13/03/2020

உலக தாய்மொழி தின விழா செய்திகள் 2



சேலம் வைஸ்யா கல்லூரி:

தேசிய சிந்தனைக் கழகமும், சேலம் வைஸ்யா கல்லூரியும் இணைந்து நடத்திய உலக தாய்மொழி தின விழா, கல்லூரி அரங்கில் பிப். 27ஆம் தேதி நடைபெற்றது.

கல்லூரியின் செயலாள்ர் ஜெ.இராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். முதல்வர் பா.வெங்கடேசன் வரவேற்றார்.  ‘தேசிய ஒருமைப்பாட்டுக்கு துணை நிற்கும் தென்பாரத மொழிகள்’ என்ற தலைப்பில் பல மொழிகளில் மாணவிகள் உரையாற்றினர். (படம்: விழாவில்உரையாற்றிய மாணவிகள், மேடையில் விருந்தினர்களுடன்).

இந்நிகழ்வில் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். சேலம் மாவட்ட தே.சி.க. செயலாளர் பேராசிரியர் சு.சண்முகம், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கு.தங்கவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் பெ.தீபா நன்றி கூறினார்.


***

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், சேலம்:


சேலம் விநாயக மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி, விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தேசிய சிந்தனைக் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து நடத்திய உலக தாய்மொழி தின விழா, கல்லூரியின் அன்னபூரணி அரங்கில், பிப். 26ஆம் தேதி நடைபெற்றது.

பலகலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.கே.சுதிர், பதிவாளர் பிஜெய்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். மருத்துவர்கள் எஸ்.சரவணன், ஏ.எஸ்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பேராசிரியர் கே.குமாரசாமி சிறப்புரையாற்றினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஏ.நாகப்பன் செய்திருந்தார்.

***

கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரி:



கரூர், ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியும் தேசிய சிந்தனக் கழகமும் இணைந்து நடத்திய உலக தாய்மொழி தின விழா, கல்லூரி அரங்கில் பிப். 24ஆம் தேதி நடைபெற்றது.

கல்லூரியின் செயலர் யதீஸ்வரி நீலகண்டபிரியா அம்பா முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஜெயந்தி வரவேற்ரார். திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் சுவாமி சுத்தானந்த மஹராஜ், செயலர் சுவாமி சத்தியானந்த மஹராஜ் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி.ராஜேந்திரன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், பாரதிய சிக்‌ஷண் மண்டலியின் மாநிலத் தலைவருமான பேராசிரியர் இரா.இளங்கோ (படம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் க.கோபிநாத் விழாப் பேருரையாற்றினார். கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் லதா நன்றி கூறினார்.


***

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்:


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும், தேசிய சிந்தனைக் கழகமும் இணைந்து நடத்திய உலக தாய்மொழி தின விழா பிப். 21ஆம் தேதி நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி தலைமை வகித்தார். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார் (படம்). நீதியரசர் (ஓய்வு) தி.நெ.வள்ளிநாயகம் விழாப் பேருரையாற்றினார். மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய  உறுப்பினர் மும்.முத்துவேலு சிறப்புரையாற்றினார். விழா சிறப்பாக நடைபெற்ரது.

***








No comments:

Post a Comment