16/12/2020

மார்கழி 2020 மின்னிதழ்  உள்ளடக்கம்


1. அமுதமொழி-12
-அன்னை சாரதா தேவி

2. மார்கழித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் 
-தஞ்சை வெ.கோபாலன்

6 . ‘சுப்ரமண்ய’ வேதம்
-திருநின்றவூர் இரவிக்குமார்

7. விஸ்வரூப விவேகானந்தர்
-சுவாமி விமூர்த்தானந்தர்

8. VAAK DEVI LAUDS VIVEKANANDA’S VOICE
-Swami Vimurtananda 

-சுவாமி விவேகானந்தர்

-பேரா. இளங்கோ ராமானுஜம்

-ஆசிரியர் குழு

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

-சு.சண்முகவேல்

-‘தமிழ்தாமரை’ வி.எம்.வெங்கடேஷ்

-செங்கோட்டை ஸ்ரீராம்

-க.ரகுநாதன்

-Pramodkumar

-ஜடாயு

-ஜடாயு

-ஆசிரியர் குழு

21.  அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள்- 1
-பொன்.பாண்டியன்

அமுதமொழி-12
இன்று நீங்கள் செய்ய இயலாததை
நாளை உங்களால் நிச்சயம் செய்ய முடியும்.
விடாமுயற்சியை மேற்கொள்ளுங்கள்,
வெற்றியை எய்துவீர்கள்.

-அன்னை சாரதா தேவி

மார்கழித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

 -ஆசிரியர் குழு


சுவாமி சிரத்தானந்தர்


மார்கழி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், மார்கழித் திங்கள்  (16.12.2020 - 15.01.2021)


ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:


சாக்கிய நாயனார்
(மார்கழி 01 - பூராடம்- 16.12.2020)
(மார்கழி 01 - பூராடம்- 16.12.2020) 
(பிறப்பு: டிச. 22, 1666)    
(பிறப்பு: டிச. 22, 1853)
(மார்கழி 8 - ரேவதி- 23.12.2020)
(மார்கழி 15 - திருவாதிரை- 30.12.2020) 
(மார்கழி 15 - திருவாதிரை- 30.12.2020)   
(மார்கழி 21 - உத்திரம்- 05.01.2021)
(மார்கழி 22 - ஹஸ்தம் - 06.01.2021)
(மார்கழி 26 - அனுஷம் - 10.01.2021)
(மார்கழி 24 - சுவாதி - 08.01.2021)
(மார்கழி 27 - கேட்டை- 11.01.2021)


***

சான்றோர்– மலர்வும் மறைவும்

மயிலை சீனி வேங்கடசாமி
(பிறப்பு: டிச. 16)
(பிறப்பு: டிச. 18)
(பிறப்பு: டிச.22)
(பலிதானம்: டிச. 23)
(நினைவு: டிச. 24)
(பிறப்பு: டிச. 25)
(நினைவு: டிச. 25 )
(நினைவு: டிச. 25)
(பிறப்பு: டிச. 26)
(மறைவு: டிச. 30)
(பிறப்பு: டிச. 31)
(நினைவு: டிச. 31)
(பிறப்பு: ஜன. 3)
(நினைவு: ஜன. 4)
(பிறப்பு: ஜன. 8)
(பிறப்பு: ஜன. 12)


குரு கோவிந்தசிம்ஹ விஜயம் (கவிதை)

-மகாகவி பாரதி

குரு கோவிந்த சிம்மன்

ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு
விக்ரம னாண்டு, வீரருக் கமுதாம்
ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்
பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக்
குலத்தினை வகுத்த குருமணி யாவான் 5

ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன்
வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்
வீரர் நாயகன், மேதினி காத்த
குருகோ விந்த சிங்கமாங் கோமகன்
அவன்திருக் கட்டளை அறிந்துபல் திசையினும் 10

பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும்
நாடொறும் வந்து நண்ணுகின் றாரால்.
ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம்
வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான் 15

சிங்கங்களை உருவாக்கிய சிங்கம்

 -முத்துவிஜயன்

குரு கோவிந்த சிம்மன் 

(பிறப்பு: 1666, டிச. 22  – மறைவு: 1708, அக். 7)

அன்னிய ஆதிக்கத்திலிருந்து ஹிந்து தர்மத்தைக் காக்கும் உறைவாளாக உருவானதே சீக்கியம் என்னும் சம்பிரதாயம். பின்னாளில் இது சீக்கியம் என்னும் தனி மதமாக மாறியது. அந்த சீக்கியத்தை போர்க் குணமுள்ளதாக அமைத்தவர் குரு கோவிந்த சிம்மன் (சிங்).

குரு கோவிந்த சிம்மன், சீக்கிய மதத்தினரின் குருநாதர்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். இவரே வைராக்கியம் மிகுந்த சீக்கிய மதக் கோட்பாடுக்களுக்கு வித்திட்டவர்.

முகலாயம் மன்னர் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்ட ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகனான இவர்,  சீக்கியத்தின் பல அம்சங்களை உருவாக்கியவர்.

அருளின் வடிவம் அன்னை சாரதாதேவி

-தஞ்சை வெ.கோபாலன்

அன்னை சாரதா தேவி
(பிறப்பு:  1853 டிசம்பர் 22- மறைவு: 1920 ஜூலை 20)


நமது தேசத்தில் பண்டைய காலந்தொட்டு பெண்களில் பல யோகியர் வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். சங்க காலத்தில் ஒளவையார், இராமாயணத்தில் சபரி, சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள், திருத்தொண்டர் புராணத்தில் மங்கையர்க் கரசியார், காரைக்கால் அம்மையார் போன்ற எத்தனையோ பெண் அடியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 

இவர்களெல்லாம் இந்தத் தேசத்தின் பெண்கள் எப்படி வாழ வேண்டுமென்பதற்கு இலக்கணமாகவே வாழ்ந்து வழிகாட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த மாதரசிகளின் வழியில் வந்தவர் அன்னை சாரதா தேவி. 

கல்கத்தாவில் காளிகோயில் பூசாரியாக இருந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் வாழ்க்கையையே இறையுணர்வில் ஆழ்த்தி, தன்னை மறந்து உலகத்துக்கு ஒரு வழிகாட்டியாக வாழ்ந்தவர். அவருடைய குடும்பச் சூழ்நிலை காரணமாக அவருக்குத் திருமணம் ஆனது. அப்படி அந்த மகானைத் திருமணம் செய்து கொண்ட மங்கையோ, இந்த உலக வாழ்க்கைக்கு எனப் பிறந்தவர் அல்ல, மனிதர்களை உய்விக்க வந்த மகாத்மா என்பதை, திருமணமாகியும் துறவியாக வாழ்ந்து காட்டி மறைந்தவர் அன்னை சாரதா தேவியார்.

மக்கள் மனங்களை மயக்கி மாயா ஜாலங்களையோ, மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களையோ செய்து பிறர் மனங்களை கவர்ந்தவர் அல்ல இந்தத் தாய். உலகில் வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் ஓர் அன்னை இவர்தான் என்று நினைக்கும் வகையில், அன்பே ஒரு தாயின் உருவெடுத்தது போல, பிறரது துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, ஆறுதல் வழங்கி, வழிகாட்டிக் கொண்டு வாழ்ந்தவர் அன்னை. அந்த அன்னை சாரதா தேவியாரின் வாழ்க்கைச் சரிதத்தையும், அவர் வாழ்வில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளையும் இப்போது பார்க்கலாம்.

’சுப்ரமண்ய’ வேதம்

 -திருநின்றவூர் இரவிக்குமார்

 


வேத பாரதம்

வேதம் பாரத பண்பாட்டின் ஆணி வேராக இருக்கிறது. முதல் நூலாக கருதப்படும் ரிக் வேதத்தில் வரும் புகழ்பெற்ற வரி:

 ஸத் விப்ரா பஹுதா வதந்தி'

 இதை பாரதியார்

'வேடம்பல் கோடியோ ருண்மைக் குளவென்று

 வேதம் புகன்றிடுமே ! '

 -என்கிறார் தமிழில்.

 வேதம் ஹிந்துக்களுக்கு ஆனது என்பதை விட மனித குலத்திற்கான என்பதே உண்மை அது பிறந்தது பாரததேசம் என்பதால் பாரத தேசம் உயர்வானது அதை,

 ' ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

உலகின்பக் கேணி என்றே

நன்று பல் வேதம் வரைந்தகை பாரத

நாயகி தன் திருக்கை' 

-என்கிறார் பாரதி. 

பரம்பொருள் ஒன்றே பலவல்ல என்பது வேதத்தின் கருத்து. பலரும் நினைப்பதுபோல் உலகம் துன்பம் நிறைந்தது அல்ல. நாம் அனைவரும் பரம்பொருளின் பிள்ளைகள் என்பதை உணர்ந்தால் உலக வாழ்க்கை இன்பமானது ஆகிவிடும். இதைக் கூறும் வேதத்தை எழுதியது பாரத நாடு. இது மழையும் மண்ணும் நதியும் கடலும் கொண்டதல்ல. இவள் பாரதத்தாய். இவள் அருளியதே வேதம் என்று பாரதத்தையும் வேதத்தையும் இணைத்து காட்டுகிறார் பாரதி

பரம்பொருளை உணரவும் அதற்கான வழியையும் காட்டியது பாரத நாடு. பாரதம் ஆன்மிக பூமி. இது உலகிற்கு ஆன்மீக ஒளியை அளிக்க வேண்டும் என்பதே இதன் விதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்

விஸ்வரூப விவேகானந்தர்

  -சுவாமி விமூர்த்தானந்தர்


உலகைப் புரட்டிப் போட்ட பல தலைவர்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக உரையாற்றினர். அவை அந்தந்தக் காலத்திற்கு அற்புதமானவை.

ஆனால் ஒட்டுமொத்த உல மக்களின் நன்மைக்காக எந்தக் காலத்திற்கும் ஏற்ற வகையில் விளங்கும் உரைகள் மிகச் சில.

அவற்றுள் முக்கியமானது எது என்றா கேட்கிறீர்கள்? நான் யாரென்றே நீங்கள் கேட்கவில்லையே?

நான்தான் வாக்சக்தி; மேதாசக்தி; சிந்தனை வளம் என்றெல்லாம் என்னைப் பற்றிக் கூறுவார்கள். தூய மனதிலிருந்தும் மௌனத்திலிருந்தும் வரும்  வாக்சக்தி’ நானே.

ஸ்ரீதேவி தனது வசநீ முதலிய வாக்தேவிகள் மூலம் லலிதா சஹஸ்ரநாமத்தை வெளிப்படுத்தினாள். என் சக்தி தேவியின் சக்தியே.

அழுத பிள்ளையான சம்பந்தருக்கு, உலக அன்னை ஞானப்பாலுடன் என்னையும் சேர்த்து ஊட்டி, அமுதப் பிள்ளையாக, திருஞானசம்பந்தராக மாற்றியருளினார். இப்படி அருள் பெற்றவர் பலர்.

, என்று நீங்கள் கற்கும் எழுத்துகளான அக்ஷரங்களிலிருந்து, அழிவற்ற பிரம்மமான அக்ஷரம் வரை என் சக்தியே வியாபித்திருக்கிறது.

உயர்ந்த ஆன்மிகச் சிந்தனைகளை என்னிடமிருந்து ஏற்கத் தயாராக இருப்பவர்களின் படைப்புகள் - அவை காவியமோ, ஓவியமோ - மூலம் உலகிற்கு நற்சிந்தனைகளை வழங்க நான் என்றும் தயார்.

சரணடைந்தவர்களைக் காப்பது என் விரதம் என ஸ்ரீராமர் சுக்ரீவனுக்கு அருளியதன் மூலம் திரேதா யுகத்தில் பிரகடனம் செய்தபோது என் சக்தி முழுமையாக அவர் மூலம் வெளிப்பட்டது.

துவாபர யுகத்தில், ஸ்ரீகிருஷ்ணர் கீதையை உபதேசித்தபோதும் நான் அவருடன் இருந்தேன்.

கலியுகத்தில் ஒரு புத்தாண்டில் ‘பக்தர்களே, உங்கள் அனைவருக்கும் ஆன்மிக விழிப்புணர்வு உண்டாகட்டும்’ என ஸ்ரீராமகிருஷ்ணர் ஆசீர்வதித்தபோதும் அவர் மூலம் நிறைவாக வெளிப்பட்டேன்.

VAAK DEVI LAUDS VIVEKANANDA’S VOICE

 -SWAMI VIMURTANANDAThe article written in the voice of Vaak Shakti...

Throughout history, great philosophers, revolutionaries, and visionaries have voiced the innermost yearnings of the people of their times and their compatriots have venerated them for their contributions. But the power and immediacy of their words is somewhat blunted by Time. Indeed, there are very few voices which are relevant for all time and traverse undiminished across Time in their original glory. Some such memorable deathless talks were delivered some time ago and I can tell you about them.

Let me introduce myself. I am Vaak Shakti, also known as Medha Shakti. I am that unassailable source of creative energy which emanates from a pure mind. My power is the same as the Divine Mother’s.

When the child Sambandar cried for his mother’s breast-milk, the Divine Mother fed him with the milk of wisdom, along with my power over the ‘word’ and the boy was transformed into Thiru Jnana Sambandar, one of the most prominent Nayanars — 63 Shaivaite saints — whose prolific devotional lyrics form the first three volumes of Tamil Shaiva Thirumurai. There are many others who were blessed thus by the grace of the ever-compassionate, all-knowing Divine Mother.

This happened hundreds of years ago, but I remember it as if it happened yesterday. Nammalwar, the great Vaishnava saint, while in a state of divine inebriation was reciting extempore the Pasurams or slokas which have the power to liberate the devotees. Each of these slokas — which are part of the Divya Prabandham, the Vaishnavite text containing the compositions of the 12 Alwars — emanated through my power for the upliftment of the devotees.

From the Akshara or non-destructible alphabets of any language, to the Akshara or the indestructible Brahman, I, the Vaak Shakti alone prevail in the universe.

I manifest as literature, painting, or any other visual work of art, through anyone who is ready to accept me. Through them I shower my blessings upon the world in the form of ennobling thoughts and enriching acts.

When Sri Rama in the Treta Yuga proclaimed, ‘It is my vow to protect all those who seek refuge in me’, my power fully manifested through him.

When in the Dwapara Yuga, Sri Krishna enunciated the Gita, then too I was present inseparably with him.

Again, in the present Kali Yuga, when Sri Ramakrishna blessed all his devotees, as the wish-fulfilling tree, ‘Tomader Chaitanya hok’ (in Bengali), or ‘May you all be illumined’, I was expressing myself through his words.

சிகாகோ சொற்பொழிவுகள்

-சுவாமி விவேகானந்தர்1. வரவேற்புக்கு மறுமொழி 
- செப்டம்பர் 11, 1893

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

சூரப்பாவுக்குத் துணை நிற்போம்!

-பேரா. இளங்கோ ராமானுஜம்


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் நேர்மையான கல்வியாளருமான திரு. சூரப்பா, இன்று நம் மாநிலத்தை ஆண்டவர்களாலும், ஆள்பவர்களாலும் ஒரு சேரக் குறிவைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தாக்குதல்களிலும், அவதூறுப் பிரசாரங்களிலும் அரசியல்வாதிகளின்
வன்மமே வெளிப்படுகிறது; உண்மை மறைக்கப்படுகிறது. அரசு இயந்திரம் பலம் வாய்ந்தது. எப்படி வேண்டுமானாலும் கதையை ஜோடிக்கலாம்.
ஆனால் இறுதியில் உண்மைதான் வெல்லும்.

பாரதப் போரில் அபிமன்யு தனி ஒருவனாக நின்று பலம் வாய்ந்த எதிரிகளை எதிர்கொண்டது நம் நினைவுக்கு வருகிறது. அபிமன்யுவை அழிக்க நினைத்தவர்களுக்கு நன்கு தெரியும், அவர்கள் அறத்தை காலில் நசுக்கித் தான் அழிவைச் செய்கிறார்கள் என்று. இன்று திரு. சூரப்பாவைக் குறி வைப்பவர்களுக்கும் அவர்கள் செய்வது அதர்மம் என்பது தெரியும். எந்தவித முகாந்திரமும் இல்லாமல், இட்டுக்கட்டிய கதைகளைக் கொண்டு சூரப்பா பழி வாங்கப்படுகிறார்.

தனது பதவிக்காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊழல்களில் திளைத்ததாகவும் திரு. சூரப்பா மீது புகார்களைக் கூறச் செய்து, அதனை விசாரிக்க நீதிபதி குழுவையும் அரசு நியமித்திருக்கிறது. இது அவரை பதவிலிருந்து நீக்க நடக்கும் முயற்சியே ஆகும்.

தே.சி.க.: ஓர் ஆவணம்

-ஆசிரியர் குழு


நெருக்கடிநிலையின்போது, தமிழகத்தில் தேசிய சிந்தனைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

அமரர் ஸ்ரீ. இராம.கோபாலன் அவர்களின் முயற்சியாலும், திருச்சியைச் சேர்ந்த தேசியக் கல்லூரி பேராசிரியர் ஸ்ரீ. இரா.ராதாகிருஷ்ணன் அவர்களின் ஈடுபட்டாலும் விளைந்ததுதான் தேசிய சிந்தனைக் கழகம். அதன் துவக்கக் கால அழைப்பிதழ் ஒன்று இங்கு ஆவணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள பிரமுகர்களின் பெயர்களைப் பார்த்தாலே, அமைப்பின் துவக்கக் கால முக்கியத்துவம் புரியும்.
நீரின் தாகம் (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்மலையில் பிறந்தால் கடல்தான் ...
கடலாயிருந்தால் மழைதான்...
மழையாய்ப் பொழிந்தால் மண்தான் ...
என -
சேர்தலுக்கும்
பிரிதலுக்கும்
இணைதலுக்குமாய்
தாகமெடுத்து அலைகிறது நீர்.

விவசாயிகளைப் பாதுகாக்கும் ஐந்து அம்சத் திட்டம்!

-சு.சண்முகவேல்

 


நாட்டில் எது நடந்தாலும் சரி, ஏழையானாலும் பணக்காரரானாலும் உணவுத் தேவை என்பது அனைவருக்கும் பொதுவான, தள்ளிப்போட முடியாத ஒன்றாகும்.

அந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவரின் வாழ்க்கையோ சீரழிந்து கிடக்கிறது. நம் நாட்டில், பசுமைப் புரட்சிக்குப் பிறகு, விவசாயத் துறைக்கான புதிய திட்டங்கள் நீண்டகாலமாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போதைய மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது பாராட்டுக்குரியதே. அதில் உள்ள நிறை- குறைகளைச் சரி செய்து, விவசாயிகளின் நல்வாழ்வுக்கான ஒரு புதிய விடியலை உருவாக்க வேண்டியது, அரசின் கடமை மட்டுமின்றி, பொதுமக்களாகிய நமக்கும் அதில் பங்குண்டு.

விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் தான் நாம் இருக்கிறோம். இச்சூழ்நிலை மாறாவிட்டால், இனி விவசாயிகள், “அரசே உணவு விளைவிக்க நிலத்திற்கு வாடகை கொடு, உழைப்பிற்கு சம்பளம் கொடு, ஓய்வூதியம் கொடு’’ என்று கேட்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. தரமறுத்தால், உற்பத்தியை நிறுத்துவோம் என்ற முழக்கங்களை விரைவில் கேட்கலாம்.

நம்முன் உள்ள உண்மையான பிரச்சினைகளை பட்டியலிடத் தெரிந்துவிட்டால், தீர்வு எளிதாகக் கிடைத்துவிடும். அந்த வகையில் நானறிந்த வழிகளில் பிரச்னைகளைப் பட்டியலிட்டு, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறேன்.