-அருணகிரிநாதர்
அருணகிரிநாதர் |
(இராகம் - நாட்டை; தாளம் - ஆதி)
- தத்தன தனதன தத்தன தனதன
- தத்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி
- கப் பியகரிமுகன் - அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
- கற்பகம் எனவினை - கடிதேகும்;
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
- மற்பொருதிரள் புய - மதயானை
மத்தள வயிறனை உத்தமிபுதல் வனை
- மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே;
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
- முற்பட எழுதிய - முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
- அச்சது பொடிசெய்த - அதிதீரா;
அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
- அப்புன மதனிடை - இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
- ஒண்கடலிற் றேன முதத் துணர்வூறி;
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
- என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே;
தம்பிதனக் காகவனத் தணைவோனே;
- தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
- ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே. 2
பக்கரைவி சித்ரமணி பொற் கலணை யிட்ட நடை
- பட்சிபெனு முக்ரதுர கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
- பட்டுருவ விட்டருள் கை வடிவேலும்;
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
- சிற்றடியு முற்றியப னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
- செப்பென எனக்கருள்கை மறவேனே;
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புனெய்
- எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
- ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்;
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெனக்கொளொரு
- விக்கநச மர்த்தனெனும் அருளாழி!
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
- வித்தகம ருப்புடைய பெருமாளே! 3
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
- விசையன் விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
- வினையின்விளை வேதும் அறியாதே;
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
- கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
- கழலிணைகள் சேர அருள்வாயே;
இடையர்சிறு பாலை திருடிகொடி போக
- இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயமிக வாடியுடையபிளை நாத
- கணபதியெ னாம முறைகூற;
அடையலவர் ஆவி வெருவ அடி கூர
- அசலுமறி யாமல் அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
- அறிவருளும் ஆனை முகவோனே! 4
***திருப்புகழ்- இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1,088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழின் உள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களில் அடங்காத தனித்தன்மை பெற்றவை. தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் வரலாற்றிலும் திருப்புகழ் பிரதான இடம் வகிக்கிறது.
- திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment