13/11/2020

தேசிய முரசு- 200-வது நாள் விழா

-ஆசிரியர் குழு



தேசிய சிந்தனைக் கழகத்தின் தினசரி மின்னிதழ் 'தேசிய முரசு' 200-வது நாள் சிறப்பு காணொலிக் காட்சி நிகழ்ச்சி கடந்த நவ. 6-இல் ஜூம் செயலி வாயிலாக நடைபெற்றது.

தேசிய சிந்தனை கழகம் நடத்தி வரும் தினசரி மின் இதழான  ‘தேசிய முரசு’ தொடங்கி 07.11.2020 தேதியுடன் 200 நாட்கள் நிறைவடைகிறது. அதனையொட்டி இந்த சிறப்பு நிகழ்ச்சி காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருச்சி அண்ணா பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.ராஜேந்திரன், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் வரலாற்றுச் செய்திகளையும், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடகத்தின் முக்கியத்துவம் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

இணைய அழைப்பிதழ்.


முன்னதாக, 'தேசிய முரசு' இதழ் குறித்து கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வரும், தேசிய சிந்தனைக் கழகத்தின் சிவகங்கை மாவட்ட தலைவருமான பேராசிரியர் வெ. மாணிக்கவாசகம் எடுத்துரைத்தார்.

தேசிய சிந்தனைக் கழகத்தின் மகளிர் அணி மாநிலச் செயலாளர் ஸ்ரீமதி.மஹதிதேவி வரவேற்புரை வழங்கிட, தேசிய சிந்தனைக் கழக பேராசிரியர் குழுவின் பொறுப்பாளர் சங்கரதாஸ் மகிழ்வுரை வழங்கினார்.

இணைய நிகழ்வின் படப்பதிவு


நிகழ்ச்சியை அருணா ஆதவன் தொகுத்து வழங்கினார். தேசிய சிந்தனைகழக பேராசிரியர் குழு பொறுப்பாளர் பேராசிரியர் முரளிதரன் இறை வணக்கமும் தேசிய கீதமும் பாடினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என தொண்ணூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.




No comments:

Post a Comment