02/11/2021

சாவர்க்கர் முதல் கேசவர் வரை… (கவிதை)

-வைஷ்ணவிப்பிரியன்



(பாரத  சுதந்திரத்தின் 75 ஆண்டு சிறப்புப் பதிவு)


பல்லவி

சிரத்தோடு கரம்கோர்த்து சிற்றறையில் விலங்கிட்டால்
சிங்கத்தின் குணம் மாறுமோ? சாவர்க்கர்
சீற்றமும் குறைவாகுமோ?

மாண்டலே சிறையினில் தனிமையில் அடைத்தாலும்
மனமது தடுமாறுமோ? திலகர்
மாதவம் வீணாகுமோ?

(சிரத்தோடு)

சரணங்கள்

தலையினைக் குறிவைத்து தடியினில் அடித்தாலும்
தயங்காமல் முன்சென்றவர் - லஜபதி
தலைமைக்குச் சான்றானவர்!

அலிப்புரச் சிறைதனில் சித்திரவதைப்பட்டும்
அதர்மத்தை ஏற்காதவர் - அரவிந்தர்
ஆன்மிகத் தருவானவர்!

(சிரத்தோடு)

செக்கினை இழுத்தாலும் கல்லினை உடைத்தாலும்
தேசத்தை மறவாதவர் - வ.உ.சி.
தேசிய மணம் தந்தவர்!

எழுத்தினைத் தெய்வமாய் வணங்கிடச் சொன்னவர்;
இதழியல் குருவானவர் - பாரதி
விடுதலைக் கனலானவர்!

(சிரத்தோடு)

ஆயுதப் புரட்சியால் சுதந்திரம் எய்திட
ஆவேசக் குரல் தந்தவர் - பகத்சிங்
அதற்காகத் தனை ஈந்தவர்!

ஐசிஎஸ் படித்தாலும் அந்நிய அரசுக்குக்
கைக்கூலி ஆகாதவர் - நேதாஜி
அரும்பெரும் படை கண்டவர்!

(சிரத்தோடு)

அறவழிப் போரினை அரியநல் வழிமுறை
ஆக்கிய கருவானவர் - காந்தி
எளிமையின் உருவானவர்!

அடிமைத்தளை நீக்க சங்கம் அமைத்ததால்
அடிப்படை மருந்தானவர் - கேசவர்
ஆண்மையின் வடிவானவர்!

(சிரத்தோடு)


காண்க: வைஷ்ணவிப்பிரியன்

நன்றி: விஜயபாரதம் -தீபாவளி மலர் 2021


No comments:

Post a Comment