13/11/2020

கார்த்திகை 2020 மின்னிதழ்


 உள்ளடக்கம்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!


1. அமுதமொழி- 11

-ஏகநாத் ரானடே

2. கார்த்திகைத் திங்கள் - ஆன்றோரும் சான்றோரும்

-ஆசிரியர் குழு

3. சூரியனிடம் புன்னகைக்கும் சிறுமி (கவிதை)

-க.ரகுநாதன்

4. இந்துப் பண்பாட்டில் மொழி 

-முத்துவிஜயன்

5. பாரதியின் பாஞ்சாலி

-தஞ்சை வெ.கோபாலன்

6. லாஜ்பத்ராய் பிரலாபம் (கவிதை)

-மகாகவி பாரதி

7. அர்த்தமுள்ள மனு தர்மம்

-ஆசிரியர் குழு

8. பெண்களைப் போற்றும் மனுஸ்மிருதி

-ஆசிரியர் குழு

9. நான் ஏன் மனுவை ஆதரிக்கிறேன்? (கவிதை)

-பி.ஆர்.மகாதேவன்

10.  ‘தேசிய முரசு’- 200வது நாள் விழா

-ஆசிரியர் குழு

11. அக்காரக்கனியும் அமரகவியும்

-திருநின்றவூர் இரவிக்குமார்

12. தமிழகத்தின் புரட்சிக்குரல்

-ஆசிரியர் குழு

13. முன்னொரு காலத்தில்...

சுந்தர்ராஜசோழன்

14. ஊடக சுதந்திரம் காப்போம்!

-ம.கொ.சி.இராஜேந்திரன்

15. நிஷ்காம்ய கர்மம்

-கவிஞர் வாலி

16. முதல் குடியரசுத் தலைவர்

-சேக்கிழான்

17. சி.வி.ராமனைத் தெரியுமா?

-ஸ்டான்லி ராஜன்

18. ஆழ்வாரான மன்னர்

-செங்கோட்டை ஸ்ரீராம்

19. Swami Vivekananda in the foot-steps of  Bhagwan Ramanuja

-Dr.R.Ilango


-Prof K.N.Vaswani

22. பட்டாசு வெடி பாப்பா! (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்








அமுதமொழி- 11


ஏகநாத் ரானடே

பற்றிலிருந்து விடுதலை, கர்வமின்மை, துணிவுடனும் உற்சாகத்துடனும் செயல்படுதல், வெற்றி- தோல்விகளால் பாதிக்கப்படாமை ஆகிய நான்கு அடிப்படைக் குணங்கள் சமூகசேவகருக்கு அவசியமானவை. இந்தக் குணங்கள் கொண்ட காரியகர்த்தரே சாத்விகமான ஊழியராவார்.

 -ஏகநாத் ரானடே 

(விவேகானந்த கேந்திரத்தின் நிறுவனர்)

கார்த்திகைத் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

 -ஆசிரியர் குழு


மகாத்மா ஜோதிராவ் புலே


கார்த்திகை மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், கார்த்திகைத் திங்கள்  (16.11.2020 - 15.12.2020)

சூரியனிடம் புன்னகைக்கும் சிறுமி (கவிதை)

-க.ரகுநாதன்



ஒளிர்ந்திடும் மத்தாப்பின்
சரசர வெடிப்பொலியில் கேட்கிறது
சாலையோரச் சிறுமியின் குறுஞ்சிரிப்பு.
சங்குச் சக்கர கிறுகிறுப்பில்
கரகரவென சுற்றியவளின் கிழிந்த பாவாடை
பலூனாக ஊதிச்சுழன்று அமிழ்கிறது.

இந்துப் பண்பாட்டில் மொழி

-முத்துவிஜயன்



ஆதிசிவனின் உடுக்கையின் ஒருபுறத்திலிருந்து தமிழும் மறுபுறத்திலிருந்து சம்ஸ்கிருதமும் வெளியானது என்பதே நமது பாரம்பரிய நம்பிக்கை. இவ்விரண்டு மொழிகளும்தான் பாரதத்தின் தொன்மையான மொழிகள். இவற்றை அடித்தளமாகக் கொண்டே பிற மொழிகள் உருவாகியுள்ளன. இவ்விரு மொழிகளிடையே இருந்த கலாசார இணக்கம், ஆய்ந்தறிந்து இன்புறுவதற்கு உரியது.

`வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்'

-என்று பாடுவார் அப்பர் பெருமான் (திருத்தாண்டகம்- பதிகம்: 6.87). 

நமது பண்பாட்டில் மொழி பெற்றுள்ள பேரிடத்துக்குச் சான்று பகர்கிறது இப்பாடல். அது மட்டுமல்ல, கண்ணுதற் கடவுளே கழகமோடு அமர்ந்து தமிழாய்ந்த பெருமையுடையது தமிழ் நிலம். ஈசனே தமிழ் அகப்பொருளுக்கு இலக்கணம் (இறையனார் அகப்பொருள்) எழுதினார் என்பதும் நம் நம்பிக்கை. ஈசனின் மகனான முருகனோ, செந்தமிழ்க் கடவுளாகவே போற்றப்படுகிறார்.

மொழி என்பது நமது பண்பாட்டின் பிரிக்க முடியாத அம்சம். இந்தப் பண்பாடே, மொழியாலும், வழிபாட்டு முறைகளாலும் ஊடாடி நெய்த சேலை போலத்தான் காட்சி தருகிறது.

பாரதியின் பாஞ்சாலி

-தஞ்சை வெ.கோபாலன்



(மகாகவி பாரதி பிறந்த தினம்: 1882 டிச 11)


"பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்" என்றான் பாரதி. இந்த பாரத புண்ணிய தேசத்தில் தலைசிறந்த இதிகாசங்களாகப் போற்றப்படுபவை இராமாயணமும், மகாபாரதமும். மகாபாரதத்தின் உயிர்நாடி பாஞ்சாலி. பாஞ்சாலிக்கு ஏற்பட்ட துன்பம்தான் அவளை மகாபாரத காப்பியத்தின் உயிர்நாடியாக ஆக்கியது. 

வியாச முனிவரின் மூலநூலான பாரதத்தை அடியொற்றி, அதன் ஒரு பகுதியான பாஞ்சாலியின் சபதத்தை மகாகவி பாரதி கவிதையில் வடித்துத் தந்திருக்கிறான். இந்தப் பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டது;  எழுபத்து மூன்று தலைப்புகளைக் கொண்டது; முன்னூற்றியெட்டு பாடல்களை உள்ளடக்கியது.

வியாசர் மட்டுமல்ல, தமிழில் வில்லிபுத்தூராரும் பாரதக் கதையை எழுதியிருக்கிறார். காப்பியத்தில் சூதுப்போர் சருக்கம் மட்டும் பாரதியின் வாக்கால் பாஞ்சாலி சபதமாக உருவெடுத்திருக்கிறது. காரணம் கதையின் உயிர்நாடி மட்டுமின்றி, பாரதப் போருக்கும் இந்த பாஞ்சாலி செய்த சபதமே காரணமாக ஆகிறது என்பதுதான். 

பாஞ்சாலியின் கதையை பண்டிதர்கள் மட்டுமல்ல, பாமரனும் அறிந்து பாடி உணர்ந்து கொள்ளத்தான் பாரதி இந்தக் காப்பியத்தை விருத்தப் பாக்களாகப் பாடாமல், நொண்டிச் சிந்திலும், நாடோடிகள் பாடிவந்த ராகங்களையும் இணைத்து பாஞ்சாலி சபத்தை இயற்றியிருக்கிறார். 

துரியோதனின் நெஞ்சில் கொழுந்துவிட்டெரிந்த பொறாமைத் தீயின் விளைவு, சகுனியின் சாமர்த்தியத்தால் சூதாட்டத்தில் வந்து முடிந்தது. ஆட மனமில்லாத தருமனை அரச தர்மம் எனும் சங்கிலியால் பிணைத்து ஆடவைத்த சாமர்த்தியம் சகுனியின் சூதுமனத்தால் முடிந்தது. தொடர்ந்து பலவற்றை இழந்தபிறகு தருமன் மனம் சோர்ந்து அமர்ந்தபோது அவனைத் தூண்டிய சகுனி "நீ இழந்ததெல்லாம் பின்னே, நின்னிடத்தே மீளும், சோர்வடைந்திடாதெ தருமா ஊக்கமெய்து" என்கிறான். துரியனின் நெஞ்சில் விளைந்த தீ, குரு வம்சத்தையே அழிக்கும் பெருந்தீயாகக் கொழுந்து விட்டெரிந்தது, பாஞ்சாலி செய்த சபதத்தின் பயனாக. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றுவிடாமல், கோவையாகச் சொல் சித்திரமாக வரைந்து காட்டிய பாரதியை என்ன சொல்லிப் போற்றுவது? 

லாஜ்பத்ராய் பிரலாபம் (கவிதை)

-மகாகவி பாரதி
லாலா லஜபதி ராய்

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய்
(பிறப்பு: 1865 ஜன. 28 - மறைவு: 1928 நவ. 17)


(கண்ணிகள்)

நாடிழந்து மக்களையு நல்லாளை யும்பிரிந்து 
வீடிழந் திங்குற்றேன் விதியினையென் சொல்கேனே 1

வேதமுனி போன்றார் விருத்தரா மெந்தையிரு 
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ? 2

ஆசைக் குமர நருச்சுனனைப் போல்வான்றன் 
மாசற்ற சோதி வதனமினிக் காண்பேனோ? 3

அன்றிலைப்போன் றென்னை யரைக்கணமே னும்பிரிந்தால் 
குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ? 4

வீடு முறவும் வெறுத்தாலு மென்னருமை 
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே? 5

அர்த்தமுள்ள மனு தர்மம்

-ஆசிரியர் குழு



பிறப்பால் வருவது அல்ல உயர்வு தாழ்வு; ஒருவன் செய்யும் செயலால் வருவதே. இதற்கு சிறந்த உதாரண புருஷர்கள், வால்மீகியோ, மகரிஷி வியாசரோ, காளிதாசரோ, ரிஷி விஸ்வாமித்ரரோ பிறப்பால் பிராமணர் அல்ல. 

ஆனால், இந்து மதத்தைத் தாக்க பகைவர்கள் எடுக்கும் முதல் ஆயுதம், மனு தர்மம், ஏற்றத்தாழ்வை உருவாக்கும் வர்ணாசிரமத்தை ஆராதிக்கும் நூல் என்பது.  அது உண்மையா? வாருங்கள் பகுத்தறிவோம்...
 
மனு தர்மம் என்றால் என்ன?
 
மனு தர்மம் என்பது மானவ தர்மம் - அதற்கு மானுட அறம் என்று பொருளாகும்.

பாரத்ததில் பிறந்த அனைவரும் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறிய நூல்.

நமது பண்பாட்டில் ஸ்ருதிகள், ஸ்மிருதிகள் இரண்டும் முக்கியமானவை. ஸ்ருதிகள் என்பவை மாற்ற இயலாதவை. நால் வேதங்களும் பகவத்கீதையும், பிரமாணங்களும், உபநிடதங்களும் பாரத்தின் ஞானக் கருவூலங்கள். அவை ஸ்ருதிகள் ஆகும். அவை எக்காலத்து மாற்ற இயலாதவை. 

பெண்களைப் போற்றும் மனு ஸ்மிருதி

-ஆசிரியர் குழு


மனு ஸ்ம்ருதியில் பெண்களைப் பற்றி சொல்லியிருப்பது என்ன?


மனு ஸ்மிருதி 3-56
யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
***
மனு ஸ்மிருதி 9-3
பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனே
ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யம் அர்ஹதி
உயர்ந்த மணிபோன்ற, ரத்தினம் போன்றவளான பெண்மணியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இளம் வயதில் தந்தையும், வளர்ந்த பின் கணவனும், வயதான காலத்தில் மகன்களும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்காமல் விட்டுவிடக் கூடாது.
***
மனு ஸ்மிருதி 3-55
பித்ருபிர் ப்ராத்ருபிச் சைதை பதிபிர் தேவரைஸ் ததா
பூஜ்யா பூஷயிதவ்யாச்ச பஹு கல்யாணம் ஈப்ஸுபி
தந்தை, சகோதரர், கணவர், மைத்துனர் போன்ற ஒவ்வொருவரும் தாங்கள் நலமாக வாழ நினைத்தால், அவரவர் வீட்டில் உள்ள பெண்களை மதித்துக் கௌரவிக்க வேண்டும்.
***
மனு ஸ்ம்ருதி 3-58
ஜாமயோ யானி கேஹானி சபந்தி அப்ரதிபூஜிதா
தானி க்ருத்யாஹதானீவ வினச்யதி ஸமந்தத
எந்தெந்த இடங்களில் பெண்கள் தகாத, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் இகழப்பட்டு, அவமானப் படுத்தப் படுகிறார்களோ, அந்த இடமே விஷம் உண்டவன் அழிவது போல் அழிந்து போகும்.
***
மனு ஸ்ம்ருதி 9-26
ப்ரஜனார்த்தம் மஹாபாகா பூஜார்ஹா க்ருஹதீப்தய
ஸ்த்ரிய ஸ்ரீயச்ச கேஹேஷு ந விசேஷோஸ்தி கச்சன
தாய்க்குலமான பெண்கள் போற்றத்தக்கவர்கள், வணங்கத் தக்கவர்கள், இல்லத்தின் விளக்காய் விளங்குபவர்கள், வீட்டின் மகாலட்சுமியாய்த் திகழ்பவர்கள்.
***
மனு ஸ்ம்ருதி 9-11
அர்த்தஸ்ய ஸங்க்ரஹே சைனாம் வ்யயே சைவ நியோஜயேத்
சௌசே தர்மே அன்னபக்த்யாம் ச பாரிணாஹ்யஸ்ய சேக்ஷணே
வீட்டின் பொருளாதாரம், தூய்மை, சுகாதாரம், வீட்டில் நடக்கும் வழிபாடுகள், உண்ணும் உணவு ஆகிய விஷயங்களில் பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும்.
***
மனு ஸ்ம்ருதி 9-90
ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம்
வயது வந்த பெண், தனது கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
***
மனு ஸ்ம்ருதி 9-130
யதைவாத்மா தத புத்ர புத்ரேண துஹிதா ஸமா
தஸ்யாம் ஆத்மனி திஷ்டந்த்யாம் கதம் அன்யோ தனம் ஹரேத்
மகனுக்கு நிகராக மகளையும் கருத வேண்டும். தந்தைக்கு ஒரு மகள் இருக்கும் போது, வேறொருவர் எப்படி அவர் சொத்தைக் கொண்டு செல்ல முடியும், மகளுக்கே சொத்தில் உரிமை உண்டு.
***
மனு ஸ்ம்ருதி 8-28
வசா அபுத்ராஸு சைவம் ஸ்யாத் ரக்ஷணம் நிஷ்குலாஸு ச
பதிவ்ரதாஸு ச ஸ்த்ரீஷு விதவாஸ்வாதுராஸு ச
பிள்ளையில்லாத, கணவனை இழந்த பெண்களோ, அல்லது கணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களோ நாட்டில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
***
மனு ஸ்ம்ருதி 8-352
பரதாராபிமர்சேஷு ப்ரவ்ருத்தான் ந்ரூன் மஹீபதி
உத்வேஜன கரைர்தண்டை சின்னயித்வா ப்ரவாஸயேத்
பெண்களின் கற்புக்குக் கேடு விளைவிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். பிறர் இத்தகைய தவறைச் செய்வதற்கே அஞ்சும் அளவுக்கு அந்த தண்டனை இருக்க வேண்டும்.

***

குறிப்பு:

செம்மையான மொழியான சம்ஸ்கிருதமும் தெரியாது; பாரதத்தின் தொன்மையான சட்ட நூலான மனு ஸ்மிருதியையும் தெரியாது; ஆனாலும், அதீத ஹிந்து வெறுப்புடன் தமிழகத்தின் சில சிற்றறிவுக் கும்பல்கள் மனு ஸ்மிருதி குறித்து தவறான பிரசாரம் செய்து வருகின்றனர்.

மனு ஸ்மிருதியில் பெண்களை மோசமாக குறிப்பிட்டிருப்பதாக, ஏதோ ஒரு ஆங்கிலேயர் எழுதிய நூலை அடிப்படையாக வைத்துக் கொண்டு, வம்பு வளர்க்கும் வகையில் வெறுப்பூட்டும் துஷ்பிரசாரத்தில் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள்.

அந்தக் கயவர்களுக்கு சில எழுத்தாளர்களும் அரசியல் கட்சியினரும் துணை போகின்றனர். அந்த நாசகாரர்களால் நமது பண்பாட்டையோ, நெடிய பாரம்பரியம் கொண்ட ஹிந்து தர்மத்தையோ அழித்துவிட முடியாது. எனினும், மனு ஸ்மிருதியில் பெண்களைப் பற்றி என்ன கூறி இருக்கிறது என்பதை மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது நமது கடமை. அதற்காகவே, அரைகுறை அறிவுஜீவிகளின் தவறான பிரசாரத்தை உடைத்தெறியும் வகையில், மேற்கண்ட சில சுலோகங்கள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.




நான் மனுவை ஆதரிக்கிறேன் (கவிதை)

-பி.ஆர்.மகாதேவன்


நான் மனு தர்மத்தை
நேற்று ஆதரித்தேன்;
இன்று ஆதரிக்கிறேன்;
நாளையும் ஆதரிப்பேன்.

ஏனென்றால்,
அது கிரிக்கெட் ஆணாதிக்க மாஃபியாபோல
பெண்களை அரை ஆடைகளுடன்
ஒவ்வொரு நான்குக்கும் ஒவ்வொரு ஆறுக்கும் ஆடச் சொல்லாது.

தேசிய முரசு- 200-வது நாள் விழா

-ஆசிரியர் குழு



தேசிய சிந்தனைக் கழகத்தின் தினசரி மின்னிதழ் 'தேசிய முரசு' 200-வது நாள் சிறப்பு காணொலிக் காட்சி நிகழ்ச்சி கடந்த நவ. 6-இல் ஜூம் செயலி வாயிலாக நடைபெற்றது.

தேசிய சிந்தனை கழகம் நடத்தி வரும் தினசரி மின் இதழான  ‘தேசிய முரசு’ தொடங்கி 07.11.2020 தேதியுடன் 200 நாட்கள் நிறைவடைகிறது. அதனையொட்டி இந்த சிறப்பு நிகழ்ச்சி காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.

தமிழகத்தின் புரட்சிக் குரல்

-ஆசிரியர் குழு

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி


எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
(பிறப்பு: 1889, டிச. 4 - மறைவு: 1978, மார்ச் 14)


நீலகண்ட பிரம்மச்சாரி
- இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ‘புரட்சி இயக்க’ நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன். தனது இளம்வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர் நீலகண்டன்.

இவரது வாழ்க்கையின் பெரும்பகுதியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த சிறைகளில் கழித்தவர். இவர் ஒருவருக்காக இருபதுக்கு மேற்பட்ட சிறை அறைகள் கொண்ட பகுதியில் நடுவில் ஓர் அறையைத் தேர்ந்தெடுத்து அதில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டவர். இப்போதைய பாகிஸ்தானிலுள்ள முல்டான் சிறையிலும், பர்மாவில் ரங்கூன் சிறையிலும் அடைபட்டுக் கிடந்தவர். 

தனது வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கையில் விரக்தியுற்று, சந்நியாசம் பெற்று மைசூர் மாநிலத்தில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து தனது 88 -வது வயதில் 1978, மார்ச் 14-ஆம் தேதி காலமானவர்.

நம் காலத்தில், நம் கண்முன்பாக வாழ்ந்து மறைந்த இந்த வீர புருஷனின் வரலாற்றை மக்கள் மறந்துவிடக் கூடாது.

அக்காரக்கனியும் அமரகவியும்

-திருநின்றவூர் இரவிக்குமார்

கவிச் சக்கரவர்த்தி கம்பர்



மகாகவி பாரதியார் பன்மொழி வித்தகர். அவர்

"யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல் இனிதாவது
எங்கும் காணோம் "

என்றார்.

பன்மொழி வித்தகராயினும், தமிழ் அவரது தாய் மொழி என்பதால் அவருக்கு இந்தச் சாய்வு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு காரணத்தைச் சொல்கிறார்:

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் 
பூமிதனில் யாங்கணும் கண்டதில்லை" 

முதலில் கம்பரைச் சொல்லுமளவுக்கு அவரிடம் என்ன கண்டுவிட்டார் என்று கேட்பவர்களுக்கு.....

"எல்லையொன் றின்மை யெனும் பொரு ளதனை
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழ்ச்
சாதியை யமரத் தன்மை வாய்ந்ததுவென்று
உறுதி கொண்டிருந்தேன்! "

என்றுரைக்கிறார்.

இதுதான் என்று வரையறுத்துக் கூற முடியாத கடவுளை ஒரு கோட்டோவியமாக தன் தமிழால் வரைந்து காட்ட முயல்கிறார் கம்பர். ஆகவே தமிழ் அமரத் தன்மை வாய்ந்தது என்கிறார்.

முன்னொரு காலத்தில்...

-சுந்தர்ராஜசோழன்



1925-இல் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நம் நாட்டு மஹான்களை அறிமுகப்படுத்துகிற புத்தகம் ஒன்றை பாடத்திட்டமாக வைத்துள்ளார்கள். 

அதில் சுந்தரமூர்த்தி நாயனார், ஔவையார், சங்கராச்சாரியார், தாயுமானவர், பட்டினத்தார், விவேகானந்தர் என ‘மஹான்களின் சரித்திரம்’ என்று 17 பேரைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். இதில் வள்ளல் பச்சையப்ப முதலியார் பெயரும் உள்ளது. ஆங்கிலேய ஆட்சி நடப்பதால் ஐந்தாம் ஜார்ஜ் பெயரும் இடம்பெற்றிருக்கிறது கட்டாயத்தின் பேரில் என நினைக்கிறேன்.



மகாகவி காளிதாசனின் சரித்திரத்தில் “நாம் வசிப்பது இந்து தேசம். இதற்கு முற்காலத்தில் பரதகண்டம் எனப் பெயர்.இது நாகரீகத்தில் அனேக ஆயிர வருஷங்களாக முதிர்ச்சி அடைந்திருக்கிறது.மேனாட்டார்களுடைய நாகரீகங்கள் எல்லாம் சிலநூறு வருஷங்களுக்கு உட்பட்டவைதாம்” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்கள். 

ஒரு கல்வித்திட்டம் மாணவனை முதலில் பெருமை கொள்ளத்தக்கவனாக உணர வைக்க வேண்டும். நமது மாநிலத்தில் தற்போது நடப்பது என்ன?

குறிப்பு:

மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு. சுந்தர்ராஜசோழன், பிரபலமான முகநூல் பதிவர். தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் வகையில், கருத்து யுத்தத்தை முகநூலில் நடத்தி வருகிறார்.






ஊடக சுதந்திரம் காக்க தே.சி.க. குரல்!

-ம.கொ.சி.இராஜேந்திரன்

பத்திரிகையாளர் அர்ணாப் கோஸ்வாமி
மும்பையில் கைது செய்யப்பட்ட காட்சி

பத்திரிகை செய்தி


ரிபப்ளிக் டி.வி. தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி கைது:

தேசிய சிந்தனைக் கழகம் கண்டனம்


சென்னை- 4.11.2020

ரிபப்ளிக் டி.வி. செய்தி சேனலின் தலைமை ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. அர்ணாப் கோஸ்வாமி இன்று காலை (4.11.2020) மும்பை போலீஸால் அவரது வீட்டில் அடாவடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தேசிய சிந்தனைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை தேசநலனில் அக்கறை உள்ள அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

ரிபப்ளிக் டி.வி. மூலமாக, இந்திய விரோத சக்திகளை அம்பலப்படுத்தி வந்தவர் அர்ணாப் கோஸ்வாமி. அவரது சேனலுக்கு ஸ்டூடியோ அமைத்துக் கொடுத்த அரங்க அலங்கார நிபுணர் திரு. அன்வய் நாயக்கும் அவரது தாயும் 2018-இல் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு, ரிபப்ளிக் டி.வி. நிறுவனம் தனக்குக் கொடுக்க வேண்டிய ரூ. 80 லட்சம் கட்டணத்தைக் கொடுக்காததே காரணம் என்று தற்கொலைக் குறிப்பு எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதனை விசாரித்த மும்பை போலீஸ் அந்தப் புகாரில் முகாந்திரமில்லை என்று வழக்கைக் கைவிட்டுவிட்டது. 2018-இல் அவர் மீதும் அவர் சார்ந்த நிறுவனம் மீதும் தொடுக்கப்பட்ட அந்தக் குற்ற வழக்கை மீண்டும் தூசுதட்டி, அவரை தற்போது மகாராஷ்டிர அரசு கைது செய்துள்ளது. இதற்கு அவர் மீதான தனிப்பட்ட பகையே காரணமாகும்.

நிஷ்காம்ய கர்மம்!

– கவிஞர் வாலி

கவிஞர் வாலி
(பிறப்பு: 1931 அக். 29 - மறைவு: 2013 ஜூலை 18)


 

‘கடவுள் இல்லை;
கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை!’

-சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு! எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு. டி.எம்.எஸ்.

நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள்.

பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலையைச் சுற்றிப் படமாக்கப்பட்டது, டைரக்டர் திரு.யோகானந்தால்!

கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்; டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம். இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’.

முதல் குடியரசுத் தலைவர்

 -சேக்கிழான்

பாபு ராஜேந்திர பிரசாத்

பாபு ராஜேந்திர பிரசாத்

(பிறப்பு: 1884, டிச. 3 - மறைவு: 963, பிப். 28)



பாரதக் குடியரசு அமைந்ததில் பெறும் பங்கு வகித்தவர் பாபு ராஜேந்திர பிரசாத். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக வீற்றிருந்து அவர் ஆற்றிய பணிகளுக்காக, குடியரசு என்ற முறையில் நாடு அவருக்கு என்றும் நன்றி செலுத்தும்.

சி.வி.ராமனைத் தெரியுமா?

-ஸ்டான்லி ராஜன்


சர். சி.வி.ராமன்



தமிழனுக்கு அறிவில்லை அவன் முட்டாள்; அவனுக்கு விஞ்ஞானம் தெரியாது என்பதெல்லாம், ஈரோட்டுக்காரன் சொல்லி காஞ்சிபுரத்தான் கூலிக்கு பேசிய பொய்.

அங்கு கல்லணை, பெரிய கோயில் காட்டும் அளவு அறிவாளிகள், மருத்துவம் முதல் மகா ரகசியங்களை எளிதாகச் சொன்னவர்கள் இருந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக கடந்த நூற்றாண்டிலும் நிறைய பேர் இருந்தார்கள்.
அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடப்பட்டார்கள்.

ஸ்ரீனிவாச ராமானுஜன் போலவே கொண்டாடப்பட்ட தமிழர் சி.வி.ராமன்; சந்திரசேகர வெங்கட்ராமன். திருச்சி, திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவிரிக் கரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர்.

இயற்பியலில் அவர் மேதை. சென்னை, விசாகபட்டினம் என படித்தவர்தான்.  ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது. பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் மிக ஆரவாரமாய் அவரைக் கொண்டாடியது, இதோ நோபல் பரிசு என கொடுத்து கௌரவித்தது.
ஆம், வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் தோன்றுகின்றது என சொன்ன முதல் விஞ்ஞானி அவர்தான்.

ஆழ்வாரான மன்னர்

-செங்கோட்டை ஸ்ரீராம்


திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்

(திருநட்சத்திரம்: கார்த்திகை -கிருத்திகை)
(கார்த்திகை - 14 * 29.11.2020)

காவிரி நதி பாய்ந்து வளப்படுத்தும் பூமி சோழ வள நாடு. அந்த நாட்டின் பல உட்பிரிவுகளில் திருவாலி நாடு என்பதும் ஒன்று. அந்நாடு தன்னகத்தே பல ஊர்களைக் கொண்டது. அவ்வூர்களுள் சிறப்புற்றுத் திகழ்வது திருக்குறையலூர் என்ற ஊர்.

இந்தத் திருக்குறையலூரில், நான்காம் வர்ணத்தில், ஆலிநாடுடையாருக்கும் அவருடைய மனைவி வல்லித்திரு அம்மைக்கும் (பொ.யு.பி. 8-ம் நூற்றாண்டு) அவதரித்தார் திருமங்கையாழ்வார்.

ஆலிநாடர் சோழனின் படைத் தலைவராக இருந்தார். வீரமும் அன்பும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர் அவர். ஆலிநாடர் தனக்குப் பிறந்த அந்தப் பிள்ளைக்கு  ‘நீலன்’ என்று பெயரிட்டு அழைத்தார். நீலன் தம் ஐந்தாம் வயது தொடங்கி கற்க வேண்டியவற்றைக் கற்று  பெரும் புலமை பெற்றார். வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலைபெற்று வளர்ந்தார்.

திருமாலடியாரான அவர்  திருமாலின் திருவருளாலே ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி என நான்கு வகைக் கவிகளையும் பாடும் திறமையும் வல்லமையும் பெற்றிருந்தார்.

வீரர் மரபில் தோன்றியவர் என்பதால், வாள், வில், வேல் முதலிய படைக் கலங்களை பயன்படுத்தி போர் செய்வதில் வல்லவராகத் திகழ்தார். யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகிய நான்கு சேனைகளையும் நல்ல முறையில் நடத்திச் சென்று, பகைவரை சுலபமாக வெற்றி கொள்ளும் தன்மை அவருக்கு வாய்க்கப் பெற்றிருந்தது. அவருடைய கல்வியறிவையும் திறமைகளையும் வீரத்தையும் கண்ட சோழ மன்னன் அவரைத் தன் படைத் தளபதியாக ஆக்கிக் கொண்டான்.

Swami Vivekananda in the foot-steps of Bhagwan Ramanuja

-Dr.R.Ilango


“Elevation
 of the masses without injuring their religion”-this was the unique way of Swami Vivekananda to uplift the down-trodden.

And this was marvelously in tune with the spirit of Ramanuja in dealing with the oppressed community whom he affectionately called as “Thirukulathars.”

The society was in limbo ever since Ramanuja breathed spirituality in the oppressed and ordinary. 


There was nobody to grasp the spiritual baton from Ramanuja though many appeared after him in the national scenario of Social Reformers.


Such reformers held religion accountable for the pitiable plight of the down-trodden, not knowing the real culprit-“priest craft”.


In their zeal to crush caste system, they ignorantly pulled down the grand structure of religion too, but all their attempts miserably failed.


“…beginning from Buddha down to Ram Mohan Roy…” all held caste as a religious institution while all the time caste was a “…crystallized social institution…”  Vivekananda affirmed.


It was Vivekananda who took the cue from him after a gap of nine centuries and rejuvenated the ideas of Ramanuja injecting fresh blood. 

Eknathji - A Short Biography

 

Eknath Ranade 

Eknath Ranade 
(19 November, 1914   -  22 August 1982) 


Spirit behind Vivekananda Rock Memorial & Vivekananda Kendra

Shri Eknath Ranade was the youngest of eight siblings (four brothers and four sisters). He was born on 19 November, 1914, at Timtala in Amaravati District of Maharashtra.

The Ranade family was originally from Vilhe village in Rajapur Taluk of Ratnagiri District in Konkan region of Maharashtra. Shri Eknath Ranade’s father was Shri Ramakrishnarao Vinayak Ranade who served in the Great Indian Peninsular Railways in Vidrabha. He was married to Ramabai of Barve family from Pune.

Nath (as Shri Eknath Ranade was called in his childhood) was sent to Nagpur in 1921 to stay with his eldest brother Baburao. He had his primary education in Government Primary School in Phadanavispura at Nagpur. When his father’s health failed, the whole family moved to Nagpur and stayed with the eldest son.

Eknathji - Man with capital M

-Prof. K.N.VASWANI 


 Eknath Ranade



Eknathji Ranade: The Man and his Mission

Shri Eknath Ranade, President, Vivekananda Rock Memorial Committee and Vivekananda Kendra, Kanyakumari, Is no more. But he lives beyond death in the inspiring, magnificent Vivekananda Rock Memorial off the Kanyakumari shore and even more in the living, growing memorial–Vivekananda Kendra–a spiritually ­oriented Service Mission, consisting of men and women, specially young men and young women, dedicated to the twin tasks of man-­making and nation-building inspired by the ideals of Swami Vivekananda – Renunciation and Service, Tyaga and Seva. Eknathji lived and died to build, to foster, to nourish with his vision, his will, his wisdom, his life-long Sadhana and Tapas, his sweat, his tears, his blood remaining dedicated and dynamic to the last day of his life, 22nd of August 1982, when he breathed his last at 2.45 p. m. after a sudden, massive heart attack in his office at Madras while on his way to Kanyakumari. He was returning after a long tour which had taken him to Kashmir, Delhi, Ajmer, Ahmedabad, Bombay, Nagpur, Poona, Sholapur, etc., to visit the various Vivekananda Kendra Branches and to meet the life-workers of the Vivekananda Kendra, whom he had trained with such care and affection for devoted, selfless service, which was both a passion with him, as also an inexhaustible source of abiding inspiration to him, which kept him ever a tireless worker, undeterred by difficulties, undaunted by obstacles and problems, accepting them as challenges, as hurdles to be crossed with courage and confidence, treating them as opportunities for strengthening oneself for more work, harder work, more dedicated work, more selfless work.

பட்டாசு வெடி பாப்பா! (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்



பட்டாசு வெடி பாப்பா, பட்டாசு வெடி! 
பாரதம் ஒளிரவே பட்டாசு வெடி!
முட்டாளரக்கர்,  இருட்டுச் சட்டை
பட்டாளமொழியப் பட்டாசு வெடி! 


தென்கடல் குமரியில் காலூன்றி, 
வெண்குளிர் இமயத்தில் முகங்காட்டும்
பண்பொளிர் பாரத அன்னை புகழ்
பாரெல்லாம் ஒலிக்கவே பட்டாசு வெடி!