17/07/2020

ஆடி 2020 மின்னிதழ்


உள்ளடக்கம்


1. அமுத மொழி- 7
-மகரிஷி அரவிந்தர்

2. ஆடித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்
-ஆசிரியர் குழு

3. கணித மேதையின் கதை- 4
-ஆதலையூர் த.சூரியகுமார்

-ஆண்டாள் நாச்சியார்

-என்.டி.என்.பிரபு

-பட்டினத்தார்

-தஞ்சை வெ.கோபாலன்

8. முருகா எனும் நாமம்!
-திருமுருக கிருபானந்த வாரியார்

9. கந்த சஷ்டிக் கவசம் (கவிதை)
-வல்லூர் தேவராய சுவாமிகள்

10. GEMS FROM SRI AUROBINDO
-ஆசிரியர் குழு

.



அமுத மொழி- 7





எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில்
கடந்தகாலம் குறித்த பெருமிதம்,
நிகழ்காலம் குறித்த வேதனை,
எதிர்காலம் குறித்த பொற்கனவுகள் நிறைந்துள்ளதோ,
அந்த தேசம்தான் முன்னேற்றமடையும்.

-மகரிஷி அரவிந்தர்

ஆடித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

-ஆசிரியர் குழு

அன்னை சாரதா தேவி
ஆனி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய 
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், ஆடித் திங்கள்  (16.07.2020 - 16.08.2020)

கணித மேதையின் கதை - 4

-ஆதலையூர் த.சூரியகுமார்


ஸ்ரீனிவாச ராமானுஜன்
(டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920)

கணித மேதையின் கதை
(ஸ்ரீனிவாச ராமானுஜன் பற்றிய 100 சுவாரஸ்யமான தகவல்கள்)



76. குளிரின் கணக்கு:

ராமானுஜன் பயந்தது போலவே லண்டன் குளிரை அவரால் தாங்க முடியவில்லை.
கல்லூரி முடிந்து வந்ததும் தீ மூட்டி நெருப்பு அருகே அமர்ந்து கொள்வார். ஆனாலும்
அங்கே உட்கார்ந்து கொண்டே கணித ஆராய்ச்சிக் குறிப்புகளை எல்லாம் எழுதத் தொடங்குவார். அந்தக் கட்டுரைகளை எல்லாம் உடனடியாக ஹார்டியின் பார்வைக்கு
அனுப்பி வைப்பார். ஹார்டி அதனை சரிபார்த்து லண்டன் கணித சங்கத்துக்கு
அனுப்பிவிடுவார்.

77. மொழிகளின் கணக்கு:

 1914 ஆம் ஆண்டுதான் ராமானுஜன் லண்டன் போய் சேர்ந்தார். ஆனால் அதே ஆண்டு
முதல் உலகப்போர் தொடங்கியது. லண்டனிலிருந்து வெளிநாட்டவர்கள் எல்லாம்
அவரவர் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். ராமானுஜனும் தாய்நாடு திரும்பி
விடலாம் என்று நினைத்தார். ஆனால் ஹார்டி ராமானுஜனுக்கு நம்பிக்கையும்
ஆறுதலும் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் லண்டன் பத்திரிகையில் வரக்கூடிய
கணக்குகளைப் புரிந்து கொள்வதற்காக லத்தீன், ஜெர்மனி மொழிகளையும் ஹார்டி கற்றுக்
கொடுத்தார். 

வாரணமாயிரம் - கவிதை

- ஆண்டாள் நாச்சியார்


ஆண்டாள் நாச்சியார்
திருநட்சத்திரம்: ஆடிப்பூரம்
(ஆடி -9;  ஜூலை 24)
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3

சுதந்திரம் பிறப்புரிமை என்றவர்

-என்.டி.என்.பிரபு


பால கங்காதர திலகர்
(பிறப்பு: 1856 ஜூலை 23- மறைவு:  1920 ஆக. 1)


“சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்” என சிங்கநாதம் செய்தவர் லோகமான்ய பாலகங்காதர திலகர்.

மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விவரிக்க இயலாத துன்பத்திற்கு எதிராகவும், இந்து ராஜ்ஜியம் அமையவும் தோன்றிய மாவீரன் சத்ரபதி சிவாஜி. அதேபோல, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கியவர் திலகர்.

இவர் 1856, ஜூலை 23 அன்று மராட்டியத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கிசல் என்ற கிராமத்தில் பிறந்தார். தாயார்: பார்வதி பாய், தந்தை: கங்காதர சாஸ்திரி. திலகரின் தந்தை சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற பண்டிதர். இவர் ஆசிரியப் பணியில் ஈடுபட்டு 1886ம் ஆண்டு தொடக்கப்பள்ளித் துணை ஆய்வாளராய் இருந்தார். திலகர், 'கேசவராவ்' என்று மூதாதையர் பெயராலும், 'பாலன்' என சிலரால் செல்லமாகவும் அழைக்கப்பட்டார்.

தாய்க்கு எழுதிய சரமக்கவி (கவிதை)

-பட்டினத்தார்




பட்டினத்தார்
(குருபூஜை நாள்: ஆடி - 27 - உத்திராடம்)


ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்?

பாரதி கண்ட புதுமைப்பெண்

-தஞ்சை வெ.கோபாலன்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

(பிறப்பு: 1886 ஜூலை 30- மறைவு: 1968 ஜூலை 22)


பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர்.

அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அரசின் உதவித்தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண். சட்டசபையில் அங்கம்வகித்த முதல் பெண். இப்படிப் பல நிகழ்வுகளில் முதல்பெண் மணியாகத் திகழ்ந்தவர் முத்துலட்சுமி ரெட்டி-மேலும், சமூக சிர்திருத்தவாதியாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர்.

முருகா எனும் நாமம்!

-திருமுருக கிருபானந்த வாரியார்

 “ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும்
பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்
சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்”
என்பது கந்த புராணத் திருவாக்கு. இறைவனுக்கு ஊர், குணம், அடையாளம், செயல் பேர், காலம், பற்றுக்கோடு, போக்கு, வரவு, உயர்வு, ஒப்பு முதலிய ஒன்றும் இல்லை.
பேரும் ஊரும் இல்லாத பெருமான் ஆன்மாக்களின் பொருட்டு – ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டு பேரும் உருவும் தாங்கி வருகின்றான்.
இத்திருவருளின் இயல்பை உள்ளவாறு உணராத புலவர்கள் இறைவனுக்கு நாம ரூபம் நம்மால் கற்பிக்கப்பட்டன என்பார்கள்.
மூவாண்டுடைய சீகாழிப்பிள்ளையார் அழுதலும் அவருடைய பண்டைத் தவ வலிமையால் இறைவன் திருவுருவுடன் காட்சி தருகின்றான். வெள்ளை விடையும், பவளமலை போன்ற திருவுருவும், அருகில் மரகதக் கொடி போன்ற அம்பிகையும், பிறையணிந்த திருமுடியும், மான்மழு ஏந்திய திருக்கரங்களும், நீல கண்டமும், தோடணிந்த தாழ்செவியும், கருணை பொழியும் மலர்க் கண்களும், நீறணிந்த திருமேனியுங் கண்டு, அச்சிறியபெருந்தகையார் “தோடுடைய செவியன்” என்று பாடுகின்றார். அத்திருமேனியை மூவாண்டுக் குழந்தை கற்பனை புரியவில்லை. கண்ட காட்சியைக் கழறுகின்றது.

கந்தர் சஷ்டி கவசம் (கவிதை)

-வல்லூர் தேவராய சுவாமிகள்



காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

Gems from Sri Aurobindo


"A civilisation is to be judged by the power of its ideas."

"Evolution is the one eternal dynamic law and hidden process of the earth-nature."

"All existence is a manifestation of God."

"Spirituality is a single word expressive of three lines of human aspiration toward divine knowledge, divine love and joy, divine strength."