02/11/2021

பட்டாசு (மழலைப் பாடல்)

-சந்திர.பிரவீண்குமார்


பட்டாசாம் பட்டாசு
விதவிதமான பட்டாசு!
பூரிப்பான பட்டாசு
புஸ்வாண பட்டாசாம்!
ஓடி ஆடும் பட்டாசு
சங்கு சக்கர பட்டாசாம்!
சிரித்து மகிழும் பட்டாசு
மத்தாப்பு பட்டாசாம்!
மெல்ல குரல் எழுப்புவது
பிஜிலி வெடி பட்டாசாம்!
வேகமாக பாயும் நண்பனோ
ராக்கெட் வெடி பட்டாசாம்!
பெருங்கூச்சல் இடுபவன்
அணுகுண்டு பட்டாசாம்!
இன்னும் பலவும் உண்டாம்
பல ஒலிகள் தருமாம்!
கவனமாக வெடித்தால்
இன்பம் பலவாய் பெருகுமே!

குறிப்பு: 


திரு.சந்திர.பிரவீண்குமார், பத்திரிகையாளர்; மழலைக் கவிஞர்;  ‘விஜயபாரதம்’ வார இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர்.

No comments:

Post a Comment