மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான ’நீட்’ தமிழகத்திற்குத் தேவையில்லை என்று சில அரசியல் கட்சிகளும் தமிழக அரசும் சில கூறி வரும் நிலையில், வரும் செப். 12-இல் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு இறுதியாக அறிவித்து விட்டது. இந்நிலையில், நீட் தேர்வின் அவசியம், அதன் சிறப்பு குறித்து, இக்கட்டுரை பேசுகிறது...
மருத்துவப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ‘நீட்’ என்று சொல்லப்படும் நுழைவுத் தேர்வினை 2016 ஆம் வருடம் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வானது, மத்திய அரசு அந்த வருடம் முதலே நாடு முழுவதிலும் நடத்துவதற்கு அனுமதி அளித்தது. பின்னர் 2017 ஆம் வருடம் முதல் அது தமிழகத்திலும் நடைமுறையில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் வருடா வருடம் மாணவர்கள் ஆர்வத்துடன் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வருகின்றனர்.
தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் திராவிட அமைப்புகள் உள்ளிட்ட பலவும் ஆரம்பம் முதலே நீட் தேர்வினை எதிர்த்து வருகின்றன. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவை ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆதரவு கொடுத்துவிட்டு, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.
அதிமுக அரசு எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டே மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அளித்து வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வது என்பது அரசின் முதல் நடவடிக்கையாக இருக்கும் என தேர்தல் அறிக்கையில் கூறியது. அதன் தலைவர்களும் அந்த வாக்குறுதியை தொடர்ந்து மக்களிடத்தில் தேர்தலின்போது பரப்புரை ஆற்றி வந்தார்கள்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஜூன் ஐந்தாம் தேதி நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவினை அமைத்துள்ளது. அந்தக் குழு தேர்வின் தாக்கம் குறித்து மக்களிடத்தில் கருத்துகளைப் பெற்று ஒருமாத காலத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்குமெனச் சொல்லப்பட்டது. தற்போது அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.