(பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டு சிறப்புப் பதிவு)
சந்தனம் எங்கள் நாட்டின் புழுதிகிராம மனைத்தும் தவ பூமி!சிறுமிய ரெல்லாம் தேவியின் வடிவம்!சிறுவ ரனைவரும் ராமனே!
கோயிலைப்போலே உடல்கள் புனிதம்,
மாந்தரனைவரும் உபகாரி!
சிங்கத்துடனே விளையாடிடுவோம்,
ஆவினம் எங்கள் அன்புத்தாய்!
காலையில் ஆலய மணிகள் முழங்கும்,
கிளிகள் கண்ணன் பெயர் பாடும்!
(சிறுமியரெல்லாம்)
உழைப்பால் விதியை மாற்றும் மண்ணிது,
உழைப்பின் நோக்கம் பொது நலமே!
தியாகமும் தவமும் கவிகள் பாட்டின்
கருவாய் அமையும் நாடிது!
கங்கை போலே துாய ஞானம்,
ஜீவநதியெனப் பாய்ந்திடும்!
(சிறுமியரெல்லாம்)
போர்க்களந் தனிலே எங்கள் வீரர்
புனித கீதையை ஓதுவர்!
ஏர்முனையின் கீழ் தவழ்ந்து வருவாள்,
எங்கள் அன்னை சீதையே!
வாழ்வின் முடிவாய் விளங்குவதிங்கு
இறைவன் திருவடி நீழலே!
(சிறுமியரெல்லாம்)
No comments:
Post a Comment