13/11/2020

பட்டாசு வெடி பாப்பா! (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்



பட்டாசு வெடி பாப்பா, பட்டாசு வெடி! 
பாரதம் ஒளிரவே பட்டாசு வெடி!
முட்டாளரக்கர்,  இருட்டுச் சட்டை
பட்டாளமொழியப் பட்டாசு வெடி! 


தென்கடல் குமரியில் காலூன்றி, 
வெண்குளிர் இமயத்தில் முகங்காட்டும்
பண்பொளிர் பாரத அன்னை புகழ்
பாரெல்லாம் ஒலிக்கவே பட்டாசு வெடி!


வசுதைவ குடும்ப தர்மவேதம் 
கொண்டதோர் தேசிய ஆலமரம்-
நிழல் வெறுத்தே வெயில் சேரும்
புழுக்கள் தெளியவே பட்டாசு வெடி!


வேல்முருகன் வினைதீர்ப்பான்!
வேல்கொண்டே சம்ஹரிப்பான்!
வள்ளிக் கணவன் துணையுண்டு!
கள்ளர்கள் ஒழிய  பட்டாசு வெடி!


காண்க:

No comments:

Post a Comment