13/01/2021

தை 2021 மின்னிதழ்



 உள்ளடக்கம்

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள், 

மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்!


1. அமுதமொழி- 13

-டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி

2.  தைத் திங்கள் - ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு

3. கடவுளைக் காட்டும் காந்தி (கவிதை)

-நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

4. VIVEKANANDA'S IDEAS APPLIED TO SCIENCE

-Ananda Ashok Mohan Ghosh Banerji



-செங்கோட்டை ஸ்ரீராம்


-திருநின்றவூர் இரவிக்குமார்


-தாயுமானவர்


-Sadhu Prof. V.Rangarajan




-திருமழிசை ஆழ்வார்



-பொன்.பாண்டியன்


-பொன்.பாண்டியன்

அமுதமொழி- 13



மனிதன் அவனது எண்ணங்களின் தலைவன்! 
அவனது குணங்களை அமைக்கும் சிற்பி! 
அவனது சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்! 
அவனது விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி கர்த்தா! 

-டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி


தைத் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


தை மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், தைத் திங்கள்  (14.01.2021 - 12.02.2021)

கடவுளைக் காட்டும் காந்தி (கவிதை)

-நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

மகாத்மா காந்தி
(நினைவு தினம்: 1948 ஜன. 30)



ஒப்புடன் உண்மைக் காக
    உயிர்தர வேண்டும் என்றே
எப்படி விரும்பி னாரோ
    அப்படி இறந்தார் காந்தி.
இப்படி உயிரை ஈந்தோர்
    உலகினில் எவரும் இல்லை
தப்புற நினைக்க வேண்டாம்
    தர்க்கமும் தருமம் அல்ல!

Vivekananda’s Ideas Applied to Science

-Ananda Ashok Mohan Ghosh Banerji

Swami Vivekananda

SRI RAMAKRISHNA once said to Dr Mahendralal Sarkar: ‘Everything that you see here [meaning his own advent] is on account of him [Swami Vivekananda].’1 The young Narendranath was being groomed by his guru to become a preacher and a practical pathfinder of Vedanta philosophy. Swami Vivekananda later presented Vedanta in a modern perspective so that scientific minded people would appreciate it. By travelling all over India and the world, Swamiji realized science and engineering could partially remove the misery of the poor but not the beast in the human heart. Latent spirituality was to be aroused through ‘man-making education’. In this article we will review Swamiji’s ideas relevant to the field of science and engineering and expound upon the concept of spiritual engineering.

Swamiji was a spiritual leader who had modern university education and traditional spiritual training. He collected data by keenly observing the world during his extensive travels in India and the world, besides he deepened his spiritual experiences he had during his discipleship. His teachings, designed to develop a national consciousness based on spirituality, resonated with the poor and the rich, the learned and ignorant, and the high and the low. Like a scientifically established law of nature, his teachings remain valid today, 150 years after his birth. A scientist discovers a truth, an engineer makes it practical, and a technician makes it applicable to daily life. In the same way Sri Ramakrishna rediscovered the ancient truth of the rishis, Swamiji made it practical, and we are supposed to apply it for our liberation and the welfare of the world.

உடையவரின் உற்ற துணைவர்

 -செங்கோட்டை ஸ்ரீராம்


கூரத்தாழ்வார்
(திருநட்சத்திரம்: தை – ஹஸ்தம்)

 .
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்,  (பொது யுகத்திற்குப் பின் 1010),  சௌம்ய வருடம்,  தை மாதம்,  ஹஸ்த நட்சத்திரத்தில்,  காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் என்ற ஊரில், வைணவத் தத்துவங்களை நிலை நாட்ட இவ்வுலகில் அவதரிக்கப் போகும் ராமானுசருக்கு அருந்துணையாக விளங்கப் போகும் ஒரு குழந்தை பிறந்தது.
குழந்தைக்குத் திருமறுமார்பன் என்று பெயர் வைத்தார்கள். அத்திருப்பெயரை வடமொழியில் ‘ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர்’ என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான் என்ற திருப்பெயரே இக்குழந்தைக்கு நின்றது.
 .
காஞ்சியில் ராமானுசர் தனது முப்பத்திரண்டாவது வயதில் வரதராசப் பெருமாளிடம் ‘எதிராசர்’ என்ற திருநாமத்துடன் கூடிய துறவினைப் பெற்றுத் திருக்கச்சி நம்பிகளால் ஒரு திருமடம் ஏற்படுத்தப்பட்டு அங்கே வாழ்ந்து வரும் போது, கூரத்தில் வாழ்ந்த கூரத்தாழ்வான் அச்செய்தியை அறிந்து காஞ்சிபுரம் வந்து எதிராசரின் சீடரானார்.
 .
வரதராசப் பெருமாள் திருவரங்கப் பெருமாளுக்கு ராமானுசரைத் தந்த போது, எதிராசருடன் கூரத்தாழ்வானும் அவரது தேவியாரான ஆண்டாளும் திருவரங்கம் வந்து சேர்ந்தனர்.
எப்போதும் ராமானுசரை விட்டுப் பிரியாமல் அவருடனே எங்கும் எப்போதும் இருந்தார் கூரத்தாழ்வான். ராமானுசரும் கூரத்தாழ்வானைப் பற்றிய நினைவினை எப்போதும் கொண்டிருந்தார்.
 .
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உட்பொருளைக் கேட்கும் போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டனையும் கூட அழைத்துச் சென்றார். பிறிதொரு முறை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சரம சுலோக உட்பொருளைக் கேட்கும் போது அவர் ‘இதனை யாருக்கும் சொல்லக் கூடாது’ என்று நிபந்தனை இட்ட போது, கூரத்தாழ்வானுக்கு மட்டும் சொல்ல அனுமதி பெற்றார். இப்படி ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், ராமானுசரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்.

அவரும் இவரும்

-திருநின்றவூர் இரவிக்குமார்


சுவாமி அகண்டானந்தர்


காந்திஜியும் ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளும்

1946-இல் நவகாளியில் நடந்த மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்யும் பணி நடந்து வந்தது. அதைப் பார்வையிட சுவாமி சாரதேஷானந்தர் போயிருந்தார்.  மகாத்மா காந்திஜியும் அங்கு வந்திருந்தார். 

காந்திஜியை ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த துறவிகள் தொடர்பு கொண்டபோது அவர்  ‘ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ படிப்பதில் ஆர்வம் காட்டினார். எனவே தினமும் சாரதேஷானந்தர் காந்திஜிக்கு ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளைப் படித்துக் காட்டினார். சில நாட்கள் இது தொடர்ந்து நடந்து வந்தது. 

முஸ்லிம் லீக் தலைவர்களின் நிர்பந்தத்தால் காந்திஜி திடீரென்று நவகாளியை விட்டுப் போய்விட்டார். எனவே காந்திஜிக்கு அமுதமொழிகளைப் படிப்பது நின்றுவிட்டது. 

படித்துக் காட்டிக் கொண்டிருந்த நாட்களில், ஒரு நாள் வழக்கம்போல படிப்பதற்காகப் போன சாரதேஷானந்தரை  காந்திஜியின் செயலாளர் நிர்மல் போஸ் தடுத்து, ‘காந்திஜி வேலையில் ஆழ்ந்திருக்கிறார். அதில் குறுக்கீடு செய்ய முடியாது’ என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார். 

பிறகு இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட காந்திஜி, ‘என்னுடைய வேலைகளில் அதைக் கேட்பதும் ஒன்று இல்லையா?’ என்று வருத்தப் பட்டாராம். இதை நிர்மல் போஸின் மாணவராக இருந்து பின்பு துறவியான சுவாமி யுக்தானந்தர்  கேள்விப்பட்டிருக்கிறார்.

பின்னாளில் அவர் சுவாமி சாரதேஷானந்தரைச் சந்தித்தபோது இதுபற்றிச் சொல்லும்படி கேட்டார். அதற்கு சாரதேஷானந்தர், ‘அதுபற்றிச் சொன்னால் அது தற்புகழ்ச்சி ஆகிவிடும். காந்திஜி மிகவும் உயர்ந்த மனிதர்’ என்றாராம்.

(அவர்: சுவாமி சாரதேஷானந்தர் அன்னை சாரதையிடம் மந்திர தீட்சை பெற்று, பின்னர் துறவியானவர். பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் பல காலம் பணியாற்றியவர்.)

எங்கு நிறைகின்ற பொருள் (கவிதை)

 -தாயுமானவர்

தாயுமானவர்
(திருநட்சத்திரம்: தை - விசாகம்)

[பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்]


அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய
       
ஆப்தர்மொழி யொன்றுகண்டால்
அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை
       
அறிந்தார்கள் அறியார்களார்
மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம்
       
வாயாய்ப் பிதற்றுமவரார்
மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும்
       
வன்மையொ டிரக்கமெங்கே
புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம்
       
பூதபே தங்களெவிடம்
பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு
       
பொறைபொறா மையுமெவ்விடம்
எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர்
       
யாதுமுனை யன்றியுண்டோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
       
எங்குநிறை கின்றபொருளே.1 

BHARATI- POET AS PATRIOT

 -Sadhu Prof. V.Rangarajan 



Poet Laureate or Exile in Pondicherry "Sir, late Subramania Bharati was a man on whose tongue the Goddess Saraswati can honestly be believed to have danced the dance of patriotism. If he had been born in any free country, why in any country of the world except India, that man would have been made the Poet Laureate of the country, would have been given the honours and titles by a Government which knows how to respond to the feelings of the people and would have lived and died among the most honoured of the nation. But, Sir, being the slave country that we are, he had to live as an exile in Pondicherry, enjoying the hospitality of the French Government, and die a broken wreck, because he found no use for himself under the auspices of this Government. But, Sir, Martyrs and patriots before him have gone to the same fate. Subramania Bharati lived and died a patriot", said late Sri Satyamurthy, who was moving an adjournment motion in the Madras Legislative Council, in 1928, regarding the seizure of copies of Bharati's songs by the Police. Such was the power of Bharati's songs that even after his life-time, British imperialism had to continue its war against his works. 

SPIRITUAL PATRIOTISM OF MAHAKAVI C. SUBRAMANIA BHARATI

-Sadhu Prof. V.Rangarajan 

Mahakavi Bharathi


(REGILIOUS PHILOSOPHY OF MAHAKAVI BHARATI) 


Poets like Bharati cannot be counted as the treasure of any province. He is entitled by his work, to rank among those who have transcended all limitations of race, language and continent and have become the universal possession of mankind‖, said Sarojini Naidu, the ‘Nightingale of India’, paying a glowing tribute to Mahakavi C. Subramania Bharati. Sri Satyamurthy, while moving an adjournment motion in the Madras Legislative Council on the Seizure of Bharati‘s poems by the then British Government, in 1928, said: ―Late Subramaniya Bharati was a man on whose tongue the Goddess Saraswathi can honestly be believed to have danced the dance of patriotism. If he had been born in any free country, why in any country of the world except India, that man would have been made the Poet Laureate of the country’’.

But Bharati was more than a poet and patriot. In him Mother Bharat found the culmination of the development of her philosophical wisdom right from the ages of Vedic seers to that of the renaissance philosophers like Sri Ramakrishna, Vivekananda and Sri Aurobindo. In him the mystic experience of countless sages and saints bedecking the glorious spiritual history of mankind found finest expression. In him the nation found a great social reformer, who, though rooted in the ancient heritage of the country, brought forth a new social philosophy fitted to the needs and changes in the modern times. And he was not merely a patriot–politician, but a political philosopher too, who found a spiritual basis for political ideals, true to the traditions of his Motherland. In him religion, politics, philosophy and social life coursed into a spiritual stream leading to the ultimate realisation of Divinity not only in man, but in the country of his birth and in everything in the universe.

Bharati was not a utopian philosopher who propounded abstract and incomprehensible ideals but a practical Vedantin who gave a concrete form and shape to a way of life, of course, deriving inspiration from our ancient wisdom, yet fulfilling the needs of the present day man. He not only preached his philosophy, but, like all true philosophers, practised it to the very core in his own life.

பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்

 -ஜடாயு

மகாகவி பாரதி

மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டு தொகுதியில் ‘கண்ணம்மா என் குலதெய்வம்’ என்ற தலைப்பில் உள்ளது இந்தப் பாடல். 2000ம் ஆண்டு வெளிவந்த ‘பாரதி’ திரைப்படத்தில் இளையராஜாவின் சிலிர்ப்பூட்டும் இசையமைப்பில் பாம்பே ஜெயஸ்ரீ & இளையராஜாவின் உள்ளத்தைத் தீண்டும் குரல்களின் வழியாக இந்தப் பாடல் மிகவும் பிரபலமாகி விட்டது. சரளமான வரிகளுடன் எளிமையாக உள்ள இந்தப் பாடலின் தத்துவ ஆழமும் ஆன்மீக உச்சமும் பிரமிப்பூட்டுபவை. இந்து தர்மம் கூறும் வாழ்க்கை மதிப்பீடுகளின், வேதாந்த தரிசனத்தின் சாரமாக, விடுதலை விழைவோனின் (முமுக்ஷு) பயணமாக, கீதையின் உட்பொருளின் எதிரொலியாகவே இப்பாடல் உள்ளது என்று கூறலாம்.

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன்.

சோம்பலும், பயமும், தூக்கமும் தாமச குணத்தினின்று பிறப்பவை. பல மனிதர்களுக்கும் வாழ்க்கையில் பல சமயங்களில் தமோகுணத்தின் ஆளுகைக்குக் கீழ் சென்று மீளமுடியாதபடி அதில் உழலும் நிலை ஏற்படுகிறது. பாரதியின் சொந்த வாழ்க்கையிலேயே இத்தகைய காலகட்டங்கள் வந்து கொண்டிருந்தன என்பதும் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதை உடைத்துக் கொண்டு வெளிவருவதற்கான உறுதியும் அருளும் தெய்வம் தரவேண்டும் என்று இங்கே வேண்டுகிறார்.

‘கீழ்களின் அவமதிப்பும் – தொழில்
கெட்டவர் இணக்கமும் – கிணற்றினுள்ளே
மூழ்கிய தவளையைப் போல் – நல்ல
முயற்சியெல்லாம் கெட்டு முடிவதும் …
வாதனை பொறுக்கவில்லை – அன்னை
மாமகளடியிணை சரண்புகுவோம்”

என்று மற்றோர் பாடலிலும் இதனை பாரதி குறிப்பிடுவார்.

திருச்சந்த விருத்தம் –பகுதி-1 (கவிதை)

 -திருமழிசை ஆழ்வார்


திருமழிசை ஆழ்வார்
(திருநட்சத்திரம்: தை- மகம்)


(சந்தக் கலி விருத்தம்)


752:
பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்,
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்,
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்,
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே? (1)

753:
ஆறுமாறு மாறுமாயொ ரைந்துமைந்து மைந்துமாய்,
ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்,
வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்,
ஊறொடோ சை யாயவைந்து மாய ஆய மாயனே. (2)

753:
ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய்,
ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே,
ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று,
ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே? (3)

755:
மூன்றுமுப்ப தாறினோடொ ரைந்துமைந்து மைந்துமாய்,
மூன்றுமூர்த்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய,
தோன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்,
ஏன்றெனாவி யுள்புகுந்த தென்கொலோவெம் மீசனே. (4)

756:
நின்றியங்கு மொன்றலாவு ருக்கடோ றும் ஆவியாய்,
ஒன்றியுள்க லந்துநின்ற நின்னதன்மை யின்னதென்று,
என்றும்யார்க்கு மெண்ணிறந்த ஆதியாய்நின் னுந்திவாய்,
அன்றுநான்மு கற்பயந்த வாதிதேவ னல்லையே? (5)

திருச்சந்த விருத்தம் –பகுதி-2 (கவிதை)

-திருமழிசை ஆழ்வார்

திருமழிசை ஆழ்வார்

(காண்க: முந்தைய பகுதி-1)

(சந்தக் கலி விருத்தம்)

812:

நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்,
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்,
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.   (61)

813:
கரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம்,
புரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய்,
திரண்டதோளி ரணியஞ்சி னங்கொளாக மொன்றையும்,
இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்ப துன்னையே (2) (62)

814:
நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள்,
சென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே,
குன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும்,
நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே? (63)

815:
நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து,
அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம்,
அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன்,
நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே. (64)

816:
நிற்பதும்மொர் வெற்பகத்தி ருப்பும்விண்கி டப்பதும்,
நற்பெருந்தி ரைக்கடலுள் நானிலாத முன்னெலாம்,
அற்புதன னந்தசயன னாதிபூதன் மாதவன்,
நிற்பதும்மி ருப்பதும்கி டப்பதும்என் நெஞ்சுளே. (65)

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 3

 -பொன்.பாண்டியன்

பகுதி-1

பகுதி-2

தொல்காப்பியர்

9. தொல்காப்பியர் 

ஒருமுறை தென்மதுரையை ஆண்ட பாண்டியன் உக்கிரப் பெருவழுதிக்கும் தேவர்கள் தலைவன் தேவேந்திரனுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. தேவேந்திரன் வருணனைப் பாண்டியன்மீது போர் கொடுக்க ஏவி விட்டான். 

உக்கிரப் பெருவழுதியானவர் சிவகுமாரரான முருகன் ஆவார்.  அவர் தனது வேலை கடலுக்கு அதிபதியான வருணன் மீது ஏவினார். வருணனால் வேற்படையை எதிர்க்க இயலவில்லை. அதனால் கடல் முழுதும் வற்றிப் போனது. 

இந்தச் செய்தியை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் 

‘பாதிமதிநதி..............
..............வாரிசுவறிட
வேலைவிடபல
பெருமாளே’

-என்று சுவாமிமலை முருகனைப் பாடுகின்றார்.

இதனால் சினம்கொண்ட இந்திரன் வருணனுக்கு அதிக பலம் கொடுத்து கடல்சீற்றம் உண்டாக்கி ஓங்கி உயர்ந்த மலைத்தொடர்களோடு பஃறுளி ஆற்றையும் தென்மதுரையையும் கடலுக்குள் மூழ்கடித்தார். 

இச்செய்தியை  சிலப்பதிகாரம் காடுகாண்காதை 18-22 இல் மாங்காட்டு மறையவன் பாண்டிய மன்னனை வாழ்த்தும்போது, 

“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி காற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்வாழி”

-என்று குறிப்பிடுவது உறுதியாகிறது. 

அதனால் புலம்பெயர்ந்து வடக்கிலிருந்த கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் நிலைபெற்றது. இந்த இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில்தான் தொல்காப்பியர் தமது தொல்காப்பியத்தை அரங்கேற்றினார். 

கௌமாரம், ஐந்திரம், அகத்தியத்திற்கு அடுத்தபடியாகதொல்காப்பியம் தமிழ் இலக்கணத்தின் அரியணை ஏறியது. காப்பியர் வரிசையில் பழந்தமிழ்ப் புலவோர்களில் வெள்ளூர்க் காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் எனவும் சிலர் உண்டு. 

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 4

-பொன்.பாண்டியன் 

பகுதி-1

கபிலர்


12. கபிலர் 


கபிலர் என்ற திருநாமம் பாரதேசம் முழுமையும் பிரசித்தி பெற்றது. வங்கக் கடற்பகுதி கங்கை பாய்வதற்கு முன்பொட்டல் நிலமாக இருந்தது. அங்கே குகை போன்ற நிலவறையில் கபில முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது சகர புத்திரர்கள் 100 பேரும் தொலைந்துபோன தங்களது யாகக்குதிரையைத் தேடி வந்தனர். அங்கே குதிரையின் குளம்படித் தடங்கள் பிலத்தினுள் நுழைந்திருப்பதை அறிந்தனர். அதனால் அதை மீட்க அந்தப் பகுதியைத் தோண்டினார்கள். தோண்டத் தோண்ட பரப்பு பெரிதாகிக்கொண்டே இருந்தது. ஆழமும் அதிகமானது. முடிவில் கபிலர் இருக்கும் இடத்தை அடைந்தனர். அவரருகே தங்களுடைய குதிரையையும் கண்டனர்.

"நீர்தாம் எம் குதிரையைக் களவாடியவரோ?" என அவர் தவத்தைக் கலைத்தனர். தவம் கலைந்து அவர் பார்த்த பார்வையில் 100 பேரும் எரிந்து சாம்பலாகினர். அவர்கள் வீடுபேறு அடைவதற்காக ஆகாசகங்கையை பூமியில் பாயச்செய்து அவர்களின் அஸ்தியைக் கரைப்பதற்காக அவர்களுக்குப் பின்வந்த பல சந்ததியினர் முயன்றனர். இறுதியில் பகீரதனின் கடுந்தவத்தாலும் முயற்சியாலும் அந்த நோக்கம் நிறைவேறியது. பகீரதன் என்றால் பற்பல தேர்களை உடையவன் என்று பொருள் ஆகும். இதேபொருள் பயக்கும் விதத்தில் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி என்ற சோழ மன்னன் ஒருவர் உண்டு.

பின்பு கங்கை பாய்ந்து வங்கக்கடல் உருவாகியது. கடல் உண்டாக சகரர்கள் காரணமானதால் கடலுக்குச் சாகரம் என்றும் பெயர் உண்டு. இது தோண்டப்பட்ட கடல் ஆனதால் 'தொடுகடல்' எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

நேதாஜிக்கு வழிகாட்டியவர்

-முத்துவிஜயன்

ராஷ் பிஹாரி போஸ்

ராஷ் பிஹாரி போஸ்
பலிதானம்: ஜன. 21, 1945


நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண மயமான வாழ்க்கை.

வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில், சுபல்தஹா கிராமத்தில், அரசு ஊழியர் வினோத் பிஹாரி போஸின் மகனாக 25.05.1886 ல் பிறந்தவர் ராஷ் பிஹாரி போஸ். சந்தன் நகரில் படிப்பு முடித்த ராஷ், இளமையிலேயே புரட்சி இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். வங்கத்தின் புரட்சி இயல்புக்கேற்ப, ராஷ் பிஹாரி போஸும் விடுதலைப் போரில் ரகசியமாக இணைந்தார். அரவிந்தர் உள்ளிட்ட புரட்சி இயக்கத்தினருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

குதிராம் போஸ் நடத்திய குண்டுவீச்சால் ஆங்கிலேய அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, அலிப்பூர் சதி வழக்கு (1908) தொடரப்பட்டது. அதில் அரவிந்தர் கைது செய்யப்பட்டார். ராஷ் பிஹாரி போஸும் அந்த வழக்கில் தேடப்பட்டார். அதிலிருந்து தப்ப வங்கத்தை விட்டு வெளியேறிய ராஷ், டேராடூனில் வனவியல் ஆய்வு மையத்தில் தலைமை எழுத்தராகச் சேர்ந்து பணி புரிந்தார். அப்போது புரட்சியாளர் அமரேந்திர சட்டர்ஜியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் விளைவாக யுகாந்தர் புரட்சிக் குழு உறுப்பினர் ஆனார்.

இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்

-சேக்கிழான்


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
(பிறந்த தினம்: 1897 ஜனவரி 23) 

இந்த நாடு சுதந்திரம் பெற உழைத்தவர்களுள் தலையாய இருவர் என மகாத்மா காந்திஜியையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸையும் சொல்லலாம். இருவரின் வழிமுறைகள் வேறானவையாக இருந்தபோதும், இலக்கு ஒன்றாகவே இருந்தது. எனினும், இலக்கை நோக்கிய அரசியல் பயணத்தில் நேதாஜி காந்திஜியைவிட ஒருபடி மேலானவராகவே இருந்தார்.

காந்திஜியும் நேதாஜியும் ஒத்த கருத்துடன் செயல்பட்டிருந்தால் சுதந்திர இந்தியா வேறு வடிவில் எழுந்திருக்கும் என்பதே சரித்திர ஆய்வாளர்களின் கருத்து. நமது துரதிர்ஷ்டம், காந்திஜியும் நேதாஜியும் துவக்கக் காலம் (1922) முதலே உடன்பாடும் முரண்பாடும் கொண்டவர்களாகவே இயங்கி வந்துள்ளனர். அந்த இடைவெளியில்தான் ஜவஹர்லால் நேரு உள்புகுந்து காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றினார்; பின்னாளில், பிரதமர் ஆன பிறகு காந்திஜியையே செல்லாக்காசாக்கினர்.

மாறாக, யுத்தமுனையில் நின்றபோதும் சிங்கப்பூரில் இருந்தபடியே வானொலியில் (1945) உரையாற்றிய நேதாஜி, மகாத்மா காந்தியை தங்கள் வழிகாட்டியாகக் குறிப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்திருப்பதைக் கேட்க முடியும்.