27/02/2022

யுவ காண்டீபம் - 2020, 2021 மின்னிதழ்கள்

 



2020 ஆண்டு இதழ்கள்

2021 ஆண்டு இதழ்கள்

16/12/2021

மார்கழி 2021 மின்னிதழ்



உள்ளடக்கம்

1. அமுதமொழி- 25
-பாபு ராஜேந்திர பிரசாத்
-ஒரு தேசபக்தர்
-ஆசிரியர் குழு
-எஸ்.ராமச்சந்திரன்
-திருநின்றவூர் இரவிக்குமார்
-ஜெயராமன் மகாதேவன்
-கோதை ஜெயலட்சுமி
-பாலகுமாரன்
-ஆசிரியர் குழு
-திருநின்றவூர் இரவிக்குமார்
-ஜடாயு
-வெங்கட்ராமன் ஸ்ரீநிவாசன்
-கே.பி.இராமலிங்கம்
-ஆசிரியர் குழு
-பேரா. பூ.தர்மலிங்கம்
-சுந்தர்ராஜசோழன்
-திருநின்றவூர் இரவிக்குமார்
-Maharishi Aurobindo
-ஈரோடு சரவணன்

20. அற்புத மலையில் அருளாட்சி புரிந்த அதிசய மஹரிஷி
-ச.நாகராஜன்

***

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பிதழ்:

-சங்கர மகாதேவன்
-சேக்கிழான்
-முத்துவிஜயன்
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி
-மகாகவி பாரதி

*

அமுதமொழி- 25


நமது லட்சியங்கள் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். அவற்றை அடையும் வழிமுறைகளும் தூய்மையானவையாக இருக்க வேண்டும்.

-பாபு ராஜேந்திர பிரசாத்

பாரத மண்ணில் பிறந்தது பேறு என்றே உணர்ந்திடுவோம் (கவிதை)

-ஒரு தேசபக்தர்



(பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டு சிறப்புப் பதிவு)


பாரத மண்ணில் பிறந்தது பேறு என்றே உணர்ந்திடுவோம்!
பாரதத் தாயின் பழமை பெருமை இன்றே உணர்ந்திடுவோம்!


வியாசன் படைத்த மாபாரதமும்,
வள்ளுவன் தீட்டிய முப்பால் நூலும்,
வையம் முழுவதும் போற்றி வணங்கும்
இலக்கியம் கண்டவளாம்!

(பாரதத் தாயின்)

மார்கழித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

 -ஆசிரியர் குழு

ஆறுமுக நாவலர்

மார்கழி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ பிலவ வருடம், மார்கழித் திங்கள்  (16.12.2021 - 16.01.2022)

எது நமது புத்தாண்டு?

-எஸ்.ராமச்சந்திரன்


 
    திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஹிந்து சமய நம்பிக்கைகள் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது. அக்கட்சிக்கு இது, வாக்கு வங்கிகளை திருப்தி செய்யும் வாடிக்கையான வேடிக்கை. 

    ஏற்கனவே தமிழக முதல்வராக இருந்த திரு. மு.கருணாநிதி, தமிழ்ப் புத்தாண்டை தை முதல் நாளுக்கு மாற்றினார். அதற்கு எழுந்த மக்கள் எதிர்ப்பை அவர் கண்டுகொள்ளவில்லை. அடுத்து முதல்வரான செல்வி ஜெயலலிதாவின் அதிமுக அரசு, முந்தைய அரசின் முட்டாள்தனமான செய்கையை ரத்து செய்து, சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற பாரம்பரிய முறை தொடர்வதாக அறிவித்தது.

    இந்நிலையில், தற்போது மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள திமுக, மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றத் திட்டமிடுவதாகத் தெரிகிறது. தைப்பொங்கலுக்கு வழங்க உத்தேசித்துள்ள் தமிழக அரசின்  பரிசுப்பைகளில்  ‘தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று அச்சிட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின. அதனை இதுவரை மாநில அரசு மறுக்கவில்லை.

    அரசு எந்த அறிவிப்பை வெளியிட்டாலும், தொன்றுதொட்ட  வழிபாட்டு நெறிமுறைகளை -சித்திரையே புத்தாண்டு என்ற பாரம்பரியத்தை - தமிழ் மக்கள் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. இதனை முன்னரே நாம் பார்த்துவிட்டோம். ஆயினும், திமுகவினர் முன்வைக்கும் விதண்டாவாதங்கள் தவறு என்பதை சுட்டிக்காட்டுவது அறிவுடையோர் கடமை. அந்த அடிப்படையிலேயே இக்கட்டுரை இங்கு வெளியாகிறது.

   திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தை மாதமே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றுவோம் என்று 2017ஆம் ஆண்டு பேசியபோது,  அதற்கு எதிராக, கல்வெட்டியல் அறிஞரான திரு. எஸ்.ராமச்சந்திரன்,   நமது ‘காண்டீபம்’ காலாண்டிதழில் எழுதிய ஆய்வுக் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது. 

-ஆசிரியர் குழு

***

கே.ஆர்.மல்கானி சொன்ன தீர்க்கச்சொல்

-திருநின்றவூர் இரவிக்குமார்



கே.ஆர்.மல்கானி
(1921 நவ. 19 - 2003 அக். 27)


    இந்திய ஜனநாயகத்தின் கரும்புள்ளி, இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை. தேர்தல் முறைகேடு வழக்கில், அவர் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாதென அலஹாபாத் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அறிவித்ததையடுத்து, தன் பிரதமர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் தேசத்தின் மீது நெருக்கடி நிலையை அறிவித்தார். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதும் முதலில் கைது செய்யப்பட்டவர் பத்திரிகையாளர் கே.ஆர். மல்கானி. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 1975 ஜூன் 25 தேதியன்று இரவே அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் அப்போது மதர்லேண்ட் (தாய்நாடு) என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அவரது கைதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால், முதலில் கைது செய்யப்பட்ட அவர்தான் ஜனவரி மாதத்திலேயே, “இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவிப்பார்; ஆர்எஸ்எஸ் தடை செய்யப்படும்; எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்” என்று பத்திரிகையில் எழுதியிருந்தார். அப்போது யாரும் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.

பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்: நூல் அறிமுகம்

-ஜெயராமன் மகாதேவன்



    இந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கு பத்திரிகையாளர் மாலன், அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் முறையே அணிந்துரையும், அறிமுகவுரையும் எழுதியுள்ளனர்.

இந்தப் புத்தகம் கொரோனா ஊரடங்கிற்குப் பின் நான் நேரடியாக பங்கேற்று உரையாற்றிய முதல் நிகழ்ச்சியில் எனக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை பற்றி வித்யாபாரதி அமைப்பு நடத்திய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சி அது. சென்ற வாரம் இந்தப் புதகத்தை படித்து முடித்தேன். அதே சூட்டில் நூல் பற்றி என் அவதானிப்புகளுடன் கூடிய நூல் அறிமுகம் இது.

மெய்ப்பொருள் கண்டு தெளிவோம்!

-கோதை ஜோதிலட்சுமி

திலகர், சாவர்க்கர், மாளவியா

    அரசியல் என்பதன் இயல்பே மதங்கொண்டு நிற்பதுதான். அதற்கு மதம் (சமயம்) கருவியாகப் பயன்படுவதும் வரலாற்றில் புதிதல்ல. தொன்றுதொட்டு இன்றுவரை அரசியல் மதத்தைப் பயன்படுத்தியே வருகிறது. ‘ஹிந்துத்துவா’ என்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் அரசியல், அதனைக் கடுமையாக விமா்சிக்கும் அரசியல் இரண்டும் இந்த தேசத்தில் தொடா்ந்து ஆழமாக இருந்து வருகின்றன.

சமீபத்தில், ‘ஹிந்துயிசம்’, ‘ஹிந்துத்துவா’ ஆகிய சொற்களின் அடிப்படையிலான விமா்சனங்கள் அரசியல் களத்தில் வலம் வருகின்றன. இந்த இரண்டு சொற்களும் வெவ்வேறானவை என்றும், ஹிந்துத்துவா என்பது வெறுப்பு சித்தாந்தம் என்றும் பேசப்படுகிறது. இந்தக் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு அரசியல் பின்புலங்களை ஒதுக்கிவைத்து விட்டு ஹிந்துத்துவம் என்பதன் அடிப்படையை நாம் உணா்ந்துகொள்ள வேண்டியது அவசியம்.

எந்த ஒரு மனிதரும் வரலாறு, மொழி இரண்டையும் தெளிவாக அறிந்திருத்தல் சமூக அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். மக்கள் மனதில் தாங்கள் எத்தகைய பாரம்பரியத்தில் வந்தவா்கள் என்ற புரிதல் இல்லாத நிலையில், அரசியல் செய்வோரின் இருதரப்புக் கருத்துக்களில் எது உண்மை என்று புரிந்துகொள்ள இயலாத சூழல் ஏற்படுகிறது.

கொள்ளை அழகு கொண்ட கோனேரிபுரம் நடராஜர்

-பாலகுமாரன்


 -ஆருத்ரா தரிசன (டிச. 20) சிறப்புப் பதிவு- 

 
அந்தச் சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை, கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு தொலைவில் கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து, துவங்கி விடட்டுமா என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

இது ஆறாவது முறை. 

தமிழைக் கொல்லாதீர் ஐயா!

 -ஆசிரியர் குழு



‘ஐயா’வுக்கும் ‘அய்யா’வுக்கும் வேறுபாடு என்ன தெரியுமா?

தமிழில் எழுதும் போது,  ‘ஐயா’ -  ‘அய்யா’எது சரி?  சிலர் ‘ஐயா’ என்று எழுதுகின்றனர். ஆனால் சிலர்  ‘அய்யா’ என்று எழுதுகின்றனர். எது சரி?

எப்படியும் எழுதலாம் என்பது ஒருமுறை.

இலக்கணம் இப்படித்தான் எழுத வேண்டும் என கூறுகிறது, எனவே, இலக்கணப்படித்தான் எழுத வேண்டும் என்பது ஒருமுறை.

எது சரி?

உத்தரபாரா உரை உரைப்பது என்ன?

-திருநின்றவூர் இரவிக்குமார்


(அரவிந்தம்- 150)


    1908 மே மாதம் 1ஆம் தேதி வங்காளத்தில் உள்ள முசாபர்பூர் என்ற இடத்தில் தேசியவாத இளைஞர்களின் குண்டுவீச்சில் இரண்டு வெள்ளைக்காரப்  பெண்கள் இறந்தனர். மறுநாள், இந்தச் சம்பவத்திற்கு சற்றும் தொடர்பில்லாத, ஸ்ரீ அரவிந்தரை ஆங்கில அரசு வேண்டுமென்றே கைது செய்தது. மே 5ஆம் தேதி அலிப்பூர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றது. அங்கு 9 அடி நீளமும், 5 அடி அகலமும், ஜன்னல்கள் ஏதுமற்ற தனிமைச் சிறையில் அவரை அடைத்தது.

ஓராண்டு காலத்திற்குப் பிறகு, 1909 மே மாதம் ஆறாம் தேதி, குற்றமற்றவர் என்று அவரை விடுதலை செய்தது. அவருடன் கைது செய்யப்பட்ட பலரும் ஆயுள் தண்டனையும், சிலர் தூக்கு தண்டனையும் பெற்றனர். ஓரிருவர் வழக்கு முடிவதற்குள் சிறைச்சாலையிலேயே இறந்து போய்விட்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஸ்ரீ அரவிந்தரை மக்கள் பல்வேறு இடங்களில் அழைத்து வரவேற்பு விழா நடத்தினர். அவ்வாறான பாராட்டுக் கூட்டம் ஒன்று கல்கத்தா நகருக்கு வெளியே இருந்த ‘உத்தரபாரா’ என்ற இடத்தில் தர்ம ரக்க்ஷணி சபை சார்பில் நடத்தப்பட்டது. 1909 மே 30 தேதியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அரவிந்தர் தனது சிறைவாசத்தை பற்றியும், அதில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றியும், அவர் வாழ்க்கைக்கு கிடைத்த வழிகாட்டல் பற்றியும், விவரமாகக் கூறியுள்ளார். அது மிகவும் முக்கியமானதொரு உரை. 


சிறையில் இருந்தபோது அவர் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். அவருக்கு சில வழிகாட்டுதல்கள் கிடைத்தன. அது பற்றி அவர் கூறியது

ஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம் (தமிழாக்கம்)

-ஜடாயு



அறிமுகம்:

ஞானத் தேடலும் ஆன்மிக வேட்கையும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அதிர்வையும் சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் அமைதியையும் அளிக்கும் பாடல், நிர்வாண ஷட்கம் எனப்படும் ஆத்ம ஷட்கம். 

இந்த மகத்தான பாடலை காலந்தோறும் வேதாந்திகள் பாடி வந்துள்ளனர். எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், இசை வடிவங்களில் இப்பாடல் வெளிவவந்துள்ளது. இங்கு நீங்கள் காண்பது எனது ஒரு முயற்சி.

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் ‘யான்’ என்பதை இயல்பிலேயே அனுபவித்து உணர்கிறது என்றாலும் அதன் உண்மை ஸ்வரூபத்தை அறிவதில்லை. உடல், மனம், அறிவு என்று ஒவ்வொன்றாக அதன்மீது படிந்துள்ள அடுக்குகளையே யான் என்று கருதுகிறது. அவை யாதொன்றும் ஆத்மாவாகாது; அவற்றுடன் தொடர்புடையது போல் தோன்றினாலும் அவற்றிலிருந்தும் வேறுபட்ட உணர்வு நிலையே (சைதன்யம்) ஆத்மா.

‘இதுவல்ல இதுவல்ல’ (நேதி நேதி) என்ற வழிமுறை மூலம் இந்த தரிசனத்தைச் சுட்டுகிறது இந்தப் பாடல். வேதாந்தத் தத்துவம் முழுமையுமே இப்பாடலுக்கான விளக்கமாக அமைந்துள்ளது.

வரைபடம் சொல்லும் உண்மை

-வெங்கட்ராமன் ஸ்ரீநிவாசன்



மேலே உள்ள வரைபடம் சொல்லும் செய்திகள் முக்கியமானவை, நடந்து முடிந்த ஒரு கொடூரத்தைக் காட்டுபவை.

1820ம் ஆண்டு முதல் இப்போது வரை இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (வாங்கும் திறனின் அடிப்படையில்) இந்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.

நன்றாக மீண்டும் ஒரு முறை பாருங்கள். 1820ல் தொடங்கி 1947 வரை ஒரு வண்ணமும், நாம் சுதந்திரம் பெற்ற பிறகு வேறு வண்ணமும் இந்த வரைபடத்தில் உள்ளன.

இதில் 1950 வரை, சுமார் 130 வருடங்கள் கிட்டத்தட்ட 500 என்ற அளவிலேயே இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி தேங்கி நின்றுள்ளது! 

அப்படியென்றால் அந்த 130 வருடங்கள் இந்தியாவில் யாரும் தொழிலே நடத்தவில்லையா, வியாபாரம் செய்யவில்லையா, உற்பத்தி நடக்கவில்லையா என ஆயிரம் கேள்விகள் எழும். 

மாநில நாள் முடிவு: ஏற்கத் தக்கதல்ல

-கே.பி.இராமலிங்கம்

ம.பொ.சி.

ஆங்கிலேயா் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த 1905-இல் வங்கப் பிரிவினை நடந்தது. வங்காளம், கிழக்கு வங்கம் - மேற்கு வங்கம் என்று இரு பிரிவானது. கிழக்கு வங்கத்தில் முஸ்லிம்களும் மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களும் அதிகமாக வாழ்ந்தனா். ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினை உணா்வை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஏற்படுத்தியது.

வங்காளம் முழுவதும் பிரிவினையை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்தனா். ‘வங்கபங்கம் கூடாது’ என்ற முழக்கம் விண்ணை முட்டியது. ஆனால், கிழக்கு வங்கத்தில் இருந்த முஸ்லிம்கள் ஆங்கிலேய ஆட்சி ஏற்படுத்திய பிரிவினையை மெளனமாக ஆதரித்தனா்.

இந்தியா பிளவுபட்டு விடக்கூடாது என்று எண்ணிய சுதந்திரப் போராட்ட வீரா்களின் எதிர்ப்பு, வங்கத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் எதிரொலித்தது. எங்கும் தீ வைப்பு, ரயில் கவிழ்ப்பு, உயிரிழப்பு என இந்தியாவே ரத்த பூமியானது.

தேசியவாதிகளின் எதிர்ப்பையும், ஹிந்துக்களின் வற்புறுத்தலையும் எதிர்கொள்ள முடியாத ஆங்கிலேய நிர்வாகம் பணிந்தது. ஆம், பிரிக்கப்பட்ட வங்காளம் 1911-ஆம் ஆண்டு மீண்டும் இணைக்கப்பட்டது. ஆனாலும் இந்தப் பிரிவினையால் வங்கத்தில் மத அடிப்படையில் தேசிய உணா்வுகள் ஆழமாக வேரூன்றி விட்டன. இதன் விளைவுதான், 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலுவாக முன்வைத்தது.

‘ஒன்றுபட்ட இந்தியாவே என் உயிர்மூச்சு’ என்று முழக்கமிட்ட முகமது அலி ஜின்னா, பாகிஸ்தான் எனும் முஸ்லிம் நாடு தேவை என்பதில் உறுதியாக நின்றார். காந்தி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஜின்னாவின் பிடிவாதத்தைக் கண்டு நிலைகுலைந்தனா். கிழக்கு வங்கம் மீண்டும் பிரிக்கப்பட்டு பாகிஸ்தானோடு சோ்க்கப்பட்டது.

ஆயினும், மொழி விவகாரத்தால், 1971-இல் வங்கதேச விடுதலைப்போரின் மூலம் பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெற்று ‘பங்களாதேஷ்’ என்ற தனி நாடானது.

தே.சி.க. நூல்கள் வெளியீடு

-ஆசிரியர் குழு

நூல்கள் வெளியீட்டு விழாவில் விருந்தினர்கள்.


    மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா தேசிய சிந்தனைக் கழகத்தால் கடந்த டிச. 5, 2021 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவு இல்லத்தில் காலையில்  நடந்த விழாவில் தமிழக ஆளுநர் மேதகு. ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தே.சி.க. மாநில அமைப்பாளர் ம.கொ.சி.இராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பொன்மொழிகள் - 7

-பேரா.பூ.தர்மலிங்கம்


தர்மமே ஆன்மா:

    தர்மம் என்பது தேசத்தின் ஆன்மாவின் களஞ்சியமாகும். தர்மம் அழிக்கப்பட்டால், தேசம் அழிந்து விடும். தர்மத்தைக் கைவிட்டவர், தேசத்தைக் காட்டிக் கொடுத்தவராகிறார்.

***

வேளாண் சட்டங்கள் ரத்து: நஷ்டம் அரசுக்கல்ல!

-சுந்தர்ராஜசோழன்



நாடு முழுவதும் விவசாயிகள் காலம் காலமாக எதற்குப் போராடினார்களோ, அதற்கு நல்விடையாகத்தான் மோடி வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தார். காங்கிரஸ் கொண்டுவர நினைத்தும் செயல்படுத்த முடியாத சட்டம். வாக்கரசியலை விட மக்களின், தேசத்தின் நலமே முக்கியமென பல முடிவுகளை நரேந்திர மோடி எடுத்தது போலவேதான் இந்த சட்ட நிறைவேற்றத்தையும் செய்தார்.

ஆனால் சீக்கிய ஜாட்டுகளின் எதிர்ப்புப் போராட்டம் அளவிற்கு ஹிந்து விவசாயிகளின் ஆதரவு வலிமை வாய்ந்ததாக இல்லை என்பது புரிகிறது. இதனை திரும்பப் பெறுவதாக பிரதமர் கூறியபோதே,  தெளிவாகச் சொல்லியுள்ளார் –  ‘இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை மொத்த விவசாயிகளில் வெகு குறைவு. நாட்டில் உள்ள 80 % குறு விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தின் நன்மையை எங்களுக்கு அவர்களால் புரியவைக்க முடியவில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீக்கியர்களின் மத உணர்ச்சியும், ஜாதிய மற்றும் பிரிவினை உணர்ச்சியும் காலிஸ்தானிகளால் தூண்டப்பட்டது. இது முழு விஷமாக மாறுவதற்கு முன்,  நாட்டின் நலன் கருதி தன்னுடைய இமேஜை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடி சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார். இதில் மோடிக்கோ,பாஜகவுக்கோ எந்த நஷ்டமும் இல்லை. அவருடைய மதிப்பு மேலும் மேலும் உயர்ந்து கொண்டேதான் போகிறது.

நம்முடன் வாழும் தலித் சாதனையாளர்கள்

-திருநின்றவூர் இரவிக்குமார்

 


1

ராம்நாத் கோவிந்த்

 ‘ஒரு வேளை சோற்றுக்காக இன்றும் மழையில் நனைந்தபடி, வெய்யிலில் காய்ந்தபடி வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் ராம்நாத் கோவிந்துகள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களின் பிரதிநிதியாக செயல்படுவேன்’ என்று ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது திரு. ராம்நாத் கோவிந்த் சொன்னார். பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டாவது இந்திய ஜனாதிபதி அவர்.

 ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று கருதப்பட்ட மிகவும் பின்தங்கிய தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்துள்ளார் - என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியது.

உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்நாத் கோவிந்த். வறுமையான சூழ்நிலையில் சிரமப்பட்டு படித்து வக்கீலானார். தில்லி, உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி உள்ளார். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது அவருடைய செயலாளராகப் பணியாற்றியவர். பிறகு பாஜக சார்பில் ராஜ்ய சபா உறுப்பினரானார். பின்னர் பிகார் மாநில ஆளுநர் ஆனார். அதன் பின்பு 2017இல் பாஜக சார்பில் போட்டியிட்டு ஜனாதிபதியானார்.

Golden Quotes of Aurabindo - 2

-Maharishi Aurobindo


(அரவிந்தம்-150)

    It is irony of fate that we have been violating the teachings of our own sacred books and going contrary to the dictates of our sages while other races seems to have fully realised their importance and made them their guiding principal in life.

***
Hinduism admits relative standards a wisdom too hard for the European intelligence.

Non - injury is the highest of its laws, ahimsa paramo dharmah; still it does not say it down as a physical rule for the warrior..... and so escapes the unpracticality of a too absolutist rule for all life.

***

தமிழகத்தைச் சூழும் பிரிவினைவாதம்

-ஈரோடு சரவணன்



    திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர்ந்தவுடன், தங்களது பிரிவினைவாதத்தைச் செயல்படுத்த வார்த்தை விளையாட்டை விளையாட முனைந்துள்ளார்கள். 1949-லிருந்து தி.மு.க. தலைவர்கள் பயன்படுத்தாத  ‘ஒன்றியம்’ என்ற ஒரு வார்த்தை தற்போது அரசாங்க ஆவணத்தில் முன்மொழியப்படுகிறது. 

தற்போது பயன்படுத்தப்படும் ‘யூனியன்’ என்ற வார்த்தைக்கு உள்ளார்த்தம் என்னவென்றால், தனி தேசியமான நான், அதாவது தமிழ்நாடு விருப்பப்பட்டு, ஒரு சௌகரியத்துக்காக உன்னோடு இருக்கிறேன்; இந்தியாவோடும் இருக்கிறேன்; எந்நேரமும் நான் உடைத்துக் கொண்டு தனியே போகலாம். சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்தது போல என்பதாகவே பார்க்கப்படுகிறது.

 தி.மு.க. பயன்படுத்தும் ‘ஒன்றியம்’ என்ற  சொல்லாடல், பிரிவினைச் சிந்தனையின் வித்து. தேசிய சிந்தனையும், தேசநலனுமே பெரிதென்று கருதும் தமிழ்நாட்டில், அதன் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு பயன்பாடே ‘ஒன்றியம்’ என்ற சொல்லாடல். இது பற்றி ஒரு முழு விவாதம் நடத்தப்பட வேண்டும். 

 பல்வேறு தனித் தமிழ்நாடு கோரும் அமைப்புகள் பற்றி விவாதிப்பதற்கு முன் தி.மு.க.வின் உள்நோக்கத்திலேயே  தனித் தமிழ்நாடு என்ற சிந்தனை உண்டு என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

1967-க்குப் பின்னர், தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்துகள், தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளன. ஹிந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. மத மாற்றம் என்ற பெயரில் , இந்த மண்ணின் கலாச்சாரம், பண்பாட்டைச் சீரழிக்கும் விதமாக செயல்படும் கிறிஸ்துவ மிஷனரிகள், முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள்,   இவர்களை மிஞ்சும் வகையில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. இதுவே தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்துக்களாகும்.

அற்புத மலையில் அருளாட்சி புரிந்த அதிசய மஹரிஷி

- ச.நாகராஜன்


ரமண மஹரிஷி
(அவதார தினம்: மார்கழி - திருவாதிரை)
(ஆங்கிலத் தேதி: டிசம்பர் 30, 1879 - சமாதி தினம்: ஏப்ரல் 14, 1950) 



    திருவண்ணாமலை உலகின் பழம்பெரும் மலை என்பதோடு அதிசய மலையும் கூட. அங்கு அருளாட்சி புரிந்த பகவான் ரமண மஹரிஷியின் வாழ்வு அதிசயமான ஒன்று; அன்பர்களுக்கு ஆனந்தம் தருவதும் கூட!

அக்னி ஸ்தலம் என்று மிகவும் போற்றித் துதிக்கப்படும் அண்ணாமலை பற்றிய புராண சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. காலத்திற்குத் தக்கவாறு அடியார்களுக்கு அருள் புரிய சிவபிரான் உளங் கனிந்தார் போலும்; ரமண மஹரிஷியைத் தன் பால் திருவண்ணாமலைக்கு ஈர்த்து பல அருள் விளையாடல்களை அவரை வைத்து நிகழ்த்தச் செய்தார். பல்லாயிரம் மக்களை ஆன்மிகத்தில் உயர்த்த வழி வகுத்தார்.

யோகா: பாரதியார் பார்வையில்...

-சங்கர.மகாதேவன்


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 68)

    புதுச்சேரிவாசியாக மகாகவி சுப்ரமணிய பாரதியார் இருந்த போது அவருக்கு அங்கே குள்ளச்சாமி என்று ஒரு சித்தர் சந்திப்பு வாய்க்கிறது. “அஷ்டாங்க யோக சித்தி பெற்றவர்” என்று அவரை வர்ணிக்கிறார் பாரதியார். குள்ளச்சாமியின் உபதேசமாக இப்படி ஒரு கவிதைப் பதிவும் இடுகிறார்:

“வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி 
மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் 
தேசுடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே 
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்”. 

 யோகாவின் இறுதி இலக்கு எது என்று சொல்லாமல் சொல்கிறாரா பாரதியார்? “சலே வாதே சலம் சித்தம்” என்று ஹடயோக ப்ரதீபிகை சொல்கிறதல்லவா, மனம் ஸ்வாச கதியில் சதா சுற்றும் என்று? அதை சாந்தப்படுத்துவதற்காக சித்தர் வாக்காக பாரதியார்  ‘வாசியை கும்பகத்தால் வலியக் கட்ட’ச் சொல்கிறார். (பதஞ்சலி யோக சூத்ரத்தின் முதல் பாதத்தைத் தமிழாக்கிய பாரதியார் சொல்கிறார்; யாராவது மறுக்க முடியுமா?)

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் மகாகவி பாரதி

-சேக்கிழான்


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 69)
    
    மகாகவி பாரதி, வரகவி. பாலப் பருவத்திலேயே யாப்பிலக்கணத்துடன் கூடிய செய்யுள்களையும் தாளகதியுடன் கூடிய பாடல்களையும் எழுதும் வல்லமை பெற்றிருந்தவர். ஆனால், அவரது வாழ்நாளில் அவரது கவிதைகள் பெற்றிருக்க வேண்டிய முழுமையான மரியாதையைப் பெறவில்லை என்பது பொதுவானதொரு கருத்து. ஏனெனில், அன்றைய கால ஆங்கிலேய ஆட்சியை பாரதி எதிர்த்த காரணத்தால், அவரது கவிதைகள் மீதான தடை இருந்தது. அதையும் மீறித்தான் அவரது தேசபக்திப் பாடல்கள் சுதந்திரப் போர்க்களத்தில் வீறுடன் பாடப்பட்டன.

தனது பாடல்களை பாரதியே ராகத்துடன் பல பொதுக்கூட்டங்களில் பாடியிருக்கிறார். தனது பல இசைப் பாடல்களுக்கு ராகம், தாளம், ஸ்வர வரிசையையும் கூட பாரதி எழுதி வைத்திருக்கிறார். எஸ்.ஜி.கிட்டப்பா போன்றோரின் அக்கால நாடக மேடைகளில் பாரதியின் பாடல்கள் ஒலித்துள்ளன.

பாரதியின் எழுத்துலகில் அவரது கவிதைகளின் பங்களிப்பு சுமார் 10 சதவிகிதம் மட்டுமே. அவரது பத்திரிகைப் பணிகளில் செய்திக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள், மதிப்புரைகள், கடிதங்கள், சித்திர விளக்கங்கள், வரலாற்றுக் கட்டுரைகள் ஆகியவற்றை இன்னமும் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்தாரில்லை.

போலவே, அவரது ஒட்டுமொத்தக் கவிதைகளில் தேசபக்திப் பாடல்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து சதவிகிதம் மட்டுமே. அவரது கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, ஸ்வசரிதை, வசன கவிதை, பக்திப் பாடல்கள், ஞானப் பாடல்கள், பாஞ்சாலி சபதம், தனிப்பாடல்கள் போன்றவை பாரதியின் அற்புதமான கவித்துவ ஆளுமைக்கு அடையாளங்களாக மிளிர்கின்றன. இதனையும் தமிழ் மக்கள் பலரும் அறியாதிருப்பது தான் தமிழின் அவலம்.

அன்னிபெசண்ட் அம்மையாரும் மகாகவி பாரதியும்

-முத்துவிஜயன்


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 70)

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அயர்லாந்து மாதான அன்னிபெசன்ட் அம்மையார் (1857 அக். 1 - 1933 செப். 20), இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் பெரும் பங்கு ஆற்றியவர். 

இந்து சமயம் மீது பற்று மிகுந்தவர், சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், பேச்சாளர், பெண் விடுதலைப் போராளி, பத்திரிகையாளர் எனப் பல முகங்களைக் கொண்டவர்; இந்தியாவில்  ‘ஹோம்ரூல்’ இயக்கத்தைத் துக்கியவர்;. தனது போராட்டப்பணிகளுக்காக  ‘காமன் வீல்’ (1913),  ‘நியூ இந்தியா’ (1914) ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர்; 1917 கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை ஏற்றவர்.

மகாகவி பாரதிக்கு, அன்னிபெசன்ட் அம்மையார் மீது ஆரம்பத்தில் மேலான  அபிப்பிராயம் இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஓர் ஆங்கில மாது என்ற எண்ணமே இருந்தது. தவிர அவரது தியாஸபிகல் ஸங்கம் மீதும் பாரதிக்கு நல்லெண்னம் இருக்கவில்லை. எனவே ஆரம்பக் காலத்தில் அவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

வாழ்க தமிழ் மொழி! (கவிதைகள்)

-மகாகவி பாரதி


    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 71)

(தமிழ்மொழி குறித்த பாரதியின் பெருமிதப் பாடல்கள்)

1. செந்தமிழ் நாடு


செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே 

(செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு 

(செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு 

(செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு 

(செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு 

(செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு 

(செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு 

(செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு 

(செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு 

(செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு 

(செந்தமிழ்)

***
2. தமிழ்த்தாய்

தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)

ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம்
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்!

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

***
3. தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோ ர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

***
4. தமிழ்மொழி வாழ்த்து


தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!

தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
***

5. தமிழச் சாதி.

..........எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,
நாட்பட நாட்பட நாற்றமு சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே விதியே தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ?

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்
சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்

சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
தமிழச் சாதி தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்

நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார்,
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்,

என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால்
எனினும்
இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு
கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும்
செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்.

ஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து
வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,
தானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து
ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி
சாத்திரங் கண்டாய் சாதியின் உயர்த்தலம்,

சாத்திர மின்றேற் சாதியில்லை,
பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்
பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார்,
நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில்
அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் -

மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் -
இவர்தம்
உடலும் உள்ளமும் தன்வச மிலராய்
நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும்
பெரிதிலை பின்னும் மருந்திதற் குண்டு

செய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும்
உய்வகைக் குரிய வழிசில உளவாம்.
மற்றிவர்
சாத்திரம் -- (அதாவது மதியிலே தழுவிய
கொள்கை கருத்து குளிர்ந்திடு நோக்கம்) --

ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்
மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை
இந்நாள் எமது தமிழ்நாட் டிடையே
அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார்
தம்மிலே இருவகை தலைபடக் கண்டேன்,

ஒரு சார்
மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை
யவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை

முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால்,
தமிழச் சாதி தரணிமீ திராது
பொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும்
நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை
வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ

ஏ! ஏ! அஃதுமக் கிசையா தென்பர்,
உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர்
தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந் தடை
பல அவை நீங்கும் பான்மையை வல்ல
என்றருள் புரிவர், இதன் பொருள் சீமை

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்
சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர்,
என்பதே யாகும்; இஃதொரு சார்பாம்
பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரோடு
நமதுமூ தாதையர் (நாற்பதிற் றாண்டின்)

முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு
அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம்
ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ?
பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்
தவரோ? புராண மாக்கிய காலமோ?
சைவரோ? வைணவ சமயத் தாரோ?
இந்திரன் தானே தனிமுதற் கடவுள்
என்றுநம் முன்னோர் ஏந்திய வைதிகக்
காலத் தவரோ? கருத்திலா தவர்தாம்
எமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்?
நமதுமூ தாதையர் நயமுறக் காட்டிய
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்
ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே
தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு
எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம்
கலிதடை புரிவன் கலியின் வலியை
வெல்லலா காதென விளிம்புகின் றனரால்,
நாசங் கூறும் எநாட்டு வயித்தியர்
இவராம். இங்கிவ் விருதலைக் கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர்?
விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருவி யிருக்கின் றாயடா?

விதி

மேலே நீ கூறிய விநாசப் புலவரை
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்
எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும்
மற்றவை தழுவி வாழ்வீ ராயின்,
அச்சமொன்று இல்லை! ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும் - ...

(முற்றுப்பெறவில்லை)

***   
6. வாழிய செந்தமிழ்!

(ஆசிரியப் பா)

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!


ரவீந்திரரும் பாரதியும்

-மகாகவி பாரதி


    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 72)
    தமிழகத்தின் மகாகவியான பாரதி, மற்றொரு வங்க மகாகவியான ரவீந்திரநாத் தாகூரை மிகவும் உயர்வாக மதித்தார். அவரது ‘பஞ்ச வியாசங்கள்’ என்ற நூலை தமிழில் பாரதி மொழி பெயர்த்திருக்கிறார். அவரது கவிதைகளுக்கு உலகில் கிடைத்த வரவேற்பால் பாரதி நெக்குருகி மகிழ்ந்திருக்கிறார். அவரைப் பற்றிய பல கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். அவற்றில் இரு கட்டுரைகள் இங்கே...
-ஆசிரியர் குழு

கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை (கவிதை)

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 73)

கேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், சிருங்காரம்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.


(தீராத)
1.
தின்னப் பழங்கொண்டு தருவான்! - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.

(தீராத)

கடல் (வசன கவிதை)

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 74)
1.
கடலே காற்றைப் பரப்புகின்றது.
விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்-நீர் அந்தச் சுழற்சியிலே தலைகீழாகக் கவிழ்ந்து திசைவெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?
பராசக்தியின் ஆணை.
அவள் நமது தலைமீது கடல் கவிழ்ந்துவிடாதபடி
ஆதரிக்கிறாள்.
அவள் திருநாமம் வாழ்க.

சந்திரிகையின் கதை (முற்றுப் பெறாத புதினம்)

-மகாகவி பாரதி

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 75)

அறிமுகம்…

    மகாகவி பாரதியின் இறுதிப் படைப்பு ‘சந்திரிகையின் கதை’ ஆனால், இது முற்றுப்பெறுவதற்கு முன்னமே, பாரதியின் வாழ்வு முற்று பெற்றுவிட்டது. அதன் காரணமக, தமிழ் மொழி ஓர் அற்புதமான இலக்கியத்தை இழந்துவிட்டது.

    பெண் விடுதலை, ஆண்கள் கைக்கொள்ள வேண்டிய ஏகபத்தினி விரதம், பிராமண சமூகத்தில் நிலவும் கஷ்டங்கள், கைம்பெண் மறுமணம், அன்பே மோட்சத்துக்கு வழி – எனப் பல அற்புதமான கருத்துகளை – காலத்தை மீறி ஒலிக்கும் மந்திரக் குரல் போல - இந்த முற்றுப்பெறாத தனது புதினத்தில் கூறிச் செல்கிறார் பாரதி.

    தனது தத்துவ விசார நாட்டம், நையாண்டி செய்யும் நளினம், நகைச்சுவை உணர்வு, இலக்கியப் பரிச்சயம், மனிதநேய சிந்தனைகள் ஆகியவற்றின் கதம்பமாக இதனைப் படித்திருக்கிறார் பாரதி.

    சுதேச மித்திரன் ஆசிரியர் ஜீ.சுப்பிரமணிய அய்யர், சமூக சேவகர் வீரேசலிங்கம் பந்துலு ஆகியோர் இந்தப் புதினத்தில் வாழும் பாத்திரங்களாக வந்து போகிறார்கள். கதையின் நாயகி தெலுங்கு தெரிந்தவள் என்பதும், பந்துலுவிடம் அவள் தெலுங்கில் பேசுவதை வாசகர்களுக்காக தமிழில் தருவதாகக் கூறும் (இங்கு நமது கதை வாசிப்போரிலே பலருக்குத் தெலுங்கு பாஷை தெரிந்திருக்க வழியில்லை யாதலால், அவ்விருவருக்குள் தெலுங்கில் நடைபெற்ற சம்பாஷணையை நான் தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறேன்) பாரதியின் குறும்பும் கவனிக்கத் தக்கவை.

    சுதேசமித்திரன் வார இதழில் தொடராக வந்த இந்தப் புதினம், அவரது அகால மறைவால் முற்றுப் பெறாமல் போய்விட்டது. எனினும், மகாகவி பாரதியின் பன்முக தரிசனத்துக்கு அவரது முற்றுப் பெறாத இந்த இறுதிப் படைப்பு ஒளிவீசும் மகுடமாகத் திகழ்கிறது.


-ஆசிரியர் குழு
***

வந்தேமாதரம் - மொழிபெயர்ப்பும் முன்னுரையும் (கவிதை)

-மகாகவி பாரதி


பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 76)


முன்னுரை

(‘சக்கரவர்த்தினி’ மாதாந்திரப் பத்திரிகையில் வெளியானது)

    இப்போது பெங்கால மாகாணத்திலிருக்கும் ஒவ்வொரு ஹிந்துவாலும் ஸாம கீதத்தைப்போல அத்தனை பக்தியுடன் பாடப்பட்டு வருகின்ற வந்தேமாதரம் என்ற திவ்ய கீதத்தை நான் மொழி பெயர்க்கத் துணிந்தமை, கர்வங்கொண்ட செய்கையென்று பலர் கருதக்கூடும். ௸ கீதமெழுதிய பெங்காலி வித்வானாகிய பங்கிம் சந்திர பாபுவின் தைவிகச் சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குப் போதிய வன்மையில்லாவிடினும் தமிழ்நாட்டாருக்கு அச் செய்யுளின் பொருளுணர்த்த வேண்டுமென்ற ஆசைப் பெருக்காலேயே யான் இதனைத் துணிந்திருக்கிறேன். இவ் வந்தேமாதரம் என்ற கீதம் பங்கிம் சந்திர சாடர்ஜியின் நூல்களிலே மிகச் சிறப்புக் கொண்டதாகிய ஆனந்த மடம் என்ற நாவல் கதையினிடையே அமைக்கப்பட்டிருக்கின்றது.

    ஆனந்த மடம் என்ற கதையானது, உண்மையாகவே நடந்த சரித்திரத்தைத் தழுவியது. வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாயிருந்த காலத்தில் சந்நியாசிகள் சேர்ந்து நடத்திய ஓர் பெருங் கலகத்தைப் பற்றியே ௸ நூல் விரித்துக் கூறுகின்றது. பெங்காலத்தில் 1774-5 வருஷத்தில் பெரும் பஞ்சம் உண்டாயிற்று. அதற்கப்பால் அனேக ஆயிரம் சந்நியாசிகள் ஒன்றாய்க் கூடி அந்நியர்களைத் தமது தாய்ப் பூமியிலிருந்து ஒழித்துவிட வேண்டுமென்னும் ஒரே நோக்கத்துடன் கலகஞ் செய்யத் தொடங்கினார்கள்.

இந்தியாவில் விதவைகளின் நிலைமையும் காந்தி சொல்லும் உபாயமும்

-மகாகவி பாரதி


    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 77)


ஸ்ரீமான்
மோஹனதாஸ் கரம்சந்திர காந்தி (மகாத்மா காந்தி)யால் நடத்தப்படும் ‘நவஜீவன்’ என்ற பத்தரிகையில் ஒருவர் பாரத தேசத்து விதவைகளைப் பற்றிய சில கணக்குகளைப் பிரசுரம் செய்திருக்கிறார்.

அவற்றுள் குழந்தை, கைம்பெண்களைப் பற்றிய பின் வரும் கணக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

வயது  மணம்புரிந்த மாதர்  கைம்பெண்கள்
0-1                13,212                              1,014
1-2                17,753                                 856
2-3                49,787                              1,807
3-4             1,34,105                              9,273
4-5             3,02,425                            17,703
5-10          22,19,778                           94,240
10-15     1,00,87,024                        2,23,320

இந்தக் கணக்கின்படி இந்தியாவில் பிறந்து ஒரு வருஷமாகு முன்னரே விதவைகளாய் விட்ட மாதர்களின் தொகை 1,014! 15 வயதுக்குக் குறைந்த கைம்பெண்களின் தொகை 3 1/2 லக்ஷம்! இவர்களில் சற்றுக் குறைய 18000 பேர் ஐந்து வயதுக்குட்பட்டோர்!

இப்படிப்பட்ட கணக்குகள் சில கொடுத்துவிட்டு அவற்றின் இறுதியில் மேற்படிக் கடிதம் எழுதியவர். ''இக்கைம்பெண்களின் மொத்தத் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதைப் படிக்கும்போது எந்த மனிதனுடையமனமும் இளகிவிடும். (இந்நாட்டில்) விதவைகள் என்றபாகுபாட்டை நீக்க முயல்வோர் யாருளர்?'' என்று சொல்லிவருத்தப்படுகிறார்.

அபிநயம்

-மகாகவி பாரதி


    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 78)

    கூத்தில் அபிநயமே பிரதானம்.

தாள விஸ்தாரங்களைக் கூத்தன் தனது உடம்பிலே தோற்றுவிப்பதே கூத்தின் உடல். அபிநயமே கூத்தின் உயிர். தாளந் தவறாமல் ஆடிவிட்டால் அது கூத்தாகாது.

தற்காலத்தில் சில பாகவதர்கள் கதாகாலக்ஷேபங்களில் இடையே கொஞ்சம் கூத்தாடிக் காட்டுகிறார்கள். இதற்குச்சிலர் "பட்டணம் கிருஷ்ண பாகவதரின் வழி" என்று பெயர் சொல்லுகிறார்கள். 'இந்தக் கூத்து வெறுமே யதார்த்த நாட்டியமென்று பிறர் நினைக்க வேண்டும்' என்று உத்தேசித்தே அந்த பாகவதர்கள் அப்படிச் செய்கிறார்கள்.

உடம்பு

 -மகாகவி பாரதி

    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 79)

உடம்பை வலிமை செய்வதற்கு மன வலிமை வேண்டும். 

கஸரத் முதலிய பழக்கங்களில் உடம்பு பலமேறுவதற்கு மனவுறுதியும் ஆசையுமே முக்கிய காரணங்களாக வேலை செய்கின்றன.  

ராமமூர்த்தி முதலிய நமது நாட்டு பலவான்களும் ஸாண்டோ முதலிய அன்னிய நாட்டு பலவான்களும் இவ்விஷயத்தை மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்கள். கையிலே தண்டு முதலியவற்றை எடுத்துச் சுழற்றும்போது, வீமசேனனை நினைத்துக் கொள்ள வேண்டுமென்று எங்களூரிலே ஒரு பஹல்வான் சொல்லுவார். பிராணாயாமத்தை மாத்திரமேயன்றி தியானம்முதலிய யோகமுறைகளையும் ராமமூர்த்தி பெருந்துணை யென்று சொல்லுகிறார்.  

ஸாண்டோ தமது டம்பெல்ஸ்என்று சொல்லப்படும் இரும்புக்குண்டுகளை வைத்துப் பழகுவோர் வெறுமே கைகளில் குண்டுகளைத் தூக்கி அசைத்தால் பிரயோஜனமில்லை என்பதை மிகவும் தெளிவாக எழுதியிருக்கிறார்.  

குண்டைப் பிடித்து உறுதியுடன் முன்னே நீட்டிய கையை மடக்கும்போது, உமது மனோபலம் முழுதையும் கைத்தசைகளிலே செலுத்தி மெதுவாக மடக்க வேண்டும். கவனத்தை மற்றொரு பொருளிலே செலுத்தினால் தசைகளுக்கு சரியான வலிமை யேறாதென்று சொல்லுகிறார்.

உடம்பு நாடிகளுக்கு வசப்பட்டது. நாடிகள் மனதின் வசமாகும். ஆகையால், உடம்பிலுள்ள நோய்களைத் தீர்த்து வலிமை யேற்றுவதற்கு, மனவுறுதி, நம்பிக்கை, உத்ஸாகம் முதலிய குணங்கள் பிரதானமாகக் கொள்ளத்தகும்.