-மகரிஷி அரவிந்தர்
(அரவிந்தம் -150)
சாத்வீகப் போராட்டமே நமக்கான ஆயுதம்! இன்று இந்தியாவில் நிலவுகின்ற சூழ்நிலையில் சாத்வீகப் போராட்டமே நமக்கு மிகவும் இயல்பான, பொருத்தமான ஆயுதமாகும்.
குறிப்பாக அந்நிய ஆட்சியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு தாமாகவே அதனுடன் ஒத்துழைக்க முன்வருவதையே முக்கியமாக நம்பி இருக்கின்ற நாடுகளுக்கு சாத்வீகப் போராட்ட முறை பொருத்தமானதாகும். சாத்வீகப் போராட்டத்தில் முதல் தத்துவம், பிரிட்டிஷ் வாணிபம் நமது நாட்டைச் சுரண்டுவதற்கும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் நாட்டை ஆள்வதற்கும் ஒத்துழைக்க மறுத்து அந்நிய நிர்வாகத்தை நடத்த முடியாமல் செய்வதாகும். ஒரே வார்த்தையில் அதற்குப் பெயர் பகிஷ்காரம்.
நமது சுதந்திரத்தை அடைவதற்கு மிக சக்தி வாய்ந்த முறை பலாத்காரம் அன்று என்பதை நாம் உணர்ந்துள்ளோம். ஆகவே நம்மால் முடிந்த மட்டும் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை மறுப்போம். அவ்வாறு நாம் நம்மை ஒத்துழையாமைக்கு - அரசாங்கத்திற்கு வரி கொடுக்க மறுப்பதும் இதில் அடங்கும் – ஆயத்தம் செய்வோம்.
ஆத்திரமூட்டும்படியாக அரசாங்கம் நடந்துகொள்ளும்போதும் பலாத்காரத்தில் இறங்காமல், நாமாக அரசாங்கத்திற்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டு வரி கொடுப்பதையும் நிறுத்திவிட்டால் மனிதத்தன்மையற்ற இந்த ஆட்சி முடிந்து போவது திண்ணம் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.
-‘வந்தேமாதரம்’ பத்திரிகையில்
1907 ஏப்ரல் 9 முதல் 23 வரை எழுதிய கட்டுரைகளில் இருந்து…
(தொ.ஆ.குறிப்பு: மகாத்மா காந்தி 1920-21இல் இதே விஷயத்தை முதல்முறையாகப் பேசினார்.)
***