி தின விழா செய்திகள் 3கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம்:

கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் சுயநிதிப்பிரிவு கல்லூரி வளாகத்தில், தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் பிப். 18ஆம் தேதி உலக தாய்மொழி தின விழா நடைபெற்றது.

கல்லூரியின் இயக்குநர் பேராசிரியர் டி.ராஜா தலைமை வகித்தார். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஞா.ஜூலியட் மரிய ப்ளோரா வரவேற்றார். கல்லூரி மாணவிகள் 8 பேர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது,  பிரெஞ்ச், ஹிந்தி ஆகிய மொழிகளில் தாய்மொழியின் சிறப்புக் குறித்துப் பேசினர்.

இந்நிகழ்வில் தேசி.க. மாநில பொதுச்செயலாளர் கவிஞர் குழலேந்தி, கோவை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கவி.பூவரசன்  (படம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்த் துறை உதவி பேராசிரியர் சு.ஆஷா நன்றி கூறினார்.

உலக தாய்மொழி தின விழா செய்திகள் 2சேலம் வைஸ்யா கல்லூரி:

தேசிய சிந்தனைக் கழகமும், சேலம் வைஸ்யா கல்லூரியும் இணைந்து நடத்திய உலக தாய்மொழி தின விழா, கல்லூரி அரங்கில் பிப். 27ஆம் தேதி நடைபெற்றது.

கல்லூரியின் செயலாள்ர் ஜெ.இராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். முதல்வர் பா.வெங்கடேசன் வரவேற்றார்.  ‘தேசிய ஒருமைப்பாட்டுக்கு துணை நிற்கும் தென்பாரத மொழிகள்’ என்ற தலைப்பில் பல மொழிகளில் மாணவிகள் உரையாற்றினர். (படம்: விழாவில்உரையாற்றிய மாணவிகள், மேடையில் விருந்தினர்களுடன்).

இந்நிகழ்வில் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். சேலம் மாவட்ட தே.சி.க. செயலாளர் பேராசிரியர் சு.சண்முகம், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கு.தங்கவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் பெ.தீபா நன்றி கூறினார்.

உலக தாய்மொழி தின விழா செய்திகள் 1


-ஆசிரியர் குழு


உலக தாய்மொழி தினவிழா நிகழ்வுகள்:

தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் உலக தாய்மொழி தின விழாக்கள் பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல்:

1.   அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி, கோவை (பிப். 18)

2. இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி, நாகப்பட்டினம். (பிப். 18)

3. துறையூர், இமயம் கலை, அறிவியல் கல்லூரி

4. மீனாட்சி இராமசாமி கல்லூரி, தெக்கனூர்,அரியலூர். (பிப். 20)

5. தக்ஷிண பாரத ஹிந்தி பிரஸார சபா, சென்னை. (பிப். 21)

6. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை. (பிப். 21)

7. ‘புதிய வெளிச்சம்’ அமைப்பு , பெரியநாயக்கன்பாளையம்,கோவை. (பிப். 21)

8. சங்கரா கலை, அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம். (பிப். 22)

9. சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, கரூர். (பிப். 24)

10. விநாயகா மிஷன் பல்கலைக்கழகம், சேலம். (பிப். 26).

TRIBUTE TO SWAMI VIVEKANANDA

-Netaji Subhas Chandra Bose


In the eighties of the last century, two prominent religious personalities appeared before the public who were destined to have a great influence on the future course of the new awakening. They were Ramakrishna Paramahamsa, the saint, and his disciple Swami Vivekananda…

Ramakrishna preached the gospel of the unity of all religions and urged the cessation of inter-religious strife… Before he died, he charged his disciple with the task of propagating his religious teachings in India and abroad and of bringing about an awakening among his countrymen.

Swami Vivekananda therefore founded the Ramakrishna Mission, and order of monks, to live and preach the Hindu religion in its purest form in India and abroad, especially in America, and he took an active part in inspiring every form of healthy national activity. With him religion was the inspirer of nationalism.

மண்ணுக்கேற்ற பொதுவுடைமைவாதி

-முத்துவிஜயன்


ராம் மனோகர் லோகியா
(பிறப்பு: 1910, மார்ச் 23 – மறைவு: 1967, அக்டோபர் 12)


அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது. ‘சோஷலிசம்’ எனப்படும் இத் தத்துவம், அரசே அனைவரது வாழ்வையும் சமமாகவும் நலமாகவும் பேண வேண்டும் என்ற அடிப்படையில் உருவானது. இத் தத்துவத்தை பாரத மண்ணுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தவர் இந்திய சோஷலிச அரசியல்வாதிகளின் குருவாக மதிக்கப்படும் ராம் மனோகர் லோகியா. இவரது வாழ்வே ஒரு வேள்வி போன்றது; இளைய தலைமுறையினர் அறிய வேண்டியது.