18/10/2021

ஐப்பசி - 2021 மின்னிதழ்


உள்ளடக்கம்


1. அமுத மொழி - 22
-சர் சி.வெங்கட்ராமன்
-ஒரு தேசபக்தர்
-ஆசிரியர் குழு
-சேக்கிழான்
-பத்மன்
-திருநின்றவூர் இரவிக்குமார்
-ஜடாயு
-ஞானக்கூத்தன்
-ஈரோடு சரவணன்

10. கொன்றைவேந்தன் - விளக்கவுரை (பகுதி - 2)
-பத்மன்
-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்
-தஞ்சை வெ.கோபாலன்
-ஈரோடு சரவணன்
-வைஷ்ணவிப்பிரியன்

-ம.கொ.சி.இராஜேந்திரன்
-பேரா.பூ.தர்மலிங்கம்

-தஞ்சை வெ.கோபாலன்

-திருநின்றவூர் இரவிக்குமார்

  • ***

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பிதழ்:
-இசைக்கவி ரமணன்
-திருநின்றவூர் இரவிக்குமார்
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-C.S.Bharathi
-C.S.Bharathi
-C.S.Bharathi

-மகாகவி பாரதி

காண்க: 


அமுத மொழி - 22

 


நமக்கு வெற்றிக்கான உத்வேகம் தேவை; இந்த சூரியனுக்குக் கீழான பரந்த உலகில் நமக்கான உரிய இடத்தை உறுதிப்படுத்தும் உத்வேகம் தேவை; பெருமிதம் வாய்ந்த நாகரிகத்துக்கு சொந்தக்காரர்களான நாம் இந்த உலகில் நமக்கான இடத்தைப் பெறும் உரிமையை அடையாளம் கண்டுகொள்ளும் உத்வேகமே இப்போது தேவை.

-சி.வெங்கட்ராமன்
(நோபல் பரிசு பெற்ற பாரத இயற்பியல் விஞ்ஞானி)

.

சும்மாவா வந்தது? (கவிதை)

-ஒரு தேசபக்தர்



(பாரத  சுதந்திரத்தின் 75 ஆண்டு சிறப்புப் பதிவு)

சும்மாவா வந்தது? 
    சுதந்திரம் என்பது 
        சும்மாவா வந்தது? 

எத்தனை எத்தனை தடியடியைத் தாங்கினர்?
எத்தனை எத்தனை செக்கிழுத்து வாடினர்?
துாக்குமேடை ஏறிநின்ற காளையர்கள் எத்தனை?
தாக்குகின்ற குண்டினாலே உயிரிழந்தோர் எத்தனை?

(சும்மாவா) 

ஐப்பசித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு


ராஜராஜசோழன்

ஐப்பசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ பிலவ வருடம், ஐப்பசித் திங்கள் (18.10.2021 – 16.11.2021)

சுதந்திரம் காக்கும் கொங்கு நாடு

-சேக்கிழான்

வ.உ.சி.யும் பாரதியும்

அண்மைக்காலமாக, பாரதத் திருநாட்டின் மத்திய அரசை தமிழகத்தில் சிலர் ‘ஒன்றிய அரசு’ என்ற ஏகடியம் பேசி வருகிறார்கள். அவர்கள் அறியாதது, தமிழக விடுதலைப் போரின் மும்மூர்த்திகளான மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் ஒன்றுபட்ட பாரத விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்கள் என்பது.

தமிழகத்தில் சுமார் ஒரு நூற்றாண்டுக் காலமாகவே தனித் தமிழ்நாடு எண்ணத்துடன் பிரிவினை எண்ணம் வளர்ப்போர் சத்தமின்றி இயங்கி வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் திமுகவை அரசியல்ரீதியாக ஆதரிப்பவர்கள். கூடவே, ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் நாத்திகக் கொள்கைகளை பிரசாரம் செய்பவர்களாகவும் இருப்பவர்கள். தவிர பிராமண எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்று தங்கள் ஆசாபாசங்களுக்கு கோட்பாட்டு முலாமும் பூசுவார்கள்.

இந்தப் பிரிவினைவாதிகளுக்கு எதிராகவே தமிழகத்தின் முப்பெரும் தேசபக்த மாவீரர்கள் விளங்கினார்கள். நமது துரதிர்ஷ்டம், மகாகவி பாரதி (1921), சுப்பிரமணிய சிவா (1925), வ.உ.சி. (1936) ஆகியோர் நாட்டு விடுதலைக்கு முன்னதாகவே நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தை வழிநடத்திய காங்கிரஸ் கட்சி சுயநலவாதிகளால் சூழப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் பிரிவினைவாதிகளின் துஷ்பிரசாரத்தைத் தடுக்க இயலாது போய்விட்டது.

பரவுக நின்கருணை! (கவிதை)

-பத்மன்



பத்துத் தலைகளைப் பற்றித் திருகிட 
    பறந்தது நின்கணையே
பற்றுத் தளைகளை வெட்டி அறுத்திட 
    பரவுக நின்கருணை! 1

பாரதீயப் பெண்மணிகள் - ஒரு முழுமையான பார்வை (நூல் அறிமுகம்)

-திருநின்றவூர் இரவிக்குமார்

பாரதீயப் பெண்மணிகள் - ஒரு முழுமையான பார்வை
ஆசிரியர்: ரங்க ஹரி (ஹிந்தி மூலம்)
தமிழில்: உ.சுந்தர்.
வெளியீடு: விஜயபாரதம் பதிப்பகம், சென்னை.
விலை:  ரூ. 75/-

***

 62 பக்கங்கள் கொண்ட சிறிய நூல். ஏழு அத்தியாயங்கள் உள்ளன. வேதகாலம் தொடங்கி இன்றுவரை இந்தியப் பெண்களின் நிலையை ஒரு பருந்துப் பார்வையாகக் கூறுகிறார் நூலாசிரியர்.

ஒரு பருப்பு தானியத்தைப்  பிரித்தால் எப்படி அது இரு பக்கமும் சரிசமமாக இருக்குமோ அதுபோல, வேத காலத்தில் ஆண்களும் பெண்களும் சரிசமமாகக் கருதப்பட்டனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். யக்ஞோபவீதம் எனப்படும் பூணூல் அணியப் பெற்றிருந்தனர். வேள்விகளில் பங்கேற்கவும் வேள்விகளை தலைமை ஏற்று நடத்தவும் செய்தனர்;  தானங்களை அளித்தனர். அவ்வாறு அளிக்க அவர்களுக்கு செல்வம் இருந்தது மட்டுமன்றி, உரிமையும் இருந்தது. மணவிலக்கு செய்யவும், மறு விவாகம் செய்யவும் அவர்களுக்கு உரிமை இருந்தது. துறவு வாழ்க்கையை மேற்கொள்ளவும் அவர்களால் முடிந்தது. நாடு முழுவதும் சுற்றித் திரியவும் அவர்களுக்கு சுதந்திரம் இருந்தது.

ஈஷாவாஸ்ய உபநிஷதம் (தமிழாக்கம்)

-ஜடாயு



ஹிந்து ஞான மரபின் மணிமுடியான வேதாந்த தரிசனத்தின் மையமான ஆதி நூல்கள் உபநிஷதங்கள். சங்கரர் தொடங்கி அனைத்து வேதாந்த ஆசாரியார்களும் ஈசாவாஸ்ய உபநிஷதம் முதலாக உள்ள பத்து முக்கிய உபநிஷதங்களுக்கும் மிகவும் விரிவான உரைகள் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு தத்துவத் தரப்பும் வேதாந்த தரிசனத்தின் பொதுக்கருத்துக்களுடன் கொள்ளும் இணைவையும், அந்த தரப்பின் தனித்தன்மையையும் வரையறுப்பதில் இந்த விரிவுரைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. 

இவற்றுள், பதினெட்டு மந்திரங்களே கொண்டு, அளவில் சிறியதாக உள்ள முதல் உபநிஷதமான ஈசாவாஸ்ய உபநிஷதம் ஹிந்து ஞான மரபின் சாரமனைத்தையும் தன்னகத்தே கொண்டது என்று கருதப் படுகிறது.

இந்தக் கட்டுரை, உபநிஷதக் கவிதையின் நேரடி அனுபவத்தை ஒரு துளியாக அளிக்க முயலும் ஒரு முயற்சியே அன்றி விரிவுரை எழுதுவதல்ல. எனவே சில குறிப்புகளை மட்டும் தருகிறேன்.

ஞானக்கூத்தன் கவிதைகள் (கவிதை)

-ஞானக்கூத்தன்


1
அன்று வேறு கிழமை

நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று

பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான். நாய் நகர

மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான். அது நகர
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான். அது விலக
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான். இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி

நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்
பாடைதூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்.

தமிழக சுதந்திரப் போர்க்களத்தில் ஆன்மிகவாதிகள்

-ஈரோடு சரவணன்

வீரர் பூலித்தேவன்


நாடு முழுவதும் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் போது, விநாயகர் சதுர்த்தி மற்றும் சிவாஜி ஜெயந்தி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக சமூக விழிப்புணர்வையும், புரட்சியுணர்வையையும் நாட்டு மக்களிடையே கொண்டுவந்தவர் பாலகங்காத திலகர். அதன் மூலம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஹிந்துக்களை ஒருங்கிணைத்தார்.

தேசத்தையும், தெய்வீகத்தையும் போற்றி வழிநடந்தவர் திலகர். அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட பலரும், தேச விடுதலையுணர்வுடன் பாரதப் பண்பாட்டையும் காப்பதற்குப் போராடினார்கள். இவர்கள் நாட்டை நேசித்தது போலவே நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் போற்றிக் காப்பாற்றினார்கள்.

கொன்றைவேந்தன் - விளக்கவுரை (பகுதி - 2)

 -பத்மன்


காண்க: பகுதி-1

***

கொன்றைவேந்தன்- 26

சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை


விளக்கம்:

ஒரு பரம்பரையின் வழித்தோன்றல்களுக்கு எது அழகென்றால் தங்களுக்குள் சண்டை செய்யாமைதான் என்று அழகாகச் சொல்கிறார் ஔவையார்.

ஆனால் வந்தி என்பதற்கு மலடு என்ற பொருளை வருவித்துக்கொண்டு சந்ததிக்கு அழகு மலடின்றி இருத்தல் என்று பலர் பொருள் சொல்கிறார்கள். இது தவறு.

வந்தி என்பது பல பொருள் தரும் ஒரு சொல். வந்தனை, மங்கலப் பாடகன், பாணன், சூதன், புகழ்வோன், ஏணி, முரண்டு, சண்டை எனப் பல்பொருள் வந்திக்கு உண்டு.

ஆனால் எந்த அகராதியிலும் மலடு என்ற பொருள் அகப்படவில்லை. அப்படியே கிடைப்பினும் இவ்விடத்தில் ஏற்பதற்கில்லை. மலடு என்பது நாமே செய்துகொள்வதா? பிள்ளைப்பேறு இல்லாமை இயற்கையின் குறைபாடு. அதையா இங்கு ஔவையார் குறிப்பிடுகிறார்? இல்லவே இல்லை.

வந்தி என்பதற்கு முரண்டு பிடித்து ஒருவரோடு ஒருவர் சண்டையிடுதல் என்ற பொருளே இங்கு ஏற்கத்தகும். ஒரு சந்ததியினரான கௌரவரும் பாண்டவரும் தங்களுக்குள் சண்டையிட்டதால் அழிந்தார்கள். மகாபாரதப் போருக்குப் பின் யது குலத்தவருக்கும் அவ்விதமே நிகழ்ந்தது. அவர்கள் எல்லாம் வம்சத்தின் பெயரைக் கெடுத்தனர்.

ஆகையால்தான் ஒரு சந்ததிக்கு அழகு, பெருமை என்பது தங்களுக்குள் சண்டை செய்யாமல் ஒற்றுமையாக இருத்தலே என்கிறார் ஔவையார்.

நதியும் பிறவும் (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்




நதி

நதியொரு ஓவியர்
கரையெங்கும் மலர்கள் வண்ணம்.

நதியொரு சிற்பி
கூருடைத்த உருளைக் கற்கள்.

நதியொரு பாடகர்
விடியலுக்கு முன் கேளுங்கள்.

நதியொரு கலைஞன்
சும்மாயிருப்பதில்லை.
 
நதியொரு ஞான யோகி
தன்னியல்பில் தானானது.
 
நதியொரு கர்மயோகி
வினைபுரிவதில் மாறாதது.

நதியொரு சக்தியோகி
பல்லுயிர்க்கும் பகிர்வானது.

நதியொரு பக்தியோகி
கடல் சேர்ந்து நிறைவானது.

***

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகம்

-தஞ்சை வெ.கோபாலன்

ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் உடன்
மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள்.


1. ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தூதும் காங்கிரஸ் எதிர்ப்பும்

ஆண்டுதோறும் நடைபெறும் காங்கிரஸ் மாநாடுகள் பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும். ஒரு சில நேரங்களில் அவசரமாகக் கூடி முடிவுகள் எடுக்க வேண்டுமானால் மற்ற மாதங்களிலும் கூட காங்கிரஸ் கூடி விவாதித்து முடிவுகளை எடுத்திருக்கிறது. அதைப் போல இரண்டாம் உலக யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இந்தியர்கள் கிழக்கில் சுதந்திர உதயம் எழுமா என்று ஆவலோடு காத்திருந்த நேரத்தில், 1942-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 13 முதல் 16 வரை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது.

அதே ஆண்டில் வார்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கூடி முக்கியமான நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடத்தியது. அபுல்கலாம் ஆசாத் தலைமை வகித்தார்.

அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவில் தொடங்கிய யுத்தம், ஜப்பான் அதை அமெரிக்கக் கடற்கரைக்குக் கொண்டுசென்று பேர்ல் ஹார்பரை குறிவைத்துத் தாக்கி அமெரிக்கக் கப்பல்களை உடைத்தெறிந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, ஆசிய நாடுகள் பலவற்றை கபளீகரம் செய்துகொண்டு ஜப்பான் பர்மா மூலமாக இந்திய எல்லையை நெருங்கியிருந்த நேரம்.

ஜப்பான் தாக்குதலுக்கு முன்பாக இந்திய தேசிய ராணுவம் தங்கள் படைவீரர்களை அணிவகுத்து ‘தில்லி சலோ’ என்று நேதாஜி படைகளை வழிநடத்திக் கொண்டு வந்த நேரம்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் இதழ்களின் பங்கு

-ஈரோடு சரவணன்

பாரதியின் ‘இந்தியா’ இதழில்
கருத்துப்படம் (கார்ட்டூன்)

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, பொது மக்களிடம் சுதந்திர வேட்கையை உருவாக்கவும், எழுத்துரிமை, பேச்சுரிமை மூலம் அரசியல் விழிப்புணர்வு பரவவும், இதழியல் துறை பெரும் பங்காற்றியது. தாய்மொழியில் தோன்றிய சுதேசமொழி இதழ்கள் பாரதவாசிகளுக்கு எழுச்சியூட்டின. இதன் ஆபத்தை உணர்ந்து ஆங்கில அரசு, 1878-ல் அன்றைய கவர்னர் ஜெனரல் லிட்டன் பிரபு, சுதேசி பத்திரிக்கைகள் சட்டம் கொண்டுவந்து ஒடுக்கத் துவங்கினார்.

இந்திய விடுதலைப் பேரியக்கத்தை தாதாபாய் நௌரோஜி, திலகர், பெசன்ட், காந்தி என்று பல வளர்ச்சிக் கட்டங்களாக எவ்வாறு பகுக்க முடியுமோ, அதேபோல, அதன் சாயல்களோடு தமிழ் பத்திரிகை வரலாற்றையும், ஜி.சுப்பிரமணிய ஐயர், பாரதியார், திரு.வி.க., கல்கி என்று வகுக்க முடியும். ஆரம்பகால தமிழ் இதழியல் வரலாற்றின் உயிர்நாடி, இந்திய விடுதலைப் பேரியக்கமாகும்.

தமிழகத்தில் விடுதலைக் காலகட்டத்தில், சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, தேசபக்தன், நவசக்தி, தமிழ்நாடு, தினமணி, சுதந்திரம், ஜனசக்தி, விமோசனம், ஞானபானு, பிரபஞ்சமித்திரன், இந்திய தேசாந்திரி, சேலம் சுதேசாமானி, சர்வஜனமித்திரன், ஆனந்த விகடன், தமிழ் நேஷனல் பத்திரிகை, வந்தே மாதரம், ஊழியன், குமரன், சுதேசி, ஸ்வராஜ்யா, தாய்நாடு, தேசபந்து, இளந்தமிழன், சுயராஜ்ய பேரிகை, காந்தி நவ இந்தியா போன்ற இதழ்கள் வெளி வந்தன.

இந்த இதழ்களின் போராட்டக் காலத்தில் ஆங்கில அரசால் துன்பத்திற்குள்ளான இதழ்கள் வெகு சிலவே. சுதேசமித்திரன், இந்தியா, தமிழ்நாடு, தினமணி, தினசரி, பாரததேவி, நவஇந்தியா, தேசபக்தன், நவசக்தி, சண்டமாருதம் ஆகிய நாளிதழ்கள் சுதந்திரப் போருக்கு குரல் கொடுத்தவற்றுள் முதன்மையானவை.

தேசிய மண் வாசம்! (கவிதை)

-வைஷ்ணவிப்பிரியன்


மதுரை மேலமாசி வீதிக்கு
அந்தக் கனவான் வந்தபோது
அணித்திருந்தவை-
பத்து முழம் வேட்டி,
உயர்ந்த கதர் ஜிப்பா,
அழகிய குஜராத்தி தொப்பி,
கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரம்.
அங்கிருந்து செல்கையில்
அரையாடைப் பக்கிரி ஆகியிருந்தார்
அந்தக் கனவான்.


தேசியத் தலைவன்… தெய்வீகத் திருமகன்!

-ம.கொ.சி.இராஜேந்திரன்


அது ஒரு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம். ஆண்டு 1937. இடம் காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தான். 

கூடியிருந்த மக்கள் 50 ஆயிரத்திற்கு மேல். மேடையிலுள்ள குட்டித் தலைவர்களின் முழக்கங்கள் முடிந்தன. இரவு 10 மணிக்கு சிங்கத்தின் வீர கர்ஜனை ஒலிக்கத் தொடங்கியது.

“நேற்றைய தினம் எங்களது மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களை ரிவால்வரைக் காட்டி பேச விடாமல் தடுத்து மேடையை விட்டு கீழே இறக்கிய சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே, உங்களுக்கு நெஞ்சில் உரமிருந்தால் குண்டுகளை ரிவால்வரிலே மாட்டிக்கொண்டு மேடைக்கு வரும்படி அடியேன் அறைகூவி அழைக்கிறேன். இந்த தேசம் விடுதலை ஆக, பாரத மாதா விலங்கொடிக்கப்பட அடியேன் இந்த மேடையிலே சாவதற்குத் தயார். சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே நீங்கள் தயாரா?” 

-இவ்வாறு சவால் விட்டு அழைத்த அந்த வீர கர்ஜனைக் குரலுக்கு சொந்தக்காரர் – தேசியத் தலைவர் முத்துராமலிங்க தேவர்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள் - 5

-பேரா.பூ.தர்மலிங்கம் 


வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பல்வேறு வடிவங்களில் ஒற்றுமையின் வெளிப்பாட்டைக் கொணர்வது ஆகியன பாரதிய கலாச்சாரத்தின் முதன்மையான எண்ணமாக, முக்கிய சிந்தனையாக இருந்து வருகின்றன. இந்த உண்மையானது முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டால், பல்வேறு அதிகார மோதலுக்கு அவசியமே இருக்காது. மோதல் என்பது கலாச்சாரமோ அல்லது இயற்கையின் அடையாளமோ அல்ல. மாறாக, இது விபரீதத்தின் அறிகுறியாகும்.
 
***

அவன் ஒரு தொடர்கதைதான்

-இசைக்கவி ரமணன்

 (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 20)

“இந்த மெய்யும் கரணமும் பொறிகளும்
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்…”

-பாரதியின் இந்தச் சொற்களில்தான் எத்தனை ஆயாசம்! 

பகவான் ரமணருக்குத் தள்ளாமை கண்டுவிட்டதைப் பார்த்து ஓர் அன்பர் அவரிடம் கேட்டாராம். ‘ஐயா என்ன இது? இந்த வயதிலேயே உங்கள் உடம்பு ஆடிப்போய் விட்டதே!’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நானென்ன செய்வதடா! குடிசைக்குள் யானை புகுந்துவிட்டதே!’ என்றாராம். இது பாரதிக்கும் பொருந்தும்தானே? அவன் முப்பத்தொன்பது வயது வாழ்ந்ததே அதிசயம் என்றுதான் நான் கருதுகிறேன். ஆயிரம் சூரியன்களின் ஆற்றலை அந்தப் பூஞ்சையுடம்பு எப்படி, எத்தனை நாட்கள் தாங்கும்? உணவில் விருப்பமில்லை; உள்ளம் எப்போதும் ஏதோவோர் கற்பனை உலகில் சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கும். பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு இல்லை. போட்ட வைத்த வழியில் போகுமா வெள்ளம்?

‘விஜயா’வில் அரவிந்தர்

- திருநின்றவூர் இரவிகுமார்


(அரவிந்தம்-150)

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 21)

விடுதலை இயக்கமான காங்கிரஸில் இரண்டு பெரும் பிரிவுகள் இருந்தன. ஆங்கில அரசை அனுசரித்து சிலபல சலுகைகளைப் பெற்று அதில் திருப்தி அடைந்த மிதவாத கோஷ்டி ஒன்று. ஆங்கிலேயர்களை எதிர்த்து எல்லாவகையிலும் போராட்டத்தை முன்னெடுத்த தீவிர தேசியவாதிகள் என்று மற்றொரு பிரிவு. அதன் தலைவராக பாலகங்காதர திலகர் இருந்தார். அவரது கோஷ்டியில்தான் வங்காளத்தைச் சேர்ந்த அரவிந்தர் உட்பட பலரும், தமிழகத்தில் சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சிவா போன்றோரும் இருந்தனர்.

கவிஞர், பல மொழி அறிந்தவர், பத்திரிகையாளர், சுதந்திரப் போராளி என்று -  பாரதியாருக்கும் அரவிந்தருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. காங்கிரஸ் மாநாட்டில் அவர்கள் நெருக்கமானார்கள். பாரதியார் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் உதவி ஆசிரியராக 1904-இல் தன் இதழியல் பணியைத் தொடங்கினார். அதே நாளிதழில் பின்னர் மீண்டும் உதவி ஆசிரியராக இருந்த போதுதான் 1921-இல் காலமானார்.

பாரதியாரின் பத்திரிகைப் பணி என்றதும் ‘இந்தியா’ வாரஇதழும்  ‘சுதேசமித்திர’னும் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அவர் ஆசிரியராக இருந்தது ‘விஜயா’ என்ற நாளேடிற்குத் தான். சுமார் எட்டு மாதங்கள் பாரதியார் அதன் ஆசிரியராக இருந்துள்ளார்.

அரவிந்தர் மீது பெரும் மதிப்பு கொண்ட பாரதியார் ‘விஜயா’ பத்திரிகை சார்பாக அவரை நேர்காணல் செய்ய ஒருவரை கொல்கத்தாவுக்கு அனுப்பினார். விஜயா பத்திரிகையில் அது வெளிவந்தது. அரவிந்தரின் கூரிய அறிவு, தீவிர தேசபக்தி, ஆழ்ந்த இறை நம்பிக்கை ஆகியவை அதில் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. பேட்டி காண்பவரின் அவநம்பிக்கை, அது பற்றிய பாரதியாரின் கேலி எல்லாம் அதில் வெளிப்படுகின்றன.

பாரத நாடு (கவிதை)

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 22)


[ராகம்: ஹிந்துஸ்தானி தோடி]

பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு.


சரணங்கள்

ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்திலே அன்ன தானத்திலே,
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு - இந்தப்

(பாருக்குள்ளே) 1

சக்தி (வசன கவிதை)

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 23)

1.

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம்.
சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்.
சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது;
அசையாமையில் அசைவு காட்டுவது.

சக்தி அடிப்பது, துரத்துவது, கூட்டுவது,
பிணைப்பது, கலப்பது, உதறுவது,
புடைப்பது, வீசுவது, சுழற்றுவது,
கட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது,
ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது,
ஒன்றாக்குவது, பலவாக்குவது,

சக்தி குளிர் செய்வது, அனல் தருவது,
குதுகுதுப்புத் தருவது,
குதூஹலந் தருவது. நோவு தீர்ப்பது,
இயல்பு தருவது. இயல்பு மாற்றுவது,
சோர்வு தருவது, ஊக்கந் தருவது.
எழுச்சி தருவது, கிளர்ச்சி தருவது,
மலர்விப்பது, புளகஞ் செய்வது,
கொல்வது, உயிர் தருவது.

புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன் (சிறுகதை)

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 24)

வேதபுரத்தில்
ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான். உடுக்கை தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களும் காட்டுகிறான். தாள விஷயத்திலே மகா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்துகொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்பு துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு; மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தி யிருக்கிறது. ஆள் நெட்டை; தடியன். காலிலே ஹைதராபாது ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக் காலையிலே, இவன் நம்முடைய வீதி வழியாக வந்தான்;

உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வதுபோல செய்கிறான். நல்ல கெட்டிக்காரன். அவன் சொன்னான்:

“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது; ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது; சொல்லடி, சொல்லடி, சக்தி மகாகாளீ, வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு! தரித்திரம் போகுது. செல்வம் வருகுது; படிப்பு வளருது; பாவம் தொலையுது; படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான்; ஐயோவென்று போவான்…

மிஸஸ் ஆனி பிஜாண்ட்

- மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 25)

சமீப காலமாக மிஸஸ் ஆனி பிஜாண்ட் (Anne Besant) தமது சக்தியையும் செல்வாக்கையும் புதிய சுயராஜ்ய இயக்கத்திற்கு விரோதமாக திருப்பி வருகிறார். கொஞ்ச காலத்திற்கு முன்பு இங்கிலாந்துக்கு சென்றிருந்தபோது, அரவிந்தர் ஒரு தீவிரவாதி என்றும், ஆபத்தானவர் என்றும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அழிக்க எவ்வித உபாயத்தையும் கைகொள்ளத் தயங்காதவர் என்றும் ஒரு பத்திரிகை நிருபரிடம் கூறினார். இதற்காக இந்திய பத்திரிகைகள் அவளைக் கண்டித்ததோடு, அரவிந்தரைப் பற்றி இதுபோல் அபவாதம் செய்வதற்கு முகாந்திரம் கூறுமாறும் கேட்டன.

இதற்கு தமது மகாத்மாக்கள் அரவிந்தரைப் பற்றி கொண்டுள்ள அபிப்பிராயத்தை தமது பிரதான ஹிந்து காலேஜின் பத்திரிகையில் தெரிவித்திருக்கிறாள். ஆங்கிலேயர்களோடு ஒத்துழைக்க மறுப்பதே அரவிந்தரைப் பற்றி அம்மகாத்மாக்கள் கோபங்கொண்டிருப்பதற்கு பிரதான காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மகாத்மாக்கள் நமது ராஜீய விஷயங்களில் அக்கறை பாராட்டுவதற்கு நாம் வந்தனம் செய்கிறோம். அதே சமயத்தில் ஆங்கிலேயர்களுடன் ‘ஒத்துழைத்தல்’ என்பது அவர்களுக்கு கீழ்படிதல் என்பதும், அவர்களுக்குச் சேவகர்களாகப் பணிபுரிவதை தவிர வேறு எந்த உபகாரத்தையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதையும் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

The Fox with the Golden Tail (Short Story)

-C.S.Bharathi

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 26)


(A Fable)

Once upon a time, there was an old she-fox whom here fellow-foxes of the Fox-land detested very much, for she was very plain-spoken and very proud. And so they cut off here tail as a sort of punishment.

She said: “ Oh my dear brethren, won’t you make me your ruler ?” On hearing this, all the foxes laughed a big laugh and drove her away with jeers and scorn. She then purchased an artificial gilt tail and having fastened it to her back, emigrated to the ancient land of Asses and Apes.

The Assess asked her “Who are you ?” She said “ I am the great she-fox of the golden tail, the wisest among all the foxes of Fox-land. They asked me over there to be their ruler. But I did not care for that position. I have a contempt for the intelligence of foxes and I have become a great admirer of the wisdom of the Asses, especially the older ones. And I have decided that it is better to be an humble pupil among the Asses than a great teacher and ruler among my own kind. Oh venerable Asses, teach me your wisdom.”

On hearing this, all the Asses, especially the old ones, brayed for joy. And they began to speak to one another in their homes and councils, “What thinkest thou, brother? While the ordinary foxes pretend that they are much wiser than we and behave haughtily and contemptuously towards us, the wisest Fox of them all has discovered that we, we the Asses, are the noblest and most thoughtful among animals and she has come to be a pupil among us. Yet the Apes in our own land have been mimicking the ways of the foxes and foolishly despising our great and ancient asinine institutions and traditions. Oh, what will the golden tail will once for all stop their poisonous chattering and they will here-after cease teasing and humiliating us by their so-called criticism of our time-honored Ass-traditions.”

Love thine enemy (Translation – Lyric)

-C.S.Bharathi


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 27)

(Translated from the Tamil verses of C.S. Bharati)
(பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே - பாடல்)

Love thine enemy, heart of mine, Oh!
Love thine enemy.

Hast thou not seen the shining flame
Amidst the dark’ning smoke?
In foeman’s soul lives Krishna, whom
As Love the wise invoke.

Letter to The Hindu

-C.S.Bharathi


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு-28)

There is hope for Madras for she has still some verteran leaders of the caliber of Mr. Subramania Aiyer. Mr. Aiyer is a patriot of the othodox type, midway between the fanatic and the funk. For the last three decades and more this man has been unceasingly thinking and writing about his country, her wrongs and her hopes. The dazzling brilliance of genius Mr. Aiyer certainly has not. The gods have not bestowed on him any of those shining, semi-divine mental gifts. But they have mercifully withheld from his composition the cheap and deceitful flashes so painfully common among us in these latter days – the spurious, multicolored and short-lived flames of the political dilettante and charalatan. He is not a star, nor a meteor, nor ignis fatu us. He is the unfailing sacrificial fire; a modest beacon light over the troubled waters of Indian politics.

புதிய ஆத்திசூடி

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு-29)

காப்பு

ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து
    மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
    மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
    உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
    ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
    அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.


1. அச்சம் தவிர்
2. ஆண்மை தவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண்மிக விரும்பு
7. எண்ணுவ துயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்த லொழி
12. ஒளடதங் குறை

தமிழகத்தில் நேதாஜியின் நிழல்

-தஞ்சை வெ.கோபாலன்


பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
(பிறப்பு: 1908, அக். 30 - மறைவு: 1963, அக். 30)


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயர் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலுள்ள ஊர்களில் கூட பிரபலமான பெயர். தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்த மகான். தமிழகத்தில் நேதாஜியின் நிழலாக வர்ணிக்கப்படுபவர் தேவர்.

மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில் முதன்மையானவர் பசும்பொன் தேவர். ராஜாஜி தேவர் மீது அன்பும் பற்றும் கொண்டவர். ‘நான் அர்ஜுனன் என்றால் தேவர்தான் சாரதி’ என்றார் அவர்.

மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட போது பலத்த எதிர்ப்பு இருந்தது. அப்போது ராஜாஜி, தேவர் அவர்களைத் தான் சத்தியாக்கிரகிகளுக்குத் துணையாக இருக்கப் பணித்தார். கதிரவனைக் கண்ட பனி போல எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. ஆலயப் பிரவேசம் மிக விமரிசையாக நடந்தது. தேசியமும் தெய்வீகமும் தேவர் கடைப்பிடித்த இரு கொள்கைப் பிடிப்புகள்.

புறப்பாடு ஒரு புதிர்

-திருநின்றவூர் இரவிக்குமார்


(அரவிந்தம்- 150)

புரட்சியாளரான அரவிந்த கோஷ் அரசியலில் இருந்து விலக நினைத்தார். தொடர்பே இல்லாத அலிப்பூர் சதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ஓர் ஆண்டு சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு யோக சாதனைகளால் கிடைத்த தரிசனமும் இறைக் கட்டளையும் அவரது வாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன. அதுபற்றி அவர் உத்தரபாரா என்னும் இடத்தில் நிகழ்த்திய உரை தெளிவாக்குகிறது. ஆனாலும் அவர் தயங்கினார். தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இறை விருப்பத்தைச் செயல்படுத்த வேண்டிய சூழ்நிலையை அதுவே ஏற்படுத்தியது. முதலில் கொல்கத்தாவுக்கு அருகில் இருந்த பிரெஞ்சுப் பகுதியான சந்திர நாகூருக்கு அரவிந்தரைப் போக வைத்தது. பிறகு அங்கிருந்து அவர் புதுச்சேரிக்கு வந்தார்; அரசியலில் இருந்து முற்றிலும் விலகி யோக சாதனையில் ஈடுபட்டார்.

மனிதனின் உடல்ரீதியான பரிணாம வளர்ச்சி முற்றுப் பெற்றுவிட்டது. அடுத்தக்கட்ட வளர்ச்சி மனித மனத்தை அதிமனமாக்குவது. அதற்கு இறை சக்தியை மனித மனத்தில் இறக்குவது என்பது அரவிந்தரின் ஆன்மிக தரிசனம். அதற்காக மனித மனத்தையும் உடலையும் தயார் படுத்துவது என்பது அவரது பணி.