16/12/2021

தே.சி.க. நூல்கள் வெளியீடு

-ஆசிரியர் குழு

நூல்கள் வெளியீட்டு விழாவில் விருந்தினர்கள்.


    மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா தேசிய சிந்தனைக் கழகத்தால் கடந்த டிச. 5, 2021 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவு இல்லத்தில் காலையில்  நடந்த விழாவில் தமிழக ஆளுநர் மேதகு. ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தே.சி.க. மாநில அமைப்பாளர் ம.கொ.சி.இராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அன்று மாலை, சென்னை, சேத்துப்பட்டிலுள்ள சின்மயா பாரம்பரிய மைய  அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் மேதகு. ஆர்.என்.ரவி, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஆதலையூர் த.சூரியக்குமார் எழுதிய 3 நூல்களை வெளியிட்டார்.

    கடந்த 20 மாதங்களுக்கு மேலாக இணையவழியில் தேசிய சிந்தனைக் கழகத்தால் வெளியிடப்படும் தினசரி இதழான ‘தேசிய முரசு’ மின்னிதழில் ஆதலையூர் சூரியகுமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே,  ‘குறள் அங்காடி, பாரம்பரியப் பழக்கங்களின் அறிவியல் பின்னணி, தமிழகத்தின் தேய்வீக மூலிகைகள்’ ஆகிய  3 நூல்களாக வெளியிடப்பட்டன.

விழா அழைப்பிதழ்


    இந்த விழாவில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணன், விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மணிசங்கர், காரைக்குடி கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், சின்மயா மிஷன் அறக்கட்டளை உறுப்பினர் சத்தியமூர்த்தி, தே.சி.க. மாநில அமைப்பாளர் ம.கொ.சி.இராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நூலாசிரியர் ஆதலையூர் த.சூரியகுமார் நன்றி கூறினார்.



No comments:

Post a Comment