ரமண மஹரிஷி
(அவதார தினம்: மார்கழி - திருவாதிரை)
(ஆங்கிலத் தேதி: டிசம்பர் 30, 1879 - சமாதி தினம்: ஏப்ரல் 14, 1950)
திருவண்ணாமலை உலகின் பழம்பெரும் மலை என்பதோடு அதிசய மலையும் கூட. அங்கு அருளாட்சி புரிந்த பகவான் ரமண மஹரிஷியின் வாழ்வு அதிசயமான ஒன்று; அன்பர்களுக்கு ஆனந்தம் தருவதும் கூட!
அக்னி ஸ்தலம் என்று மிகவும் போற்றித் துதிக்கப்படும் அண்ணாமலை பற்றிய புராண சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. காலத்திற்குத் தக்கவாறு அடியார்களுக்கு அருள் புரிய சிவபிரான் உளங் கனிந்தார் போலும்; ரமண மஹரிஷியைத் தன் பால் திருவண்ணாமலைக்கு ஈர்த்து பல அருள் விளையாடல்களை அவரை வைத்து நிகழ்த்தச் செய்தார். பல்லாயிரம் மக்களை ஆன்மிகத்தில் உயர்த்த வழி வகுத்தார்.