Showing posts with label சந்திர.பிரவீண்குமார். Show all posts
Showing posts with label சந்திர.பிரவீண்குமார். Show all posts

02/11/2021

பட்டாசு (மழலைப் பாடல்)

-சந்திர.பிரவீண்குமார்


பட்டாசாம் பட்டாசு
விதவிதமான பட்டாசு!
பூரிப்பான பட்டாசு
புஸ்வாண பட்டாசாம்!
ஓடி ஆடும் பட்டாசு
சங்கு சக்கர பட்டாசாம்!
சிரித்து மகிழும் பட்டாசு
மத்தாப்பு பட்டாசாம்!