15/05/2021

பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள்

 -பேரா. பூ.தர்மலிங்கம் 

பண்டிட் தீனதயாள் உபாத்யாய


Dharma is the repository of the nation’s soul. If Dharma is destroyed, the Nation perishes. Any one who abandons Dharma, betrays the nation…… Since Dharma is supreme, our ideal of the State has been Dharma Rajya…… What constitutes the good of the people, Dharma alone can decide. Therefore a democratic government Jana Rajya must also be rooted in Dharma i.e. a Dharma Rajya…

***

If one has to understand the soul of Bharat, one must not look at this country from the political or economic angle but from the cultural point of view.

***

 ‘Bharatiyata' (nationhood of Bharat) can manifest itself not through politics but through culture. If we have anything that we can teach the world, it is the feeling of cultural tolerance and a life dedicated to duty.

***

With the support of Universal knowledge and our heritage, we shall create a Bharat which will excel all its past glories, and will enable every citizen in its fold to steadily progress in the development of his manifold latent possibilities and to achieve through a sense of unity with the entire creation, a state even higher than that of a complete human being; to become Narayan from nar (man). This is the external divine form of our culture. This is our message to humanity at a cross roads. May God give us strength to succeed in this mission.

    - Pt. Deendayal Upadhyay

*** 

ஒரே ஒரு கலாச்சாரம்:

பல கலாச்சாரங்களின் முழக்கம், இந்த நாட்டை துண்டு துண்டாக உடைத்து அழிக்க முடியும். எனவே, முஸ்லிம் லீக்கின் இரு கலாச்சாரக் கோட்பாடு, காங்கிரசின் இரு கலாச்சாரக் கோட்பாடு, கம்யூனிஸ்டுகளின் பல கலாச்சாரக் கோட்பாடு ஆகியவை தவறானவை. இப்போது வரை பல் கலாச்சார கோட்பாடு மட்டுமே இந்தியாவின் கலாச்சாரத்தை வகுப்புவாதமாகக் கண்டனம் செய்துள்ளது. ஆனால் இப்போது காங்கிரசில் உள்ள அறிஞர்கள் கூட தங்கள் தவறை உணர்ந்து ஒரே கலாச்சாரக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒரே கலாச்சாரத்தின் இந்த உணர்வு தான் இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முடியும்; மற்றும் நமது அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க  முடியும். 

***

நமது மூன்றடுக்கு நோக்கம்:

பெரும் முயற்சிகளுக்குப் பிறகு இந்தியா சுதந்திரத்தை அடைந்துள்ளது. இச்சுதந்திரத்தை இழக்க நாம் விரும்ப மாட்டோம். 

1. நமது அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான வலிமையை நமக்குக் கொடுப்பதே நமது திட்டத்தின் முதல் நோக்கமாகும். 

2. இரண்டாவதாக, ஜனநாயக அரசாங்க அமைப்பை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். பொருளாதார வளர்ச்சியின் எந்தவொரு திட்டமும் நமது ஜனநாயக அமைப்பிற்குத் தடையாக இருப்பின் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

3. மூன்றாவதாக, நமது வாழ்க்கையில் சில கலாச்சார விழுமியங்களைக் கொண்டிருக்கிறோம். அவை நமது அடிப்படை மற்றும் தேசிய வாழ்க்கையின் அளவீடாகும். மேலும், முழு உலகிற்கும் அவை மிகவும் மதிப்புமிக்கவையாகும். இந்த கலாச்சாரத்துடன் உலகை அறிவது நமது உயர்ந்த தேசிய இலக்காக இருக்க வேண்டும். இந்த கலாச்சாரத்தை இழந்து நாம் செழிப்பைப் பெற்றோம் என்றால், அது உண்மையான செழிப்பு அல்ல.

***

எது நல்ல கட்சி? கட்சி என்பது வெறுமனே தனிநபர்களின் தொகுப்பு அல்ல. அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற விருப்பத்திலிருந்து வேறுபட்ட, ஒரு தனித்துவமான நோக்கத்துடன் கூடிய ஒரு நிறுவனமாகும். அத்தகைய கட்சியின் உறுப்பினர்களுக்கு, அரசியல் அதிகாரம் ஒரு வழிமுறையாக இருக்க வேண்டுமே தவிர, இலக்காக இருக்கக் கூடாது. ஒரு சமூகத்திற்கு தர்மம் என ஒன்று இருப்பது போல, ஒரு கட்சிக்கு ஒழுக்கம் என ஒன்று உள்ளது. 

***

வேற்றுமையில் ஒற்றுமையையும் பல்வேறு வடிவங்களில் ஒற்றுமையின் வெளிப்பாட்டையும் கொணர்வது பாரதீய கலாச்சாரத்தின் முதன்மையான எண்ணமாக, முக்கிய சிந்தனையாக இருந்து வருகின்றது. இந்த உண்மையானது முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டால், பல்வேறு அதிகார மோதலுக்கு அவசியமே இருக்காது. மோதல் என்பது கலாச்சாரமோ அல்லது இயற்கையின் அடையாளமோ அல்ல. மாறாக, இது விபரீதத்தின் அறிகுறியாகும். 

***

பொருளாதாரத் துறையில் நாம் தற்சார்புடையவர்களாக இருக்க வேண்டும். நமது திட்டங்களின் நிறைவேற்றம் வெளிநாட்டு உதவியைப் பொருத்தது என்றால், அது நிச்சயமாக நம்மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கும். உதவி வழங்கும் நாடுகளின் பொருளாதார ஆதிக்கம் நிறைந்த துறையால் நாம் இழுக்கப்படுவோம். நமது சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் இழக்க நேரிடும். மேலும், நமது நலனுக்கு உகந்ததாக இல்லாவிட்டாலும்கூட வெளிநாட்டு உதவிகளுக்கு ஏற்ற திட்டங்களையே நாம் உருவாக்க வேண்டியதிருக்கும்.

***

ஒரு மோசமான வேட்பாளர், அவர் சார்ந்த கட்சி நல்லது என்பதால் தன்னை ஒரு உயர்ந்த மனிதராக உரிமை கோர முடியாது. மோசமான காற்றால் யாருக்கும், எங்கும் நன்மை செய்யவியலாது என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒரு தீயவன் - தீயவன் மட்டுமே. அத்தகைய மோசமான மனிதருக்கு, வேட்பாளர் அனுமதிச் சீட்டு கொடுப்பதில் கட்சியின் தலைமை ஒரு பாகுபாடான அடிப்படையில் செயல்பட்டிருக்கலாம் அல்லது சிறந்த நோக்கங்களுக்காக ஒரு தவறான தீர்ப்பை வழங்கியிருக்கலாம். அத்தகைய தவறைச் சரிசெய்வது பொறுப்பான வாக்காளர்களின் கடமையாகும். 

***

ஒரு பொருளாதார அமைப்பு மக்களைப் பேணுவதோடு அவர்களின் மேம்பாட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படைப் பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டும். மேலும், தேசத்தின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்ய வேண்டும். 

***

அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று ஒரு தத்துவத்தை உருவாக்க முயற்சி  செய்யட்டும். சில சுயநல நோக்கங்களுக்காக ஒன்றிணைந்த மனிதர்களின் கூட்டங்களாக அவை இருக்கக் கூடாது. வணிக நிறுவனம் அல்லது கூட்டுப்பங்கு நிறுவனத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். கட்சியின் தத்துவமானது, கட்சி அறிக்கையின் பக்கங்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல் இருப்பது அவசியமாகும். உறுப்பினர்கள் அதைப் புரிந்துகொண்டு அதை செயல்பாடாக மாற்றுவதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். 

***

நாம் மேற்கத்திய உலகில் இருந்து சில வழிகாட்டுதல்களைப் பெற விரும்பலாம். ஆனால், வழங்குவதற்கு அதனிடம் பரிந்துரைகள் ஏதும் இல்லை என்பதே உண்மையாகும். அவையே எது சரியான பாதை என்பதைத் தீர்மானிக்க முடியாமல் உள்ளன. இத்தகைய சூழலில், மேற்கத்திய நாடுகளின் வழிகாட்டலை எதிர்பார்க்க முடியாது. மாறாக, உலகின் தற்போதைய இக்கட்டான நிலையைத் தீர்க்க நம்மால் ஏதாவது பங்களிக்க முடியுமா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். உலக முன்னேற்றத்தைக் கவனத்தில் கொண்டு, அறிவுக்கான பொதுச்சந்தையாக நம்மை உருவாக்க வேண்டும். உலக முன்னேற்றத்திற்கு உதவக் கூடிய ஒன்றை நாம் வைத்திருந்தால், அதை உலகிற்கு வழங்குவதில் நாம் தயங்கக் கூடாது. 

***

யார் அரசாங்கத்தை அமைப்பார்கள் என்பது குறித்து தேர்தல்களும் பெரும்பான்மையும் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால், உண்மையை பெரும்பான்மையினரால் தீர்மானிக்க முடியாது. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது தர்மத்தால் தீர்மானிக்கப்படும். ஆனால், தர்மத்தை பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

***

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான அனைத்து அதிகாரங்களையும் அரசு பெறும்போது, இதன் விளைவாக தர்மத்தின் அழிவு தொடங்குகிறது. 

***

மார்க்சியக் கொள்கைகள் மாறிவரும் காலங்கள் மற்றும் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிவிட்டன. நமது தேசம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக மார்க்சிய சித்தாந்தங்களை திரும்பத் திரும்ப பரிசீலிப்பது அறிவியல் மற்றும் நடைமுறைக்குப் பொருந்தாத பிற்போக்குத்தனமான அணுகுமுறையைக் குறிக்கும். கொடிய மரபுகளை அகற்றுவதன் மூலம் சமுதாயத்தை சீர்திருத்த எண்ணுபவர்கள், காலாவதியான சில வெளிநாட்டு மரபுகளுக்கு இரையாகிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.

   -பண்டிட் தீனதயாள் உபாத்யாய


காண்க: பேரா. பூ.தர்மலிங்கம்

No comments:

Post a Comment