13/04/2021

சித்திரை- 2021 மின்னிதழ்

அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!



உள்ளடக்கம்


1. அமுதமொழி- 16
-ரவீந்திரநாத் தாகூர்


2. கூற்றாயினவாறு விலக்கலீர்! (கவிதை)
-திருநாவுக்கரசர் நாயனார்

3. கண்ணி நுண் சிறுத்தாம்பு (கவிதை)
-மதுரகவி ஆழ்வார்


4. சித்திரைத் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)
-ஆசிரியர் குழு


5. அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 9
-பொன்.பாண்டியன்


6. பொன்மழைப் பாடல்கள் (தமிழாக்கம்)
-கவியரசு கண்ணதாசன்


7. ஆச்சார்யர் இராமானுஜரும், அண்ணல் அம்பேத்கரும்
-ம.கொ.சி.இராஜேந்திரன்


8. அம்பேத்கரும் தேசியமும்
-சேக்கிழான்


9. Ambedkar Versus His Apostles
-Balbir Punj


10. கண்ணாடிக் கவிதைகள் (கவிதை)  
-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்


11. ‘ஜனநாயக’ ராமன்
-திருநின்றவூர் இரவிக்குமார்


12. சிறகு முளைத்த முதிய பறவை (கவிதை) 
-க.ரகுநாதன்

13. மறைந்தது நடமாடும் பல்கலைக்கழகம்!
-தஞ்சை வெ.கோபாலன்


14. இயற்கையை நேசித்த காவியக் கவிஞர்
-ம.கொ.சி.இராஜேந்திரன்




அமுதமொழி- 16


“குழந்தைகளைப் போல இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகள் பயனில்லா விளையாட்டுப் பொருள்களை வைத்துக்கொண்டு  உள்ளம் மகிழ்ச்சி கொள்கின்றன. மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்ததல்ல; மனம் சார்ந்ததே”.

-ரவீந்திரநாத் தாகூர்

கூற்றாயினவாறு விலக்கலீர்! (கவிதை)

-திருநாவுக்கரசர் நாயனார்

திருநாவுக்கரசர் நாயனார்


கூற்றாயின வாறுவி லக்ககிலீர் 
    கொடுமைபல செய்தன நானறியேன் 
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் 
     பிரியாது வணங்குவன் எப்பொழுதும் 
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே 
     குடரோடு துடக்கி முடக்கியிட 
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில 
     வீரட்டா னத்துறை அம்மானே. 1

கண்ணி நுண் சிறுத்தாம்பு (கவிதை)

-மதுரகவி ஆழ்வார்

நம்மாழ்வாரை சேவிக்கும் மதுரகவி ஆழ்வார்.


கண்ணி
நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (1)

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே (2)

சித்திரைத் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு

கஸ்தூரிபா காந்தி


சித்திரை மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:


ஸ்ரீ பிலவ வருடம், சித்திரைத் திங்கள்
(14.04.2021 - 14.05.2021)

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 9

 -பொன்.பாண்டியன் 


பகுதி-1



17. மதுரை மருதன் இளநாகனார்-1

( மருதக்கலி பாடியவர்)


சங்க காலத்தில் நாகம் என்ற பெயரைத் தம்பெயரில் கொண்ட புலவர்கள் சிலர் உண்டு. அதிலும் மதுரை மருதன் இளநாகனார் என்ற பெயரில் இருவர் என்றும் இல்லை ஒருவர் என்றும் குழப்பம் இருந்தது. முடிவில் இருவர் என்று பாடல் தன்மைகள் மூலம் புலவர் பெருமக்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருள் ஒருவர் கலித்தொகை மட்டும் பாடியவர். இன்னொருவர் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியன பாடியவர் ஆவர். நாம் இப்போது காண்பது கலித்தொகை பாடிய மதுரை மருதன் இளநாகனார் ஆவார்.

நில அமைப்பிலும் நூல் அமைப்பிலும் நடுநாயகமாக விளங்குவது மருதம் ஆகும். மருத நிலத்து மக்கள் உழைத்த பின்னர் ஓய்வெடுக்கும் காலம் மற்ற நிலத்தினைவிட அதிகமாகும். அதனால் கலையும் கல்வியும் அவர்களால் வளர்ந்தன. இருப்பினும் கலை ஆர்வ மிகுதியால் மக்கள் நெறி பிறழ்வதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டன. அவர்களுக்கு அறிவுறுத்தும் பாங்கில் புலவர்கள் பாடல்களை இயற்றினர். அவருள் தலைசிறந்தவர் மதுரை‌ மருதன் இளநாகனார் ஆவார்.

பொன்மழைப் பாடல்கள் (தமிழாக்கம்)

-கவியரசு கண்ணதாசன்


(ஆதிசங்கரர் அருளிய 
கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் வடிவம்)
 

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!
    மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்!
நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன்
    நேயத்தால் மெய்சி லிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!
மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டை
    மாதுநீ என்னி டத்தில் வைத்தனை என் றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
    கண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத் தாயே! 1

நீலமா மலரைப் பார்த்து நிலையிலாது அலையும் வண்டு
    நிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டு
கோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு
    கொஞ்சிடும், பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று!
ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்
    என்வசம் திரும்பு மாயின் ஏங்கிய காலம் சென்று
ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டு
    அடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத் தாயே! 2

ஆச்சார்யர் இராமானுஜரும், அண்ணல் அம்பேத்கரும்

-ம.கொ.சி.இராஜேந்திரன்


“ஒரு தேசத்தின் நாகரிகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளம்”- என்பது மகாகவி பாரதியின் கூற்று. நம் பாரத தேசத்தின் அறிவுக் கருவூலமாக பெரியோர்கள் செய்த இலக்கியங்கள் -வேதம், உபநிடதம், அவற்றை ஒட்டிய ஆய்வு நூல்கள், அறநூல்கள், அருள் நூல்கள், தத்துவ சாத்திர நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் எனத் தொடர்கின்றன.

தாங்கள் இறையருளால் பெற்ற ஞானத்தை மாணவர்களுக்கு போதித்தார்கள். ஆச்சார்யர்களிடமிருந்து அதற்கான நடைமுறைகளை பாரம்பரியமாகக் காப்பாற்றி வந்தார்கள். சிலர் மடங்களை ஸ்தாபித்ததன் மூலம்; சிலர் நூல்களைப் படைத்ததன்மூலம்; சிலர் போதனைகள் மூலம்; சிலர் சமுதாயத் தொண்டுகள் மூலம்; சிலர் இயக்கங்களையே தோற்றுவித்து நம் தேசத்தின் ஞானப் பரம்பரையை காத்து நின்றனர். இவ்வகைக்கு நல்லதோர் உதாரணம் என்றால் குருநானக், குரு கோவிந்தசிங், ஸ்ரீ இராமகிருஷ்ணர், தமிழகத்தில் வள்ளலார் போன்றோரைச் சொல்லலாம்.

பாரத தேசத்துப் பண்பாடு தெளிந்த நீரோடையைப்போல ஓடிக் கொண்டிருக்க, மேற்சொன்ன ஞானிகளும், கற்றறிந்த சான்றோர்களுமே அந்நீரோட்டத்திற்கு வற்றாத ஊற்றுக் கண்களாய் விளங்குகின்றனர் என்றால் மிகையில்லை.

அத்தகு ஞானிகளின் வரிசையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவதரித்த ஸ்ரீ இராமானுஜர், நாம் என்றென்றும் வணங்கத்தக்கவராவர். அதைப்போலவே தனது அறிவுக் கூர்மையாலும், தொலைநோக்குக் கொண்ட சிந்தனையாலும் நம் நாட்டிற்கு 138-வது ஸ்மிருதியை எழுதிய ‘நவீன மனு’ அண்ணல் அம்பேத்கரும் நாம் என்றென்றும் நினைவில் கொள்ளத் தக்க பெருந்தகையாளராவர்.

இவ்விரு சான்றோர்களின் வாழ்க்கையில் காணும் சிந்தனைகள் மற்றும் செயல்வடிவங்களிலான ஒற்றுமை, பார்வைகளில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

அம்பேத்கரும் தேசியமும்

-சேக்கிழான்

டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர்
(பிறந்த தினம்: ஏப். 14 , 1891)


அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை புரட்சியாளர்களுக்கே உரித்த மேடு பள்ளங்கள் நிரம்பியது. அதுபோலவே அவரது கருத்துகளிலும் பலத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் கொடிய பழக்கங்களுள் ஒன்றான தீண்டாமையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவரான அம்பேத்கரின் உடனடி எதிர்வினை இயல்பு, அவரது கருத்துப் பரிமாற்றங்களில் காணப்படுகிறது. அவரது தேசியம், ஹிந்துத்துவம் தொடர்பான கருத்துகளிலும், அவரது ஆரம்பகால கருத்துகளில் இருக்கும் கோபமும் கடுமையும் பின்னாளில் நிதர்சனத்தை உணர்ந்து கனிந்தவையாக ஆவதைக் காண முடியும்.

இந்தப் பின்னணியுடன் தான், அம்பேத்கரின் தேசியம் குறித்த பார்வையை அணுக வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக அம்பேத்கர் செயல்பட்டார் என்று இன்றும் அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இவ்விஷயத்தில் அம்பேத்கரை நேர்மையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், பல்வேறு சமயங்களில் அவர் தேசியம், தேசப்பிரிவினை, தீண்டாமை, சுய நிர்ணய உரிமை குறித்துக் கூறிய பல்வேறு கருத்துகளை கவனமுடன் பரிசீலிக்க வேண்டும்.

அம்பேத்கர் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கூறிய சில கருத்துகளைக் கொண்டு அவரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடுவதும், புறக்கணிப்பதும் தவறாகவே முடியும். இன்று ஹிந்துத்துவத்தை எதிர்க்கும் பல அறிவுஜீவிகள், வருண அடிப்படையிலான ஹிந்து மதத்தை கடுமையாக விமர்சிக்கும் அம்பேத்கரின் கருத்துகளைக் கையாள்கிறார்கள். அவர் பின்னாளில் ஹிந்துத்துவம் குறித்து என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை அவர்கள் வசதியாக மறைத்துவிடுகிறார்கள். அதுபோலவே தான், தேசியம் குறித்த அண்ணலின் கருத்துகளில் உள்ள முரண்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும்.

Ambedkar Versus His Apostles

-Balbir Punj

The “outburst of Dalit outrage’’ during the all-India ‘bandh’ on 2018, April 2 has been sought to be explai, ned as an assertion of their right to humanity by apologists of the violence that marred the protests. The ‘Dalit anger’ was ostensibly against a recent Supreme Court verdict calling for changes in the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act.The havoc caused on that day was clearly an outcome of a manufactured angst, managed by organised criminal gangs with ideological underpinnings. From the day the Narendra Modi government was voted to power at the Centre, there have been concerted attempts to paint the BJP as anti-Dalit. Recall how an unfortunate suicide of a young Rohith Vemula in 2016 was turned into a media circus and used to demonise the Modi regime.

Dalits have been discriminated against for long in India, and the injustice continues till today, though a lot less brutal than in the past. Thanks to reforms (including provisions of reservations) initiated at the instance of enlightened sections of Hindu society, the social and economic conditions of Dalits have improved in the post-Independence years.The gap between Dalits and the rest, however, is still wide. On the positive side there is none in the country who defends untouchability at an intellectual level, or at a political plane and opposes affirmative steps to help Dalits catch up with the rest of the society.

கண்ணாடிக் கவிதைகள்

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்




தவறி விழுந்தது.
என் முகங்களைப் பொறுக்குகிறேன்.
இத்தனையா?
கடைசியில்,
போட்டுடைத்த பிறகு தான்
உண்மையைக் காட்டுகிறது கண்ணாடி.

‘ஜனநாயக’ ராமன்

- திருநின்றவூர் இரவிக்குமார்


(ராம நவமி - ஏப். 21 - சிறப்புக் கட்டுரை)

அந்தக் காலத்தில் மனிதர்கள் தர்மத்தின் வழிநடந்தனர். தர்மமே அவர்களைக் காத்தது. பின்னர் எப்படியோ குணக்கேடு ஏற்பட்டு மக்கள் தர்மத்தின் பாதையில் இருந்து விலகி நடந்தனர். பெரியோர்களின் வார்த்தைகளை எவரும் மதிக்கவில்லை. அதனால் உலகில் பல்வேறு துன்பங்களும் துயரங்களும் ஏற்பட்டன. எல்லோரும் கஷ்டப்பட்டார்கள்.

பெரியோர்கள் பாற்கடலில் இருந்த பரமனை அண்டி துயர் தீர்க்கும்படி வேண்டினர். அவரும் ‘அரசனை உருவாக்குங்கள்’ என்று துயர் தீர வழிகாட்டினார். அப்படி உருவானதே அரசன், அரசு என்ற கருத்தியல்.

நல்ல ராஜா எப்படி இருப்பான்? நல்ல ராஜ்யம் எப்படி இருக்கும்? என்பது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. ஆனால் இந்துக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள ஒப்புயர்வற்ற ராஜா - ராமன்; ராஜ்ஜியம் - ராமராஜ்யம். உலகமெல்லாம் ஜனநாயகம் தலைதூக்கி வரும் காலம் இது. மேலும் மேலும் சீரியதாக ஜனநாயகப் பண்புகள் வரையறை செய்யப்பட்டு வருகின்றன. இக்காலத்திற்கு ராமர் எப்படி பொருந்துவார்?

சிறகு முளைத்த முதிய பறவை

-க.ரகுநாதன்


காலைப் பனியில்
புற்களின் கன்னத்தை துடைத்த
முதிர்ந்த பறவை போல,
வெடித்த பாதங்களில்
வேதனையை அணிந்து
வாசலில் வந்தமர்கிறாள்
கிழவி ஒருத்தி.

மறைந்தது நடமாடும் பல்கலைக்கழகம்!

 -தஞ்சை வெ.கோபாலன்

சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் 
(1934 ஆக. 18 - 2021 ஏப். 6)

மூத்த தமிழறிஞர் 

சேக்கிழாரடிப்பொடி தி..ராமச்சந்திரன் 

அவர்களின் மறைவுக்கு அஞ்சலி!

  

                தஞ்சாவூரில் ‘சேக்கிழாரடிப்பொடி’ என்று சொன்னாலே அது முதுபெரும் தமிழறிஞரும், பாரதி ஆய்வாளரும், சைவ சித்தாந்தத்தில் ஊறித் திளைத்தவரும், திருத்தருமை ஆதீனத்தில் சைவ சிந்தாந்தத்தின் இயக்குனராகவும் இருந்த வழக்கறிஞர் தில்லைஸ்தானம் நடராஜய்யர் ராமச்சந்திரன் அவர்களைத்தான் குறிக்கும்.

                திருவையாற்றில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருவர் பேசுகையில்  சம்ஸ்கிருதம் தேவபாஷை’ என்றார். டி.என்.ஆர். என்றே அறியப்பட்ட தி..ராமச்சந்திரன் அவர்கள் பேசும்போது சொன்னார், “சம்ஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் மகாதேவ பாஷைஎன்றதும் கைதட்டலில் மன்றம் அதிர்ந்தது.

                தஞ்சாவூர், செல்வம் நகரில் உள்ள அவரது வீட்டில் எப்போதும் அறிஞர்கள் கூட்டம் நிரம்பியிருக்கும். அவர்கள் கேட்கும் வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் மகிழ்ச்சியோடு விரிவாக பதிலளிப்பார். அவர்களில் பெரியவர், சிறியவர் என்ற பேதம் இருக்காது, அனைவரின் ஐயப்பாடுகளையும் நீக்குவதில் குறியாக இருப்பார். இவர் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி, சென்னையில் தனது புதல்வர் இல்லத்தில், 88-ஆம் வயதில் காலமானார்.

இயற்கையை நேசித்த காவியக் கவிஞர்

-ம.கொ.சி. இராஜேந்திரன்



மகாகவி ரவீந்திரநாத் தாகூர்
(பிறப்பு: 1861 மே 7)


காலைப் பசும்புல்லில் காணும் பனித்துளி
அப்போது தான் துளிர்க்கும் புதிய இலைகள்
மனதை மெல்லியதாக்கும் தென்றல் காற்று
நறுமணத்தைப் பரப்பி நாற்றிசை கமழும் பூக்கள்
சாரலாய் விழுந்து மண் நனைக்கும் மழை...

- என்றெல்லாம் இயற்கையழகை தனது கவிதைகளினூடேவைப்பதில் வல்லவர் நம் தேசத்து மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.