16/12/2020

புதிய இந்தியாவைக் கட்டமைக்கும் புதிய கல்விக் கொள்கை!

-‘தமிழ்தாமரை’ வி.எம்.வெங்கடேஷ்

 


புதிய கல்விக் கொள்கை- 2020 அறிவுசார்  சமூகத்தை , ஏற்றத் தாழ்வற்ற சமத்துவக் கல்வியைமாணவர்களுக்கு பாடச் சுமைகளற்ற, மன அழுத்தங்களற்ற கல்வியை அளிக்கக் கூடியதுவலுவான பொருளாதாரம், கட்டமைப்புகள்  நிறைந்த பாரதத்தைக் கட்டியமைக்கும் ஆற்றல் கொண்டது.

1939 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் வார்தாவில் நடந்த தேசிய கல்வி மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட தாய்மொழிக் கல்வி, பாடத்துடன் ஒருங்கிணைந்த தொழிற்கல்வி போன்ற கோரிக்கைகளுக்கு  83 வருடங்கள் கழித்து ஒரு வடிவத்தையும் கொடுத்துள்ளது.  

இந்தியா சுதந்திரம் அடைந்து 20  வருடம் கழித்தே   (1968-ஆம் ஆண்டு) தேசிய கல்விக் கொள்கையை வரையறுத்தது. பின்னர் அது 1986, 1992 ஆம் ஆண்டுகளில் சில திருத்தங்களைக் கண்டது. ஆனால்  சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகளாகியும் எந்தத் திருத்தங்களாலும்  ஆங்கிலேயே அதிகாரி மெக்காலேயின் மேற்கத்தியக் கல்வி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. ஆனால் புதிய கல்விக் கொள்கை-2020 அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதுஇந்தியா சுதந்திரத்துக்குப் பின் முதல்முறையாக சுய கல்விக் கொள்கையை வரையறுத்துள்ளது.

மெக்காலே கல்விக் கொள்கை எந்த அளவுக்கு மோசமானது என்பதை அவரது நோக்கத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம். அவர் , பிரிட்டிஷ் பார்லிமென்டில் 1835 பிப்.2-ஆம் தேதி  சமர்ப்பித்த அறிக்கையில் கூறியது:

நான் குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவைச் சுற்றி வந்து விட்டேன். இதுவரை ஒரு பிச்சைக்காரனோ, திருடனோ கண்ணில் படவில்லை. அவ்வளவு வளம் நிறைந்தது அந்நாடுகலாசாரம் மற்றும் ஆன்மிக நெறி எனும் முதுகெலும்பை நாம் உடைக்காத வரை நல்ல ஒழுக்கம்நல்ல பண்பு இருக்கும் அந்நாட்டின் மக்களை நாம் எப்போதும் வெற்றி பெறுவது கடினம்ஆகவே, பழைய கல்வி அமைப்பு, கலாசாரம் ஆகியவற்றை மாற்றி, தங்களை விட வெளிநாடு மற்றும் ஆங்கிலம் ஆகியவை தான் உயர்வானது என்பதை மனதில் புகுத்துவதன் மூலமாகதங்களைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டையும் பாரம்பரிய கலாசாரத்தையும் இழக்கும் படியான கல்வித் திட்டத்தை அந்த நாட்டுக்கு நான் பரிந்துரைக்கிறேன்என்றார் அவர்.

அவரது நோக்கத்தை ஆண்டுகள் பல கடந்தும் இன்று வரை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார். இதை எதிர்ப்பவர்கள்,  நமது பண்பாடு, பாரம்பரியக் கல்வி, கலாசாரப் பெருமைகள் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் பழமைவாதிகளாக இன்றும் முத்திரை குத்தப்படுவதே இதற்கு சான்று.  

உலகமே காட்டுமிராண்டிகளாக சுற்றித் திரிந்த பொழுது, நாளந்தா, தட்சசீலா போன்ற உயர்பல்கலைக்கழகங்களைப் பெற்றிருந்தவர்கள் நாம். கணிதம், வானியல், உலோகம், மருத்துவஅறிவியல் , அறுவை சிகிச்சை, கட்டடக்கலை, கப்பல் கட்டுதல், கடல்வழிப் போக்குவரத்து,யோகா, நுண்கலைகள் என்று பல துறைகளில் முன்னணி மாணாக்கர்களை உருவாக்கியது நமது பண்டைய கல்வி முறை.

ஆனால்  இன்று  உலக  கல்வித்தர வரிசையில் நாம்  மிகவும் பின்தங்கியுள்ளோம். 2012 ஆம் ஆண்டு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) நடத்திய ஓர் ஆய்வே இதற்கு சான்று. உலகின் பல நாடுகளின் கல்வி தரம் குறித்து அது மேற்கொண்ட ஆய்வில், இந்தியா உட்பட 74 நாடுகள் பங்கு கொண்டன. இந்த ஆய்வின் முடிவில், உலகின் கல்வித் தர வரிசையில் இந்தியா 73 வது இடத்தைப் பிடித்தது. கிர்கிஸ்தான்னுக்கு 74 வது இடம்!

நாம் பல உயர் கல்லூரிகள், கல்வி நிறுவனங்களைப் பெற்றிருந்த போதிலும், மனப்பாடக் கல்விக்கு முக்கியத்துவம் தந்தது, ஆராய்ச்சிக் கல்வியைக் கண்டுகொள்ளாமல் இருந்ததுகல்வியை பாதியிலேயே துறக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என இதற்கு காரணங்கள் பல கூறலாம். இதையெல்லாம் சரிக்கட்ட வந்ததுதான் புதிய கல்விக் கொள்கை- 2020.

அதன்படி, தற்போதுள்ள, 10 + 2 என்ற பள்ளிக்கல்வி, 5 + 3 + 3 + 4 என மாற்றப் படுகிறது. புதிய திட்டத்தின்படி மாணவமாணவியர், 3 – 8 வயது வரை அடித்தள நிலை என முதல் ஐந்து ஆண்டுகள் படிப்பர். பின்னர் 8 – 11 வயது வரை, தயார்ப்படுத்தும் நிலை என மூன்று ஆண்டுகள் படிப்பர். அதன் பிறகு, 11 – 14 வயது வரை, நடுநிலைப் பள்ளியில் படிப்பர். அதைத் தொடர்ந்து, 14 – 18 வயது வரை, உயர்நிலைப் பள்ளியில் படிப்பர். அதாவது, 8ஆம் வகுப்பில் இருந்து 12ம் வரை, உயர்நிலைப் பள்ளிக் கல்வி இருக்கும்

இதில் 5வது வரை அந்தந்த பிராந்தியங்கள் கட்டாயமாக அவரவரது தாய்மொழியிலேயே கல்வியைக் கற்பிக்க வேண்டும் என்று  வரையறுக்கப் பட்டுள்ளது. தாய்மொழியில் ஆரம்பக் கல்வியைக் கற்பதால் மாணவர்களின் புரிதல், கற்றல், படைப்பாற்றல்,  கற்பனைத் திறன் அதிகரிக்கும் என்பது பல ஆய்வுகளின் முடிவு. இதை  .நா.சபையின் யுனெஸ்கோ (UNITED NATIONS EDUCATIONAL, SCIENTIFIC and CULTURAL ORGANISATION - UNESCO) அமைபின் ஆய்வு முடிவுகளும் உறுதி செய்கின்றன. 2017-ஆம் ஆண்டு வரை நோபல் பரிசு பெற்றவர்களில் 98 சதவீதத்துக்கும் அதிகமானோர் தாய்மொழி வழிக்  கல்வி பயின்றவர்களே  என்கிற புள்ளிவிபரங்களும் இதற்கு சாட்சி.   

6-ஆம் வகுப்பில் இருந்து வழக்கமான பாடங்களுடன், தொழிற்கல்வியும் எந்த வேறுபாடுகளும்  இன்றி சேர்க்கப்படுகிறது. இது 12-ஆம் வகுப்பு  வரை தொடருகிறது; மேலும் கல்லூரிகளிலும் முக்கிய இடத்தைப் பெற இருக்கிறது. ஆனால், இது தொழிலாளர்களைத் தான் அதிகம் உருவாக்கும், குலத் தொழிலுக்கு இழுத்துச் செல்லும் என்கிற கருத்து ஏற்கத்தக்கதல்ல.  ஜப்பான் போன்ற நாடுகளின் விரைவான தொழில் வளர்ச்சிக்கு பாடங்களுடன் கூடிய தொழிற்கல்வியே காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

உதாரணமாக, மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (SKILL INDIA) கீழ் விதைகள்மண்புழு உரம் தயாரித்தல்,  உணவு பதப்படுத்துதல், எலக்ட்ரீஷியன், வெல்டிங், கைபேசிதொலைக்காட்சி- மிக்ஸி- கிரைண்டர் பழுது நீக்குதல், சூரிய ஒளி மின்சாதனம் அமைத்தல்விமான சரக்குகளைக் கையாளுதல், தங்க நகை வடிவமைப்பு, கால்நடைத் தீவனம் தயாரித்தல்,  வாகனம் ஓட்டுநர், பளுதூக்கி  இயக்குனர், இறால் பண்ணைத் தொழில்நுட்பம், பெண்களுக்கு எம்ப்ராய்டிங் தையல், அழகுக் கலை நிபுணர், உடை வடிவமைப்பாளர், கலைப் பொருட்களை உருவாக்குபவர் என்று 160-க்கும் அதிகமான பயிற்சிகளைத் தருகின்றனர். இவை ஒவ்வொன்றும் 200, 300 மணி நேர குறுகிய கால வகுப்புகளே

இவற்றைப்  போன்ற தொழிற்பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படும்  பட்சத்தில், ஒரு மாணவன் தனது பள்ளிப்படிப்பின் முடிவில் நான்குக்கும் அதிகமான துறைகளில் தொழிற்பயிற்சி பெற்றவனாகி விடுவான். அது அவனது மேற்படிப்புகள் குறித்த  ஒரு தெளிவான பார்வையை அவனுக்குத் தரும்.   

மேலும்  ஏட்டுக் கல்வியில் சிறப்போர் வழக்கமாக மருத்துவம்,  பொறியியல் என்று படிக்கச் சென்றுவிடலாம். ஆனால் ஏட்டுக் கல்வி ஏறாமல் கல்வியை பாதியிலேயே விட்டுவிடலாமாஅல்லது அடுத்து என்ன படிக்கலாம் என்று திணறியவர்களுக்கு, தனித்திறமை  மிக்கவர்களுக்கு தொழிற்கல்வி ஒரு சிறந்த வரப்பிரசாதமே. மேலும் இது தொழிலாளிகளை அதிகம் உருவாக்கும் என்பதை விட, பலருக்கும்  தொழில் தரும் நல்ல தொழில் நுட்பம் நிறைந்த முதலாளிகளையே உருவாக்கும். பள்ளிப் படிப்பை பாதியில் துறப்பவர்களின் எண்ணிக்கையையும் இது குறைக்கும்.  

தேசிய புள்ளியியல் அலுவலக அறிக்கையின்படி, மாணவிகளில் திருமணத்துக்காக 12 %, குடும்பச் சூழல் காரணமாக 32 % பள்ளிப் படிப்பைத் துறக்கிறார்கள் என்றால், மாணவர்களில் குடும்ப நிதி நெருக்கடி, வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் காரணமாக  35 % துறக்கின்றனர்

இதைத் தவிர்த்திடும் விதமாக, எஸ்.சி, எஸ்.டி, பி.சி, .சி, மாற்றுத் திறனாளிகள் உட்பட சமூகபொருளாதாரத்தில் பின்தங்கிய, நன்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை தருவது என்றும், உயர்கல்வி நிறுவனங்கள் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியை வழங்க ஊக்குவிப்பது என்றும், இதன்மூலம் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50% உயர்த்துவது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது

மூன்றாவதாக,  பல்வேறு சூழல்கள் காரணமாக கல்வியைத் தொடர முடியாதவர்கள் பாதியிலேயே கல்வியை நிறுத்தவும், சரியான சூழல் அமையும்போது விட்ட இடத்தில்  இருந்து கல்வியைத் தொடரவும் , முறையாக அதை முடிக்கவும்  வாய்ப்புகள்  உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் மாணவர்களுக்கு உதவும் விதமாக  புதிய, மாற்றுப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன. இது குறிப்பாக அடிக்கடி  வேலைக்காக இடம்விட்டு இடம் மாறும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பாதிக்கப்பட்டு விடாமல் பேருதவி புரியும்

பொதுவாக  கல்லூரிகளில் குடும்பச் சூழல், வறுமை காரணமாக, ஆர்வம்  இருந்தும் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் நிறுத்தும் மாணவர்கள் பலர் உண்டு. இதனால் மாணவர்கள் கல்வியையும் இழக்கின்றனர்; கல்விக்காகச் செலவழித்த ஒரு சில ஆண்டுகளையும் இழக்கின்றனர். இதைத்  தவிர்க்கும் வகையில், எந்த நேரத்திலும், மாணவர்கள் பாதிப்பு இல்லாமல் வெளியேறும் வசதி செய்யப்பட்டுள்ளது.  

அதாவது  முதல் ஆண்டில் வெளியேறினால் சான்றிதழ் அளிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் வெளியேறுவோருக்கு பட்டயம் தரப்படும். மூன்றாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு முழுமையான பட்டம் வழங்கப்படும். அதற்கு மேலும் உயர்கல்வி படிக்க விரும்புவோர்நான்காம் ஆண்டு ஆராய்ச்சிப் படிப்பைத் தொடரலாம்.இதன்மூலம், மாணவர்கள் குடும்பம்பொருளாதாரம், உடல்நலப் பிரச்னைகளால் படிப்பைத் தொடர முடியாவிட்டாலும், அவர்களுக்குசான்றிதழ், பட்டயம், பட்டம் இவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்து விடும்

15 வருடங்களில் ஒவ்வொரு கல்லூரியும்  தன்னாட்சியுடைய பட்டங்களை வழங்கும் கல்லூரிகளாகவோ, ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகவோ மேம்படுத்தப்படும். இதனால் கல்வியின் தரம் உயரும். ஆராய்ச்சிப் படிப்புகளும் அதன்மூலம் புதிய கண்டுபிடிப்புகளும் மேம்படும்

தற்போது உலக நாடுகளிடையே தொடர் ஆராச்சி மூலம் புதிய கண்டுபிடிப்புகளும், அறிவுசார் சொத்துரிமைகள் மூலம் காப்புரிமை பெறுவதிலும் பெரும்  போட்டி நிகழ்கிறது. இது பெரும் செல்வத்தை வழங்க வல்லது. இதில் கடந்த 2000 ஆம் ஆண்டு வரை ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தின. பின்னர் இதில் சீனாவும் இணைந்து கொண்டது. இனி வரும் காலத்தில்  இந்த வரிசையில் இந்தியாவும் இணைய இருக்கிறது.   

புதிய கல்விக் கொள்கை- 2020த்தின் படி, உயர்கல்வியில் ஆராய்ச்சித் திறனைக் கட்டமைக்கவும், வலுவான ஆராய்ச்சிக் கலாசாரத்தை வளர்க்கவும் தேசிய ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் அமைக்க படுகிறது. இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் அமையவிருக்கும் இந்த அமைப்பு, நாடு முழுவதும் சிறந்த ஆராய்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குவது, வழிகாட்டுவது, போதுமான நிதி ஆதாரம், ஊக்கத் தொகைகள் கிடைக்கச் செய்வதைக் நோக்கமாக கொண்டது.   

அமெரிக்காவின்  ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் செப்டம்பர் 2018-க்கும் ஆகஸ்ட் 2019-க்கும் இடைபட்ட காலத்தில், பல்வேறு துறைகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் மூலம்,  ஆன்டிபாடி சிகிச்சைகள், தரவுப் பகுப்பாய்வு, டிஜிட்டல் இசை, டி.என்.. மறுசீரமைப்பு உட்பட 875 தொழில்நுட்பங்களைக் கண்டறிந்தது. இதன்மூலம் அந்த ஆண்டுகளில் மட்டும் ரூ. 375 கோடிகளை காப்புரிமை வருவாயாக (royalty revenue)  ஈட்டியது என்பதன்மூலம் இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.   

இறுதியாக மும்மொழிக் கொள்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்  கல்வி கட்டாயம் என்றும், தேசிய அளவில் கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட 22 தேசிய மொழிகளில் ஒன்றையும், சர்வதேச அளவில் ஒரு மொழியையும் கற்க வேண்டும் என்றும் வரையறுக்க பட்டுள்ளது. தேசிய மொழிகளைக் கற்றல் மக்களிடையே தேசப்பற்றை, தேசிய உணர்வை வலுப்படுத்தும், மாநில எல்லை தாண்டி வியாபாரம், கல்வி என்று அனைத்திலும் உறுதுணை புரியும்.  

ஆனால் இதனை ஹிந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு முயற்சி என்றும், இந்திய மொழிகளைக் கற்றாலே தமிழ் அழிந்து விடும் என்பது போன்ற சிலரின் பிரசாரங்கள், அவர்களது சுயநலனின் வெளிப்பாடே

உலகின் சின்னஞ்சிறிய நாடுகள் கூட தங்கள் மொழிகளை சர்வதேச அளவில் வளர்க்க முற்படும்போது, நாம் நம் தேசத்துக்குள்ளேயே மண்ணின் மொழிகளை வளர்ப்பதில்கூடுதலாகக் கற்பதில் என்ன தவறு? புதிய கல்விக் கொள்கை- 2020 ஹிந்தி மொழியைத் தான் கட்டாயம் கற்க வேண்டும் என்று சொல்லவில்லையே!

 

குறிப்பு:

 திரு, ‘தமிழ்தாமரை’ வி.எம்.வெங்கடேஷ், தமிழக பாஜகவில் சமூக ஊடகப் பிரிவில் மாநிலப் பொறுப்பாளராக உள்ளார். 

No comments:

Post a Comment