13/05/2020

வைகாசி 2020 மின்னிதழ்




உள்ளடக்கம்

-வீர சாவர்க்கர்


2. வைகாசித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்
-ஆசிரியர் குழு

3. தேசிய வாழ்க்கைக்கு எது அவசியம்?
-குருஜி கோல்வல்கர்

4. கணித மேதையின் கதை - 2
-ஆதலையூர் த.சூரியகுமார்

5. வாழ்வாங்கு வாழ்ந்த வீரபுருஷர்
-ம.கொ.சி.இராஜேந்திரன்

6. அம்பிகையின் வாளில் ரத்தம்...
-பேராசிரியர் இளங்கோ ராமானுஜம்

7. நீயும் நானும் (கவிதை)
-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

8. தமிழ் வளர்த்த சமணர்கள்
-சேக்கிழான்

9. குருபக்தி
-காஞ்சி பரமாச்சாரியார்

10. கோளறு பதிகம் (கவிதை)
-திருஞானசம்பந்தர்

11. திருமாலின் திருவடி அம்சம்
-செங்கோட்டை ஸ்ரீராம்

-ஆசிரியர் குழு

-Prof.P.Kanagasabapathi





அமுத மொழி- 5


வந்தால் உன்னோடு...
வராவிட்டால் தனியாக...
எதிர்த்தால் உன்னையும் மீறி...
வென்று காட்டுவேன்!

-வீர சாவர்க்கர்

வைகாசித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

சேக்கிழார் பெருமான்

வைகாசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

தேசிய வாழ்க்கைக்கு எது அவசியம்?


-குருஜி கோல்வல்கர்

குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர்


நம்முடைய தேசிய வாழ்க்கைக்கு சாது, மகான்களின் வழிகாட்டல் மிகவும் அவசியமாகும்.

நம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் காவிக்கொடி, வேள்வித்தீயின் ஜுவாலைகளைப் பிரதிபலிக்கிறது. நம் வாழ்வு, உழைப்பு, விழிப்பு, பேச்சு எல்லாவற்றுக்கும் ஒரு லட்சியமாகத் திகழ்கிறது. அதன் அறைகூவலை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் பணியைச் செய்கிறது, சாது, மகான்களின் கூட்டம்.
.

கணித மேதையின் கதை - 2

-ஆதலையூர் த.சூரியகுமார்

ஸ்ரீனிவாச ராமானுஜன்
(டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920)

கணித மேதையின் கதை
(ஸ்ரீனிவாச ராமானுஜன் பற்றிய 100 சுவாரஸ்யமான தகவல்கள்)


26. கணிதப் பேராசிரியரின் கணிப்பு:

ஒருநாள் ராமானுஜனின் நோட்டுப் புத்தகம் ஒன்றை அங்கிருந்த கணிதப் பேராசிரியர் ராமானுஜாசாரியார் எதேச்சையாகப் பார்த்தார். அதில் பல கணக்குகளை எழுதி வைத்திருந்தார் ராமானுஜன். அந்தக் கணக்குகளும், இராமானுஜன் அவற்றுக்கு எழுதி இருந்த விடைகளும் பேராசிரியரை ஆச்சரியப்பட வைத்தன.

பேராசிரியர் ராமானுஜாசாரியார் ராமானுஜரை சோதிக்க விரும்பினார். பல கடினமான கணக்குகளை ராமானுஜனிடம் கொடுத்து அவற்றுக்கு எல்லாம் தீர்வு கண்டு வரும்படி சொன்னார். ராமானுஜம் சிறிதும்கூட தயக்கம் காட்டாமல் உடனடியாக அந்தக் கணக்குகளைப் போட்டு ச் சொன்னார். பேராசிரியர் ஆச்சரியப்பட்டுப் போனார். வழக்கமான முறையில் இருந்து விலகி புதிய முறையில் அந்த கணக்குகளுக்குத் தீர்வு சொல்லியிருந்தார் ராமானுஜன்.

வாழ்வாங்கு வாழ்ந்த வீரபுருஷர்




-ம.கொ.சி.இராஜேந்திரன்



மதுரை அ.வைத்தியநாத ஐயர்

(பிறப்பு: 1890, மே 16 - மறைவு: 1955 பிப். 23)

பாரத தேசமெங்கும் மகாத்மா காந்தி அடிகள் தலைமையில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டங்கள் உச்சகட்டத்தைத் தொட்ட காலம். காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் தியாகத்தின் வடிவங்களாகவே வாழ்ந்த காலமது. சத்யாக்கிரகமும் அகிம்சையுமே ஆயுதமாகக் கொண்டு தங்கள் எதிர்ப்புகளை ஆவேசமாக காங்கிரஸ் வெளிப்படுத்திக்கொண்டிருந்த வேளை. தமிழகத்திலும் ராஜாஜி , வேதரத்தினம் பிள்ளை ஆகியோர் தலைமையில் உப்பு சத்யாக்கிரகம் நடைபெறுகிறது. ராஜாஜியும் வேதரத்தினமும் கைது செய்யப்பட்ட பின்னும் போராட்டம் தொடர்கிறது, மதுரை அ.வைத்தியநாத ஐயர் தலைமையில்.

அம்பிகையின் வாளில் ரத்தம் ...


-பேரா. இளங்கோ ராமானுஜம்

பேலூர் கோயிலில் அருளும் பவதாரிணி தேவி

ஆம் ! உண்மைதான் !

இன்று அம்பிகையின் வாளில் ரத்தம் சொட்டிக்கொண்டேயிருக்கிறது! இது அனைவரின் கண்களுக்கும் புலனாகிறது. கொத்துக் கொத்தாக மனித இனம் கொரோனாவுக்கு பலியாகிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், அவள் வரம்பு மீறிய மனிதனுக்கு எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டிருக்கிறாள்! அம்பிகை வெறும் விக்கிரகமில்லை! கோயிலில் குடிகொண்டிருக்கும் அந்த அம்பிகைத் தெய்வம் மனித இனத்துக்குப் பல சேதிகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறது!

பாரத தேசத்தின் கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் வெறும் கற்சிலைகள் அல்ல. அவை உயிர் ததும்பும் தெய்வங்கள். ஒவ்வொன்றும் ஓர் ஆன்மிக அற்புதச் செய்தியை பறைசாற்றுகின்றது."There is an ideal behind every idol" என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு.

இதற்குப் பின்னால் பல நூற்றாண்டுகளின் பாரம்பரியம் இருக்கிறது.

நீயும் நானும்...

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்




விழியோரம் திரண்ட
பீளையகற்றுவேன்.

நாசித்துவாரம் புகுந்த
மண் கழுவுவேன்.

கழுத்துப்பட்டை இறுக்கத்தை
தளர்வாக்குவேன்.

வெளியேற்றும் கழிவாய்ந்து
மருந்தூட்டுவேன்.

குளிப்பாட்டி, உடல் துவட்டி 
உணவூட்டி நீர் தருவேன்.

செல்லமாய் நீ கடிக்க
செல்லமாய் நான் அடிக்க
ஓடியாடி விளையாடி
ஓய்ந்தகால் பிடித்துவிட.

மெல்லக் கூம்பும் அல்லியென
இமைசொருகத் துயிலும்
உனக்கும் எனக்கும் இடையே
இறைவனுக்கு வேலையென்று
ஏதுமில்லை...

உள்மூச்சை உடனனுப்பி
வெளிமூச்சை இழுப்பது தவிர.


குறிப்பு:
கவிஞர் திரு. ஸ்ரீ.பக்தவத்சலம்,
தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர்.

தமிழ் வளர்த்த சமணர்கள்

-சேக்கிழான் 

மதுரை சமணர் பள்ளி

பாரதத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில் பேரிடம் வகிக்கும் சமண சமயம், தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகித்துள்ளது. வைதீக சமயத்தை மறுக்க மகாவீரரால் உருவாக்கப்பட்ட சமண சமயம் காலப்போக்கில் தனி சமயமாக நிலைபெற்று ஹிந்துத்துவத்தின் அங்கமாகிவிட்டது. பொ.யு.மு. 600 காலகட்டத்தில் வாழ்ந்த மகாவீரர் தனக்கு முந்தைய திர்த்தங்கரர்களின் அடியொற்றி புதிய சமயத்தை நாடு முழுவதும் பரப்பினார். அதன் பிரதான அம்சம் துறவும் தொண்டுமே.

அந்த அடிப்படையில், பாரதத்தின் மறுமலர்ச்சியில் துறவையிம் தொண்டையும் மையப்படுத்தியோர் சமணர்களே. அதுபோலவே, கல்வி கற்பிப்பதிலும், நீதிநூல்களை போதிப்பதிலும் சமணர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். அவர்கள் இருந்த இடங்கள் ‘பள்ளி’ என்று அழைக்கப்பட்டன. இன்று நாம் பயிலும் கல்வி நிறுவனங்கள் பள்ளி என்று அழைக்கப்படுவதற்கான மூலம் அதுவே.

அக்காலத்தில் சமணரும் சனாதனத்தின் ஒரு பிரிவாகவே இயங்கினர். வைதீகமும் சமணமும், பௌத்தமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக்கொண்டு கலைகளையும் கல்வியையும் வளர்த்தன. இந்த மூன்று சிந்தனைகளிடையிலான வாதங்களும் உரையாடல்களுமே பாரத ஞானக் கருவூலங்களாக இன்றும் விளங்குகின்றன.

குருபக்தி

-காஞ்சி பரமாச்சாரியார்



‘ஈச்வரனைக் காட்டிலும் குரு பெரியவர். ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே ஏன்?' என்று கேட்டால், ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்துவிட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது. அதனால் தான்,

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:|என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சுலோகத்தில் குருவுக்கும் பரமாத்மாவுக்கும் அபேதம் சொல்லியிருப்பது ஒரு விசேஷம். Incidental - ஆக இதிலேயே இன்னொரு விசேஷம், இதில் விஷ்ணு, சிவன் இருவரையும் சொல்லியிருப்பதால் இந்த சுலோகத்தைச் சொல்லி நாம் குருவந்தனம் பண்ணினால் நமக்கு சிவ- விஷ்ணு அபேத பாவமும் உண்டாகி விடும்.

கோளறு பதிகம்

-திருஞானசம்பந்த நாயனார்



பாடல் பிறந்த வரலாறு:

.
திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலாக வைத்து எண்ணப்படும், சமயக்குரவர் நால்வருள் ஒருவராவார். இவர் பொ.யு. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாத ஹிருதயர், தாயார் இசைஞானியார்.

இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித்  ‘தோடுடைய செவியன்’ என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார்.

திருமாலின் திருவடி அம்சம்

-செங்கோட்டை ஸ்ரீராம்


நம்மாழ்வார்

(திருநட்சத்திரம்: வைகாசி – விசாகம்)
பாண்டிய நாடு தாமிரபரணி நதியால் வளம் பல பெற்று மலர்ச்சியோடு திகழும் பூமி. அந்த தாமிரபரணி நதிக்கரையில் திருக்குறுகூர் திருத்தலம், சிறப்புறத் திகழ்ந்தது. அவ்வூரின் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக ஒரு கதையும் விளங்குகிறது. அந்தக் கதை…
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஒரு யோகி இருந்தார். அவர் அன்புடன் ஒரு நாயை வளர்த்து வந்தார். நாள்தோறும் அந்த நாய் வைணவப் பெரியவர் வீடுகளின் முன் கிடக்கும் எச்சில் இலையில் உள்ள உணவை உண்டு திரும்பி வரும். இவ்வாறு இருக்கும்போது ஒருநாள் வழக்கம்போல் திருநகரிக்குச் சென்ற நாய் வெகு நேரம் வரையில் திரும்பி வரவில்லை. அதனால் மனம் வருந்திய அந்த யோகி, பொருனையாற்றின் வடகரையில் நின்று தென்கரையிலிருக்கும் திருநகரியினை நோக்கி அந்த நாயின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த நாய் நட்டாற்றில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஆற்றில் பெருவெள்ளம் சூழ்ந்துவிட்டது. அவ் வெள்ளத்தை எதிர்த்து நாய் ஆனமட்டும் நீந்திக் கரையைக் கடக்க முயன்றது. ஆனால் வெள்ளத்தை அதனால் கடக்க முடியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு அதன் கால்களும் ஓய்ந்துவிட்டன. அது நீரில் மூழ்கி மேலே வந்தது. வயிறு நிறைய ஆற்று நீரையும் குடித்து விட்டது.
அதனால் நாயின் மண்டை வெடித்தது. அந்த மண்டையின் வழியே நாயின் ஆத்மா பேரோளியுடன் எழுந்து விண்வெளி நோக்கிச் சென்றது. அதைக் கண்ட யோகி பெரும் வியப்படைந்தார். நாய் வீடுபேறு பெற்றதை எண்ணினார். ‘எதனால் அதற்கு வீடுபேறு கிடைத்தது?’ என்று சிந்தித்தார். ஆழ்வார் திருநகரியில் வாழும் வைணவர்கள் சாப்பிட்ட இலையிலிருந்த மீதத்தை உண்டதால்தான் அந்த நாய்க்கு இந்த அரும்பெரும் பேறு கிடைத்தது என்பதை முடிவில் உணர்ந்தார். அதனால் அவர் மனம் உருகி கண்களில் நீர் மல்கியது.
வாய்க்கும் குருகை திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் இடமளித்தால் பழுதோ? பெருமான் மகுடம்
சாய்க்கும் படிக்கு கவிச்சொல்லு ஞான தமிழ்க்கடலே!
– என்று இந்தச் சிறப்பு உண்டாகக் காரணமான நம்மாழ்வாரைப் போற்றி பல பாடல்களைப் பாடிப் பணிந்தார். அது முதல் நம்மாழ்வார் மீது ஆராக் காதலும் பக்தியும் கொண்டு வாழ்ந்தார். முடிவில் நம்மாழ்வாரின் அருளால் அந்த யோகியும் பரமபதம் அடைந்தார்.
இவ்வளவு பெருமை அந்தத் தலத்துக்கு வரக் காரணமாக அமைந்தவர்தான் சுவாமி நம்மாழ்வார்.

நமது தின மின்னிதழ்- தேசிய முரசு!

-ஆசிரியர் குழு


கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய சிந்தனையைப் பரப்பும் அறிவியக்கம் தடையின்றி நடைபெற பல நடவடிக்கைகள் தேசிய சிந்தனைக் கழகத்தால் எடுக்கப்பட்டன.

ஜூம் செயலி மூலமாக தே.சி.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துரையாடல், இணையவழி சொற்பொழிவுகள், யுவ காண்டீபம் பணிகள் ஆகியவை மட்டுமல்லாது, தினசரி நல்ல செய்திகளின்  தொகுப்பாக ‘தேசிய முரசு’ வெளியாகி வருகிறது.

20.04.2020 முதல் தினசரி பிடிஎஃப். கோப்பு வடிவில் இந்த மின்னிதழ் வெளியாகி வருகிறது. தே.சி.க. மாநில அமைப்புச் செயலாளர் திரு.ம.கொ.சி.இராஜேந்திரன், மாநிலச் செயலாளர் திரு.ஆதலையூர் த.சூரியகுமார், கோவை மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.கவி.பூவரசன் ஆகியோரது ஒருங்கிணைப்பில் இவ்விதழ் சிறப்பாக வெளிவருகிறது.

நல்ல சேதிகள் மட்டுமல்லாது, சான்றோர் குறித்த அறிஞர் பெருமக்களின் யூ-டியூப் வாயிலான ஆடியோ பதிவுகளின் இணைப்புகளும் இந்த மின்னிதழில் கொடுக்கப்படுகின்றன.

இதுவரை வெளியாகி உள்ள ‘தேசிய முரசு’ இதழ்களை இங்கே உள்ள இணைப்பை சொடுக்கிப்
படிக்கலாம்:

http://online.fliphtml5.com/wgrbl/xnmj/#p=2



.



Striving for Indigenous Excellence


-Prof.P.Kanagasabapathi



The world has been fighting the corona virus for the last four months, with three lakh lives being lost already and the economies facing serious crisis. This period is considered as the worst economic downturn since the Great Depression of the 1930s. Hence IMF predicts that the global economic growth in 2020 would fall down to -3 percent.

The United States is witnessing the highest number of deaths. The ‘richer’ countries of Europe have already lost thousands of lives.  The economic impact on many of these countries are severe, with the Government dependency being the only resort. The invisible virus has severely shaken their confidence.  

But Bharat presents a completely different scenario, appreciated by all across the World in its fight against COVID -19.  The death rates are very low compared to other countries, because the steps taken are bold and timely. Hence the World Health Organisation and other global bodies are showering encomiums.