-பா.சு.ரமணன்
தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று ‘சித்திரக் கவி’. கவி பாடத் தெரிந்த எல்லோராலும் பாடப்படக் கூடியதல்ல இது. கற்றறிந்த அறிஞருக்கே மிகக் கடினமான ஒன்று. அதனால் தான் “மிறைக்கவி” என்று இது போற்றப்படுகிறது.

ஞானசம்பந்தர், பகழிக் கூத்தர், பாம்பன் சுவாமிகள், பிச்சு ஐயங்கார் போன்ற பலரது பாடல்கள் ‘சித்திரக்கவி’ வடிவில் அமைந்துள்ளன. இவ்வகைச் சித்திரக்கவிகளை இயற்றுவதற்கு செய்யுள் பாடுமறிவு மட்டுமல்லாமல், துல்லியமான இலக்கண அறிவும், கணித அறிவும் இருக்க வேண்டும்.
ஒரே எழுத்து திரும்பத் திரும்ப எத்தனை முறை வர வேண்டும், அது எந்த வகையில் பொருள் கொள்ளப்பட வேண்டும், எத்தனை எழுத்துக்கள் ஒரு பாடலில் இருக்க வேண்டும், மாலை மாற்றாக அந்தச் செய்யுள் வரும்போது எழுத்துக்களை எந்தெந்த வகையில் அமைக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறைகள் உள்ளன.
சித்திரக்கவிகளை எப்படி அமைப்பது, அதனை எப்படிப் பாடுவது என்பதற்கான விளக்கங்கள் ‘தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்’ போன்ற நூல்களில் காணப்படுகின்றன.