16/08/2021

ஆவணி- 2021 மின்னிதழ்

 

உள்ளடக்கம்


        -பேரா. பூ.தர்மலிங்கம்

  • ***

.

அமுதமொழி - 20

எவருடைய வாழ்க்கையையும் பிறர் யாராலும் வடிவமைக்க முடியாது. உனது வெற்றியும் மகிழ்ச்சியும் உன்னிடமே உள்ளன. எனவே உன்னைப் பற்றி யோசி. உனது வாழ்க்கையை நீயே திட்டமிடு.

- மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வரையா.

பாரதீஸ்வரீ! (கவிதை)

-ஒரு தேசபக்தர்


(பாரத  சுதந்திரத்தின் 75 ஆண்டு சிறப்புப் பதிவு)

பாரதீஸ்வரீ....பாபநாசினி!
பாரதமெனும் ஞானக்கோயில் 
ஞானாம்பிகை நீயே! 

பாரதீஸ்வரீ... பாபநாசினி!

குமரி முனை தவம் செய்யும் பகவதி நீயே!
காஷ்மீரப் பனிமலையைக் காக்கும் வைஷ்ணவி!
சிருங்க பீட சங்கரரின் ஸாரதை நீயே...
காளிகட்ட ராமகிருஷ்ண பவதாரிணி நீயே... 

(பாரதீஸ்வரீ...)

ஆவணித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு


திருமுருக கிருபானந்த வாரியார்


ஆவணி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:
ஸ்ரீ பிலவ வருடம், ஆவணித் திங்கள்  (17.08.2021 - 16.09.2021)

ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள் (தமிழாக்கம்)

-ஜடாயு



ரிக்வேதம் – முதல் மண்டலம், முதல் சூக்தம் 
(ரிஷி: மதுச்சந்தா விஸ்வாமித்ரர்)

ஓம்
அக்னியே புரோகிதன்*
வேள்வியின் தேவன்
ரித்விக், ஹோதா
செல்வங்களின் இருப்பிடம்.
போற்றுவோம்!
பழைய ரிஷிகளும் புதியோரும் போற்றும் அக்னி
தேவர்களை இங்கு அழைத்து வருக!

புகழும் உன்னத வீரியமும் கொண்டு
நாள்தோறும் வளரும் செல்வம்
அக்னியால் பெறுகிறோம்.

அக்னி! நீ எங்கும் சூழ்ந்து நிறையும் வேள்வி
தவறாமல் தேவர்களைச் சென்றடைகிறது.

முதல் புரோகிதன்
உட்பொருள் உணரும் கவி
சத்தியமானவன்
உன்னத மேலோன் தேவன்
அக்னி
தேவர்களுடன் இங்கு வருக!

இந்தியா மாநிலங்களின் ஒன்றியமா?

-முரளி சீதாராமன்


‘India, that is Bharath, a Union of States’ என்று அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டு இருப்பதை வைத்துத்தான் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளும், இடதுசாரிகளும், 'லிபரல்'களும் சொற்சிலம்பம் ஆடுகிறார்கள்!

அதாவது பாரதம் என்பது ‘மாநிலங்களின்’ ஒன்றியமாம்! மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து இந்தியாவை உருவாக்குகிறதாம்! மத்திய அர்சை ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பதில் சிலர் புளகாங்கிதம் அடைகிறார்கள்!

முதலில் - 'States'- என்றால் என்ன என்று பார்ப்போம்! அரசியல் சட்டம் என்பது சட்டமேதை  டாக்டர் அம்பேத்கர் தலைமையில், சட்ட மேதைகளைக் கொண்ட குழுவால் வடிவமைக்கப்பட்ட போது - அதாவது பாரத தேசம் சுதந்திரம் அடைந்த புதிதில் - STATES - என்பவை அதன் இப்போதைய பொருளில் இல்லை!

அதாவது மொழிவாரி மாகாணங்களாக இல்லை! மொழிவாரி மாநிலப் பிரிவினை பிற்காலத்தில் (1953) வந்தது - சுதந்திரம் வந்த புதிதில் அல்ல!

அப்படியானால் சுதந்திரம் அடைந்த சமயத்தில், இந்த STATES  என்பது எந்த அர்த்தத்தில் இருந்தது?

மழையில் நனைந்த யானை (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்


பிரமாண்டமாய் யானை வந்தது
யானை வந்ததும் வீதி சிறுத்தது.

யானைச் சாணம் மிதிக்க வந்தவர்
துவார விட்டம் கண்டு சிரித்தனர்.

குரைக்க பயந்து நாய்கள் பதுங்கின
சிறகுகள் உதிர கோழிகள் ஓடின.

மாராப்பு விலகலை பெண்கள் மறந்தனர்
மாயானை நடை கண்டு கண்கள் வியந்தனர்.

ஒரு புரட்சியாளரின் கடைசிக் கடிதம்

-சி.எம்.அமிர்தேஸ்வரன்

சூர்யா சென்

சுதந்திரப் போராட்ட வீரரும், மாஸ்டர்தா என்று மற்ற போராளிகளால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான மாஸ்டர் சூர்யா சென் தான் தூக்கில் ஏற்றப் படுவதற்கு முதல் நாள் சக போராளிகளுக்கு எழுதிய கடிதம் இது...

உயர்ந்த லட்சியமும் ஒற்றுமையுமே நான் விடைபெறுமுன் அனுப்பும் கடைசி செய்தியாகும். தூக்குக் கயிறு என் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. மரணம் என் வாயிற்கதவைத் தட்டுகிறது. மனம் ஒரு நிரந்தரமான நிலையை எட்டுகிறது. இது ஒரு ஆத்ம சாதனைக்கான நேரம். இது மரணத்தை ஒரு நண்பனைப் போலத் தழுவிக் கொள்ளத் தயாராகும் நேரம். அதே வேளையில் கடந்த ஒளி மிகுந்த நாட்களை எண்ணிப் பார்க்க வேண்டிய தருணமுமாகும்.

என் ஆருயிர் சகோதர சகோதரிகளே! என் தனிமையை உடைத்து, மகிழ்ச்சி கொள்ள பழைய இனிய நினைவுகளை எண்ணிப் பார்க்கிறேன். இந்த இருண்ட வேளையில் உங்களுக்காக என்னால் எதை விட்டுச் செல்ல முடியும்?

வள்ளுவர் கண்ட அகவாழ்வு

-பேரா. அ.ச.ஞானசம்பந்தன்



மருதத்திணை வளர்ச்சி

மனிதன் ஆதியில் பச்சை இறைச்சியைத் தின்று பல காலம் வாழ்ந்தான்; அதன் பின்னர்ப் பல்லாயிரம் ஆண்டு கள் கழித்துச் சில விலங்குகளைப் பிடித்துப் பழக்கித் தனக்கு வேலை செய்ய அவற்றைப் பயன் படுத்தினான். இதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்துத்தான் 'குடும்பம்' என்ற ஒன்றை வைத்து நிலையான வாழ்க்கை வாழத் தொடங்கினான். இக் குடும்ப வாழ்க்கையிலேதான் தமிழ் இலக்கணங்கூறும் 'மருதத்திணை' தோன்றலாயிற்று. மருதத் திணையில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வழி வகுத்துக் கொண்டன. இப்பொழுதுதான் மனிதனுடைய சமுதாய வாழ்க்கை (Social life) தொடங்கிற்று. இத்தகைய வாழ்க்கையில் பல அல்லல்களும் உடன் தோன்றின. நன்மையையும் தீமையுங் கலந்துதானே உலகம் வாழ்கிறது! இதுவரை ஒருவரைப் பற்றியுங் கவலை கொள்ளாமல் தன் நலன் ஒன்றையே கருதி வாழ்ந்த மனிதனுக்கு, இப்பொழுது புதிய அனுபவங்கள் தோன்றலாயின. இவற்றில் ஓரளவு மகிழ்ச்சியும் ஓரளவு வெறுப்புங் காணலாயினான் மருதநில மனிதன். தன்னுடன் வாழ்வை நடத்த வந்துள்ள ஒரு பெண்ணின் நலத்தீங்குகளில் தானும் பங்கு கொள்ளத் தொடங்கியதே அவனது புதிய அனுபவம். மேலும், வீட்டினுள் தங்கியிருக்கும் அவளுக்கும் சேர்த்து உணவு தேடவேண்டிய பொறுப்பும் அவனதா யிற்று. நாளாவட்டத்தில் அவர்கள் வாழ்வின் பயனாகத் தோன்றியுள்ள புது உயிர்கட்கும் உணவு சேகரிக்க வேண்டிய கடமை அவனதாயிற்று. இக் கடமைகளில் ஓரளவு மகிழ்ச்சி இருந்ததை அம மனிதன் உணராமற் போகவில்லை. இம் மகிழ்ச்சியே உலகிடை மனிதன் சமுதாய வாழ்க்கை வாழ வழி செய்தது. தனிக் குடும்பங்கள் பல ஓரிடத்தில் தங்கி வாழ வேண்டுமாயின், ஒவொருவரும் தம் உரிமையைச் சிறிது இழக்கத்தான் வேண்டும். சுதந்தரத்துடன் வாழ்ந்து பழகிய மனிதனுக்குத் தன் விருப்பம் போலச் செயல் செய்யும் உரிமை, சிறிது குறைந்தாலும் அதிக மனக் கசப்புத் தோன்றத்தானே செய்யும்? அவ்வித நிலைமையிலிருந்து அவன் விடுபட ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழிதான் ஊர் முழுவதையும் ஒரு குடும்பமாக நினைத்து வாழும் முறை. இவ்வித வாழ்க்கை முதலில் வருத்தத்தைத் தரும் ஒன்றாயினும், நாளடைவில் ஓர் இன்பத்தையும் தரலாயிற்று. பிறர்க்கென வாழும் வாழ்க்கையில் ஒப்பற்ற இன்பம் இருத்தலை உணரத் தலைப்பட்ட அன்றுதான் மனிதன் விலங்கிலிருந்து வேறு பிரிந்து வாழ்ந்தான் என்று கூற வேண்டும்.

இரு வகை அறம்

மேற்கூறிய முறையில் ஒரு சமுதாயம் அமைய வேண்டும். ஆனால், சுலபமாகக் கூறிவிட்டோமே தவிர, வாழ்க்கையில் இந்நிலை அமையப் பலகாலம் செல்லும். இத்தகைய சமுதாயத்தை அமைக்கவே குறள் அடிகோலிற்று. உலகிடைப் பிறந்த ஒவ்வொருவனும் வாழ உரிமை பெற்றவன்தான். அவ்வாழ்க்கை எத்தகையதாக அமைதல் வேண்டும்? இல்வாழ்க்கை என்று கூறப்பெறும் இருவர் கூடி வாழும் வாழ்க்கையும், துறவறம் என்று ஒருவனே வாழும் வாழ்க்கையும் உலகிடை உண்டு. இவ்விரு வகையினுள் எதனைக் குறள் போற்றிக் கூறிற்று? இவ்வினாவிற்கு விடை பலர் பலவாறாகக் கூறினர். ஆனால், இவை இரண்டின் அடிப்படையையும் நன்கு ஆய்ந்தால், சில உண்மைகள் நன்கு விளங்கும். துறவி எதன்பொருட்டு வாழ்கிறான்? தன் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு என்று கூசாமல் விடை கூறலாம். ஆனால், இல்வாழ்வான் தன் வாழ்வோடு, பிறர் வாழ்வையும் பயனுடையதாகச் செய்யவே வாழ்கிறான்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை 
(குறள்-41)

ஒரு தேடலின் பாதை - பாரிஸ் டு பாண்டிச்சேரி

- பவித்ரா 


ஸ்ரீ அன்னையுடன்  ‘பவித்ரா’

(அரவிந்தம்-150)

உலகப் போர் பற்றி நீங்கள் சினிமாவில் பார்த்திருக்கலாம். முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் உள்ள முக்கியமான, நடைமுறை வேறுபாட்டை நீங்கள் கவனித்திருக்கலாம். நான்கு ஆண்டுகாலம் நீடித்த முதல் உலகப் போரின் போர் முறையை ‘பதுங்குகுழி போர்முறை’ என்பார்கள். பதுங்கு குழி வெட்டி, அதில் பகல்- இரவு என நாட்கணக்கில் குளிர், மழையைப் பொருட்படுத்தாமல் முடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. நோயிலும், வெறுமையிலும் , சிலநேரங்களில் எதிரிகளின் குண்டுப் பொழிவிலும் என நாட்களை நகர்த்த வேண்டி இருந்தது.

1914-இல் எனது இருபதாவது வயதில் இளம் ராணுவ அதிகாரியாக இருந்தேன். எக்கோல்* பாலிடெக்னிக்கில் ஓராண்டு படிப்பை முடித்து இருந்தேன். அங்கு சேர்வதற்கு முன்பே எனக்கு கொஞ்சம் ராணுவப் பயிற்சி இருந்தது. எனவே 1914 ல் முதல் உலகப் போர் தொடங்கியதும் ஆகஸ்ட் மாதத்தில் நான் ராணுவ பணிக்கு அழைக்கப்பட்டேன். அப்போது பிரான்ஸ் பெருமைப்பட்டுக் கொண்ட 105 பேட்டரி எனப்படும் பீரங்கிப் படையில் சேர்க்கப்பட்டேன்.

அந்த நேரத்தில் என் வயதையொத்த மற்ற இளைஞர்களைப் போல நானும் ஆசாபாசங்களைக் கொண்டிருந்தேன். நான் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்து அவ்வாறு வளர்க்கப்பட்டாலும், எனக்கு மத விஷயங்களில் பெரிய ஆர்வம் இல்லை. பாலிடெக்னிக்கில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்ததால் இவ்வாறு இருந்திருக்கலாம். அதேபோல ஓய்வு நேரத்தில் அமானுஷ்யம் - மனக் கண்ணால் பார்த்தல், டெலிபதி (புலன்கள் இல்லாமல் உள்ளத்தினால் தொடர்பு), மீடியம் (ஆவி உலகத்துடன் தொடர்பு), பெண்டுலம் (ஊசல்) போன்றவை பற்றிப் படித்திருந்தேன். ஆனால் பழகவில்லை.

இப்படி ஒரு புத்தகம், அடுத்த புத்தகம் என யூத மரபில் உள்ள கபாலா (ரகசிய தீட்சை இயக்கம்) பற்றியும், அதன்பின் ரசவாதம் பற்றி என்று, நவீன அமானுஷ்ய வாதிகள் என்று, இந்தியா பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

பிரம்ம ஞான சபை நூல்கள் மூலம் மறுபிறப்பு, கர்மா, ஜீவன் முக்தி, என்றெல்லாம் படித்தேன். மறுபிறப்பு, கர்மா எல்லாம் எனக்குப் புரிந்தது மட்டுமல்ல, அவை சரியானதுதான் என்றும் ஏற்றுக் கொண்டேன். அறிவியலின்படி நிரூபிக்க முடியாது என்று தெரிந்தாலும் என் மனம் அவற்றை இயல்பாக ஒப்புக்கொண்டது; ஏற்றுக்கொண்டது. இந்தியாவிலிருந்து வந்த கருத்துக்களால் என்னுடைய புரிதல் மாறியது. அவை என்னை வேறு ஒரு படிநிலைக்குக் கொண்டு சென்றன.

அன்பு மனைவிக்கு அரவிந்தரின் கடிதம்

-திருநின்றவூர் இரவிக்குமார்

(அரவிந்தம்- 150)

 

 “அவர் (அரவிந்தர்) தேசபக்த கவியாகவும் , தேசியத்தின் வருங்காலத்தை உணர்ந்து கூறிய தீர்க்கதரிசியாகவும், பாரத நாட்டின் மீது பேரன்பு கொண்டவராகவும் மதிக்கப்படுவார். அவர் இந்த உலகை விட்டு மறைந்த பல்லாண்டுகளுக்குப் பிறகும் அவரது பேச்சும் எழுத்தும் இந்த நாட்டில் மட்டுமல்ல கடல்கடந்த தேசங்களிலும் எதிரொலிக்கும்”
 
-சித்தரஞ்சன் தாஸ்

1893-இல் அரவிந்தர் இங்கிலாந்திலிருந்து பாரதம் வந்தார். பம்பாயில் வந்து இறங்கியவுடன் நேராக பரோடாவுக்குச் சென்று அந்த சமஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி ஆனார். சில காலம் கழித்து அங்கு உள்ள கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

பாரதம் வந்த உடனேயே அவருக்கு இங்குள்ள அரசியல் நிலை முழுமையாகப் புரிந்தது. காங்கிரஸ் சில மிதவாத தலைவர்களின் பிடியில் இருந்தது. பெரிய, பரந்த பாரத சமுதாயத்திற்கு காங்கிரஸ் என்ற சிறு அமைப்பின் வழிகாட்டுதலும் பங்களிப்பும் போதுமானதாக இல்லை. ஆங்கில அரசுக்கு எதிராக அது எழுப்பிய குரல் வலிமையற்றதாகவும் அற்பமானதாகவும் இருந்தது. எனவே புதிய தலைமையை உருவாக்கவும், சமுதாயம் முழுமையையும் ஒருங்கிணைத்து போராடவும் தயார்ப்படுத்த வேண்டி இருந்தது.

அப்போது பம்பாயில் இருந்து வெளிவந்த ‘ஹிந்து பிரகாஷ்’ (ஹிந்து பேரொளி) என்ற பத்திரிகையில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற தலைப்பில் அரவிந்தர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அதில் காங்கிரசை கடுமையாகத் தாக்கி எழுதினார்.

 “காங்கிரஸின் நோக்கங்கள் தவறானவை. அதை நிறைவேற்றுவதில் கூட அவர்களுக்கு நேர்மையோ, முழுமையான ஈடுபாடோ இல்லை. அதன் தலைவர்களாக இருப்பவர்கள் முற்றிலும் தகுதியற்றவர்கள். குருடனால் குருடர்களை வழிநடத்த முடியாது. குறைந்தபட்சம் ஒற்றைக்கண் இருப்பவராவது வேண்டும்.”

-என்று அரவிந்தர் எழுதினார். 

நீ என் கார்காலம் (கவிதை)

-கவிஞர் நந்தலாலா



சாரல் மழையோடு சார்ந்துவரும் உன் நினைவு.
ஈர இரவை எரியூட்டும் உன் கனவு.

உனக்கும் மழைக்கும் உறவென்ன, ஒட்டென்ன?

மேகத்தின் ஏரிகளில் அன்றில் பறவைகளாய்
ஏதோ ஓர் ஜென்மத்தில் நீந்திக் கிடந்தோமோ?
மேகப் பொதியவிழ மின்னல் முறிந்துவிழ,
தேகத்தில் மண்வாசம் பொங்கக் கலந்தோமோ?
பூந்திவலைச் சாரலிலே
நான் நனைந்த வேளையிலே
கூந்தலிலே எந்தன்
தலை துவட்ட வந்தாயோ?

உனக்கும் மழைக்கும் உறவென்ன, ஒட்டென்ன?

திருமுருகாற்றுப்படை காட்டும் திருமுருகன்

-சுந்தர்ராஜசோழன்



திருமுருகாற்றுப்படையில் ‘தெய்வானை’ என்ற பாத்திரமே இல்லை என்பதாக, முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். அதன் விளைவே இந்தக் கட்டுரை...

திராவிட இனவாதம், தமிழ்த் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழின் அடிப்படையோடு பரிச்சயம் கிடையாது என்பதில் எனக்கு இருவேறு கருத்தே கிடையாது. என் குடும்பம் தொடங்கி நண்பர்கள், புதியவர்கள் என எல்லாத் தரப்பிலும் விரவிக் கிடக்கிறார்கள். எனக்கு பரிச்சயமான இவர்கள் ஒருவருக்கும் கூட எந்தத் தமிழ் மூல நூலோடும் அறிமுகம் இருந்ததில்லை.

இவர்களுடைய வாழ்நாள் எப்படி கழியும் என்றால், யாரோ ஒருவரின் மேடைப்பேச்சும், மேற்கோளும்தான். 

ஆய்வு என்பது, பலவற்றைக் கற்றவன் செய்ய வேண்டியது; ஆனால் இங்கே அதை ஒரு தற்குறி செய்கிறான். அதுதான் பிரச்னை.

அகமே புறம் (தமிழாக்கம்)

-வ.உ.சிதம்பரம் பிள்ளை


ஜேம்ஸ் ஆலனின்  ‘Out from the heart’ என்ற நூலை
வ.உ.சி. ‘அகமே புறம்’ என்று 1916-ல் மொழிபெயர்த்தார். 
அந்த மொழியாக்கமே இங்கு 10 அத்தியாயங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன...

1. அகமும் புறமும்

அகத்தையொத்தே புறம் (வாழ்வு) அமைகின்றது. அகம் இடைவிடாது புறமாகிக் கொண்டிருக்கின்றது. எதுவும் வெளிப்படாமல் இருப்பதில்லை. எது மறைப்பட்டிருக்கிறதோ அது சிறிது காலத்திற்கு மட்டுமே மறைபட்டிருக்கிறது. அது முதிர்ந்து கடைசியாக வெளிப்பட்டே விடுகிறது. வித்து, மரம், மலர், கனி இவை ஒன்றன்பின் ஒன்றாகவும், ஒன்றிலிருந்து ஒன்றாகவும் எந்த முறையில் வெளிப்பட்டு நிலவுகின்றனவோ அந்த முறையிலேயே பிரபஞ்சமும் நிலவுகின்றது. மனிதனது அகத்தின் நிலைமையிலிருந்து அவனது புறத்தின் நிலைமைகள் வருகின்றன. அவனது நினைப்புகள் அவனுடைய செயல்களாக மலர்கின்றன. அவனது செயல்கள் அவனுடைய ஒழுக்கமும் புறநிலைமையுமாகிய கனிகளைக் கொடுகின்றன.

மரம் எப்பொழுதும் பூமியின், அகத்திலிருந்தே வெளிப்பட்டுக் கொண்டிருத்தல் போல, வாழ்வும் எப்பொழுதும் மனிதனது அகத்திலிருந்தே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலத்துள் புதைபட்டுள்ள வித்துக்கள் நாளடைவில் இலைகளாகவும், மலர்களாகவும் கனிகளாகவும் வெளிப்படுதல் போல, அகத்துள் விதைபட்டுள்ள நினைப்புகளும் நாளடைவில் சொற்களாவும், செயல்களாகவும், செய்து முடிக்கப்பட்ட காரியங்களாகவும் வெளிப்படுகின்றன.

மறைபட்டுள்ள ஊற்றுவாய்களிலிருந்து எப்படி ஊற்று நீர் வெளிப்படுகின்றதோ, அப்படியே மனிதனது வாழ்வும் கரைப்பட்டுள்ள அவனது அகமூலங்களிலிருந்து வெளிப்படுகின்றது. நிகழ்காலத்தில் அவன் எந்நிலைமைகளில் இருக்கிறானோ அவையும், நிகழ்காலத்தில் அவன் எவற்றைச் செய்கிறானோ அவையும், அவன் அகத்திலிருந்தே வந்திருக்கின்றன. எதிர்காலத்தில் அவன் என்ன நிலைமைகளில் இருப்பானோ அவையும், எதிர்காலத்தில் அவன் எவற்றைச் செய்வானோ அவையும் அவனது அகத்தினின்றே உற்பத்தியாகும்.

சுகமும் துக்கமும், மகிழ்வும் நோவும், திடமும் அச்சமும், விருப்பமும் வெறுப்பும், அறிவும் மடமையும் அகத்திலின்றி வேறு எங்கும் இல்லை. அவை யாவும் மனோ நிலைமைகளேயன்றி வேறல்ல.

மனிதன் தனது அகத்தின் அரசன்; தனது மனத்தின் காவலன்; தனது வாழ்க்கையாகிய கோட்டையின் தனிக்காப்பாளன், அவன் அந்த முறையில் ஊக்கமேனும் தூக்கமேனும் கொண்டிருக்கக் கூடும். அவன் தனது அகத்தை மேலும்மேலும் எச்சரிக்கையுடன் வைத்துக் கொண்டிருக்கக் கூடும். அவன் தனது மனத்தை அதிகப் பிரயாசத்தோடு பாதுகாத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடும். அவன் நியாயமற்ற நினைப்புகளை நினையாது தன்னைக் காத்துக் கொள்ளக் கூடும். இஃது அறிவு விளக்கத்திற்கும் இன்பப் பேற்றிற்கும் மார்க்கம். அதற்கு மாறாக அவன் தனது ஒழுக்கத்தைச் சரியாகத் திருத்துவதாகிய மேலான கடமையைச் செய்யாது எச்சரிக்கையும் திருத்தமுமின்றி வாழக்கூடும்; இஃது அறிவு விளக்கத்திற்கும் இன்பப் பேற்றிற்கும் மார்க்கம் அதற்கு மாறாக அவன் தனது ஒழுக்கத்தைச் சரியாகத் திருத்துவதாகிய மேலான கடமையைச் செய்யாது எச்சரிக்கையும் திருத்தமுமின்றி வாழக்கூடும்; இஃது அறிவு மயக்கத்திற்கும் துன்ப அடைவிற்கும் மார்க்கம்.

ஒரு மனிதன் தனது வாழ்வு முழுவதும் தனது மனத்தினின்றே வருகிறதென்று அறிவானானால், அப்பொழுதே அவனுக்குப் பேரின்ப வீட்டின் வழி திறக்கப்பட்டிருக்கிறது. அவன் அப்பொழுது தனது மனத்தை ஆள்வதற்கும் தனது இலட்சியத்திற்குத் தக்கபடி தன்னைத் திருத்திக் கொள்வதற்கும் தக்க வலிமை தன்னிடத்தில் இருப்பதைக் காண்பான். அப்படியே அவன் முற்றும் மேம்பாடான நினைப்பையும் செயலையும் மேற்கொண்டு நேராகவும் உறுதியாகவும் நடப்பான்; அவனுக்கு வாழ்க்கை இனியதாகவும் தூயதாகவும் அமையும்; அவன், சிறிது முன்னாகவோ பின்னாகவோ, சகல தீமைகளையும் சகல வேலைகளையும் சகல துன்பங்களையும் போக்கிவிடுவான். ஏனெனில், தனது அகத்தின் வாயிலைத் தளராத ஊக்கத்துடன் காத்து வருகிற ஒரு மனிதன் ஞானத்தையும் துக்க நிவர்த்தியையும் சுகப் பிராப்தியையும் அடையாமல் இரான்.
***

சிவாவின் ஆன்மா அமைதி பெறுமா?

-முத்துவிஜயன்

பாப்பாரப்பட்டியில் திறக்கப்பட்டுள்ள
பாரத மாதா திருவுருவச் சிலை


சுதந்திரப் போராட்ட வீரரும் நெல்லைப் புரட்சியின் மும்மூர்த்திகளுள் ஒருவருமான ‘வீரமுரசு’ சுப்பிரமணிய சிவாவின் கனவு, பாரத அன்னைக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்பது. அந்தக் கனவு, அவரது நினைவிடத்தில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்தக் கனவு முழுமையாகப் பூர்த்தியாகவில்லை.

தியாகசீலர் சிவாவின் அருங்கனவான பாரத மாதா ஆலயத்தின் பின்புலத்தை அறிய, நாம் சுமார் நூறாண்டுகளுக்கு முந்தைய காலப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

தென்முகக் கடவுள் துதி (தமிழாக்கம்)

-பத்மன்


(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
- தமிழ் மொழிபெயர்ப்பு)


காப்புச் செய்யுள்கள்

ஆதியில் பதுமனைப் படைத்தவர் எவரோ
அவருக்கு மறைபொருள் உரைத்தவர் எவரோ
ஆத்ம ஒளியாய் என்னுள் உறைபவர் எவரோ
அவர் பாதம் பணிந்தேன் விடுதலை வேண்டி.

மௌனத்தின் விளக்கத்தால் பரம்பொருள்
    தத்துவத்தைப் பறைசாற்றும் இளைஞன்
முதுபெரும் ஞானிகள் யோகிகள்
    சீடராய் சூழப்படும் முனிவன்
ஆசான்களின் தலைவன் அறிவொளி
    முத்திரையன் ஆனந்த வடிவோன்
ஆத்மாவின் ரசிகன் புன்சிரிப்பு
    வதனன் தென்முகத்தான் போற்றி.

20 IMPORTANT SPIRITUAL INSTRUCTIONS

-Swami Sivananda


These twenty instructions contain the very essence of all Yoga Sadhana, Karma, Bhakti, Jnana and Yoga will all come to one who follows them whole-heartedly. They are the unfailing keys to quick and effective development and culture of the physical, mental, moral and spiritual self of man.

1. BRAHMAMUHURTA

Get up at 4 a.m. daily. This is Brahmamuhurta which is extremely favourable for Sadhana. Do all your morning spiritual Sadhana during this period from 4 a.m. to 6:30 or 7 a.m. Such Sadhana gives quick and maximum progress.

2. ASANA

Sit on Padmasana (lotus pose), Siddhasana (adept’s pose) or Sukhasana (any pose you like) for your Japa and meditation for half an hour, facing east or north. Increase the period gradually to three hours. Practice Sirshasana (headstand) and Sarvangasana (shoulderstand) for maintenance of health and Brahmacharya. Take light physical exercises as walking, etc., regularly. Do twenty rounds of easy, comfortable Pranayama (breathing exercises). Do not strain yourself while doing Pranayama.

பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள் - 3

 -பேரா. பூ.தர்மலிங்கம்

தேசிய உணர்வு

நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நமது ரத்தத்தின் ரத்தம், சதையின் சதை. நாம் அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என்ற உணர்வை மக்கள் பெறும் வரை ஓய்வெடுக்க மாட்டோம். இந்த வார்த்தைகள் உண்மையாக நிறைவேறும் வண்ணம், அன்னை இந்தியாவை செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றுவோம்.

***

மகாகவி பாரதியின் புனித நினைவில்…

-தஞ்சை வெ.கோபாலன்



(மகாகவி பாரதி மறைந்து 
இந்த ஆண்டுடன் 100 ஆண்டுகள் நிறைகின்றன)

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 1)

மகாகவி பாரதி அமரர் ஆகி 100 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அந்த மகா புருஷனின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். 

ஒரு முறை அவரே தன் சீடனான குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னார்: “கிருஷ்ணா நான் இருநூறு ஆண்டுகள் முன்னதாகப் பிறந்து விட்டேன். என்னைப் பற்றி இவ்வுலகம் புரிந்து கொள்ள பல காலம் ஆகும். ஆங்கிலப் புலவர் ஷேக்ஸ்பியருடைய புகழ்கூட அவர் காலமான பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பரவத் தொடங்கியது”. அந்த மகாகவியின் வாக்கு சத்திய வாக்கு. இப்போது பாரதியைப் பேசாத, புகழாத, அவன் பாடல்களைப் பாடாத வாய்களே இல்லை எனலாம்.

அவர் வரலாற்றைப் பாடப் புத்தகங்களில் எழுதும்போது, அவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை மிதித்து இறந்து போனார் என்றே எழுதி இளம் உள்ளங்களில் தவறான செய்தியைப் பதித்து வருகின்றனர். அது உண்மையல்ல. 

திருவல்லிக்கேணி கோயில் யானையின் பெயர் அர்ஜுனன், 40 வயது யானை அது. பாரதியை ஒதுக்கிக் தள்ளியபின் சோர்ந்திருந்த அந்த யானை 1923 ஆகஸ்டில் இறந்து போய்விட்டது. அந்த யானையால் ஒதுக்கித் தள்ளப்பட்டு சிலகாலம் படுத்திருந்த பாரதி பின்பு உடல்நலம் தேறி பணிக்குச் சென்றார். அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1921 ஆகஸ்ட் மாதத்தில் ஈரோட்டையடுத்த கருங்கல்பாளையம் எனும் ஊரில் ஒரு வாசகசாலையின் ஆண்டுவிழாவில் அவ்வூர் வக்கீல் அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசிவிட்டு வந்தார். அப்போது அவர் பேசிய தலைப்பு என்ன தெரியுமா?  ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்கிற தலைப்பில்தான் அவர் அங்கு பேசினார்.

என் குருநாதர்

-ரா.கனகலிங்கம்

ரா.கனகலிங்கம்

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 2)

ஒருநாள் பாரதியார் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் பாரதியார், “உனக்குத் தம்பலா வீடு தெரியுமா?” என்று கேட்டார். “தெரியும்!” என்றேன். “அப்படியானால் அந்த வீட்டுக்குப் போய் வருவோம்...” என்றார்.
நான் திடுக்கிட்டுப் போனேன்.

புதுச்சேரியில் தோட்டி சமூகத்திற்குத் தலைவராக விளங்கினார் தம்பலா. அவர் சாராயக் கடை, கஞ்சாக் கடை - இவற்றைக் குத்தகை எடுத்துப் பொருள் சம்பாதித்தவர். 1906ம் ஆண்டில் நடைபெற்ற,  ‘லெமேர்’ தேர்தலில் அவர் வோட்டர்களை பயமுறுத்தியது பிரசித்தமான செய்தி. அக்காலத்தில், புதுவையில் தம்பலா என்றால், அழுத பிள்ளை வாய் மூடும் என்பர்.

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி (கவிதை)

-மகாகவி பாரதி




(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு - 3)


பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்
    புன்மை யிருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
    எழுந்து விளங்கிய அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
    லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.
விழிதுயில் கின்றனை இன்னும் எம் தாயே!
    வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!

1

காற்று (வசன கவிதை)

-மகாகவி பாரதி



(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 4)

ஒரு வீட்டு மாடியிலே ஒரு பந்தல், ஓலைப் பந்தல், தென்னோலை.

குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரணக் கயிற்றினால் கட்டி, மேலே தென்னோலைகளை விரித்திருக்கிறது.

ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது, ஒரு சாண் கயிறு.

இந்தக் கயிறு ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

சில சமயங்களில் அசையால் ‘உம்’மென்றிருக்கும். கூப்பிட்டால்கூட ஏனென்று கேட்காது.

இன்று அப்படியில்லை.  ‘குஷால்’ வழியிலிருந்தது. எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு.

“கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?”

பேசிப் பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.

ஞானபாநு (வாழ்த்துக் கவிதை)

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 5)

திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்,
மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்
வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு. 1

உயிரின் ஒலி

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 6)

சில தினங்களுக்கு முன்பு கல்கத்தாவில் ஸ்ரீ ஜகதீச சந்திரவஸு, தமது  ‘வஸுமந்திரம்’ என்ற கூடத்தைப் பாரத மாதாவுக்குச் சமர்ப்பணம் செய்கையில்  ‘உயிரின் ஒலி’ என்ற மகுடமிட்டு ஒரு பிரசங்கம் செய்தார்.

அவருடைய கொள்கை எப்படியென்றால் :- நாம் ஜடபதார்த்தமாக நினைக்கும் உலோகாதிகளில் உயிர் நிறைந்திருக்கிறது; ஜந்துக்களைப்போலவே விருக்ஷாதிகளுக்கும் உணர்ச்சியிருக்கிறது. ஆகவே மண், செடி, ஜந்து, மனுஷ்யன் அத்தனைக்குள்ளும் ஒரே விதமான ப்ராண சக்தியிருக்கிறது. ‘இந்த உலகமே உயிர்க்கடல்’ என்பது அவரது சித்தாந்தம். அவர் பல நுட்பமான கருவிகள் செய்திருக்கிறார். ஹிந்து தேசத்துத் தொழிலாளிகளைக் கொண்டு அந்த ஸூஷ்மக் கருவிகளை எல்லாம் செய்து கொண்டார். அந்தக் கருவிகளின் நேர்த்தியைப் பார்த்து ஐரோப்பிய சாஸ்திரிகளும் யந்திரிகளும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்தக் கருவியின் உதவியால், ஒரு பூண்டின் கையில் ஒரு ஊசி எழுதுகோல் கொடுக்கிறார். ஒரு புகைபட்ட கண்ணாடியின் மேல் அந்த ஊசி எழுதுகிறது; அதாவது, கோடுகள் கீறுகிறது. அந்தக் கோடுகளினால் மேற்படி செடியின் உள்ள நிலையை, அதன் நாடியின் அசைவு தெரிவிக்கிறது.

செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சை போடுகிறது. மறுபடி, தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது. மதுபானம் செய்வித்தால் உண்டாட்டுக் கேளிகள் நடத்துகிறது. செடியின் சந்தோஷம், சோர்வு, வளர்ச்சி, சாவு ஆகிய எல்லா நிலைமைகளையும் கண்ணாடியிலே கீறிக் காட்டுவதைப் பார்க்கும்போது ‘செடியின் நாடியுணர்ச்சிகளுக்கும் இதர மனுஷ்ய மிருகாதி ஜந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை’ என்பது ருஜுவாகிறது.

நவதந்திரக் கதைகள்

-மகாகவி  பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 7)

கதைக்குள்ளே கதை சொல்கிற பான்மையில் அமைந்தவை இந்த நவதந்திரக் கதைகள். பஞ்சதந்திரக் கதைகளைப் போன்ற கதைப் போக்குக் கொண்டது என்றும் கொள்ளலாம்.

தொடராக முதன்முதலாக ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் 10-8-1916ஆம் தேதியிட்ட இதழில் பிரசுரமாகத் தொடங்கியது. இடையிடையே சில சமயங்களில் கதைத் தொடர் பிரசுரமாகாமல் இருந்ததும் உண்டு. கதைத் தொடர் நிறைவு பெறவில்லை; 26-2-1918ஆம் தேதிய இதழோடு நின்று விடுகின்றது.

இந்தக் கதைகள் 1928 ஆம் வருஷம் பாரதி பிரசுராலயத்தாரால் நூலாக்கம் செய்யப்பட்டன.
***
முன்னுரை

வேதாரண்யம் என்ற ஊரில் விவேக சாஸ்திரி என்றொரு பிராமணன் இருந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள்.

அந்த மூன்று பிள்ளைகளையும், மனைவியையும் வைத்துக் காப்பாற்றுவதற்குப் போதுமான நன்செய் நிலம் அவருக்கு இருந்தது.

ஆனால் பிள்ளைகள் மூவருக்கும் விவாகமாய்த் தலைக்கு ஓரிரண்டு குழந்தைகளும் பிறக்கவே, குடும்பம் மிகப் பெரிதாகிவிட்டது. ஆதலால், அவருடைய முதுமைப் பிராயத்தில் ஜீவனத்துக்கு சிரமமுண்டாய் விட்டது.

பிள்ளைகளுக்கு ஸம்ஸ்க்ருதப் படிப்புச் சொல்லி வைத்து ஒருவனை வேதாந்த
சாஸ்திரத்திலும், மற்றொருவனை வியாகரணத்திலும், மூன்றாமவனைத் தர்க்க சாஸ்திரத்திலும் தேர்ச்சியோங்கும்படி செய்து வைத்திருந்தார்.

கால நிலைமையால், அந்த வித்தைகள் வயிற்றுப் பிழைப்புக்குப் பயன்படவில்லை. பிறரிடம் பிச்சை கேட்க சம்மதமில்லாத மானமுள்ள குடும்பத்தாராதலால், அரைவயிற்றுக்கு ஆகாரம் செய்து கொண்டு கஷ்டத்திலிருந்தார்கள். இப்படியிருக்கையில், ஒரு நாள் விவேக சாஸ்திரி தமது கையில் தாதுவைப் பார்த்து இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே தம்மால் ஜீவிக்க முடியாதென்று தெரிந்தவராகித் தம்முடைய மக்களை அழைத்துப் பின்வருமாறு சொல்லலானார்:-

வாரீர், மக்களே, நான் சொல்லப் போவதை சாவதானமாகக் கேளுங்கள். என்னுடைய ஜீவன் இவ்வுலகத்திலே இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நில்லாது. நான் உங்களுக்கு அதிகச் செல்வம் வைத்து விட்டுப்போக வழியில்லாமற் போய்விட்டது.

விதிவசமாக ஏற்பட்ட மதிமயக்கத்தால், உங்களுக்கு லௌகிக லாபங்கள் உண்டாகக்கூடிய வித்தைகள் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டேன். உங்களுக்கோ குடும்ப பாரம் ஏற்கனவே மிகுதியாய் விட்டது; இன்னும் காலம் போகப் போக இதனிலும் அதிகப்படக்கூடும். நீங்கள் எப்படி இந்தச் சுமையைப் பொறுக்கப் போகிறீர்களென்பதை நினைக்கும்போது எனக்குக் கவலையுண்டாகிறது. ஆயினும், லௌகிக தந்திரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சில கதைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். தினந்தோறும் விளக்கு வைத்தவுடனே என்னிடம் சிறிது நேரம் கதை கேட்க வாருங்கள். எனது காலத்துக்குப் பிறகு உங்களுக்கு இந்தக் கதைகள் பயன்படும் என்றார்.

அப்படியே, பிள்ளைகள் சரியென்று அங்கீகாரம் செய்து கொண்டனர்.

பிள்ளைகளிலே மூத்தவன் பெயர் வாசுதேவன்; இரண்டாமவன் பெயர் காளிதாஸன்; மூன்றாவது பிள்ளைக்கு ஆஞ்சநேயன் என்று பெயர்.

***

NAMMALWAR

-C.S.BHARATHI


Nammalwar
[The Supreme Vaishnava Saint and Poet]


Maran, renowned as Nammalwar (“Our Saint”) among the Vaishnavas, and the greats of their saints and poets, was born in a small town called Kuruhur in the southernmost region of the Tamil country – Tiru-nel-veli (Tinnelvelly). His father, Kari, was petty prince who paid tribute to the Pandyan King of Madura. We have no means of ascertaining the date of the Alwar’s birth, as the traditional account is untrustworthy and full of inconsistencies. We are told that the infant was mute for several years after his birth. Nammalwar renounced the world early in life and spent his time, singing and meditating on God, under the shade of a tamarind tree by the side of the village temple.

It was under this tree that he was first seen by his disciple, the Alwar Madhura-kavi-for the latter also is numbered among the great Twelve, - “lost in the sea of Divine Love. “ Tradition says that while Madhura-kavi was wandering in North India as a pilgrim, one night a stage light appeared to him in the sky and traveled towards the south. Doubtful at first what significance this phenomenon might have for him, its repetition during three consecutive nights convinced him that it was a divine summons and where this luminous sign led, he must follow.