16/12/2021

பாரத மண்ணில் பிறந்தது பேறு என்றே உணர்ந்திடுவோம் (கவிதை)

-ஒரு தேசபக்தர்



(பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டு சிறப்புப் பதிவு)


பாரத மண்ணில் பிறந்தது பேறு என்றே உணர்ந்திடுவோம்!
பாரதத் தாயின் பழமை பெருமை இன்றே உணர்ந்திடுவோம்!


வியாசன் படைத்த மாபாரதமும்,
வள்ளுவன் தீட்டிய முப்பால் நூலும்,
வையம் முழுவதும் போற்றி வணங்கும்
இலக்கியம் கண்டவளாம்!

(பாரதத் தாயின்)

தன்னெலும்பீந்த ததீசி முனியும்,
தன்னையளித்த சம்யம் ராயும்,
தலையைக் கொடுத்த குமணன் போன்ற
தியாகியர் தாயவளாம்!

(பாரதத் தாயின்)

விஜயன், வீமன் வீரவடிவினில்,
புருஷோத்தமனாய், பிரதாபனாக
சிவாஜி மற்றும் ஜான்சி ராணியாய்
தீரம் காட்டினளே!

(பாரதத் தாயின்)

நரேந்திரனுருவில் நானிலம் வென்றே
நம்முடை நெறியின் உயர்வை நாட்டி,
உலகோரிடையே மங்கிய தன்புகழ்
ஓங்கிடச் செய்தனளே!

(பாரதத் தாயின்)

தியாகம், யோகம், ஞானம், வீரம்,
தூய்மை, எளிமை, அணிகளணிந்த
பாரதத் தாயைப் பாரின் தலைமையில்
விரைந்தே நாட்டிடுவோம்!

(பாரதத் தாயின்)

.

No comments:

Post a Comment