02/11/2021

ஒன்னுதான் ஒன்னுதா​னே நம்ம நாடு தம்பி! (கவிதை)

-ஒரு தேசபக்தர்


(பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டு சிறப்புப் பதிவு)


ஒன்னுதான் ஒன்னுதானே - நம்ம நாடு தம்பி
ஒன்னுதான் ஒன்னுதானே!
ஒன்னுதானே நம்ம நாடு...
எண்ணிப் பாரு நல்ல தம்பி!

(ஒன்னுதான்)

கங்கைக்கரை ராமனுக்கு ராமேஸ்வர மண்ணு தெய்வம்…
செங்குட்டுவ சேரனுக்கோ இமயமலைக் கல்லு தெய்வம்…
ராமேஸ்வர மண்ணு தெய்வம், இமயமலைக் கல்லு தெய்வம்!

(ஒன்னுதான்)

பாண்டிய நாட்டு ஆண்டாளுக்கு கண்ணனேதான் எண்ணமெல்லாம்…
ராஜபுத்ர மீராவுக்கும் கண்ணனேதான் எண்ணமெல்லாம்..
ஆண்டாளுக்கும் மீராவுக்கும் கண்ணனேதான் எண்ணமெல்லாம்!

(ஒன்னுதான்)

செந்தமிழின் முதலெழுத்தா வள்ளுவரு சொன்ன 'அ' னா
எந்த மொழிக்காரருக்கும் முதலெழுத்தா ஆனதனால்,
செந்தமிழின் முதலெழுத்தும் எந்தமொழி முதலெழுத்தும்…

(ஒன்னுதான்)

அங்கக்கிங்க பேதமில்ல, ஊரு மொத்தம் ஒரே சனம்!
நல்லாச் சொல்லு நாலுதரம்… நாடு மொத்தம் ஒரே இனம்!
ஊருமொத்தம் ஒரே சனம்… நாடு மொத்தம் ஒரே இனம்!

(ஒன்னுதான்)

.

No comments:

Post a Comment