- ஆண்டாள் நாச்சியார்
இந்த நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாளால் பாடப்பட்டது. திருப்பாவையை எழுதியவரும் இவரே. வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய ‘நாச்சியார் திருமொழி’, அத் தொகுப்பில் 504 தொடக்கம் 646 வரையான பாடல்களாக இடம் பெறுகின்றது.
ஆண்டாள் நாச்சியார் திருநட்சத்திரம்: ஆடிப்பூரம் (ஆடி -9; ஜூலை 24) |
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. 11
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. 11
- நாச்சியார் திருமொழி - ஆறாம் பத்து
(நாலாயிர திவய பிரபந்தம்: 504 -646)
***
நாச்சியார் திருமொழி- ஓர் அறிமுகம்
தமிழ் இலக்கியத்தில் பெண்பாற்புலவரால் இயற்றப்பட்ட இனிய காதற்சுவை கொண்ட பாடல், ‘நாச்சியார் திருமொழி’. வைணவ பக்தி இலக்கியத்தில், இறைவனை வாழ்க்கைத் துணைவனாகவே பாவிக்கும் பாடல்களின் சிகரம் இது. இந்த நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாளால் பாடப்பட்டது. திருப்பாவையை எழுதியவரும் இவரே. வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய ‘நாச்சியார் திருமொழி’, அத் தொகுப்பில் 504 தொடக்கம் 646 வரையான பாடல்களாக இடம் பெறுகின்றது.
140 பாடல்களைக் கொண்ட இந்நூல், கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகிறது. பாடல்கள் அனைத்திலும் காதல் சுவை மேலோங்கி இருப்பதைக் காணலாம்.
இந்நூல் ஒவ்வொன்றும் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்களில் அமைந்துள்ளன.
இந்நூல் ஒவ்வொன்றும் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்களில் அமைந்துள்ளன.
- முதற் பத்துப் பாடல்கள், கண்ணனை இணக்கு எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை. இவை அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்களாக அமைந்துள்ளன.
- இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் சிற்றில் சிதையேல் எனக் கேட்கும் வகையில் அமைந்தவை. இப் பாடல்கள் கலிவிருத்தங்களாக அமைந்தவை.
- கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்ததது மூன்றாம் பத்து. இப் பாடல்கள் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள்.
- நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் குறிப்புப் பற்றியவை. இவை கலிவிருத்தப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளன.
- குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளவை ஐந்தாம் பத்தைச் சேர்ந்த பாடல்கள். இவை எழுசீர் ஆசிரிய விருத்தங்களாக அமைந்துள்ளன.
- மாயவன் தன்னை மணம் செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்த பாடல்கள் ஆறாம் பத்தில் (வாரணமாயிரம்) அமைந்துள்ளன. இவையும் கலிவிருத்தப் பாடல்கள் ஆகும்.
- ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை. கலிவிருத்தப் பாடல்கள்.
- மேகவிடுதூதாக அமைந்த எட்டாம் பத்து தரவுக் கொச்சகக் கலிப்ப்பா எனும் பாவகையில் ஆக்கப்பட்டுள்ளது.
- ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்ளன. இவை கலிநிலைத்துறை எனும் பாவகையில் உள்ளன.
- மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்ட பத்தாம் பத்து, கலிநிலைத்துறை எனும் பாவகையைச் சேர்ந்தது.
- திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்த பதினோராம் பத்துப் பாடல்கள் தரவுக் கொச்சக் கலிப்பா வகையைச் சேர்ந்தவை.
- பன்னிரண்டாம் பத்துப் பாடல்கள் சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அறுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனவை.
- அவலம் தணி என இறைவனைக் கோரும் பதின்மூன்றாம் பத்தும் அறுசீர் ஆசிரிய விருத்தப்பாக்களால் ஆனவையே.
- பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக்கூறும் இறுதிப் பாடல்களும் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாக்களே.
No comments:
Post a Comment