14/06/2020

தே.சி.க. நடத்திய சுற்றுச்சூழல் தினக் கருத்தரங்கம்


-ஆசிரியர் குழு



தேசிய சிந்தனைக் கழகத்தின் சார்பில், உலக சுற்றுப்புறச் சூழல் தினத்தை ஒட்டி, ‘பழையன புகுதலும்,புதியன கழிதலும்’ என்னும் தலைப்பில்  காணொளிக்காட்சி கருத்தரங்கம்  ஜூன் 5ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இணையவழிக் கருத்தரங்கமான இந்நிகழ்வு அன்று மாலை 06.30 மணிக்குத் துவங்கியது.

தொடக்கத்தில் தேசிய சிந்தனைக் கழகத்தின் மகளிர் அணி மாநிலச் செயலாளர் ஸ்ரீமதி ரேணுகா சூரியகுமார் இறைவணக்கம் பாடினார். திருப்பூர் தனியார் கல்லூரி நூலகர்
ஸ்ரீமதி ஜெயபாரதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஸ்ரீ ஆதலையூர் சூரியகுமார் வரவேற்புரையும், கருத்தரங்கின் நோக்க உரையும் நிகழ்த்தினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ஸ்ரீ இராஜேந்திரன் தலைமையுரையாற்றினார்.


தொடர்ந்து காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீ வெங்கடேசன் ‘நீர் மேலாண்மை’ என்னும் தலைப்பிலும், திருச்சி அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி முதுமுதல்வர் ஸ்ரீ செந்தில்குமார்  ‘ஆற்றல் சேமிப்பு’ என்னும் தலைப்பிலும், கோவிலூர் நாச்சியப்பா சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீ மாணிக்கவாசகர்  ‘விலங்குகள்,பறவைகள் பாதுகாப்பு’ என்னும்  தலைப்பிலும், பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயக்குநர் ஸ்ரீ வெங்கடாஜலபதி ‘நெகிழி-பயன்பாடு தவிர்ப்பு’ என்னும் தலைப்பிலும், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஸ்ரீமதி அமுதா ‘மரங்கள் மண்ணின் வரங்கள்’ என்ற தலைப்பிலும் சிற்றுரை வழங்கினர்.

சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகப் பதிவாளர் ஸ்ரீ சேதுராமன் சிறப்புரையாற்றினார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஸ்ரீ பிச்சுமணி கருத்தரங்க நிறைவுரையாற்றினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக,கல்லூரி பேராசிரியர்கள்,கல்லூரி மாணவர்கள்,தேசிய சிந்தனைக் கழகத்தின் பொறுப்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.


தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஸ்ரீ பொன்.பாண்டியன் நன்றியுரை கூறினார். நிறைவில் அனைவரும் சேர்ந்து தேசிய கீதம்  பாட கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.


.

No comments:

Post a Comment