13/03/2020

உலக தாய்மொழி தின விழா செய்திகள் 1


-ஆசிரியர் குழு


உலக தாய்மொழி தினவிழா நிகழ்வுகள்:

தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் உலக தாய்மொழி தின விழாக்கள் பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல்:

1.   அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி, கோவை (பிப். 18)

2. இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி, நாகப்பட்டினம். (பிப். 18)

3. துறையூர், இமயம் கலை, அறிவியல் கல்லூரி

4. மீனாட்சி இராமசாமி கல்லூரி, தெக்கனூர்,அரியலூர். (பிப். 20)

5. தக்ஷிண பாரத ஹிந்தி பிரஸார சபா, சென்னை. (பிப். 21)

6. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை. (பிப். 21)

7. ‘புதிய வெளிச்சம்’ அமைப்பு , பெரியநாயக்கன்பாளையம்,கோவை. (பிப். 21)

8. சங்கரா கலை, அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம். (பிப். 22)

9. சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, கரூர். (பிப். 24)

10. விநாயகா மிஷன் பல்கலைக்கழகம், சேலம். (பிப். 26).


***

சென்னை - தக்‌ஷிண பாரத ஹிந்தி பிரசார் சபா:


தக்‌ஷிண பாரத ஹிந்தி பிரஸார் சபாவும் தேசிய சிந்தனைக் கழகமும் இணைந்து நடத்திய உலக தாய்மொழி தின விழா, சென்னையில் பிப். 21ஆம் தேதி நடைபெற்றது.

சென்னை, செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் துணைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் தலைமை வகித்தார். சென்னை த.பா.ஹி.பி.சபாவின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜ் வரவேற்றார். பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் முன்னிலை வகித்தார்.


பல்வேறு மொழிகளில் தாய்மொழியின் சிறப்பு குறித்து பேராசிரியர் நம்பி நம்பூதிரி (மலையாளம்), பேராசிரியர் இரா.இராஜேஸ்வரி (தமிழ்), விக்ரம் மாயா பைவல்சி (கன்னடம்), பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் கோபால் ரெட்டி (தெலுங்கு), அகில இந்திய வானொலியின் அலுவலர் உதயகுமார் மெக்கானி (ஹிந்தி) ஆகியோர் உரையாற்றினர். 

தக்‌ஷிண பாரத ஹிந்தி பிரஸார் சபாவின் பொருளாளர் கே.முரளி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பேராசிரியர் கே.குமாரசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

இந்த விழாவை தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி.ராஜேந்திரன் தொகுத்து வழங்கினார். விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.

***











No comments:

Post a Comment