-ஒரு தேசபக்தர்
(பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டு சிறப்புப் பதிவு)
பாரதீஸ்வரீ....பாபநாசினி!பாரதமெனும் ஞானக்கோயில்ஞானாம்பிகை நீயே!பாரதீஸ்வரீ... பாபநாசினி!
குமரி முனை தவம் செய்யும் பகவதி நீயே!
காஷ்மீரப் பனிமலையைக் காக்கும் வைஷ்ணவி!
சிருங்க பீட சங்கரரின் ஸாரதை நீயே...
சிருங்க பீட சங்கரரின் ஸாரதை நீயே...
காளிகட்ட ராமகிருஷ்ண பவதாரிணி நீயே...
கொஞ்சு தமிழ்க் குறுமுனிவன் காவிரியும் நீ!
காளிங்க நர்த்தனன் ஸ்ரீ கண்ணன் யமுனை நீ!
வேள்வி கண்ட வேதபூமி தந்த சிந்து நீயே...
(பாரதீஸ்வரீ...)
வான்மறை திருக்குறள் தந்த வள்ளுவன் நீயே!
வேதம் நான்கு மாபாரத வியாசனும் நீயே!
சிலம்பிசைத்த சேரன்தம்பி இளங்கோவும் நீ!
கம்பன் காளிதாஸன் கவி பாரதியும் நீயே...
(பாரதீஸ்வரீ...)
அருந்ததி, அனுசூயா, ஸதி, திரெளபதி நீயே!
சீதை, கண்ணகி, அன்னை சாரதாவும் நீயே!
‘வையத்து வாழ்வீர்காள்’ ஆண்டாளும் நீயே!
மீராப்பிரபு, கிரிதாரி மீராபாயும் நீயே....
(பாரதீஸ்வரீ...)
‘ராமநன்னு ப்ரோவராவெனு’ தியாகராஜன் நீ!
‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ’ புரந்தரனும் நீ!
‘பஜாரேபையா’ ராமகோவிந்த கபீர்தாஸன் நீ!
‘தோடுடை செவியன்’ ஞான சம்பந்தனும் நீயே...
(பாரதீஸ்வரீ...)
தருமன், கண்ணன், வீமன், பார்த்தன், அபிமன்யுவும் நீ!
ஹிந்து மஹா ராஷ்ட்ரம் கண்ட சத்ரபதியும் நீ!
குருகோவிந்த சிம்மன், ராணா பிரதாபனும் நீ!
ராஜராஜ சோழ, சேர, பாண்டியனும் நீயே...
ராஜராஜ சோழ, சேர, பாண்டியனும் நீயே...
(பாரதீஸ்வரீ...)
குகனும் நீ, நந்தனும் நீ, திருப்பாணாழ்வார் நீ!
கண்கொடுத்த காளத்தி கண்ணப்பனும் நீயே!
டக்கர் பாபா, ஜோதிர்புலே, நாராயண குரு நீ!
தீண்டாமை நோய் தீர்த்த பீமராவும் நீயே...
(பாரதீஸ்வரீ...)
திலகர், வீர சாவர்க்கர், நேதாஜியும் நீ!
வீரன் வாஞ்சி, குமரன், பகத்சிம்மனும் நீயே!
தாய்நாட்டின் திருத்தொண்டே தேவபூஜை என்று
வாழ்ந்த டாக்டர் ஹெட்கேவார், குருஜியும் நீயே...
(பாரதீஸ்வரீ...)
அம்மையும் நீ, அப்பனும் நீ, அன்னபூரணீ!
அகிலலோக நாயகி எமை ஆண்டிடுவாய் நீ!
ஜகத் ஜனனி, ஜகந் நாயகி சர்வேஸ்வரி நீ!
அகண்ட பாரதம் காண ஆசி அளிப்பாயே!
பாரதீஸ்வரீ....பாபநாசினி!
பாரதீஸ்வரீ....பாபநாசினி!
பாரதமெனும் ஞானக்கோயில்
ஞானாம்பிகை நீயே!
பாரதீஸ்வரீ.. பாபநாசினி!
No comments:
Post a Comment