16/06/2021

ஆனி - 2021 மின்னிதழ்


உள்ளடக்கம்


1. அமுதமொழி -18

-சுவாமி சிவானந்த சரஸ்வதி

2. திருப்புகழ் விநாயகர் துதி (கவிதை)

-அருணகிரிநாதர்

3. ஆனித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு

4. CASTE PROBLEM IN INDIA

-Swami Vivekananda

5. தேசிய கல்விக் கொள்கை: தவறான கருத்துக்களும் புரிதல்களும்

-பேரா.ஈ.பாலகுருசாமி

6. இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வாய்ப்பு

-ஆசிரியர் குழு

7. வாராது வந்த புனிதத் தீர்ப்பு

-பத்மன்

8. தியாகத் திருவிளக்கு

-ஆசிரியர் குழு

9. கி.ரா.வுக்கு அஞ்சலி (கவிதை)

-நல்லதே விரும்பும் முருகானந்தம்

10. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?

-சோ.ராமசாமி

11. YOGA OF SYNTHESIS

-Swami Sivananda

12. அறிவோம்: மத்திய பல்கலைக்கழகங்கள்

-ஆசிரியர் குழு

13. அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள்-12

-பொன்.பாண்டியன்

14. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு (கவிதை)

-கவியரசு கண்ணதாசன்

15. பாரதியின் சூரிய தரிசனம்

-ஜடாயு

16. கவியரசர் நினைவுகள்- சில சிந்தனைகள்

-ஸ்டான்லி ராஜன்



அமுதமொழி - 18




அமிழ்தத்தின் செல்வா,

உடல்நலமே பெருஞ்செல்வம்.

உன் வாழ்வின் உண்மையான அடித்தளம் உடல்நலமே.

வலிமை வாய்ந்த உடம்பை வளர்த்துக் கொள்.

இயற்கையுடன் இணக்கம் கொள்.

உடல்நலம் பற்றிய, உடல்நல நூல்களைப் பற்றிய விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பாயாக.

அழியாத பேரின்பத்தை அனுபவிப்பாயாக.

உடல்நலம், அமைதி, நீண்ட ஆயுள், கைவல்யம் ஆகியவற்றை ஆண்டவன் உன்மீது பொழிவாராக.


- சுவாமி சிவானந்த சரஸ்வதி.

திருப்புகழ் விநாயகர் துதி (கவிதை)

 -அருணகிரிநாதர்


அருணகிரிநாதர்


(இராகம் - நாட்டை; தாளம் - ஆதி)


தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான


கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி

கப் பியகரிமுகன் - அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!

கற்பகம் எனவினை - கடிதேகும்;

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொருதிரள் புய - மதயானை

மத்தள வயிறனை உத்தமிபுதல் வனை

மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே;

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய - முதல்வோனே

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்

அச்சது பொடிசெய்த - அதிதீரா;

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்

அப்புன மதனிடை - இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

அக்கண மணமருள் - பெருமாளே! 1

ஆனித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

 -ஆசிரியர் குழு


ஸ்ரீ நாதமுனிகள்


ஆனி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

 

ஸ்ரீ பிலவ வருடம், ஆனித் திங்கள் 

(15.06.2021 - 16.07.2021)

 

CASTE PROBLEM IN INDIA

 -SWAMI VIVEKANANDA


"I have a message for the world, which I will deliver without fear and care for the future. To the reformers I will point out that I am a greater reformer than any one of them. They want to reform only little bits. I want root-and-branch reform."

- Swami Vivekananda



CASTE IN SOCIETY AND NOT IN RELIGION

Though our castes and our institutions are apparently linked with our religion, they are not so. These institutions have been necessary to protect us as a nation, and when this necessity for self-preservation will no more exist, they will die a natural death. In religion there is no caste. A man from the highest caste and a man from the lowest may become a monk in India and the two castes become equal. The caste system is opposed to the religion of Vedanta.

Caste is a social custom, and all our great preachers have tried to break it down. From Buddhism downwards, every sect has preached against caste, and every time it has only riveted the chains. Beginning from Buddha to Rammohan Ray, everyone made the mistake of holding caste to be a religious institution and tried to pull down religion and caste altogether, and failed.

In spite of all the ravings of the priests, caste is simply a crystallized social institution, which after doing its service is now filling the atmosphere of India with its stench, and it can only be removed by giving back to people their lost social individuality. Caste is simply the outgrowth of the political institutions of India; it is a hereditary trade guild. Trade competition with Europe has broken caste more than any teaching.

தேசிய கல்விக் கொள்கை: தவறான கருத்துக்களும் புரிதல்களும்

-பேரா. ஈ.பாலகுருசாமி



அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் நாடு போற்றும் சிறந்த கல்வியாளருமான பேராசிரியர் திரு. ஈ.பாலகுருசாமி தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினுக்கு,  ‘புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏன் அமலாக்கம் செய்ய வேண்டும், எங்கெங்கு தவறான புரிதல் உள்ளது, அமலாக்கம் செய்யவில்லை என்றால் என்ன விளைவுகள் ஏற்படும்’ என்பது குறித்து சிந்தனையைத் தூண்டும் வகையில் கடிதம் ஒன்றை கடந்த ஜூன் 3 அன்று அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:


ஈ.பாலகுருசாமி

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,

மத்திய அரசு அண்மையில் ஒப்பதல் அளித்துள்ள தேசிய கல்விக் கொள்கை (NEP) குறித்து தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தேவையில்லாத வகையில் எதிரான கருத்துகளைக் கூறி வருவதை, தமிழக மக்களாகிய நாம் நன்கு அறிவோம்.

அத்தகைய கருத்துகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கக் கூடும். அல்லது அந்தக் கொள்கை ஆவணத்தை முழுமையாகப் படிக்காமலோ, அதன் உள்ளடக்கத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாமலோ கூறப்பட்டிருக்கலாம். அவ்வாறு கருத்துகள் கூற்வோர், தரமான கல்வி குறித்த நுட்பமான பார்வை இல்லாமல் இருக்கக் கூடும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தக் கல்விக் கொள்கை நடப்புக் கல்விச் சூழலுக்குக் கட்டாயம் தேவைப்படுவதாகும். இந்தியக் கல்வி முறையை உலகக் கல்வி முறையோடு இணைக்கும் நோக்கில் இக்கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

மனப்பாடக் கல்வி முறை போன்ற நடைமுறையை மாற்றி, மாணவர்கள் மனத்தில் தன்னம்பிக்கை, தேசிய பெருமிதம் ஆகியவற்றை ஊட்டும் வகையிலும் இது அமைந்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கை இந்தியக் கல்வியின் எதிர்காலம் குறித்து இதுவரை எழுதப்படாத அளவுக்கு, ஒருங்கிணைந்த நுட்பமான அறிவுபூர்வமான ஆவணங்களில் ஒன்றாகும்.

1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கொள்கை ஆவணத்தை அடுத்து 34 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் முதல்முறையாக வடிவமைக்கப்பட்ட மிகச் சிறந்த கொள்கை ஆவணம் இது.

இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வாய்ப்பு!

-ஆசிரியர் குழு



இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 75 பேருக்கு ஆறு மாதங்களுக்கு தலா ரூ. 50,000  உதவித்தொகையுடன் இலக்கியப் பயிற்சி அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும் சர்வதேசத் தரத்தில் இலக்கியங்களை படைக்கவும் வழிகாட்டும் வகையில், மத்திய ஊக்கத் தொகையுடன், இலக்கியப் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. 

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், 30 வயதுக்கு உட்பட்ட,  இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை வெளிப்படுத்தும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய கலாசாரம், பண்பாடு, ஒருமைப்பாடு, இலக்கிய வளம், மொழி வளம், கலைகள் உள்ளிட்டவற்றை வாசித்தும், அறிந்தும், புனைவுகள், அபுனைவுகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் உள்ளிட்டவற்றை படைக்க, இளைஞர்களை தயார்ப்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்தை  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

வாராதுபோல் வந்த புனிதத் தீர்ப்பு

- பத்மன்


சொந்த நாட்டில் அடிமைகளாய் வாழ்கின்ற துர்பாக்கிய நிலைமை, தமிழக ஹிந்துக்களுக்கு நீடிக்கிறது. இங்கே ஹிந்துக்களின் மதச் சுதந்திரம், அரசியல் கபடதாரிகளின் முன்னே மண்டியிட்டுக் கிடக்கிறது. இவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான விசை, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு என்னும் வடிவிலே தற்போது கிடைத்துள்ளது. 

கடந்த ஜூன் 7-ஆம் தேதியன்று (07.06.2021), போற்றுதலுக்குரிய இந்தப் புனிதத் தீர்ப்பை அளித்த நீதிபதிகள் திரு. ஆர்.மகாதேவன், திரு. பி.டி.ஆதிகேசவலு ஆகிய இருவரையும் சாட்சாத் அந்த பரமேஸ்வரன், மகாவிஷ்ணு என்றே துதிக்கத் தகும்.

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஹிந்து அறநிலையத் துறையிடம் அறமும் இல்லை, ஹிந்து கலாசாரப் பாரம்பரியத்தைக் காப்பாற்றும் எண்ணமும் இல்லை என்பதை இந்தத் தீர்ப்பு தோலுரித்துக் காட்டியுள்ளது. 

225 பக்கங்கள் கொண்ட இந்த பிரம்மாண்டத் தீர்ப்பு, தமிழக அரசும் அதன் ஹிந்து அறநிலையத் துறையும் மேற்கொள்ள வேண்டிய கடமைகளுக்கான 75 உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

ஹிந்துக் கோயில்களின் சொத்துகளையும், விக்ரகங்களையும் மட்டுமல்ல, கோயில்களைச் சார்ந்துள்ள கலாசாரம், பாரம்பரியம், வரலாற்றுத் தொன்மை, இசை, இலக்கியம், கலைகள், ஆகம விதிகள், வழக்கமான நடைமுறைகள் ஆகிய அனைத்தையும் காப்பாற்ற வேண்டிய, மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்பதை, இத் தீர்ப்பு, வெறும் மரச் சுத்தியலால் அல்ல, பெரிய சம்மட்டியாலேயே அடிப்பதைப் போன்று அடித்துக் கூறியுள்ளது.

இந்த வியத்தகு தீர்ப்புக்கான விதையை ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ் தன்னையறியாமலேயே விதைத்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி, அந்நாளிதழின் வாசகர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்தின் அடிப்படையில், அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வால் தானாக முன்வந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநல வழக்கின் தீர்ப்பு இது. 

கோயில்கள் உள்ளிட்ட வரலாற்றுப் புராதனச் சின்னங்களைக் காப்பாற்றுவதற்காக, 17 உறுப்பினர்களைக் கொண்ட பாரம்பரியக் காப்பாணையக் குழு (Heritage Commission) அமைப்பதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்று 2012-இல் தமிழக அரசு அறிவித்து, அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகும், அந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டிருப்பதை ‘Silent Burial’ என்ற தலைப்பிலான அந்த வாசகர் கடிதம் சுட்டிக்காட்டியிருந்தது.

தியாகத் திருவிளக்கு

-ஆசிரியர் குழு



பி.கக்கன்
(பிறப்பு: ஜூன் 18, 1908 - மறைவு:  டிச. 23, 1981)


 ஒரு மக்கள் பிரதிநிதி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் பி.கக்கன். 

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த கக்கன், அக்காலத்தில் நிலவிய தீண்டாமையை தனது தனித்த ஆளுமையால் வென்றவர். 

நாடாளுமன்ற உறுப்பினர், சட்டசபை உறுப்பினர், அமைச்சர், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிகள் அவரைத் தேடி வந்தன. ஆயினும் அவரது பொதுவாழ்க்கை மிகவும் எளிமையானதாக இருந்தது. 

 பொதுவாழ்வில் உச்சத்தில் இருந்தபோதும், தனக்கென எந்த சொத்தும் சேர்த்துக் கொள்ளாத தகைமையாளராக அவர் வாழ்ந்து மறைந்தார்.

கி.ரா.வுக்கு அஞ்சலி (கவிதை)

 -நல்லதே விரும்பும் முருகானந்தம்


கி.ராஜநாராயணன்
 (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021)


கி.ரா.

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் திரு. கி.ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. 

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாதெமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. 

2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.


***

கரிசக்காட்டு கிழவனுக்கு
கடேசி வணக்கங்கள்!

கோபல்லபுரத்து தாத்தா..
கோபித்துக்கொண்டு
கிளம்பினாயோ..?
அம்மை விட்டுச்சென்று
ஆண்டொன்றுகூட
ஆகவில்லை...
பேடையின்றித் தனித்திருக்க...
ஏலாதென்றா
றெக்கை விரித்தாய் நீயும்...
ஏ.... கிழவா?

கி.ரா.
உன்நினைவுகள்
கடலலை போல.
தாலாட்டிக்கொண்டே இருக்குமே..
பட்டிக்காட்டானை மட்டுமல்ல..
படித்த காட்டானான என்னையும்..
உயிருள்ளவரை.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?

-சோ.ராமசாமி



துக்ளக் வார இதழின் நிறுவன ஆசிரியர் அமரர் திரு. சோ.ராமசாமி, துக்ளக் இதழில் (7.6.2006) எழுதிய தலையங்கம் இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.


துக்ளக் நிறுவன ஆசிரியர்
சோ.ராமசாமி

அர்ச்சகர்
வேலை என்பது வெறுமனே சுவாமி சிலையின் மீது பூக்களை விட்டெறிகிற வேலையல்ல. அதற்கென்று தனியாக படிப்பு இருக்கிறது.

சமஸ்கிருத மந்திரங்களின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். பூஜை விதிமுறைகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஆழ்ந்த சம்ஸ்கிருத அறிவு தேவை.

இவற்றையெல்லாம் வகுப்பெடுத்துச் சொல்லி தந்துவிட முடியாது. அது இயல்பாகவே வரவேண்டிய ஒன்று. சங்கீதம், நடனம் மாதிரித்தான் புரோகிதம் செய்வதும், அர்ச்சகராவதும்.

நாளை ஒரு அரசு ‘அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று ஏன் உத்தரவிட முடியாது?

பிற மதத்துக்காரர் ஒருவர் அர்ச்சகர் ஆகல் பணிபுரிய விரும்பி, அதற்கான பயிற்சியைப் பெற்று, அர்ச்சகர் ஆகி கோவில் பணி முடிந்தவுடன், தன் சொந்த மதத்தின் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாமே?

நாளையே ஒரு அரசு, கோவில் அர்ச்சகர்கள் திறந்த மார்புடன், கச்சம் வைத்த வேட்டியைக் கட்டிக்கொண்டு அர்ச்சனை செய்வது அநாகரிகமாக இருக்கிறது, இது இன்டீஸன்ட் எக்ஸ்போஷர், அதனால் இனி அர்ச்சகர்கள் பாண்ட், ஷர்ட் அணிந்துதான் அர்ச்சனை செய்வார்கள் என்று உத்திரவிடமுடியாதா?

என்ன அபத்தமான சிந்தனை!

Yoga of Synthesis

- SRI SWAMI SIVANANDA

Sri Swami Sivananda Saraswati

Yoga of Synthesis is suitable for the vast majority of persons. It is a unique Yoga.

Man is a strange complex mixture of will, feeling and thought. He is a triune being. He is like a tricycle or a three-wheeled chariot. He wills to possess the objects of his desires. He has emotion; and so he feels. He has reason and so he thinks and ratiocinates. In some the emotional element may preponderate, while in some others the rational element may dominate. Just as will, feelings and thought are not distinct and separate, so also, work, devotion and knowledge are not exclusive of one another. He must, therefore develop his heart, intellect and hand. Then alone can he attain perfection. Many aspirants have lop-sided development. They do not possess an integral development, as they neglect one or the other of these aspects of their personality.

One-sided development is not commendable. Religion and Yoga must educate and develop the whole man - his heart, intellect and hand. Then only he will have integral development.

In the mind there are three defects, viz., Mala or impurity, Vikshepa or tossing, and Avarana or veil. The impurities of the mind should be removed by the practice of Karma Yoga, by selfless service. The tossing should be removed by worship or Upasana, by Japa and devotion. The veil should be torn down by the practice of Jnana Yoga, i.e., by study of Vedantic literature, enquiry, self-analysis, service to the Guru, and deep meditation. Only then Self-realization is possible.

அறிவோம்: மத்திய பல்கலைக்கழகங்கள்

-ஆசிரியர் குழு



மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென  ‘மத்திய பல்கலைக்கழகம்’ என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலைக்கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டி) நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும்,  
1. அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார், அஸ்ஸாம் மாநிலம், 
2. பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலைக்கழகம், ராஜௌரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், 
3. பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, கர்நாடக மாநிலம்,
4. காலிக்கோட் பல்கலைக்கழகம், பேரம்பூர், ஒடிஸா மாநிலம் 
5. சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ், ஜோத்பூர், ராஜஸ்தான் மாநிலம் 

-ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 12

-பொன்.பாண்டியன்



21.அம்மூவனார்

காண்க: முந்தைய பகுதிகள்

அன்றைய சேரநாடு இன்றைய கேரள மாநிலம். அங்கு ‘அம்மூ’ என்று ஆண்களுக்குப் பெயர் வைப்பது பிரசித்தம். அந்தப் பகுதியைச் சேர்ந்த நமது புலவர் ‘அம்மூவனார்’ நெய்தல் திணையில் பாடுவதில் வல்லவர்.

நெய்தல் நிலத்தின் உணர்வு கடல் எவ்வாறு ஓயாது அலை பாய்ந்து கொண்டிருக்கிறதோ அதுபோல மனதின்கண் நிகழும் இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாம். ஆம். இவருடைய பாடல்கள் மனதைப் பிசையும் தன்மை உடையன. அதற்கு இவர் பாடிய ஐங்குறுநூறு – நெய்தல் பகுதியின் இரண்டாம் பத்து தோழிக்கு உரைத்ததே சான்றாகும்.

தவப்பயன் குறித்து நம் தேசத்தினர் கொண்டிருக்கும் நம்பிக்கை வெகு இயல்பானது. அதையும் வெளிப்படுத்துகிறது கீழ்க்காணும் பாடல்:

“சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே அருந்தவம் முயறல்
ஆற்றாதேமே”

( ஐங்குறுநூறு - 111 )

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு (கவிதை)

-கவியரசு கண்ணதாசன்


கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்: ஜூன் 24

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு,
ஒரு கோலமயில் என் துணையிருப்பு.
இசைப் பாடலிலே என் உயிர்த் துடிப்பு,
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு!
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

காவியத் தாயின் இளைய மகன், 
காதல் பெண்களின் பெருந்தலைவன் - நான்
காவியத் தாயின் இளைய மகன்,
காதல் பெண்களின் பெருந்தலைவன்!
பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்!

பாரதியின் சூரிய தரிசனம்

-ஜடாயு



நிலவின் முகத்தைக் காணவேண்டும் என்று தான் மானுட மனங்கள் பொதுவாக ஆசைப்படுகின்றன. “நிலவே முகம் காட்டு” என்கிறார் ஒருவர். “நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமுகத்தை” என்கிறார் இன்னொருவர். மெல்லிதயங்களும் நெகிழும் உள்ளங்களும் எழுப்பும் குரல்கள் இவை. ஆனால், உன் முகத்தைக் காட்டமாட்டாயா, நான் பார்க்கவேண்டும் என்று சூரியனை நோக்கி இறைஞ்சும் கவிமனம் இதனின்றும் முற்றிலும் வேறுபட்டது. பாரதியார் தனது பாடலொன்றில் அவ்வாறு வேண்டுகிறார்.

‘காலை வேளையில், கடற்கரையில், சூரியன் மேகங்களால் மூடப்பட்டிருக்க, முகம் காட்டும்படி அவனை வேண்டிப் பாடிய பாடல்கள் இவை’ என்று ஒரு சம்பிரதாயமான குறிப்பு ‘பாரதியார் கவிதைகள்’ நூலில் கொடுக்கப் பட்டுள்ளது. இது மிக மேலோட்டமான ஒரு குறிப்பு. மற்றபடி அப்பாடலில் வேதாந்தக் கருத்துகள் அழகுற அமைந்து வருவது முதல் வாசிப்பிலேயே தெரியவருகிறது.

கவியரசர் நினைவுகள்- சில சிந்தனைகள்

-ஸ்டான்லி ராஜன்


1
தென்னாட்டுக் காளிதாசனுக்கு வணக்கம்!


காலத்தால் அழியாத வெகு சில கலைஞர்கள் தெய்வத்தால் அனுப்பபடுவார்கள்; முதலில் தாங்கள் யாரென தெரியாமல் தடுமாறுவார்கள், உலகின் நகைப்புக்கும் பழிப்புக்கும் ஆளாவார்கள், தடுமாறுவார்கள்.

எப்பொழுது தெய்வத்திடம் சரணடைவார்களோ அப்பொழுது அவர்களின் அறிவுக்கண் திறக்கப்படும்; காலத்தால் அழியா கலைகளை கொடுப்பார்கள்.

வடக்கே அப்படி காளிதேவியால் உருவானான் காளிதாசன்.

தெற்கே சரஸ்வதியினை வணங்கி உருவானான் கம்பன். 

அபிராமி அன்னையினை வணங்கி பெரும் உயரம் பெற்றான் அபிராமிபட்டன்.

அவன் வழியே அழியாப்புகழ் பெற்றான் ஒட்டக்கூத்தன்.

காளி என வணங்கி உயரம் பெற்றான் பாரதி.

அவ்வரிசையில் செட்டிநாட்டின் சிறுகூடற்பட்டியில் மலையரசி அம்மன் ஆலயத்தில் ஒருகாலத்தில் அழுது கொண்டிருந்த முத்தையா, பின்னாளில் கண்ணதாசனாக தமிழ் இலக்கிய உலகை பாடல் உலகை ஆண்டுகொண்டிருந்தான்.

தெய்வாம்சம் பெற்ற கவிஞர்களுக்கு தனித்தன்மை வாய்க்கும்.

அவர்களிடம் தமிழ் பொங்கும்; அருவியாய்க் கொட்டும்; வர்ணணைகளும் உவமையும் வார்த்தைகளும் காவிரி வெள்ளமாய்க் கொட்டும்; அதில் தத்துவமும் ஆன்மிகமும் வாழ்வியல் விஷயமும் இன்னும் ஏகப்பட்ட உணர்ச்சிகளும் அழகுத் தமிழில் குற்றால அருவியாய் வழிந்தோடும்.

எதையுமே அழகாகவும் உருக்கமாகவும் பொருத்தமாகவும் அவர்களால் பாட முடியும்.

அப்படி வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதிக்குப் பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞர் கண்ணதாசன்.