14/02/2020

யுவ காண்டீபம் - வெளியீட்டு விழாக்கள்

-ஆசிரியர் குழு

கோவை, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசுதின விழாவில், முன்னாள் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் அ.பாரி ஐபிஎஸ் ‘யுவகாண்டீபம்’ மின்னிதழைத் துவக்கிவைத்தார்


தேசிய சிந்தனைக் கழகத்தின் மாதாந்திர மின்னிதழான 'யுவகாண்டீபம்' குடியரசு நாளில் (ஜனவரி 26, 2020) துவங்கியது. இதன் துவக்க விழாக்கள் ஜனவரி 26 அன்று மூன்று இடங்களில் நடைபெற்றன.

கோயம்புத்தூரில்...

கோவை, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசுதின விழாவில், முன்னாள் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் அ.பாரி ஐபிஎஸ் இதனைத் துவக்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் செயலர் டாக்டர் சி.ஏ.வாசுகி, பொருளாளர் டாக்டர் பரமசிவம், முதல்வர் மா.இலட்சுமணசாமி, தேசிக மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குழலேந்தி, கோவை மாவட்டத் தலைவர் எல்.ஏ.ராஜேந்திரன், கோவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவி பூவரசு ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள்  உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கும்பகோணத்தில்...



கும்பகோணம், அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், திருமஞ்சனவீதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், தேசிய சிந்தனைக் கழகத்தின் மின்னிதழான ‘யுவ காண்டீபம்’ வெளியீட்டு விழா ஜன. 26இல் நடைபெற்றது. கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் 'யுவ காண்டீபம்'  மின் இதழை வெளியிட்டு ஆசி வழங்கினார் (படம்).

இந்த நிகழ்வில் தே.சி.க. மாநிலச் செயலாளர் ஆதலையூர் த சூரியகுமார் முன்னிலை வகித்தார். முன்னதாக செல்வி சூ.அருணா இறைவணக்கப் பாடலைப் பாடினார். விழாவில், சமூக ஆர்வலர்கள்,ஆசிரியர்கள் மாணவர்கள், உள்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருச்சிராப்பள்ளியில்...


தேசிய சிந்தனைக் கழகத்தின் சார்பாக வெளியாகும் ‘யுவகாண்டீபம்’ மின்னிதழின் வெளியீடு, திருச்சிராப்பள்ளியில், திருச்சி விஸ்வ ஸம்வாத் கேந்திரத்தின் தென்தமிழக அலுவலகத்தில் ஜன. 26இல் நடைபெற்றது.

மின்னிதழை திருச்சி அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் குமரகுரு துவக்கிவைத்தார். (படம்). ஏபிவிபி நகர துணைத் தலைவர் பேராசிரியர் செல்வராஜ், பேராசிரியர் குணசீலன், முத்து காளீஸ்வரன் , தேசிய சிந்தனைக் கழகம் திருச்சி பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment