***
பொருளாதாரத்தின் இலக்கு:
நமது பொருளாதாரம், தேசத்தின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு தனிமனிதனின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்ய வேண்டும். இந்த குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்திற்கும் மேலாக, பாரத தேச உணர்வின்/ நெறிமுறைகளின் அடிப்படையில் தனி மனிதனும் தேசமும் உலக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்கான வழிகளைப் பெறுதல் வேண்டும்.
***
***
மத்திய - மாநில உறவு:
தேசத்தின் இறையாண்மை அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. மாநில அரசுகளைக் கையாளும்போது இந்தப் பொறுப்பு குறித்த உணர்வினை மத்திய அரசு காட்ட வேண்டும். மேலும் தாராளமாகவும் பாரபட்சமற்ற விதத்திலும் செயல்பட வேண்டும். அதற்கு மாறாக, குறுகிய கண்ணோட்டத்துடன் விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், அவை நாட்டின் நலன்களுக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கும். சமூகத்தில் சிதைவு மற்றும் இடையூறுகளைச் செய்ய விரும்புபவர்கள் தங்கள் சுய நோக்கங்களுக்காக இச்சூழலைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
***
வெளிநாட்டு உதவியைக் கட்டுப்படுத்துதல்:
பொருளாதாரத் துறையில் நாம் தற்சார்புடையவர்களாக இருக்க வேண்டும். நமது திட்டங்களின் நிறைவேற்றம் வெளிநாட்டு உதவியைப் பொருத்தது என்றால், அது நிச்சயமாக நம்மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கும். உதவி வழங்கும் நாடுகளின் பொருளாதார ஆதிக்கம் நிறைந்த துறையால் நாம் இழுக்கப்படுவோம். நமது சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் இழக்க நேரிடும். மேலும், நமது நலனுக்கு உகந்ததாக இல்லாவிட்டாலும்கூட வெளிநாட்டு உதவிகளுக்கு ஏற்ற திட்டங்களையே நாம் உருவாக்க வேண்டியதிருக்கும்.
- பண்டிட் தீனதயாள் உபாத்யாய
No comments:
Post a Comment