வ.உ.சிதம்பரம் பிள்ளை (பிறப்பு: 1872 செப். 5 - மறைவு: 1936 நவ. 18) |
(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 46)
1
கலெக்டர் வின்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய்—கனல்—மூட்டினாய்,
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்—வலி—காட்டுவேன். 1
கலெக்டர் வின்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய்—கனல்—மூட்டினாய்,
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்—வலி—காட்டுவேன். 1
(நாட்டி)
கூட்டங் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய்—எமை—தூஷித்தாய்,
ஓட்ட நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய்—பொருள்—ஈட்டினாய் 2
(நாட்டி)
கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய்—சட்டம்—மீறினாய்,
ஏழைப் பட்டிங் கிறத்த லீழிவென்றே
ஏசினாய்—வீரம்—பேசினாய் 3
(நாட்டி)
அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய்—புன்மை—போக்கினாய்,
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய்—ஆசை—யூட்டினாய் 4
(நாட்டி)
தொண்டொன் றேதொழி லாக்கொண் டிருந்தோரைத்
தூண்டினாய்—புகழ்—வேண்டினாய்,
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய்—சோர்வை—யோட்டினாய் 5
(நாட்டி)
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய்—விதை—தூவினாய்,
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ?—நீங்கள்—உய்யவோ? 6
(நாட்டி)
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
சொல்லுவேன்—குத்திக்—கொல்லுவேன்
தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே
தள்ளுவேன்—பழி—கொள்ளுவேன். 7
(நாட்டி)
2.
கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி
சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம்—இனி—அஞ்சிடோம்
எந்த நாட்டினு மிந்த அநீதிகள்
ஏற்குமோ—தெய்வம்—பார்க்குமோ? 1
வந்தே மாதர மென்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம்—முடி—தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ ?—அவ—மானமோ ? 2
பொழுதெல்லா மெங்கள் செல்வங்கொள்ளை கொண்டு
போகவோ?—நாங்கள்–—சாகவோ?
அழுதுகொண் டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ?—உயிர்—வெல்லமோ? 3
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ?—பன்றிச்—சேய்களோ?
நீங்கள் மட்டு மனிதர்க ளோவிது
நீதமோ?—பிடி—வாதமோ? 4
பார தத்திடை யன்பு செலுத்துதல்
பாபமோ?—மனம்—தாபமோ?
கூறு மெங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ—இதிற்—செற்றமோ? 5
ஒற்றுமை வழியொன்றே வழியென்ப
தோர்ந்திட்டோம்—நன்கு—தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம்
மலைவுறோம்—சித்தம்—கலைவுறோம் 6
சதையைத் துண்டுதுண் டாக்சினு மன்னெண்ணம்
சாயுமோ?—ஜீவன்—ஓயுமோ?
இதயத் துள்ளே விலங்கு மஹாபக்தி
யேகுமோ?—நெஞ்சம்—வேகுமோ? 7
சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம்—இனி—அஞ்சிடோம்
எந்த நாட்டினு மிந்த அநீதிகள்
ஏற்குமோ—தெய்வம்—பார்க்குமோ? 1
வந்தே மாதர மென்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம்—முடி—தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ ?—அவ—மானமோ ? 2
பொழுதெல்லா மெங்கள் செல்வங்கொள்ளை கொண்டு
போகவோ?—நாங்கள்–—சாகவோ?
அழுதுகொண் டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ?—உயிர்—வெல்லமோ? 3
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ?—பன்றிச்—சேய்களோ?
நீங்கள் மட்டு மனிதர்க ளோவிது
நீதமோ?—பிடி—வாதமோ? 4
பார தத்திடை யன்பு செலுத்துதல்
பாபமோ?—மனம்—தாபமோ?
கூறு மெங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ—இதிற்—செற்றமோ? 5
ஒற்றுமை வழியொன்றே வழியென்ப
தோர்ந்திட்டோம்—நன்கு—தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம்
மலைவுறோம்—சித்தம்—கலைவுறோம் 6
சதையைத் துண்டுதுண் டாக்சினு மன்னெண்ணம்
சாயுமோ?—ஜீவன்—ஓயுமோ?
இதயத் துள்ளே விலங்கு மஹாபக்தி
யேகுமோ?—நெஞ்சம்—வேகுமோ? 7
No comments:
Post a Comment