16/11/2021

ம​லையில மகுடம் வச்சு கடலில பாதம் வச்சு... (கவிதை)

-ஒரு தேசபக்தர்
  

(பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டு சிறப்புப் பதிவு)

மலையில மகுடம் வச்சு, கடலில பாதம் வச்சு, 
மாகாளி உருவில் நின்றாய் எங்கள் ஆத்தா!  காளியாத்தா! 
மாகாளி உருவில் நின்றாய் எங்கள் ஆத்தா!  உன்னை நான் 
பாரதத்தாய் என்றழைப்பேன் எங்கள் ஆத்தா!

(ம​லையில மகுடம் வச்சு)

எல்லையில எதிரிவந்து தொல்லை தரும் வேளையில,
எல்லையம்மன் உருவில் நீயும் வாளெடுத்து நிக்கையிலே! - பாரதாத்தா
இல்லையங்கு எதிரியர்கள் ஓடிவிட்டார் அடி ஆத்தா! 

(ம​லையில மகுடம் வச்சு)

உழைப்பு மிகுந்திருந்தால் உணவுக்குப் பஞ்சமில்லை 
வாரி வழங்கிடுவாய் எங்கள் ஆத்தா - பாரதாத்தா! 
உன்னை நான் மாரியம்மன் என்றழைப்பேன் எங்களாத்தா!

(ம​லையில மகுடம் வச்சு)

கல்விக்கதிபதி நீ, கலைமக உன்பேரு, 
கற்றிடுவார் உலகத்து மக்களெல்லாம் உன்னிடத்தில்! - பாரதாத்தா 
கற்ற உந்தன் மக்களெல்லாம் சென்றிடுவார் எட்டுத் திக்கும்!

(ம​லையில மகுடம் வச்சு)

எத்தனை வடிவெடுத்து எங்களை நீ ஆண்டாலும் 
அத்தனை வடிவிலுமே காண்பதுன்னை எங்களாத்தா - பாரதாத்தா 
பித்தனாய் உன் புகழைப் பாடிடுவேன் எங்கள் ஆத்தா!

(ம​லையில மகுடம் வச்சு)

.

No comments:

Post a Comment