14/06/2020

ஆனி 2020 மின்னிதழ்


உள்ளடக்கம்


1. அமுத மொழி- 6
-டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி

2. ஆனித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்
-ஆசிரியர் குழு

3. கணித மேதையின் கதை- 3
-ஆதலையூர் த.சூரியகுமார்

4. ONENESS IN PRACTICE: "SERVE MAN SERVE GOD"
-Nivedita Raghunath Bhide

5. உயிர்ப்பு (கவிதை)
-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

6. புதுக்கவிஞர்களால் வளம் பெற்ற தமிழ்
-சேக்கிழான்

7. தேசமே தெய்வம் என்றவர்!
-ம.கொ.சி.இராஜேந்திரன்


-கவியரசு கண்ணதாசன்

9. தேசிய முரசாய் ஒலித்த தமிழர்
-முத்துவிஜயன்

10. திருவாசகம் தந்த வள்ளல்
-வைஷ்ணவிப்பிரியன்

-ஆசிரியர் குழு

-மாணிக்கவாசகர்

-செங்கோட்டை ஸ்ரீராம்

-சுவாமி சித்பவானந்தர்

-ராதிகா மணாளன்

-ஆசிரியர் குழு

-பெரியாழ்வார்

-ஆசிரியர் குழு

19. SALUTATIONS TO A GREAT MARTYR












அமுத மொழி- 6



கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் வாழ்வது மட்டுமே சுதந்திரம் அல்ல; மாறாக, கட்டுப்பாடான சூழலிலும்கூட சுதந்திரமாக இருப்பதுதான் சிறந்தது. 

விடுதலை என்ற சொல்லுக்கு எளிய, சாதாரண விளக்கத்தை அளிக்க இயலாது. அது தேசியம், அரசியல், தனித்தன்மை, பொருளாதாரம் ஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையிலானது.

எந்த நாட்டில் அரசு ஜனநாயகரீதியாக இயங்குகிறதோ, 

எந்த சமுதாயத்தில் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவாகவும், கட்டுப்பாடுகள் குறைவாகவும் உள்ளனவோ, 

எந்த நாட்டின் பொருளாதார அமைப்பு தேசிய நலனுக்கு உகந்ததாகவும், தனிநபர் வாழ்க்கைத்தர மேம்பாட்டைப் பாதுகாப்பதாகவும், மக்களின் வசதியான வாழ்வை உறுதிப்படுத்துவதாகவும், திறமையின் அடிப்படையில் முன்னேறும் வாய்ப்பை அளிப்பதாகவும் உள்ளதோ,

அத்தகைய சுதந்திரமான-  தன்னிறைவான  நாட்டில் வாழ்கின்றவனே சுதந்திரமானவன்.

உண்மையாக சொல்லப்போனால், இத்தகைய சுதந்திரம் இப்போது நம்மிடம் இல்லை. 

நமது பழமையான பண்பாட்டின் சிறப்பியல்புகளின் அடிப்படையில், மேற்கண்ட அம்சங்களை நிறைவேற்றாவிடில், இந்தியா எக்காலத்தும் மகிழ்ச்சிகரமான இந்த சுதந்திரத்தை அடைய இயலாது.

-டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி

(பாட்னா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 
1937 நவம்பர் 27இல் நிகழ்த்திய உரையிலிருந்து...)




ஆனித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

-ஆசிரியர் குழு

ஜான்சி ராணி லட்சுமிபாய்

ஆனி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய 
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், ஆனித் திங்கள்  (15.06.2020 - 15.07.2020)

ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:


(ஆனி 01 - ரேவதி - 15.06.2020)

(ஆனி 11 - மகம் - 25.06.2020)

(ஆனி 12 - பூரம் - 26.06.2020)

(ஆனி 16 - சுவாதி - 30.06.2020)

(ஆனி 18 - அனுஷம் - 02.07.2020)

(ஆனி 20 - மூலம் - 04.07.2020)

(ஆனி 21 -05.07.2020)

(ஆனி 22 - உத்திராடம்- 06.07.2020)

(முக்தி தினம்: ஆனி 30- அஸ்வினி - 14.07.2020)


***

சான்றோர் – மலர்வும் மறைவும்:

விஸ்வநாத தாஸ்
(பிறப்பு: ஜூன் 16)

சித்தரஞ்சன் தாஸ்
(மறைவு: ஜூன் 16)

ஜான்சிராணி லட்சுமிபாய்
(பலிதானம்: ஜூன் 17)

வீர வாஞ்சிநாதன்
(பலிதானம்: ஜூன் 17)

பி.கக்கன்
(பிறப்பு: ஜூன் 18)

டாக்டர் ஹெட்கேவார்
(மறைவு: ஜூன் 21)

சியாம் பிரசாத் முகர்ஜி
(பிறப்பு: ஜூலை 6)
(பலிதானம்: ஜூன் 23)

ராணி துர்காவதி
(பலிதானம்: ஜூன் 24)

கண்ணதாசன்
(பிறப்பு: ஜூன் 24)

ம.பொ.சிவஞானம்
(பிறப்பு: ஜூன் 26)

பிரசாந்த் சந்திரா மகலனோபிஸ்
(பிறப்பு: ஜூன் 29) (மறைவு: ஜூன் 28)

தாதாபாய் நவ்ரோஜி
(மறைவு: ஜூன் 30)

சுவாமி விவேகானந்தர்
(மறைவு: ஜூலை 4)

இரட்டைமலை சீனிவாசன்
(பிறப்பு: ஜூலை 7)

மறைமலை அடிகள்
(பிறப்பு: ஜூலை 15)

கர்மவீரர் காமராஜர்
(பிறப்பு: ஜூலை 15)


.

கணித மேதையின் கதை - 3

-ஆதலையூர் த.சூரியகுமார்

ஸ்ரீனிவாச ராமானுஜன்
(டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920)


கணித மேதையின் கதை
(ஸ்ரீனிவாச ராமானுஜன் பற்றிய 100 சுவாரஸ்யமான தகவல்கள்)


51. இங்கு இருக்க வேண்டியவர் இல்லை:

சி எல் டி கிரீஃபித் என்பவர் சென்னை பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். அவர் ராமானுஜனின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்தார். அதனால் போர்ட் டிரஸ்ட் தலைவர் ஸ்பிரிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். ' அதில் 'ராமானுஜம் எழுதும் ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். மிகச் சிறப்பான மேதைமை உள்ளவராக அவர் இருக்கிறார். அவர் அங்கு பணிபுரிய வேண்டியவர் அல்ல. மேலும் ஃபோர்ட் டிரஸ்டில் பணிபுரிந்தால் அவரால் நிச்சயமாக பிரகாசிக்க முடியாது. அவர் வறுமையில் வாடுவதாகவும் கேள்விப்பட்டேன். அவருக்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும். நானும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்' என்று ஒரு கடிதம் எழுதினார். ராமானுஜனின் வாழ்க்கையில் மாற்றத்தை மட்டுமல்ல, ஏற்றத்தையும் கொண்டு வந்த கடிதம் இது.

52. இன்னொரு மாற்றம்:

இந்த நேரத்தில் இன்னொரு உயர்வான சம்பவமும் ராமானுஜன் வாழ்க்கையில் நடந்தது. இந்தியாவில் உள்ள கணிதப் பேராசிரியர்கள் பலர் ராமானுனுடன் தொடர்பு கொள்ள விரும்பினார்கள். நேரில் வந்து ராமானுஜனுடன் கலந்துரையாடினார்கள். கணித ஆராய்ச்சியைப் பற்றிய தகவல்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். வெளிநாட்டில் உள்ள கணித மேதைகள் கூட ராமானுஜனுடன் கணிதத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

ONENESS IN PRACTICE: "SERVE MAN SERVE GOD"

-Nivedita Raghunath Bhide 


சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்:1902, ஜூலை 4

Swami Vivekananda on his return to India, in his very first lecture reminded India that it was the message of Oneness that she had to give to the world. For that she would have to prepare herself. But how the Oneness is manifested in life? Not by just chanting of Vedas but by feeling for all those who are suffering and are in need of help. Unfortunately, the degradation that had come in the society due to various invasions was such that this Oneness was almost missing in the lives of those very people who were supposed to guide the society. They needed to be woken up from their stupor and fall. That could be done only by stating the truth forthrightly. Swami Vivekananda did not mince the words when he touched upon the hypocrisy of our practice of Dharma. He said,

“A dreadful slough is in front of you — take care; many fall into it and die. The slough is this, that the present religion of the Hindus is not in the Vedas, nor in the Puranas, nor in Bhakti, nor in Mukti — religion has entered into the cooking – pot. The present religion of the Hindus is neither the path of knowledge nor that of reason — it is “Don’t – touchism”. “Don’t touch me!” “Don’t touch me!”– that exhausts its description. See that you do not lose your lives in this dire irreligion of “Don’t – touchism”. Must the teaching, “looking upon all beings as your own self”– be confined to books alone? How will they grant salvation who cannot feed a hungry mouth with a crumb of bread? How will those who become impure at the mere breath of others purify others? Don’t – touchism is a form of mental disease. Beware! All expansion is life, all contraction is death. All love is expansion, all selfishness is contraction.”

உயிர்ப்பு (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்




பொன்னும்,கல்லும்
மண்ணில் கலந்துரையாடின.

கொஞ்சம் பொறு ...
கடவுளைத்தழுவும் அணியாவேன்
என்றது பொன்.

அப்போது பார் ...
கடவுளே நானாவேன்
என்றது கல்.

மௌனமாய் சற்றே
இளகியது மண்-
விதைபிளந்து எழுந்துவரும்
உயிர்ப்பச்சைக்கு வழி தந்து.



காண்க:
கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்


புதுக்கவிஞர்களால் வளம் பெற்ற தமிழ்


-சேக்கிழான்




பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே 


-என்பது நன்னூல் சூத்திரம் (462). 

தாய்த்தமிழ் மொழி இன்றும் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் வீற்றிருக்கக் காரணம், இந்தத் தகவமைப்புத் திறன் தான்.

அந்த வகையில் நவீனகால சமூக, மொழி மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழில் உருவானதே புதுக்கவிதை. யாப்பிலக்கன அடிப்படையில் எழுதப்பட்டு வந்த கவிதைத் தமிழுக்கு மாற்றாக, புதிய திசையில், புதிய நடையில் எழுதப்பட்ட கவிதைகள் ‘புதுக்கவிதை’ என்று பெயர் பெற்றன. அதையடுத்து, மரபார்ந்த யாப்பிலக்கண அடிப்படையில் எழுப்பட்டவை ‘மரபுக் கவிதைகள்’ என்று பெயர் பெற்றன.

இந்த மாற்றம் மகாகவி பாரதியிடமிருந்து துவங்குகிறது. 1910 முதல் 1920 களில் தமிழின் தவப்புதல்வரான மகாகவி பாரதி, ‘வசன கவிதை’ என்ற புதிய இலக்கிய வகையை தமிழுக்கு அறிமுகம் செய்தார். ஷெல்லி, வால்ட் விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளைப் படித்திருந்த அவர், புதிய நடையில் தமிழுக்கு அணி செய்தார்.

“உடல் நன்று. புலன்கள் இனியன.
உயிர் சுவையுடையது.
மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம்.
உணர்வே அமுதம்.
உணர்வு தெய்வம்’


-என்ற பாரதியின் வசன கவிதை (இன்பம்), நேரடியாகவும் பொட்டில் அடித்தாற்போலவும் மிக எளிதாக சொல்ல வந்ததை சொல்லிச் செல்வதைக் காணலாம்.

தேசமே தெய்வம் என்றவர்


-ம.கொ.சி.இராஜேந்திரன்

டாக்டர் ஹெட்கேவார்

டாக்டர் ஹெட்கேவார்

(1889 யுகாதி – மறைவு: 1940, ஜூன் 21)


கோயிலைப் போலே  உடல்கள் புனிதம்
மாந்தர் அனைவரும் உபகாரி !
சிங்கத்துடனே விளையாடிடுவோம்
ஆவினம் எங்கள் அன்புத்தாய்….”
.
– என்ற அற்புதமான, அர்த்தமுள்ள வரிகளை சுமந்துகொண்டு வந்தது அந்தப் பாட்டு. இனிமையான குரலுடன் மனதையும் அறிவையும் கிறங்க வைத்த பாடல் வந்த திசை நோக்கி தானாக நடந்தது எனது கால்கள்.
 .
பதினைந்து முதல் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சுமார் 20 இளைஞர்கள் வட்டமாக அமர்ந்திருந்தனர்;  ஒருவர் பாட, மற்றவர்கள் திருப்பிப்  பாடும் இந்த கூட்டுப் பாடலில் தான் எத்தனை ஆழமான பொருள்! தொடர்ந்தது பாடல்….
 .
“சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம்
சிறுவர் அனைவரும் ராமனே
சிறுவர் அனைவரும் ராமனே!….
சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி;
கிராமம் அனைத்தும் தவ பூமி!…”
 .
எனும் பாடல் வரிகளில் இழைந்தோடிய, தேசபக்தியும் தெளிந்த நீரோடையாய் விளங்கிய நம் மண்ணின் ஞானசக்தியும் என்னுள் ஒரு பரவச உணர்வை ஏற்படுத்தியது.

அவன்தான் இறைவன்! (கவிதை)

-கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன்

(பிறப்பு: 1927 ஜூன் 24- மறைவு: 1981 அக்டோபர் 17)


பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்!

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்!

வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்!

தேசிய முரசாய் ஒலித்த தமிழர்!

-முத்துவிஜயன்


ம.பொ.சிவஞானம்

ம.பொ.சிவஞானம்

(பிறப்பு: ஜூன் 26, 1906 – மறைவு: , அக்டோபர் 3, 1995)

தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகள் நிலைத்திருக்கக் காரணமான ம.பொ.சி, பாரதத்தின் அங்கமே தமிழகம் என்பதை தனது ஆணித்தரமான பேச்சாற்றலாலும்,  எழுத்துக்களாலும், இலக்கிய அறிவாலும் நிரூபித்தவர்.
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், பொன்னுசாமி கிராமணியார்- சிவகாமி அம்மாள் தம்பதியாருக்கு  மகவாக 1906, ஜூன் 26 ல் பிறந்தார் சிவஞானம். பிற்காலத்தில் மயிலாப்பூரில் வாழ்ந்தபோது, மயிலாப்பூர்   பொன்னுசாமி சிவஞானம் என்பதே சுருக்கமாக ம.பொ.சி. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பிரபலமான பெயராயிற்று.
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த சிவஞானம், மூன்றாம் வகுப்போடு பள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிவந்தது. குலத் தொழிலான நெசவுத்  தொழிலில் குழந்தையாக இருந்தபோதே ஈடுபட்ட அவர், பிற்பாடு  அச்சுக்  கோர்க்கும் தொழில் ஈடுபட்டார். டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் தான் அவரது அச்சுப்பணி (1927-1934) துவங்கியது. அதுவே அவரது இலக்கிய தாகத்திற்கும்,  தேசிய  வேகத்திற்கும்  ஊற்றாக அமைந்தது.

திருவாசகம் தந்த வள்ளல்

-வைஷ்ணவிப்பிரியன்

மாணிக்கவாசகர்


மாணிக்கவாசகர்

(திருநட்சத்திரம்: ஆனி 11 - மகம்)
(ஜூன் 25)

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் கடைசியாக இருப்பவர் மாணிக்கவாசகர். முதல் மூவரும் இயற்றிய பாக்கள் தேவாரமாகத் தொகுக்கப்பட்டுள்ள நிலையில், மாணிக்கவாசகர் பாடிய தீந்தமிழ்ப் பாடல் நூல்கள் திருவாசகம், திருக்கோவையார் ஆகியவை.

பொது யுகத்திற்குப் பிந்தைய ஒன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர், பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்தவர். ஈசன் மீதான் பக்தியால் அரசு செல்வத்தை கோவில் அமைக்க செலவிட்டதால் அரசரின் கோபத்திற்கு ஆளாகியதும் இவரைக் காக்க, சிவனே பிரம்படி பட்டதும், தெய்வத் தமிழின் சிறப்பை உணர்த்துவன. அபிதான சிந்தாமணியில் உள்ளபடி, அவரது சரிதம் இதோ...

தெய்வீக வாழ்க்கையை உபதேசித்தவர்


-ஆசிரியர் குழு

சுவாமி சிவானந்தர்

சுவாமி சிவானந்தர்


(தோற்றம்: 1887 செப்டம்பர் 8 - மறைவு:  1963 ஜூலை 14)


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல!

மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி.

சிவபுராணம் (கவிதை)

-மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகருக்கு அருள்பாலிக்கும் ஈசன்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

பல்லாண்டு பாடிய அருளாளர்

-செங்கோட்டை ஸ்ரீராம்


பெரியாழ்வார்

பெரியாழ்வார்

(திருநட்சத்திரம்: ஆனி – சுவாதி)

வடவேங்கடம் முதல் குமரி வரை எல்லையாகக் கொண்ட திராவிட நாட்டில், பாண்டிய தேசம் அக்காலம் முதலே சிறப்புற இருந்து வந்தது. அங்கே முத்தும் முத்தமிழும் பொலிவுற்று விளங்குவதாய் இருந்தது. அந்தப் பாண்டிய நாட்டில் காட்டுப் பகுதில் வாழ்ந்து வந்த வேடர் குலத் தலைவனுக்கும், அவனது மனைவியாகிய மல்லிக்கும், வில்லி, கண்டன் என்னும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்கள் இருவரும் குல வழக்கப்படி, வேட்டையாடுவதில் வல்லவர்களாக விளங்கினார்கள்.
ஒரு நாள் வில்லியும், கண்டனும் அடர்ந்த காட்டுப் பகுதியில் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றார்கள். இருவரும் தனித்தனியே சென்றபோது, கண்டன் முன்னே ஒரு புலி வந்து நின்றது. அவன் அப் புலியைப் பின்தொடர்ந்து சென்று அம்புகள் ஏவினான். ஆனால் அந்த அம்பு மழைக்குத் தப்பிய புலி, கண்டனைக் கொன்றது. இதை அறியாத வில்லி, தன் சகோதரனான கண்டனைத் தேடிக்கொண்டு காடு முழுதும் சுற்றித் திரிந்தான். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் களைப்பின் மிகுதியால் அவன் மரத்தின் அடியில் அயர்ந்து அமர்ந்தான். அப்படியே நித்திரை கண்களைத் தழுவ உறங்கிப் போனான்.
திருமகள்கேள்வனான திருமால் அவன் கனவில் தோன்றினார். கண்டனின் விதியைப் பற்றிக் கூறி, அதற்காக வருந்த வேண்டாம் என்றார். முன்னொரு காலத்தில் காலநேமி என்ற அசுரனை வதம் செய்வதற்காக தாம் அங்கே எழுந்தருளியதாகவும், பின்னர் அந்த ஆலமரத்தின் அடியில் உள்ள புதர்களுக்கு நடுவே வடபத்ர சாயி என்ற திருநாமத்தோடு, விமலாக்ருதி விமானத்தினுள் சயனத் திருக்கோலத்தில் இருப்பதாகவும் காட்டி, இந்தக் காட்டை அகழ்ந்து நாடாக்கி, தமக்குக் கோயில் கட்டி ஆராதித்து வருமாறும் கூறினார்.
அவ்வண்ணமே கனவு நிலையிலிருந்து விழித்தெழுந்த வில்லி, வடபெருங்கோயிலுடையானைக் கண்டெடுத்து, அவனுக்கு அங்கே ஒரு கோயில் எழுப்பி, அழகிய தெருக்களை அமைத்து நகர் அமைத்தான். அந்த நகரம் புதிதாக உருவாகியதால் அதற்கு புத்தூர் என்று பெயர் ஏற்பட்டது. வில்லியால் அந்த நகரம் அமைக்கப்பட்டதால், வில்லிபுத்தூர் என்று பெயர் வழங்கலாயிற்று.
இப்படித் தோற்றம் பெற்ற வில்லிபுத்தூரில் குடியேறிய அந்தணர்களுள் வேயர் என்ற வகுப்பினர் இருந்தனர். அவர்களுள் முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபில் முகுந்த பட்டர் என்னும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் பத்மவல்லி என்னும் மங்கை நல்லாளை மணந்து, இல்லற தர்மத்தைக் குறைவற நடத்திவந்தார். அவர்கள் இருவரும் வடபெருங்கோயிலுடையானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்கள். அவனுக்கு அநேகக் கைங்கர்யங்களைச் செய்து வந்தார்கள். அவர்களுக்கு அநேக பிள்ளைச் செல்வங்கள் இருந்தார்கள். அவர்களில் வடபெருங்கோயிலுடையான் அருளால் ஐந்தாவதாக ஓர் ஆண் மகவு பிறந்தது.

ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்

-சுவாமி சித்பவானந்தர்

சுவாமி விவேகானந்தர்
கந்தன் கலியுகவரதன்  எனப்படுகின்றான். இதன் உட்பொருளை நாம் அறிந்துகொள்வது அவசியம். நான்கு யுகங்களுள் கடையாயது கலியுகம். அதில் அறம் மிகக் குறைந்துள்ளது. ஆதலால் தெய்வத்தை அறிந்துகொள்ளவும், தெய்வத்தைத் தொழவும் முயலுபவர் கலியுகத்தில் மிகக் குறைந்திருக்கின்றனர். இனி, தெய்வம் எனும் சொல் எப்பொருளைக் குறிக்கிறது என அறிந்துகொள்வது அவசியம். இயற்கை வேறு, தெய்வம் வேறு அல்ல. ஒரே பொருள் இரண்டு விதங்களில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஐம்பொறிகள் வாயிலாக நுகர்கின்றவிடத்து அது இயற்கை. ஞானக்கண் கொண்டு காணுமிடத்து அதே பொருள் கடவுள் எனப் பெயர்பெறுகிறது. கடவுள் காட்சி மெய்க் காட்சி. இயற்கைக் காட்சி பொய்யானது, நிலையற்றது. ஆதலால்தான் இயற்கையாகக் காணும் காட்சியைக் கடந்து மெய்ப்பொருளை உள்ளவாறு காணுதல் வேண்டும். அதை உள்ளவாறு அறிகின்றவிடத்து வாழ்க்கைச் சிக்கல்களெல்லாம் தாமாக அடிபட்டுப் போய்விடுகின்றன.

கடவுள் காட்சிகளுள் செம்பொருளைக் கந்தனாகக் காணும் காட்சி மிக எளியது; பக்குவமடையாத உயிர்களுக்கும் விளங்கவல்லது. கந்தனை அறிந்து அவனைப் போற்றுகின்றவிடத்துப் போற்றுகிறவன் விரைவில் பெருநிலை எய்துகிறான். கந்தனைப் பற்றிய உண்மைகளையெல்லாம் அருணகிரிநாதர் ஓர் எளிய திருப்புகழில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்:
      ஏறுமயில் ஏறிவிளையாடுமுகம் ஒன்றே
                ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
        கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே
                குன்றுருவ வேல்தாங்கி நின்றமுகம் ஒன்றே
        மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே
                வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
        ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
                ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே
என்பது அத்திருப்புகழ் ஆகும். கந்தனுக்கு அமைந்துள்ள ஆறு இயல்புகளையும் ஆராய்வதற்கு ஏற்ப நமது அறிவு தெளிவுறும். இனி, இவ்வாராய்ச்சியில் மற்றொரு மகிமை புதைந்திருக்கிறது. இக்காலத்தில் தோன்றியுள்ள மக்களுள் மிக மேலோன் ஆவார் சுவாமி விவேகானந்தர். அவரைச் சரியாக அறிந்து கொள்ளுபவர்கள் சமயத்தைச் சரியாக அறிந்து கொள்ளுபவர்கள் ஆவார்கள். விவேகானந்தரைச் சரியாக அறிந்து கொள்பவர் சமய அனுஷ்டானத்தையும் அறிந்து கொள்பவர் ஆவார்கள்.
விவேகானந்தரிடத்து மிளிர்கின்ற மகிமைகளுள் சில கந்தனிடமிருந்து பெற்றுள்ள மகிமைகளாகத் தென்படுகின்றன. ஆதலால் முருகக் கடவுளது மகிமைகளையும் மானுடருள் மேலோனாகிய விவேகானந்தரது விபூதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்ப்போம்.

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் தீருமா?

-ராதிகா மணாளன்



மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, போன்ற ரயில் நிலையங்களில் காலை வேளைகளில் ஒரு காட்சியை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். அதிகாலை வந்து செல்லும் விரைவு ரயில்களில் இருந்து கொத்துக்கொத்தாக இறங்கும் பிற மாநிலத் தொழிலாளர்கள்- கண்களில் கனவுடனும், முதுகில் சுமையுடனும், உடலில் விரைவுடனும், செல்வதைக் காணமுடியும். தினசரி இந்த நகரங்களுக்கு நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை பல ஆயிரங்களாக இருந்தது. சில விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில்கூட பிற மாநிலத் தொழிலாளர்கள் ஆக்கிரமித்து அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறோம். எல்லாம் மார்ச் 23 வரை. உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்விலும் விளையாடிவிட்டது.

எதிர்காலத்தை நாடி எங்கிருந்தோ வந்த அந்த பிற மாநிலத் தொழிலாளர்களுடைய நிலை இன்று கவலைக்கிடம். வேலை தேடி வந்த இடத்தில் கொரோனா தொற்றுக் காலத்தில் கிடைத்த கொடிய அனுபவங்களும் ஆதரவற்ற சூழ்நிலையும் அவர்களில் பெரும்பாலோரை தங்கள் சொந்த ஊருக்கே தற்போது துரத்தியிருக்கின்றன.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பல நாட்டு மக்களை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. இந்தியாவும் இதில் விதிவிலக்கல்ல. சீனாவில் தோன்றிய இந்த கொரோனா (கொவிட் -19) வைரஸ் இதுவரை உலகின் அனைத்து நாடுகளிலும் தாண்டவமாடி பல லட்சம் மக்களைக் காவுகொண்டிருக்கிறது. அத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிர்ப் பலி குறைவு என்பது நிம்மதியளிக்கிறது. (ஜூன் 12 நிலவரம்: உலக அளவில் கொரோனா பாதிப்பு: 74.97 லட்சம், பலி: 4.20 லட்சம்; இந்தியாவில் பாதிப்பு: 2.94 லட்சம், பலி: 8,143) எனினும் இதற்கு நாம் கொடுத்த விலை மிக அதிகம்.

தே.சி.க. நடத்திய சுற்றுச்சூழல் தினக் கருத்தரங்கம்


-ஆசிரியர் குழு



தேசிய சிந்தனைக் கழகத்தின் சார்பில், உலக சுற்றுப்புறச் சூழல் தினத்தை ஒட்டி, ‘பழையன புகுதலும்,புதியன கழிதலும்’ என்னும் தலைப்பில்  காணொளிக்காட்சி கருத்தரங்கம்  ஜூன் 5ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இணையவழிக் கருத்தரங்கமான இந்நிகழ்வு அன்று மாலை 06.30 மணிக்குத் துவங்கியது.

தொடக்கத்தில் தேசிய சிந்தனைக் கழகத்தின் மகளிர் அணி மாநிலச் செயலாளர் ஸ்ரீமதி ரேணுகா சூரியகுமார் இறைவணக்கம் பாடினார். திருப்பூர் தனியார் கல்லூரி நூலகர்
ஸ்ரீமதி ஜெயபாரதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஸ்ரீ ஆதலையூர் சூரியகுமார் வரவேற்புரையும், கருத்தரங்கின் நோக்க உரையும் நிகழ்த்தினார்.

திருப்பல்லாண்டு (கவிதை)

-பெரியாழ்வார்



திருப்பல்லாண்டு பன்னிரு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பாடிய கவிதை நூல் ஆகும்.
இது 12 பாடல்களால் ஆனது. வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரையுள்ள பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும்.
காப்பு
(குறள்வெண்செந்துறை)

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு!  (1)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2)

நெகிழச் செய்யும் தாயின் கடிதம்

-ஆசிரியர் குழு

டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி
(பலிதானம்: ஜூன் 23)



ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியே என்று நிலைநாட்ட காஷ்மீர் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார், பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி. சிறைக் காவலில் வைக்கப்பட்ட அவர், அங்கு மர்மமான முறையில் 1953, ஜூன் 23இல் மரணம் அடைந்தார். அவரது உயிர்த் தியாகத்தால் தான் காஷ்மீர் இன்றும் இந்தியாவின் பகுதியாக நீடிக்கிறது.

டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் தாயார் திருமதி ஜோக்மயா தேவி அவர்கள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தை ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டும். பிரதம மந்திரி நேரு அவர்களுக்கு, டாக்டர் எஸ்.பி. முகர்ஜியின் தாய் திருமதி ஜோக்மயா தேவி அவர்கள் எழுதிய கடிதத்தின் விவரம் இதோ:

SALUTATIONS TO A GREAT MARTYR

-L.K.ADVANI
Dr. Syama Prasad Mookerjee
23rd of June is a date the nation must not forget. Exactly 59 years back, in 1953, on this very day Dr. Syama Prasad Mookerjee passed away in Srinagar in mysterious circumstances.
In October 1951, Dr. Mookerjee had founded the Bharatiya Jana Sangh. He had been elected its first National President.
In 1952, the Election Commission had organized the First General elections to the Lok Sabha, and the State Assemblies. Dr. Mookerjee was elected to the first Lok Sabha from a Calcutta constituency.

காஷ்மீரம் காக்க தன்னுயிர் ஈந்தவர்!

-இல.கணேசன்

அம்பேத்கருடன் சியாம பிரசாத் முகர்ஜி

சுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸ் கட்சி  சாராத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபாவின் தலைவர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் துறை மந்திரி. அப்படி மகாத்மா காந்தியின் வற்புறுத்தலால் டாக்டர் முகர்ஜி உடன் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இணைந்த இன்னொருவர் பாபாசாஹேப் அம்பேத்கர்.

தேசப் பிரிவினையால் நம் மக்கள் பொருள் நாசம், உயிர்ச் சேதம், மான பங்கம் என மாபெரும் இன்னல்களைச் சந்தித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாய் மாறினர். அதன் பின்னரும்  ‘நேரு – லியாகத் அலி ஒப்பந்தம்’ என்ற பெயரில் அந்நாளைய பிரதமர் நேரு தொடர்ந்து மேற்கொண்ட சிறுபான்மையின சமரச நடவடிக்கைகளை எதிர்த்த டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி, மத்திய மந்திரி சபையிலிருந்து விலகினார். சுதந்திர நாட்டில் ராஜிநாமா செய்த முதல் மத்திய மந்திரி இவர்தான்.

அதன்பிறகு 21.10.1951இல்  ‘பாரதிய ஜன சங்கம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். (அதன் இந்நாளைய உருவமே பாரதீய ஜனதா கட்சி).