16/06/2021

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு (கவிதை)

-கவியரசு கண்ணதாசன்


கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்: ஜூன் 24

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு,
ஒரு கோலமயில் என் துணையிருப்பு.
இசைப் பாடலிலே என் உயிர்த் துடிப்பு,
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு!
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

காவியத் தாயின் இளைய மகன், 
காதல் பெண்களின் பெருந்தலைவன் - நான்
காவியத் தாயின் இளைய மகன்,
காதல் பெண்களின் பெருந்தலைவன்!
பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்!

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு,
ஒரு கோலமயில் என் துணையிருப்பு.
இசைப் பாடலிலே என் உயிர்த் துடிப்பு,
நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு!
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு,
ஒரு கோலமயில் என் துணையிருப்பு.
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு,
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு!

(ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு)


படம்: ரத்ததிலகம் (1963)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை: கே.வி. மஹாதேவன்



No comments:

Post a Comment