13/04/2020

சித்திரை 2020 மின்னிதழ்


உள்ளடக்கம்


1. தமிழ்மொழி வாழ்த்து
-மகாகவி பாரதி

2. சித்திரைத் திங்கள் - ஆன்றோரும் சான்றோரும்
-ஆசிரியர் குழு

-ஔவையார்

-ஆதலையூர் த.சூரியகுமார்


-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

6. மாவீரர் சத்ரபதி சிவாஜி
-டி.எஸ்.தியாகராஜன்

7. பூஜையறை அலங்காரப் போட்டி
-ஆசிரியர் குழு

8. ஆதி சங்கரரின்  ‘மாத்ரு பஞ்சகம்’
-ஆசிரியர் குழு

9. அம்பேத்கர் பார்வையில் சமுதாயம்
-பேரா. ப.கனகசபாபதி

10. மக்கள் அரசு எது?
-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

11. விழித்தெழுக என் தேசம்!
-ரவீந்திரநாத் தாகூர்

12. தமிழ் வளர்த்த பௌத்தர்கள்
-சேக்கிழான்

13. ஒப்பற்ற கருணைக்கடல்
-கா.ஸ்ரீ.ஸ்ரீ.

14. SEVA- SWAMI VIVEKANANDA THE AWAKENER AND INSPIRER


-K.Suryanarayana Rao

-ஆசிரியர் குழு

-டாக்டர் சுதா சேஷய்யன்

-பகவான் சத்ய சாய்பாபா

-ப.சு.ரமணன்

-ஆசிரியர் குழு





.

தமிழ்மொழி வாழ்த்து (கவிதை)

-மகாகவி பாரதி



தான தனத்தன தான தனத்தன தானன தந்தா னே

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே! 1

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே! 2

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே! 3

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே! 4

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே! 5

தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே! 6

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே! 7

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே! 8


சித்திரைத் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

சுவாமி சகஜானந்தர்

சித்திரை மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

அமுதமொழி - 4



சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.


.
-ஔவையார்
(நல்வழி- 2)

கணித மேதையின் கதை -1

-ஆதலையூர் த.சூரியகுமார்

ஸ்ரீனிவாச ராமானுஜன்
(டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920)

***
கணித மேதையின் கதை
(ஸ்ரீனிவாச ராமானுஜன் பற்றிய 100 சுவாரஸ்யமான தகவல்கள்)


முன்னுரை:

இன்றைய மாணவர்களுக்கு சாதிக்கும் ஆற்றல் வேண்டும். அதற்கு அவர்களுக்கு சாதனையாளர்களைப் பற்றி சொல்லவேண்டும். வறுமையை விரட்டியடித்து வாழ்ந்து காட்டியவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். வறுமையை விரட்ட அறிவாயுதம் ஏந்தியவர்களில் முக்கியமானவர் கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன்.

அவர் சிறுவயதிலிருந்தே வறுமையில் வாடியவர். கணக்கு பாடத்தைத் தவிர மற்ற பாடங்களில் ஆர்வம் குறைந்து இருந்ததால் பொது பாடத் திட்டத்தில் நடைபெற்ற தேர்வுகளில் அவர் தேர்ச்சி பெற முடியாமல் தவித்தார். இதனால் ராமானுஜத்தின் பெற்றோர் தன் மகனுக்கு படிப்பு வரவில்லையே என்று வருந்தினார்கள். ஆனால் அவருக்கு பின்னாளில் பல்கலைக்கழகங்கள் கௌரவப் பட்டங்கள் கொடுத்து கௌரவித்தன.

வாழ்க்கையில் இரண்டு வகை வெற்றியாளர்களாக இருப்பதாக நான் நினைக்கிறேன். கடினமான உழைப்பின் மூலமாக வெற்றி பெறுவது ஒருவகை. தமக்குள் எந்த திறமை இருக்கிறதோ, அதை வெளிப்படுத்தி வெற்றி பெறுவது இரண்டாவது வகை. ராமானுஜன் இதில் இரண்டாவது வகை. அவர் தனக்குள் இருந்த கணிதத் திறமையை பயன்படுத்தி வெற்றி கண்டவர்.

பார்க்கும் பொருள்களில் எல்லாம் ஆன்மிகவாதிகளுக்கு பரம்பொருள் தெரிவதுபோல ராமானுஜனுக்கு கணக்குகள் தெரிந்தன. பறவைகள் பறப்பதை நாம் கைகொட்டி ரசித்தால் அவர் பறவைகள் பறக்கும் கோணத்தைக் கொண்டு கணக்குப் போட்டுப் பார்ப்பார்.

ராமானுஜனின் நினைவு நூற்றாண்டையொட்டி ராமானுஜத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த 100 நிகழ்வுகளைத் தொகுத்து ' கணித மேதையின் கதை' என்ற புத்தகமாக எழுதி இருக்கிறேன். இந்த நூலை எழுதும்போது அவரை அருகிலிருந்து பார்த்த ஒரு உணர்வு வரக்கூடும்.

அவர் ஓடி விளையாடிய கும்பகோணம் சாரங்கபாணி கோவிலும், படித்த கும்பகோணம் நகரவை மேனிலைப் பள்ளியும் கண்முன் வந்து சென்றன என்பதை இங்கே சொல்ல வேண்டும்.

இந்த நூலை வெளியிடும் தேசிய சிந்தனைக் கழகத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

என் வீடு (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ பக்தவத்சலம்



உங்கள் வீடுகளில் நாய்கள் ஜாக்கிரதை;
என் வீட்டில் எப்போதும் நல்வரவு.

உங்கள் கதவுகளுக்கு வித விதமாய் பூட்டுகள்;
கதவுகளைத் தொலைத்தது என் வீடு .

உங்கள் வரவேற்பு அறைகளில் வாடிய மலர்கள்;
என் வாசலெங்கும் தேன் சூடிய மலர்கள். 

மாவீரர் சத்ரபதி சிவாஜி

-டி.எஸ்.தியாகராசன்.




இவ்வுலகில் வாழ்ந்த மிகப் பெரிய வீரர்களின் வரிசையில் மகாகவி பாரதி பாராட்டிய சிங்க மராட்டிய வீரர் சத்திரபதி சிவாஜி மகாராஜாவுக்கு பிரதான இடமுண்டு.

உலகை வென்று உலா வர புறப்பட்ட கிரேக்கப் பேரரசன் மகா அலெக்சாண்டர் (பொ.யு.மு.  356-323). இதே காலத்தில் பாரதத்தில் வரலாற்று ஆசிரியர்களால் இந்துக்களின் பொற்காலம் என புகழாய்ந்த சந்திர குப்த மௌரியர் (பொ.யு.மு.  321-298), தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற மாமன்னர் இராஜராஜன் (பொ.யு 985-1014) கடற்படை கொண்டு நாடுகள் பலவென்று வாகை சூடிய இராஜேந்திர சோழன் (பொ.யு. 1044-1070). இதற்கு பின்னர் முன்னை சீனர்கட்கு சிம்ம சொப்பனமாகத்  திகழ்ந்த மங்கோலியப்  புயல் செங்கிஸ்கான் (பொ.யு. 1162-1227). போன்றவர்களுக்குச் சளைக்காத வீரம் சிவாஜி மகாராஜாவுடையது.

அதன் பிறகு சில நூற்றாண்டுகள் வளர்ந்த பின்னர் பாரதத்தின் மேற்கு எல்லையில் மூன்று புறம் சுல்தான்கள் அணிவகுக்க டில்லியில் மொகலாயப்  பேரரசன் ஒளரங்கசீப் ஆட்சியில் இருக்க,  மராட்டிய மண்ணில் சிங்கக் குட்டியொன்று சிலிர்த்து எழுந்தது. லட்சக்கணக்கான பகைவீரர்களை தனது வலிமை மிக்க சொற்ப்ப படைகொண்டு வீழ்த்திய சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் அரிய வீர தீர, விவேக மதிநுட்பத்தை இன்றும் உலகம் வியந்து போற்றுகிறது.

பூஜையறை அலங்காரப் போட்டி

-ஆசிரியர் குழு

பூஜையறைப் போட்டிக் குழுவினருடன்
ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்,
தே.சி.க. மாநிலச் செயலாளர் ஆதலையூர் சூரியகுமார்.

கிராமப்புறத்தின் பக்தி மார்க்கம் அலாதியானது. பூங்கரகம், அக்கினிக் கப்பரை, முளைப்பாலிகை என்று அது ஆத்மார்த்தமானதாக இருக்கும். குழாயடிச் சண்டை, சாலையைப் பயன்படுத்துவதில் சண்டை என்று தொட்டதற்கெல்லாம் முறைத்துக் கொள்பவர்கள்கூட, திருவிழா, விசேஷம் என்று வந்துவிட்டால் ஒன்றுகூடி விடுவார்கள். அதுபோலவே குடும்பத்திற்குள் நடக்கும் உறவுச் சிக்கல்களால் விலகி இருக்கும் உறவுகள், ஊர் திருவிழா, தேர்த் திருவிழா என்றால் ஒன்றுகூடிக் கொண்டாடுவார்கள். பிரிந்து கிடக்கும் உறவு, நட்புகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கு திருவிழாக்கள் தீர்வாக அமைகின்றன.

அப்படி ஒரு திருவிழாவை கிராமத்துக்குள் கொண்டாடி ஊர் மக்களின் ஒற்றுமையைக் கண்டு களிக்கலாம் என்ற முயற்சியில் பூஜையறை அலங்கார ப்போட்டியை கொண்டாடி இருக்கிறார்கள், கும்பகோணம் அருகே உள்ள பூக் கொல்லை கிராம மக்கள்.

ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம்

-ஆசிரியர் குழு

ஆதி சங்கரர்
(திருநட்சத்திரம்: சித்திரை- திருவாதிரை)

மஹத் புண்யத்தால் சம்பாதிக்கப்பட்ட மனுஷ்ய ஜன்மா செய்ய வேண்டியதை வேதம் கூறும். ''மாத்ரு தேவோ பவ'' - மாதா என்ற தெய்வத்தை உபாசிக்கிறவனாக இரு என்று கூறியதற்கிணங்க ஸ்ரீ பகவத் பாதாள் தனது தாய் முக்தியடையும் நிலையில் இருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்து ப்ரம்ம ஞானியான ஆதிசங்கரர் கூறியது ‘மாத்ரு பஞ்சகம்’ . அந்த சுலோகங்களின் தமிழாக்கத்துடன் அதற்கான விளக்கங்களூம் அருளியவர் காஞ்சி மாமுனிவர் அருள்மிகு சந்திரசேகர ஸரஸ்வதி சுவாமிகள். இதோ அந்தப் பாடல்கள்...

அம்பேத்கர் பார்வையில் சமுதாயம்

-பேரா.ப.கனகசபாபதி


டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர் 
(பிறப்பு: ஏப். 1891, 14 – மறைவு: 1956, டிச. 6)

அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு, சட்டமேதை, சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் உள்ளிட்ட வெவ்வேறு விதமான பரிணாமங்கள் இருந்தபோதும், அடிப்படையில் அவர் ஒரு பொருளாதார நிபுணர்.

இளங்கலை, முதுகலைப் படிப்புகளைப் பொருளாதாரத் துறையில் முடித்தார். அதன்பின்னர், புகழ்பெற்ற இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களில், பொருளாதாரத்துறையில், இரு முனைவர் பட்டங்களைப் பெற்றார். அவை அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகம், இங்கிலாந்திலுள்ள லண்டன் பொருளாதார நிறுவனம் ஆகியவை. அதைத்தவிர, சட்டத் துறையில் அவர் தேர்ச்சி பெற்றது தனிச்சிறப்பு வாய்ந்தது.

மக்கள் அரசு எது?

-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

"ஜனநாயக அரசு வேண்டுமெனில்  
சமூகம் ஜனநாயகமாக்கப்பட வேண்டும்"


பல்வேறு வகையான அரசு முறைகளை வரலாறு கண்டிருக்கிறது. முடியாட்சி, பிரபுக்கள் ஆட்சி, மக்களாட்சி என்பவற்றுடன் சர்வாதிகார ஆட்சியையும் இணைத்துக் கொள்ளலாம். தற்காலத்தில் மிகவும் பரவலாகக் காணப்படுவது ஜனநாயகம். இருப்பினும், ஜனநாயகம் என்றால் என்ன என்பது பற்றிய கருத்தொற்றுமை இல்லை. ஒரு சமூகம் தனது வடிவிலும் அமைப்பிலும் ஜனநாயக முறையில் இல்லை என்றால், அந்த சமூகத்திற்காக செயல்படும் அரசு ஜனநாயக அரசாக இருக்க முடியாது. ஜனநாயகம் என்பது தேர்தல்கள் தவிர வேறொன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் மூன்று தவறுகளை செய்கிறார்கள்.

விழித்தெழுக என் தேசம்!


 -ரவீந்திரநாத் தாகூர்




இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ,

வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ,

அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில்
வழி தவறிப் போய்விட வில்லையோ,

நோக்கம் விரியவும்,
ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, 
அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில்

எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!

குறிப்பு:

இது தாகூரின் கீதாஞ்சலி கவிதைகளுள் ஒன்று.
தமிழாக்கம் நன்றி: சி.ஜெயபாரதன், கனடா

தமிழ் வளர்த்த பௌத்தர்கள்

-சேக்கிழான்

அமுதசுரபியால் அன்னமிடும் மணிமேகலை.


தமிழின் தொன்மையிலும் செழுமையிலும் வைதீக சமயத்தினரும் சமணரும் பெரும் பங்களித்தது போலவே பௌத்தர்களும் பாடுபட்டுள்ளனர். இன்றைய நமது பாரதப் பண்பாடு இந்த மூன்று சிந்தனை பள்ளிகளிடையிலான உரையாடலின் விளைவே.

கௌதம சித்தார்த்தரால் (பொ.யு.மு. 500) உருவாக்கப்பட்ட பௌத்த சமயம், அசோகப் பேரரசின் காலத்தில் (பொ.யு.மு. 300) தமிழகத்துக்கு அறிமுகமானது. காஞ்சிபுரமும், நாகப்பட்டினமும் பௌத்தர்களின் முக்கிய மையங்களாக விளங்கின.

ஆயினும் பௌத்தர் சங்கத்தில் வீற்றிருந்த பல முனிவர்கள் பிராகிருதம், பாலி மொழிகளிலேயே அதிக நூல்களை எழுதினர். அதனால் தான் சமணர் அளவுக்கு பௌத்தர்களின் நூல்களை தமிழில் காண முடியவில்லை. ஆயினும், தமிழகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் பௌத்தர்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல.

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை, ஒரு முழுமையான பௌத்தக் காப்பியமாகும் இளங்கோ அடிகளின் சமகாலத்தவரான சீத்தலைச்சாத்தனாரால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியான கதையாகவே மணிமேகலை எழுதப்பட்டது. இது மகாயாண பௌத்த சிந்தனையை பிரசாரம் செய்யும் நூலாகும். 

ஒப்பற்ற கருணைக்கடல்


-கா.ஸ்ரீ.ஸ்ரீ.


ஸ்ரீமதே ராமானுஜாய நம:

- என்று முகப்பிடாமல் எந்த ஸ்ரீவைஷ்ணவரும் கடிதம் எழுதும் வழக்கமில்லை. ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கும்போது,  ‘அடியேன் ராமானுஜதாசன்என்றே கூறிக்கொள்வது மரபு.

ஸ்ரீவைஷ்னவர்களின் வீடுகளிலும் கோவில்களிலும் நாள்தோறும் திவ்யப் பிரபந்தங்களை ஓதியபின் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களுமே உரத்த குரலில் இரண்டு ஸ்லோகங்கள் மிக்க பக்தியுணர்ச்சியுடன் கூறுவார்கள். அவையாவன:

ஸர்வ தேச-தசா-காலேஷ்வவ்யாஹ்யாஹத பராக்ரமா /
ராமானுஜசார்ய திவ்யாஜ்ஞா வர்த்தாமதிவர்ததாம் //
ராமானுஜசார்ய திவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்ஜ்வாலா /
திகந்தவ்யாபினீ பூயாத் ஸா ஹி லோகஹிதைஷிணீ //

இவற்றின் பொருள்:

எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் தடையற்ற பேராற்றல் பொருந்திய ராமானுஜரின் தெய்வீக ஆணை வளரட்டும், மென்மேலும் வளரட்டும்! ராமானுஜரின் தெய்வீக ஆணை நாள்தோறும் மிக்க ஒளிவீசி, திசைகளின் கோடிகளில் சென்று பரவட்டும்! ஏனென்றால், அந்தத் தெய்வீக ஆணை மக்களுக்கு என்றும் நன்மையே நாடுவது.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் ராமானுஜருக்குமுள்ள இடையறாத அன்றாடத் தொடர்பை இந்தச் செய்திகள் அறிவிக்கின்றன.

Seva – Swami Vivekananda the awakener and inspirer


-K.Suryanarayana Rao 

.



Shri Ramakrishna Paramahamsa, the Divinity personified, the mentor and spiritual master of Swami Vivekananda, had prophesied, whenVivekananda was just a youthful Narendranath that, “Naren would shake the world to its foundations through his intellectual and spiritual powers. There is much more work to be done by him”.

It is an undisputed fact that, in modern times, it was Swami Vivekananda who first held aloft the banner of Hinduism as a challenge against the materialism of the West. With his profound thoughts and electrifying words he moved total strangers of high intellectual calibre, occupying equally high positions.

Dr. John Henry Wright, a professor of Greek classics at the famous Harvard University, U.S.A., whose learning was said to be encyclopedic, after his talks with the Swami for some time, had, in his letter of introduction of the Swami, to the office bearers of the World Parliament of  Religious, held at Chicago, stated “Here is a man who is more learned than all the learned professors of America put-to-gether.”

Vivekananda’s first speech at the Parliament, was only for a few minutes. There was a standing ovation and applaud. The American papers wrote “He is undoubtedly the greatest figure in the Parliament of Religions.”  “It is foolish to send our missionaries to that learned county.” “Our professors are pigmies before him” etc. etc.

This way the Swami established the truth of his master’s prophecy.

புத்தாண்டில் ஒரு புதுமையான விழா- அழைப்பிதழ்


-ஆசிரியர் குழு

காணொலி முறையில் நடைபெறும் விழா இது....




தனிமை, சேய்மை - மனிதா்களை ஒதுக்க அல்ல!

-டாக்டர் சுதா சேஷய்யன்

உலகை ஆட்டுவிக்கும் கொரோனா கிருமியின் மாதிரிப்படம்.


கடந்த சில வாரங்களாகப் பலரும் உச்சரிக்கும் ஒரு சொற்றொடா் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’; அதாவது, சமூகச் சேய்மைப்படுத்தல் (‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’). கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விலகியிருப்பதற்கு, அனைவரும் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ கைக்கொள்ள வேண்டும் என்று வல்லுநா்களும் அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்பது என்ன? மிகுதியான தொற்றுத்தன்மை கொண்ட ஒரு நோய், வேகமாகப் பரவுவதைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும், மருத்துவா்களும் சுகாதாரப் பணியாளா்களும் சில வழிமுறைகளைச் செயல்படுத்துவாா்கள். இத்தகைய வழிமுறைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொதுப் பெயா்தான் ‘சமூகச் சேய்மை’ என்பதாகும்.

மனிதா்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடும்போதோ குவியும்போதோ, தொற்றுக் கிருமிகளுக்கு ஏகக் கொண்டாட்டம். ஒரே இடத்தில் எல்லோரும் இருந்தால், ஒரே நேரத்தில் எல்லோரையும் பிடித்துவிடலாம் என்று நாம் சில சமயங்களில் சந்தோஷப்பட்டுக்கொள்வதைப்போல், கிருமிகளும் மகிழ்ச்சி கொள்ளும். ஒரே நேரத்தில் பலரையும் பீடித்துக் கொள்ளும். இந்த பீடிப்பையும் பாதிப்பையும் தடுக்கத்தான் ‘சமூகச் சேய்மை’! தொற்று இருக்கிற ஒருவரிடமிருந்து, தொற்று இல்லாத ஒருவருக்கு அது பரவிவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்படுகிற நடவடிக்கையே இது.

தேசத்தின் எதிர்காலம் குழந்தைகளின் கரங்களில்!

-பகவான் சத்ய சாய்பாபா

பகவான் சத்ய சாய்பாபா
(நவம்பர் 23, 1926- ஏப்ரல் 24, 2011)

எல்லையற்ற பரம்பொருளின் குழந்தைகளே! நீங்கள் வெறும் சதைப் பிண்டங்களல்ல! நீங்கள் எல்லாம் வல்ல இறைவனின் திருவுருவங்கள் ஆவீர்!

நீங்கள் ஆனந்தத்தின் பொக்கிஷங்களாவீர்! உங்கள் இருதயங்களோ தெய்வத்தின் திருக்கோயில்களாகும். இயற்கையின் அனைத்தும் உங்கள் விளையாட்டுத் திடலாகும். அதனுள் உறையும் அனைத்துப் படைப்புகளுமே - இந்த பிரபஞ்சத்தின் தலைவர்களாகிய நீங்களே தவிர அதன் கொத்தடிமைகளல்ல! நீங்கள் உங்கள் இச்சைகளுள் கட்டுண்டு இருக்கும் வரையில் பொருளியல் உலகின் பிடியினின்று தப்பிக்க இயலாதவராகவே இருப்பீர்கள். இராவணன் தாம் மிக்க சக்தி கொண்டிருந்தும் கூட தீவிரமான உணர்வுகளுக்கு அடிமைப்பட்டிருந்ததன் காரணத்தால் தனக்கு நேர்ந்த கேடுகளில் இருந்து தப்பிக்க இயலாதவன் ஆனான். நீங்கள் இறைவனிடம் சரணடையும் பட்சத்தில் இயற்கை முழுவதும் உங்களுக்குப் பணிபுரியும் சேவகனாகிவிடும்.

இத்தகைய அரிய அடிப்படையான உண்மையை இக்காலச் சிறுவர் சிறுமியர் அனைவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அவர்களே எதிர்கால மானிடத் தன்மையின் பிரதிநிதிகளாவர். நம் தேசத்தின் கலாசாரத்தின் பாதுகாவலர்கள் அவர்களேயாவர். நம் நாட்டின் பெருமையும் நல்லெதிர்காலமும் அவர்களையே அடி பணிந்து இருக்கிறது. இளம் குழந்தைகளின் வாழ்க்கை உருவாக்கப்படும் முறையைப் பொறுத்தே தேசத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகின்றது.

சித்திரக் கவியும், கவிஞர்களும்

-பா.சு.ரமணன்


தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று ‘சித்திரக் கவி’. கவி பாடத் தெரிந்த எல்லோராலும் பாடப்படக் கூடியதல்ல இது. கற்றறிந்த அறிஞருக்கே மிகக் கடினமான ஒன்று. அதனால் தான் “மிறைக்கவி” என்று இது போற்றப்படுகிறது.

ஞானசம்பந்தர், பகழிக் கூத்தர், பாம்பன் சுவாமிகள், பிச்சு ஐயங்கார் போன்ற பலரது பாடல்கள் ‘சித்திரக்கவி’ வடிவில் அமைந்துள்ளன. இவ்வகைச் சித்திரக்கவிகளை இயற்றுவதற்கு செய்யுள் பாடுமறிவு மட்டுமல்லாமல், துல்லியமான இலக்கண அறிவும், கணித அறிவும் இருக்க வேண்டும். 

ஒரே எழுத்து திரும்பத் திரும்ப எத்தனை முறை வர வேண்டும், அது எந்த வகையில் பொருள் கொள்ளப்பட வேண்டும், எத்தனை எழுத்துக்கள் ஒரு பாடலில் இருக்க வேண்டும், மாலை மாற்றாக அந்தச் செய்யுள் வரும்போது எழுத்துக்களை எந்தெந்த வகையில் அமைக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறைகள் உள்ளன. 

சித்திரக்கவிகளை எப்படி அமைப்பது, அதனை எப்படிப் பாடுவது என்பதற்கான விளக்கங்கள்  ‘தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்’ போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

60 தமிழ் வருடங்கள்- அழகிய ஓவியங்களில்...

-ஆசிரியர் குழு

சௌ.பூரணி- சௌ.அருணா

தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் திரு. ஆதலையூர் த.சூரியகுமார்- அவர்தம் மனைவி (மாநில மகளிரணி செயலாளர்) திருமதி ரேணுகா சூரியகுமார் தம்பதியரின் புதல்வியர்  சௌ. சூர்ய.பூரணி, சௌ. சூர்ய.அருணா ஆகிய இருவரும் மகத்தான ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றிவரும்- பிரபவ முதல்- அக்‌ஷய வரையிலான - 60 தமிழாண்டுகளை, அவற்றின் குணாம்சங்களின் அடிப்படையில் ஓவியங்களாக வரைந்திருக்கிறார்கள். அந்த ஓவியங்கள் சித்திரை முதல் நாள் (14.04.2020) கும்பகோணத்திலிருந்து காணொலி முறையில் காட்சிக்குத் திறக்கப்பட்டன. பல பெரியோர் அந்த நிகழ்வில் நவீனமுறையில் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தினர்.

அந்த ஓவியங்களை கோவை மாவட்ட தே.சி.க. இளைஞரணி செயலாளர் திரு.கவி.பூவரசன் அழகிய வடிவில் புரட்டும் புத்தக வடிவில் தொகுத்திருக்கிறார்.

கீழுள்ள இணைப்பை சொடுக்கினால் அந்த ஓவியப் புத்தகத்தைப் புரட்டிப் படிக்கலாம்.

http://online.fliphtml5.com/wgrbl/xkii/