16/06/2021

அறிவோம்: மத்திய பல்கலைக்கழகங்கள்

-ஆசிரியர் குழு



மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென  ‘மத்திய பல்கலைக்கழகம்’ என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலைக்கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டி) நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும்,  
1. அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார், அஸ்ஸாம் மாநிலம், 
2. பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலைக்கழகம், ராஜௌரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், 
3. பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, கர்நாடக மாநிலம்,
4. காலிக்கோட் பல்கலைக்கழகம், பேரம்பூர், ஒடிஸா மாநிலம் 
5. சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ், ஜோத்பூர், ராஜஸ்தான் மாநிலம் 

-ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

பொதுவாக இந்தப் பல்கலைக்கழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை. தமிழ்நாட்டில் இந்தப் பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. 

இந்தப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு  ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை தருகிறது. Integrated MSc (Chemistry, Physics, Maths, Life Sciences), Integrated MA Exonomics. இதுபோக முதுநிலை பட்டப் படிப்புகளும், எம்பிஏ படிப்புகளும் பிஹெச்.டி. ஆய்வுப் படிப்புகளும் தனித்தனியே நடத்தப்படுகின்றன.

இங்கே படிக்கும் மாணவர்களில் பேர் பாதிப்பேர் கேரளத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் பிற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள்- தமிழ்நாடு உட்பட.

ஒரு செமஸ்டருக்கு கட்டணம் என்று பார்த்தால் ரூ. 3,000 - ரூ. 8,000  வருகிறது. இதுபோக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி விடுதி வசதியும் இருக்கிறது. விடுதிக் கட்டணங்களும் மிகக் குறைவே.

ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

இந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்வது எப்படி?

18 மத்திய பல்கலைகழகங்களில் எந்த பல்கலைக்கழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு  நடத்தப்படுகின்றது. CUCET Exam (Central University Common Eentrance Exam).

பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதுமானது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்குத் தக்க சேர்க்கைகள்  வழங்கபடுகின்றன.

இந்தத் தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதளம் காணவும்:


எந்தெந்த பல்கலைக்கழகங்களில் என்னென்ன படிப்புகள் உள்ளன  என்பதை அறிய அந்தந்தப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.  

 


No comments:

Post a Comment